பிகாஸோ ஓவியங்கள்
ஏப்ரல் 19, 2017 at 7:21 முப 24 பின்னூட்டங்கள்
ஜெனிவாவை அடுத்த மார்டிக்னி Martigny என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பிகாஸோ ஓவியங்களைக், கண்காட்சியாக பொது ஜனங்களுக்காக வைத்திருந்தனர். வேறு ஒரு இடத்திற்குப் போவதாகப் பிளான் செய்து வலுக்கட்டாயமாக என்னைக் கூட்டிப்போனார்கள். சீதோஷ்ணநிலை அவ்விடம் ஸரியில்லாததால் நடு வழியில் திட்டம் கைவிடப் பட்டு ஓவியங்களைப் பார்க்கலாம் என மனம் மாறிவிட்டார்கள்.
நான் காரிலேயே இருந்து விடுகிறேன். ஓவியங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன். விடவில்லை.
அழகாக இருந்தால் பார்ப்போமே தவிர ரஸித்துக் கமென்ட் கொடுக்கும் அளவு மேதா விலாஸம் கிடையாது எனக்கு. ஒரு பெரிய கட்டிடத்தின் ஹால். அதில் எவ்வளவு விதமான ஓவியங்கள். பொழுது போக்குவதற்காக எல்லா வசதிகளையும் கொண்ட பெரியபெரிய ஹால்கள். ஒவ்வொன்றிலும் பல வேறு விதமான புரோக்கிராம்கள். எல்லாவற்றிற்கும் நுழைவுக் கட்டணம்.
கண்காட்சி கடைசி நாளாதலால் கூட்டமில்லை. காமிராவும்,கையுமாக அங்கங்கே படம்பிடித்துக்கொண்டும்,குறிப்புகளைப் படித்துக் கொண்டும் பலபேர்.எனக்குப் பிடித்த படங்களைக் கணினியில் போட்டுக் கொடுத்ததுதான் இது
இந்த உடல் நலக் குறைவுகள் ஏற்படு முன்னர்.அவ்விடம் பார்த்தவைகள். கீழ்த்தளத்தில் பழைய கார்களின் மாடல்கள் பார்வைக்கு. நடந்து,பார்த்து மாளாது.
நாம் பிளாகில் போட்டால் விருப்பமுள்ளவர்கள் பார்த்து ரஸிக்கட்டுமே என்ற எண்ணம். இருந்தும் நவம்பர் மாதத்திய பார்வை, இப்போது உங்கள் பார்வைக்கு ஏப்பிரலில் தாவி வருகிரது. மார்டிக்னியையும் பாருங்கள்.இன்று எட்டுவருஷங்கள் வேர்ட் ப்ரஸ்ஸில் சொல்லுகிறேனுக்கு முடிவடைகிறது.
இதுவும் ஸந்தோஷஸமாசாரம் தானே?
2017 இன் சொல்லுகிறேனின் முதல்ப்பதிவே இதுதான். அடுத்து கார்களின் படங்கள் வரும். உங்கள் யாவரின் பார்வையும்,அபிப்ராயமும் சொல்லுகிறேனுக்கு அவசியம் தேவை. அன்புடன்
.
பெயரெதுவும் நான் இவைகளுக்குக் கொடுக்கவில்லை.அடுத்து.
Entry filed under: பிகாஸோ ஓவியங்கள்.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:29 முப இல் ஏப்ரல் 19, 2017
அனைத்துமே மிகவும் அழகான அருமையான படங்கள். இவற்றையெல்லாம் நேரில் போய்ப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கணும்.ஏதோ தங்களால் நாங்கள் இங்கு கொஞ்சம் பார்க்க முடிந்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
நடந்து நடந்து போய்ப்பார்க்க கால் அசந்து போகும்தான்.
பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 7:58 முப இல் ஏப்ரல் 19, 2017
கட்டாயம் நீங்கள் எப்படி இருக்கிறதென்று ,பின்னூட்டமிடுவீர்கள் என்ற எண்ணம் இருந்தது. அப்படியே உங்கள் பின்னூட்டம் வந்தது. மகிழ்ச்சி. நன்றியும் கூட. கார்களைப் பார்த்து ரஸிக்க முடிந்த அளவு
நாம் படங்களை ரஸிக்கவில்லை என்ற உள்ளுணர்வு எனக்குள். அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 9:42 முப இல் ஏப்ரல் 19, 2017
பிகாஸோவின் ஓவியங்கள் நல்லாத்தான் இருக்கு. ஆனா எனக்கு பாரம்பரிய ஓவியங்கள்தான் (மாடர்ன் ஆர்ட் இல்லை. புகைப்படங்களைப்போல் இருப்பதைப் பார்த்து வரையும் ஓவியங்கள்) மிகவும் பிடிக்கும்.
ஆனால், இப்போதைய ஓவியர்கள், மாடர்ன் ஆர்ட்தான் ஓவியரின் திறமையைக் காட்டும் என்பார்கள். நான் அவர்கள் கட்சி அல்ல.
லூவ்ரி மியூசியத்தில் (பாரிஸ்) நடந்து நடந்து கால்கள் ரொம்ப நொந்துவிட்டன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஒவ்வொரு ஓவியம், சிற்பம் பார்த்துக்கொண்டு நடந்திருக்கிறேன். உங்களுக்கு அப்படி சிரமம் இருந்ததா? பெரிய ஹால் என்றால், கால் வலியில் ஓவியம் பார்த்தது போதும் என்று தோன்றிவிடும்.
நீங்கள் நிச்சயமாக டிரெடிஷனல் ஓவியங்களை ரசித்திருப்பீர்கள் (மாடர்ன் ஆர்ட்’ஐ விட)
4.
chollukireen | 9:53 முப இல் ஏப்ரல் 20, 2017
பார்ப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. மும்பை பிள்ளை வேலைநிமித்தம் வந்தபோது ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தார். எங்காவது போய்விட்டு வரவேண்டுமென்ற ஆவலில் அவர்கள் போனார்கள். என்னையும் அழைத்துப் போனார்கள்.
பெரிய ஹால் மத்தியில் ஓவியம் பார்ப்பவர்கள் சற்று உட்கார வசதிகள் இருந்தது. வயதானவர்கள் என்று வைத்துக் கொள்ளலாமே?
பிகாஸோவின் ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்ற கண்காட்சியது. ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும்
அதைப்பற்றிய குறிப்புகள் எழுதி ஒட்டியிருந்தது.
எனக்கு பிளாகில் போட, எழுதக் கிடைத்தது. பார்க்கவும் முடிந்தது அவ்வளவே.
உங்கள் பின்னூட்டம்,வரவு எல்லாம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிக்க நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 3:15 பிப இல் ஏப்ரல் 19, 2017
அருமை… ரசித்தேன்…
6.
chollukireen | 9:54 முப இல் ஏப்ரல் 20, 2017
அருமை,ரஸித்தேன் ஆஹா எவ்வளவு ஸந்தோஷம். மிக்க நன்றி. அன்புடன்
7.
angel | 3:59 பிப இல் ஏப்ரல் 19, 2017
பிக்காஸோ ஓவியங்கள் இப்போ மகள் ஸ்கூலில் வரையறா ,அந்த நாற்காலில உக்கார்ந்திருப்பவர் பிகாஸோவின் இரண்டாம் மனைவியாம் ..படங்கள் பகிர்வுக்கு நன்றிம்மா
8.
chollukireen | 10:01 முப இல் ஏப்ரல் 20, 2017
பார்த்துப் பின்னூட்டத்தில் எனக்கும் பிகாஸோவின் இரண்டாம் மனைவியை அறிமுகப்படுத்தியுள்ளாய். உன் மகளுக்கும் என் விசேஷ அன்பு. நன்றியும் பெண்ணே. அன்புடன்
9.
நெல்லைத்தமிழன் | 2:01 முப இல் ஓகஸ்ட் 2, 2022
பிகாசோவின் மனைவிக்கு மட்டும் இருக்க வேண்டியவை அந்த அந்த இடங்களில் இருக்கின்றன? இதுவே அதிசயமாக இருக்கிறதே
10.
Geetha Sambasivam | 6:32 பிப இல் ஏப்ரல் 19, 2017
பிகாசோ ஓவியங்களை ரசிக்கும் அளவுக்கு எதுவும் தெரியாட்டியும் பார்த்தேன். படங்கள் நன்றாக இருக்கின்றன. இப்போது உடல்நலம் பூரணமாகத் தேறி இருக்கும் என எண்ணுகிறேன். தொடர்ந்து பதிவுகள் போடவும் எட்டு வருடங்கள் பூர்த்தி செய்தமைக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். தொடரப் பிரார்த்தனைகள்.
11.
chollukireen | 11:50 முப இல் ஏப்ரல் 20, 2017
பார்த்து,பின்னூட்டமும் இட்டதற்கு மிகவும் ஸந்தோஷம். எனக்கு உடல்நலம் என்பது ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்றுச் சக்கர ஸைக்கிள் உதவியுடன்தான் நடை. எனக்கான கஞ்சி முதலானது ஸமயம் நேரிட்டால் நானே தயாரிக்க முடிகிறது. வயது காரணமாகவும் இருக்கலாம்.
சொல்லுகிறேனுக்குச் சொன்ன பாராட்டுகளுக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி.அன்புடன்
12.
ஸ்ரீராம் | 1:21 முப இல் ஏப்ரல் 20, 2017
ஓவியங்களை ரசித்தேன்.
13.
chollukireen | 11:51 முப இல் ஏப்ரல் 20, 2017
ரஸித்ததற்கு ஸந்தோஷம். அன்புடன்
14.
கோமதி அரசு | 4:25 முப இல் ஏப்ரல் 20, 2017
ஓவியங்கள் அழகு. நீங்கள் ரசித்த காட்சிகளை நங்களும் ரசிக்க தந்தமைக்கு நன்றி.
15.
chollukireen | 11:53 முப இல் ஏப்ரல் 20, 2017
உங்கள் வரவிற்கும்,ரஸிப்பிற்கும் எனது ஸந்தோஷம். அன்புடன்
16.
Jayanthi Sridharan | 1:39 பிப இல் ஏப்ரல் 21, 2017
All look great. Thanks for sharing. Congratulations for 8 years in the Bloggers’ world, mami.
17.
chollukireen | 9:00 முப இல் ஏப்ரல் 24, 2017
படங்களை ரஸித்ததற்கும், சொல்லுகிறேனுக்கு வாழ்த்து சொல்லியதற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
18.
tamilelavarasi | 12:56 பிப இல் மே 25, 2017
மிகவும் அழகு தோழமையே..
19.
chollukireen | 5:23 பிப இல் மே 26, 2017
நன்றி . அன்புடன்
20.
chollukireen | 11:49 முப இல் ஓகஸ்ட் 1, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பார்த்து ரஸிக்க பிகாஸோவின் படங்கள் மீள் பதிவாக வருகிறது.ரஸிக்கவும். அன்புடன்
21.
ஸ்ரீராம் | 11:48 பிப இல் ஓகஸ்ட் 1, 2022
ஓவியங்களை ரசிக்க எனக்கு ஞானமில்லை! புகைப்படங்கள் சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கின்றன!
22.
chollukireen | 11:01 முப இல் ஓகஸ்ட் 2, 2022
இதுவே ஒரு ஞானம்தான். நன்றி. அன்புடன்
23.
நெல்லைத்தமிழன் | 1:58 முப இல் ஓகஸ்ட் 2, 2022
புறா கண்ணைக் கவர்ந்தது. பிகாசோ ஓவியங்களை ரசிக்க வேறு வகையான ஞானம் வேண்டும். அது என்னிடம் இல்லை. (தலை இருக்கும் இடத்தில் வாய், கால் இருக்கும் இடத்தில் கண், கைகளுக்குப் பதிலாக கால்களை வரைந்தால் ஒரு பிகாசோ ஓவியம் தயார் என ஆழ்மனது சொல்கிறது)
24.
chollukireen | 10:57 முப இல் ஓகஸ்ட் 2, 2022
நான்கூட ரஸிகை என்று சொல்ல முடியாது.ஏதோ பார்த்ததை எழுதினேன்.பிகாஸோ ஒரு கோடு போட்டால்கூட அதையும் ரஸிப்பவர்கள் உண்டு என்று சொல்பவர்களும் உண்டுதானே. மிகவும் நன்றி. அன்புடன்