Archive for ஜூன் 27, 2017
ஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா.

ஜப்பானியக் குழு பாடுகின்றது.
ஜெனிவா நகரமே இசைப்பெருக்கில் திளைத்திருக்கும் கட்டணம் எதுவும் இல்லை. அவரவர்கள் நாட்டின் இசையை யாவருக்கும் வழங்குவதே இதனுடைய சிறப்பு.

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இடங்களில், பலவிதமான தேசத்து இசைகளில்
இசையில் திளைத்திருக்கும் திருவிழா இது.

எங்கெங்கு நோக்கினும் இசை வெள்ளம். எல்லா பாஷைகளிலும்,எல்லோர் கலாசாரங்களிலும் எவ்வெவ்வளவு உண்டோ, அவ்வளவைும் அவரவர்கள் குழுக்களாக இசைப்பதற்கு வசதி.

ஒருவித சிலவுமில்லாமல் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். ஒரு குழுவின்பின், மற்ற குழுவினர் என்று அவரவர்களாக நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்.
சாலை ஓரமாக அமைந்திருக்கும் சிறிய பார்க்குகளிலும், பெரியபெரிய பார்க்குகளில் பல இடங்களிலும் மேடைகள்.

இடைவிடாது நாள் பூரவும் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், பார்வைாளர்கள் வந்து போ்ய்க் கொண்டே இருக்கின்றனர்.


அவர்களுக்காக பெரிய நிழற்குடைகளும், இருக்கை முதலானவைகளும், சிலவு செய்து சாப்பிடுபவர்களுக்கு சிற்றுண்டி வசதியும், குப்பைகள் போட வசதி முதற்கொண்டு எல்லா வசதிகளும் உண்டு.

இத்திருவிழா ஒவ்வொரு வருஷமும் ஜூன் மூன்றாவது வார இறுதி நாட்களில் மூன்று , நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. வெள்ளி சனி,ஞாயிறு என்ற வகையில்.
இதைப்பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டதினால் கூட வந்து பார் என்று கூட்டிப்போனார்கள்.

இவ்விடம் எவ்வளவு முடியாதவர்களானாலும் வெளிியில் போகாது இருக்க மாட்டார்கள். இரண்டொரு இடங்களைப் பார்த்து விட்டுத் திரும்பி விடலாம் என்று சொல்லி என்னை வீல்சேர் வசதியுடன் அழைத்துப் போனார்கள். அப்போது எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பாருங்கள் வழியிலேயே பியானோ இசைக்கும் பெட்டிகள்.

உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் இசைக்கலாம். கூட்டம் தன்னால் கூடிக் கொள்ளும்.
எல்லா தேசத்தினரும் அவரவர்கள் திறமையை யாவருக்கும் பிரகடனப் படுத்தும் ஒரு அரிய வாய்ப்பு.
பரதநாட்டியமும் ஒரு இடத்தில் அழகாக நடந்தது. ஆக வெளி உலகம்,பல தேச இசைகள் என ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒரு ஸந்தோஷம். உண்மைதானே!!!!
