Archive for செப்ரெம்பர் 3, 2021
கல்யாண கணேசர்.
வினாயகசதுர்த்தி வருகிறது. அவரைப்பற்றிய கதையாக இருப்பதால் இதை மீள் பதிவு செய்கிறேன். திரும்பவும்தான் ஒருமுறை படியுங்களேன். அன்புடன்

நமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.
தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.
ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.
கைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.
இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.
இந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.
முருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!
கணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.
மளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,
நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி?
பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா? சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.
இருவரும் அமர்ந்தனர்
கணேசர் அவர்களிருவரையும் பூஜித்து…
View original post 308 more words
