Archive for ஓகஸ்ட், 2021
எப்படியிருக்கு.?
யாவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
மீள் பதிவு செய்ய பத்து வருஷங்களாகத் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் கதைகளில் இது முதல் அனுபவம். எவ்வளவு உஷாராக இருந்தாலும் அனுபவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.பத்து வருஷங்களாக. அன்புடன்
எங்கே அனில் வந்தாச்சா?
அவன் வந்து பத்து நிமிஷத்துக்கு மேலே ஆச்சே!
என்ன பண்ரான் பாரு. ஃபேன் பலமா சுத்தறது. சாப்டப்றம்
தூக்கம்தான் வரும். தடார்னு ஓசை கேக்கறதே.
ஓடிப் போய்ப் பார்த்தால் நான் ஓடலே. வேலை செய்யும்
மாதவி பார்க்கிறாள்.
அம்மா, அம்மா அந்த அனில்தான் மோடாவோட கீழே
விழுந்துட்டான். தூக்கக் கலக்கம்போல!
விழுந்தவனுக்கு ஒரு உணர்ச்சியுமில்லை.
ஸந்தேகப்பட்டது ஸரியாப் போச்சு. மத்தியானத்திலேயே
ஏதோ குடிச்சிருக்கான்.
ஏஜன்ஸி,ஏஜன்ஸி. எதுக்கெடுத்தாலும் ஏஜன்ஸி.
நல்லவனா அனுப்பு. நல்லவனாகத்தான் கிடைத்திருக்கிறான்
நம்பிக்கையோடு பணம் கட்டி, நல்லவனா நினைத்தவன்
விழுந்து கிடக்கிறான்.
அவன் ஒரு பிஹாரைச் சேர்ந்தவன். ஆறு குழந்தைகள்
அவனுக்கு. வயதானவரைப் பார்த்துக் கொள்ள வந்தவன்.
ஸந்தேகம் ஸரியாக இருக்கு. அவன் இப்படி, இவன் இப்படின்னு
சொன்னால் ஆள் கிடைக்குமா? மனதில் தோன்றியது ஸரி
ஆக இருக்கு. நடு ராத்ரியில் எட்டிப் பாத்தா ஸெல்லெ தாளமாக்கி
அதுவும் பாடரது, இவனும் படுத்துண்டே பாடறான். வெளியில்
யாரோ பாடரதா நினைச்சுண்டு.
இரண்டு வார்த்தை ஜோரா ஹிந்தியிலே கோவமா சொன்ன பிறகு
பேசாத இருந்தான்.
ராத்ரி பத்து மணிக்கு வரச்சே வாயிலே பான் அது இது , கேட்டா
குச் நஹி, தோடா சுபாரி, வாஸனை மறைக்க பாக்காம்.
இன்று ப்ரத்யக்ஷ்க்ஷமாக கண் காட்சி.
ஸரி வேற ஆள் ஏஜன்ஸி அனுப்புவதாக, எல்லாம் ஒண்ணோட
ஒண்ணு கண்ணான கண்ணாக இப்படி.
தேர்வுக்கு வந்தான் ராஜேஷ் கன்னாவோட இருந்த ஆள்.
View original post 351 more words
அரிசிமாவில் செய்யும் சில கரகரப்புகள் — Rice Flour Snacks
படங்கள் போடத்தெரியாத காலத்தில் எழுதியது. இம்மாதிரி தேன்குழல் மிகவும் நன்றாக இருக்கும். மிஷினில் அரைத்து, எப்போது? எங்கு என்பீர்கள். அன்புடன்
பச்சரிசி ஆறு பங்கும் வெள்ளை உளுத்தம் பருப்பு ஒரு பங்கும் சேர்த்துக் கலந்து மெஷினில் கொடுத்து மெல்லிய மாவாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் தயார் செய்யும் சிலவகைகளைப் பார்க்கலாம்.
தேன் குழல்———-வேண்டியவைகள்
தயார் செயதிருக்கும் மாவு இரண்டுகப்,–ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒருடேபிள் ஸபூன் வெண்ணெய்,—-ஒரு டீஸ்பூன்— வெள்ளை எள், திட்டமாக உப்புப் பொடி , சிறிது பெருங்காயப்பொடி–
பொரித்தெடுக்க எண்ணெய்—–முள்ளில்லாத தேன்குழல் அச்சு
செய்முறை——–உப்பு பெருங்காயம் இரண்டையும் சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும். மாவுடன் சுத்தம் செய்த எள்,சீரகம், சற்று தளர்வு செயத வெண்ணெய்,இவைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வடிக்கட்டிய உப்பு பெருங்காய நீரைச் சேர்த்து மேலும் வேண்டிய தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மாவைக் கெட்டியான பதத்தில் பீசையவும். குழலில் போட்டு பிழிய எவ்வளவு தளர வேண்டுமோ அந்த அளவிற்கு ஜலம்தெளித்து தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அச்சினுள்ளும் சிறிது எண்ணெய்தடவி மாவைஇட்டு காயும் எண்ணெயில் தேன் குழல்களைப் பிழிந்து திருப்பி விட்டு பொன்நிறமாக எடுத்து வைக்கவும். மேலும் இப்படியே தயாரிக்கவும். வடிக்கட்டியில் எண்ணெய் உறிஞ்சும் டிஷ்யூ பேப்பரை உபயோகிக்கவும். கரகரப்பாக இருக்கும். அடுத்து வேறு ஒன்றைப் பார்க்கலாம். இப்போதைக்கு தேன்குழல் ரெடி.
பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு
மீள்பதிவு வரிசையில் இன்று 5 நக்ஷத்திர ஹோட்டல் குழம்பு வருகிறது. பிடித்தவர்களுக்கு கமகமதான். அன்படன்
இது 5 நட்சத்திர ஹோட்டலில் செய்யும் தமிழ் நாட்டுக் குழம்பு.
நானும் எழுதுகிறேன். நீங்களும் செய்யுங்கள்.ருசிப்போமா.
வேண்டியவைகள்.
பூண்டு—100 கிராம். தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்
தக்காளி—2 அல்லது 3
கடுகு–அரை டீஸ்பூன்
வெந்தயம்—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
வற்றல்மிளகாய்—2 இவைகள் எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.
வேண்டிய பொடிகள்
தனி மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—-4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
புளி—1 பெறிய நெல்லிக்காயளவு.
ருசிக்கு உப்பு
உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே
இருக்கலாம்
1 மேலே தூவ சிறிது கறிவேப்பிலை பாக்கி வைத்து விட்டு சிறிது
எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து வைக்கவும்.
2 புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.கறைத்து சாரெடுக்கவும்.
3 சின்ன வெங்காயத்தை உறித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில்
போட்டு சுற்றி எடுக்கவும்.
4 தக்காளிப் பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. குழம்புப் பாத்திரத்தை காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.
6 எண்ணெய் காய்ந்ததும் கடுகு மிளகாயைப் போட்டு, கடுகு வெடித்ததும்
பருப்புகள் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து, வெங்காயம், பூண்டு
சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
7 தக்காளியைச் சேர்த்து வதக்கி மிளகாய்,தனியா, மஞ்சள்பொடி
வகையைச் சேர்த்துப் பிரட்டி புளி ஜலம், உப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விடவும்.
பூண்டு வெந்து…
View original post 53 more words
எலுமிச்சை சாதம் பலவிதம்.
ஜெனிவாவில் இருக்கும்போது பிள்ளை,நாட்டுப்பெண்ணிற்காக ஆபீஸ் போகும் போது செய்து கொடுத்தது இந்தக்குறிப்பு. கணவர் ஆஸ்ப்பத்திரியில் இருக்கும்போது ஒத்தாசைக்கு வருபவர்களுக்கும் கொடுத்து அனுப்பும் நேரம்.இதுவும் பத்து வருஷங்களுக்கு முந்தைய பதிவுதான். ருசியுங்கள். அன்புடன்
அடிக்கடி கையில் டிபன் கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை
சாதம் என நினைக்காமல் சற்று தாளித்துக் கொட்டுவதை
மாற்றி, ருசியையும் சற்று மாற்றியதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். பிரமாதம் ஒன்றுமில்லை. ஆனாலும் யோசிக்க
முடியாத ஒரு ஸமயத்தில் படம் வேறு எடுத்திருந்தேன்.
நீங்களும்தான் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
நல்ல மெல்லியதான அரிசியில் ஒருகப் எடுத்து உதிர் உதிரான
சாதமாக வடித்து ஸ்டீல் தம்பாளத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் நல்ல சாறுள்ளதாக—–1
சிகப்புநிற காப்ஸிகம்—-1 . சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்–2 . நீட்டுவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி பிஞ்சு—1. கைப்பிடி, பொடியாக நறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது 1, டீஸ்பூன்
சில கரிவேப்பிலை இலைகள்
நல்லெண்ணெய்–2 டேபிள்ஸ்பூன்
கடுகு–1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
மஞ்சள்ப்பொடி–சிறிது
பெருங்காயப்பொடி—-சிறிது
ருசிக்கு உப்பு
வறுத்துப் பொடி செய்த வெந்தய, கடுகுப்பொடி 1/2டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய கேப்ஸிகம், பிஞ்சு பட்டாணியை ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டுக் கலந்து 3 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்து
எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து , இஞ்சி பச்சைமிளகாய்.
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மைக்ரோவேவ் செய்ததையும்
சேர்த்துப் பிரட்டி இரக்கவும். மஞ்சள்ப் பொடி சேர்க்கவும்.
ஆறினவுடன் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் சேர்த்துக்
கலந்து ஆறின சாதத்தில் கொட்டிக் கலக்கவும். பொடிகளைச்
சேர்த்துக் கலந்தால் சாதம் ரெடி.
மற்றும், பூண்டு, இஞ்சி விழுதை வதக்கி…
View original post 77 more words
கடலைப்பருப்பின் ஸப்ஜி
இன்று மீள் பதிவிற்கு எனக்குக் கிடைத்தது இந்த ஸப்ஜி என்ற டால். இதுவும் ருசியானதுதான். பிடிக்கிறதா பாருங்கள். அன்புடன். பத்து வருஷ புராணபதிவு இது. அன்புடன்
இதுதான் கடலைப் பருப்பில் செய்யும் டால்.
அதிகம் அரைத்து, கரைத்து விடாமல் சுலபமாக
செய்யக்கூடிய ஒன்று. தனித்த கடலைப் பருப்பில்
செய்வது.
வேண்டியவைகள்–
கடலைப் பருப்பு —அரைகப்
பெரிய பழுத்த தக்காளிப்பழம்—1
தோல்நீக்கிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைகப்
நெய்–1 டீஸ்பூன்
எண்ணெய் –2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி–கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி –சிறிது
சீரகப்பொடி—கால் டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு —நறுக்கிய சில துண்டுகள்
ருசிக்கு—உப்பு
கொத்தமல்லித் தழை—வாஸனைக்கு
செய்முறை.—-பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து
திட்டமாக ஜலம் சேர்த்து, மஞ்சளும் போட்டு,ப்ரஷர்–
—குக்கரில் மலர வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயும், நெய்யுமாக காயவைத்து
வெங்காயம்,இஞ்சி,பூண்டு வகைகளை நன்றாக வதக்கி,
பொடிகளையும் சேர்த்துப் பிரட்டி, தக்காளித் துண்டுகளை
-ச் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது ஜலம் சேர்த்துக்
கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து, பருப்பைச் சற்று மசித்தமாதிரி வதக்கிய
கலவையில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மல்லித்தழை
தூவி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிட இதுவும் ஒரு வகை. சில பேர்
ஒரு துளி சக்கரையும் சேர்க்கிரார்கள்.
விருப்பம்போல்எதையும் கூட்டிக்கழிக்கலாம்.அதுநம்கையில்
சிறிது புதிநா, பாலக் இவைகளை ப் பொடியாக நறுக்கி
வதக்கும் போது சேர்க்கலாம்.
மகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.
ஆடிமாதத்திற்கேற்ற ஒரு பதிவு. அன்புடன்
மாயிமகமாரியம்மா கோலியனூர் மாரியம்மா
சக்தியை,தேவியை, லக்ஷ்மியை பூஜிக்க எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஏற்றதே. ஆயினும் மகிமை மிக்க ஆடி,தை வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானது. மாரியம்மன் கோயில்களிலும் அபிஷேகஆராதனைகள்,ஏழைகளுக்கு கூழ் வார்த்தலும்,மாவிளக்குப் போடுதலும் விசேஷமாக இருக்கும். ஆடிமாத முதல்நாள் ஆடிப்பண்டிகை என்று போற்றிக் கொண்டாடுவார்கள். இம்மாதம் துவங்கிப் பண்டிகைகளின் அணிவரிசைதான். தக்ஷிணாயண புண்ணியகாலம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல் போன்ற காரியங்கள் இன்றே. ஆடி வெள்ளிகள்,ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, பதினெட்டாம் பெருக்கு, முதலியன தொடர்ந்து வரும்.எல்லா நாட்களுமே ஒவ்வொரு விஷயத்தில் விசேஷம்தான்.ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். வீட்டுத் தோட்டத்தில், அவரை,பூசணி,பறங்கி, பாகல்,புடல் என்று தேடித்தேடி விதைகளை நடுவார்கள். மார்கழி தை மாதங்களில் நன்றாகப் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்..
வரலக்ஷ்மி விரதமும் இம்மாதம் வருவதுண்டு. அம்மன் கோயில்களிள் சந்தனக்காப்பிட்டு நிறைமணி அலங்காரம் செய்வார்கள். ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு செய்து கொண்டாடும் கோயில்களுண்டு. எங்களூரில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்து கொண்டாடும வழக்கமிருந்தது..
குத்து விளக்கு பூஜை,அபிராமி அந்தாதி யாவருமாகச் சொல்லுதல், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்,
சுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு மங்கல ஸாமான்கள் வழங்குதல் போன்ற காரியங்களுடன் வெள்ளிக்கிழமைகள் ஏக போக பக்தியுடன் கொண்டாடுவது எப்போதும் மனதை விட்டகலாது. பாயஸ வகைகள்,இனிப்பு குழக்கட்டைகள்,அம்மனுக்குப் பிடித்தமான நிவேதனங்கள்
எங்கள் வளவனூரையடுத்த கோலியனூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தம். மூலஸ்தானத்தில் ஆறு அடி உயர பாம்புப் புற்று உள்ளது. புத்துவாயம்மன் என்று அழைக்கப்படும் அம்மனது. பக்கத்தில் ரேணுகா தேவிக்கும் ஸன்னதி உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை…
View original post 67 more words
அன்னையர்தினப் பதிவு—-30
அன்னையர் தினப்பதிவின் 30 வது பதிவு அவரின் கதையின் முடிவுரையாக அமைந்துவிட்டது. எப்போதோ எழுதியதுதான். மீள் பதிவுக்கு வந்து ஆதரவுகொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
ஓ. நாளைக்கு அன்னையர் தினமா? / யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அம்மா போன விவரம் தெரிந்து தலைக்குளியல்தான் போட்டிருக்கிறேன். எப்படி போனாள்,எந்த விவரமும்கூட பிறகு கேட்கும் படியான ஒரு நிலை. சொல்லு இப்போது சொல்லு. அக்கா அத்திம்பேர் பெங்களூர் போய் வந்தார்கள்.வந்து ஸமாசாரங்கள் சொல்லியுள்ளார்கள். ஸரி பாட்டிக்கு என்ன ஆயிற்றென்று சொல்.
எங்களுக்கும் தந்தி வந்தது. கணேஷ் உடனே ஏர் டிக்கட் புக்செய்து சென்னை போனான். நேற்று அந்த ஏர் ஹோஸ்டஸ் சினேகிதி வந்திருந்தாள். அவளும் போயிருந்தபடியால் விஷயங்கள் விவரமாகச் சொன்னாள்.எல்லா நாட்களும் போலதான் காலையில் குளித்து சமையல் செய்து பாட்டி எல்லாம் செய்திருக்கிறாள். அக்கா அவஸரத்தில் பாட்டியிடம் போய்வருகிறேன் என்று சொல்லக்கூட மறந்து விட்டு அவஸரமாகப் போய்விட்டாளாம்.
அத்திம்பேர் பாதி வழி போனவர் திரும்பி வந்து பாட்டி பீரோவில் பணம் வைத்திருக்கிரது. வாசலில் தாழ்ப்பாள் போடாது உட்கார்ந்து விடப் போகிறீர்கள். கதவை சாத்திவிட்டு உள்ளே போங்கள். என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.
லேட்டாக தலை பண்ணிக்கொண்டு க்ஷவரம்.குளித்து சாப்பிட்டு, எல்லாம் செய்திருக்கிறாள். சாயங்காலம் உலர்த்தின புடவையை மடிக்கும்போது மேலேருந்துசாந்தாபாட்டியைக்கூப்பிட்டு முருக்கு மாவு அரைப்பதற்கு கணக்கு கேட்டிருக்கிறாள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் வாசலில் தபால்க்காரர் ரிஜிஸ்டர் தபால் பாகீரதி அம்மாவுக்கு. கூப்பிட்டிருக்கிறான். அழகாக டைட்டிலோடு அழகர பாகீரதி அம்மாள் என்று கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் தபாலை வாங்கி ஷெல்பின்மேலே கீழே விழுந்து விடாமல் பாரம் ஒன்றும் வைத்திருக்கிறாள். பக்கத்திலேயே மற்றவர்கள்கொடுத்துப்போயிருந்த சாவிகளும்…
View original post 508 more words
மசூர்டால் பகோடா.
இதுவும் எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதியதுதான். ஒரு மாறுபட்ட ருசி. பாருங்கள். அன்புடன்
இந்தடால் பார்ப்பதற்கு அழகாயிருப்பது போலவே
பகோடாவும் அழகாக இருக்கிறது.
அஸ்ஸாம் சமையல் வகையில் நம் வடைபோல முக்கிய
இடத்தை இது வகிக்கிறது.
செய்வதும் சுலபம். அதிக நேரமும் தேவையில்லை.
வேண்டியவைகள்.
மசூர்டால்——அரைகப்
முழுதாக வேக வைத்த உருளைக்கிழங்கு—ஒன்று.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
ருசிக்கு—உப்பு
சட்னிக்கு—ஒரு வெங்காயம்,ஒரு காரம் உள்ள பச்சைமிளகாய்
ஒரு பிடி புதினா, உப்பு
ஒரு தக்காளிப்பழம்.
வதக்க எண்ணெய்.
வாணலியில் 2 ஸ்பூன், எண்ணெயைக்
காயவைத்து,வெங்காயம், மிளகாய்,புதினாவை வதக்கி
கடைசியில் தக்காளியையும் சேர்த்து வதக்கி, உப்பைச்
சேர்த்து ஆரியபின் மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து
சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சட்னி தயார்.
மசூர் டாலைக் களைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒட்ட தண்ணீரை வடித்து விடவும்.
பருப்பை, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
சிறிது தண்ணீர் தெளிக்கவும். சும்மா, நான்கு சுற்றிலேயே
ஒன்றிரண்டாக வரும்.
அரைத்த விழுதுடன், வெந்த உருளைக் கிழங்கை சிறு
துண்டங்களாக உதிர்த்துக் கலக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கலந்த மாவை
மெது பகோடாக்களாக, பொரித்தெடுக்கவும்.
நன்றாக திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து வடிக்கட்டி
கரைத்த புதினா சட்னியுடன் கொடுத்தால், மிகவும்
ருசியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்.
கரகரப்பாகவும், அதே நேரம் ஸாப்டாகவும் இருக்கும்.
சுலபம்தான். சாப்பிடவும்
அன்னையர் தினப் பதிவு—29
நிகழ்வுகள் எப்படி அடுத்தடுத்து நிகழ்ந்தன? அம்மா குடியிருந்த வீடும் பாருங்கள். அடுத்த பதிவையும் சீக்கிரமே பதிவிட்டு விடுகிறேன். முன்பு அப்படிதான் பதிவிட்டேன். கட்டாயம் அந்தப்பதிவையும் படியுங்கள். அன்புடன்
டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யாரையும்வரச்சொல்லிஎழுதவில்லை.அனாவசியமாகஎல்லோருக்கும்ஆஸ்ப்பத்திரியிலும் அனுபவங்களுக்குக் குறைவில்லை. ஸ்பெஷல்வார்டானாலும்நான்குபடுக்கை.ஒருசின்னஹால்மாதிரி. துணைக்கு ஒருவரிருக்கலாம். பிள்ளை அறியாத வயது என்று நான்அவனை ஆஸ்ப்பத்திரியில் இரவு இருக்க விடுவதில்லை. அடுத்த படுக்கைக்கும்,நமக்கும் நிறைய இடம் உண்டு.அடுத்த படுக்கைக்காரர் ஒரு திபெத்தியர். நமக்கு பாஷை புரியாது. யாரும் உறவினர்கள்,பிள்ளை குட்டி எதுவும் இல்லாதவர். யாரோ ஒரு வயதான கிழவி பத்து மணி.சுமாருக்கு வருவாள். கஞ்சிமாதிரி ஏதோ நிறைய வைத்து விட்டுப் போவாள். ஆஸ்ப்பத்திரி சாப்பாடு யென ஏதோ நர்ஸ் கொண்டு கொடுப்பாள்.
நாளுக்குநாள் எழுந்திருக்கக் கூட முடியாமற் பலஹீனமானது தெரிந்தது. நர்ஸ் எப்போதாவது இல்லாவிட்டால் அந்தக் கஞ்சியை யாரையாவது எடுத்துக் கொடுக்கும்படி ஜாடை காட்டுவார். மற்ற உடல்நலமில்லாதவர்களுக்கு வேண்டியவர்கள் கூடவே இருப்பதால் யாவருக்கும்பாவம்என்றுதோன்றும். திபெத்திய லாமாக்கள் அடிக்கடி வந்து ஏதோப்ரார்த்தனைஅவர்கள் முறையில் செய்து போவார்கள். கூடவேஇருப்பவர்களுக்கு,பஸ்சிநேகிதம்,ரயில் சிநேகிதம்ஆகாயவிமாண சிநேகிதம்பேரன்பேத்திகளை பள்ளியிலிருந்து அழைத்துவரும்போதுஏற்படும்,சினேகிதம், வாக்கிங் சிநேகிதம் போல ஆஸ்ப்பத்திரி சிநேகமும் பல விதங்களில் ஏற்படுகிரது. நேற்று முன் நாள் பக்கத்து பேஷண்ட்ஸரியேயில்லை. என்னவானாலும் கடைசி வரை வைத்தியம் கொடுக்க வேண்டும். லாமாக்களுக்குச் சொல்லியாயிற்று. பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசிக்கொண்டார்கள் சிறிது பாஷை புரிந்தவர்கள். சாயங்காலம் நான்கு மணிக்கு மேல் இருக்கும். கைஜாடை செய்து கூப்பிடுகிறார். என்ன ஏது என்று கேட்கப் போனால் தண்ணீர் வேண்டுமென்கிரார். கையால் வாங்கிக் குடிக்கும் நிலையிலில்லை அவர். நம் வீட்டு விளிம்பு வைத்த …
View original post 284 more words