Archive for ஓகஸ்ட் 6, 2021
மசூர்டால் பகோடா.
இதுவும் எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதியதுதான். ஒரு மாறுபட்ட ருசி. பாருங்கள். அன்புடன்
இந்தடால் பார்ப்பதற்கு அழகாயிருப்பது போலவே
பகோடாவும் அழகாக இருக்கிறது.
அஸ்ஸாம் சமையல் வகையில் நம் வடைபோல முக்கிய
இடத்தை இது வகிக்கிறது.
செய்வதும் சுலபம். அதிக நேரமும் தேவையில்லை.
வேண்டியவைகள்.
மசூர்டால்——அரைகப்
முழுதாக வேக வைத்த உருளைக்கிழங்கு—ஒன்று.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
ருசிக்கு—உப்பு
சட்னிக்கு—ஒரு வெங்காயம்,ஒரு காரம் உள்ள பச்சைமிளகாய்
ஒரு பிடி புதினா, உப்பு
ஒரு தக்காளிப்பழம்.
வதக்க எண்ணெய்.
வாணலியில் 2 ஸ்பூன், எண்ணெயைக்
காயவைத்து,வெங்காயம், மிளகாய்,புதினாவை வதக்கி
கடைசியில் தக்காளியையும் சேர்த்து வதக்கி, உப்பைச்
சேர்த்து ஆரியபின் மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து
சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சட்னி தயார்.
மசூர் டாலைக் களைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒட்ட தண்ணீரை வடித்து விடவும்.
பருப்பை, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
சிறிது தண்ணீர் தெளிக்கவும். சும்மா, நான்கு சுற்றிலேயே
ஒன்றிரண்டாக வரும்.
அரைத்த விழுதுடன், வெந்த உருளைக் கிழங்கை சிறு
துண்டங்களாக உதிர்த்துக் கலக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கலந்த மாவை
மெது பகோடாக்களாக, பொரித்தெடுக்கவும்.
நன்றாக திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து வடிக்கட்டி
கரைத்த புதினா சட்னியுடன் கொடுத்தால், மிகவும்
ருசியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்.
கரகரப்பாகவும், அதே நேரம் ஸாப்டாகவும் இருக்கும்.
சுலபம்தான். சாப்பிடவும்