Archive for ஜூலை, 2021
மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி
மூலி பரோட்டா மீள் பதிவு செய்து இருக்கிறேன். பாருங்கள் செய்து. இது ஒருவகை. அன்புடன்
நாம் இதுவரை பலவித ரொட்டிகள் செய்திருக்கிறோம். அதில்
மூலி பரோட்டாவும் ஒன்று.
இது செய்முறை சற்று மாறுபட்டது. நல்ல நவம்பர்,டிஸம்பர்
மாதங்களில், குளிர் காலத்தில் செழுமையான நல்ல முள்ளங்கி
கிடைக்கும். நீரோட்டமாக ருசியும் நன்றாக இருக்கும்.
நம் பக்கத்தில் ஸாம்பார்,கறி,கோசுமல்லி என்று செய்தாலும்
அதிகம் பரோட்டா செய்வதில்லை.
வடஇந்தியாவில் இருந்ததால் எனக்குச் செய்துக் கொடுப்பது,
என்பது வழக்கமாகப் போய்விட்டது.
ஸரி,முள்ளங்கியைப் பாரத்ததும், இதை இதுநாள் வரை
எழுதவில்லையே என்றுத் தோன்றியது.
மாவுடன் முள்ளங்கியைச் சேர்த்துப் பிசைந்துச் செய்வது உண்டு.
இப்பொழுதெல்லாம் முள்ளங்கித் துருவலை உள்ளடக்கித்தான் செய்கிறேன்.
மைதா,கோதுமைமாவு எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
இரண்டு மாவைக் கலந்தும் செய்யலாம்.
வேண்டிய ,ஸாமான்கள்
நல்ல பருமனான முள்ளங்கி—-1
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—அரைடீஸ்பூன்
பச்சைமிளகாய்—காரத்திற்குத் தகுந்த மாதிரி. 1
இலையாக ஆய்ந்த பச்சைக் கொத்தமல்லி—-சிறிது
கோதுமைமாவு—2கப்
ருசிக்கு—உப்பு
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
மேல்மாவு—சிறிது.
செய்முறை.
முள்ளங்கியைச் சுத்தம் செய்து, தோலைச் சீவிவிட்டு, சற்றுப்
பெரியதான சைஸில் கொப்பரைத் துருவலில் துருவிக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கித் துருவலை நன்றாகப் பிழிந்து ஒரு கிண்ணத்தில்
சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
மெல்லிய தேங்காய்த் துருவல்போல முள்ளங்கி இருக்கட்டும்.
பச்சை மிளகாயைக் கீறி விதை நீக்கி,கண்ணிற்குத் தெரியாத அளவிற்குப்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையையும் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய்,பொடிகள்,,கொத்தமல்லி சேர்த்துத் துருவலைக் கலந்து
வைத்துக் கொள்ளவும்.
பிழிந்தெடுத்த முள்ளங்கித் துருவல்,அதனுடைய
சாரும்
மாவுடன்,உப்பு,எண்ணெய் கலந்துபிழிந்து வைத்திருக்கும் முள்ளங்கிச்
சாற்றை விட்டு…
View original post 186 more words
அன்னையர் தினப்பதிவு—-28
இன்றையப்பதிவு 28 வேறு கோணத்தில் வருகிறது. மிகச்சிறிய பதிவு. பாருங்கள். படியுங்கள். அன்புடன்
அன்றய காட்மாண்டுவும் தராராவும்
காட்மாண்டுவிலிருந்து கடைசிப் பிள்ளையும் சென்னைக்குப் போகிறான். அவனும் அண்ணாக்களுடன் தங்க டில்லி போய்,அங்கிருந்து சென்னை போவதாகக் கிளம்பிப் போனான். வீட்டில் இரண்டேபேர். காரியமே இல்லை போலத் தோன்றியது. காலை ஆறு மணி. ஏர்போர்ட் போக வீட்டுக்காரரின் ஆபீஸ் கார்வந்து நிற்கிறது.வேலைக்குப்போகத் தயாரானவர் ஒரே தலைவலி. நெருப்பைக் கொட்டினாற்போல ஒரு உணர்ச்சி என்கிரார்.
சாதாரணமாக பெங்காலிகள் தலைவலி,அதிக ஜுரமென்றால், குழாயில்ப் பெருகும் தண்ணீரில், தலையை நன்றாக அலசித் துடைத்து விடுவார்கள். ஜுரமும்இறங்கி வலியும்குறையுமென்பார்கள்.எனக்கும் பத்து வருஷ பெங்கால் வாஸமாதலால், அப்படியே செய்து, ஆபீஸ் போக வேண்டாமென்று சொல்லி ஓய்வு எடுங்கள் என்றேன். எப்படி இருக்கிறது என்று கேட்கிறேன் . பதிலில்லை வாயில்.நுரை தள்ளுவதுபோல ஒரு தோற்றம். ஏதோ ஸரியில்லை.பயம் கவ்விக் கொள்கிறது. வீட்டை ஒட்டினாற்போலுள்ள டெரஸில் ஓடிப்போய் உதவிக்கு அழைக்கிறேன். ஐந்து நிமிஷத்திற்குள் ஜேஜே என்று அக்கம்பக்கத்தினர்,கீழ் வீட்டினர். நாங்கள் இருப்பது இரண்டாவது மாடி.
மளமளவென்று ஒரு நாற்காலியில், உட்காரவைத்தமாதிரி நான்கைந்து பேர்களாக கீழே இறக்கியாயிற்று. டாக்ஸியிலேற்றி பறக்காத குறையாகஆஸ்ப்பத்திரி.உடன்மனிதர்கள். என்ன செய்கிறோம்,ஏது செய்கிறோம் என்று கூடத் தோன்றாத ஒரு மன நிலை.
டாக்டர்கள் பரிசோதனை செய்து,ஆஸ்ப்பத்திரியில் சேர்த்து,பெரிய பிள்ளைக்குதகவல்கொடுத்து, அவன் வரும்வரை கூட இருந்து எவ்வளவு ஒத்தாசை. ஹைப்ளட் ப்ரஷர். இன்னும் ஏதேதோ டெஸ்டுகள் செய்து மைல்ட் ப்ரெயின் ஹெமரேஜ். பூரண ஓய்வுதான் தேவை. ஒரு மாதம் டாக்டர்கள் கண்காணிப்பில் ஆஸ்ப்பத்திரியில் இருக்க வேண்டும் என்று சொல்லி…
View original post 302 more words
அன்னையர்தினப் பதிவு—27
இதிலும் சில ஸம்பவங்களின் ஞாபகத்துடன் தொடருகிறது. 27 வரை வந்துவிட்டோம்.வாருங்கள். அன்புடன்
விசுபலகை இதுமாதிரிதான்ஆனால்,அகலமாக இருக்கும், இது மாதிரிக்குதான்
பெங்களூர் குடும்பத்தைப் பற்றி நினைத்து விட்டால் அவ்வளவு
பெருமிதமாக இருக்கும் அம்மாவிற்கு.
அந்தக்குடும்பத்துப் பெண்களும்தான் என்ன எவ்வளவு மனதில்
ஒருவர்க்கொருவர் முரண்பாடுகளிருந்தாலும், அதையதை அப்படியே
விட்டு விட்டு, எதையும் ரகளையாக ஆக்காமல் நேசம் பாராட்டுவார்கள்.
அண்ணன் தம்பிகளும் அப்படியே. அவர்கள் குடும்பத்து பெண்கள்,
பேத்திகளெனஅவர்கள் வாழ்க்கைப்பட்ட இடத்திலும் யாவரையும்
நேசித்து இன்றளவும் வாழ்ந்து வருகிரார்கள்.
இப்படியெல்லாம் இந்த விசுப்பலகையில் உட்கார்ந்து யோசிப்பதுதான்
வேலையாக இருக்கிரது.
அதென்ன விசுப்பலகை.? விசுபலகையா? விசைப் பலகை இல்லை. நல்ல
பருமனான ,அழுத்தமுள்ள பலகைகளை ஒன்று சேர்த்து படுப்பதற்கு
இரண்டு மூன்று பெஞ்சுகளைச் சேர்த்தால் வரும் அகலத்திற்குச்
செய்யப்பட்ட அகலமான படுக்கும் பலகை.
அழகாக தாங்குவதற்கு நான்கு கால்களுக்குப் பதில், பிடிமானம்
இருக்கும்.? அது எந்தத் தலைமுறையில் செய்ததோ?
அவ்வளவு கனம்.
ஒரு முறை பிரார்த்தனைக்கு மயிலம் சென்ற போது,வளவனூரிலிருந்து
வேனின் மீது கட்டி யெடுத்து வந்தது.
ஹாலில் அதைப்போட்டு அதில்தான் அம்மாவின் வாஸம்.
காலையில் படுக்கை சுருட்டி வைத்தாகிவிடும். அதில்தான் மெத்
என்ற உணர்வுக்காக எத்தனை பழம் புடவைகள் மடித்துப்
போட்டிருக்கும். இதெல்லாம் ஏம்மா என்று கேட்பேன். வேண்டாமே
இதெல்லாம்.!
அசடே உனக்குத் தெரியாது. வயதானவர்களுக்கு இந்தப்புடவைகளால்
எவ்வளவு சுகம் கிடைக்குமென்று.
வயதானவர்கள் சமத்துதான். நாம்தான் அசடு.
உபயோகி. வேண்டாதபோது தூக்கி எறி.
எதையும் வீணாக்காது உபயோகிக்கும் சுபாவம். இதுதான் தியரி.
ஒரு ஸமயம் தில்லி வந்திருந்தேன். சென்னைக்கும் போகத்தான்.
View original post 467 more words
டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் எழுதியக் குறிப்பு இது. பார்த்து வையுங்கள். அன்புடன்
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக்…
View original post 47 more words
அன்னையர் தினப்பதிவு—26
தொடரும் திருவண்ணாமலைப் பயணங்கள். மீள்பதிவு செய்ய முடியாது என்றே நினைத்தேன். செய்துவிட்டேன். படியுங்கள். அன்புடன்
பிறந்த நாள் குறிப்பிடுவதற்கு கார்த்திகை உற்சவத்தின் போதுதீபத்தின்
இரண்டாவது நாள் மிருகசீரிஷ நக்ஷத்திரம், வந்தவர்கள் யாவருக்கும்
வடைபாயஸத்துடன் வருஷா வருஷம் சமைத்துப்போட்டு ,அப்பாவின்
பிறந்தநாளைக் கொண்டாடுவது ஞாபகம் வந்தது.
தேதிகள் மாறிதான் நக்ஷத்திரங்கள் வரும். இருப்பினும், மாதத்தையும்
ஷஷ்டியப்த பூர்த்தி நடந்ததை வைத்து ஓரளவு தோராயமாகக் கொடுத்தது.
நல்ல வேளை பர்த் ஸர்டிபிகேட் கொண்டுவா என்றால் எங்கு போவது?
அடுத்து கல்வி எங்கு கற்றார்? என்ன படிப்பு?
ஒரு பதின்மூன்று வயது சிறுமி. நாற்பதுக்கு அதிகம் மாப்பிள்ளை.
மாப்பிள்ளை என்ன படித்தார், என்ன என்று விசாரித்தா கொடுத்தார்கள்.
அல்லது பெண்ணிற்குதான் அதை எல்லாம் கேட்கத்தான்
தெரியுமா?
ஊரைச் சுற்றிவா. இவ்வளவு படித்து வேலையிலுள்ள எவரையாவது
காண்பி.இங்லீஷும்,தமிழும் படிச்சு சொக்கா போட்டுண்டு வேலைக்குப்
போகும்பிள்ளை யாராவது காண்பி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ட்ரெயினிங் படித்தவரா?
இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.
டேனிஷ் மிஷின் பள்ளியில் தனியாக ஆளை நியமித்தே
ஐம்பதுவருஷரிகார்டுகளைத் தேடினார்களாம்.
அங்கும் ரிகார்டுகளே இல்லாமற் போயிருந்தது.
அதற்குப் பிந்தைய இரண்டொரு வருஷ ரிகார்டுகள் கூட
இல்லாமலிருந்ததுதான் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இப்படி,அப்படி என்று எல்லாத் தேடல்களையும் ஒருவாராக
முடித்து அனுப்பினால் அது ஸரியில்லை,இதுஸரியில்லை என்ற
கடிதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
நல்ல முறையில் பணம் கிடைத்தால், இதற்கெல்லாம் பாடு பட்டவர்க்கு
எந்த முறையிலாவது கணிசமாக உதவ வேண்டும்என்ற
இம்மாதிரி எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
காங்கிரஸ் தியாகி அவர்களின் முயற்சி சென்னை மந்திரி ஸபை
View original post 468 more words
அரிநெல்லிக்காய் சாதம்.
இதுவும் சென்னையில் செய்தது. ருசியுங்கள். அன்புடன்
கலந்த சித்ரான்னம் மேலே உள்ள படம்.
இப்போதுஅரிநெல்லிக்காய்ஸீஸன்.அரிநெல்லிக்காயிலும்
பலவிதங்கள் செய்யலாம். ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.
சென்னையில் எங்கள் வீட்டு மனையில் அரிநெல்லிமரம் இருக்கிறது.
இரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்
வாங்கி பச்சையாகத் தின்போம். ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்
இப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி, ஜூஸ் என எல்லா விதத்திலும்
உபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.
வீட்டுமரம் என்றால் பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.
நீங்களும் செய்து பார்க்கலாமே!!!!!!! இதனுடைய புளிப்பு
ருசி வித்தியாஸமானது.
வேண்டியவைகள்.
அரிநெல்லிக்காய்——புளிப்புக்குத் தக்கபடி–12
உதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்
பச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்
இஞ்சி—சிறிதளவு
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு வகைக்கு
சிறிதளவு.
கலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி
பெருங்காயப் பொடி—வாஸனைக்குச் சிறிது
நல்லெண்ணெய்—-3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கறிவேப்பிலை சில இலைகள்.
செய்முறை.
நல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து
கொப்பரைத் துருவல் மூலம் துருவிக் கொள்ளவும்.
சாதம் இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஆறவிடவும்.
நான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ
எண்ணெயைக் காயவைத்து முறையே கடுகை வெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கவும்.
துருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.
உப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து சுருள வதக்கவும்.
கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, சாதத்தில்க் கொட்டிக்
கலக்கவும்.
வறுத்த வெந்தியப்பொடி,சீரகப்பொடி சேர்க்கலாம்.
காரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்
போது சேர்த்து வதக்கலாம்.
காரம் அதிகமாக்கிக்…
View original post 18 more words
அன்னையர் தினப்பதிவு 25
பதிவு 25 உங்கள் பார்வைக்கு வருகிறது. அம்மா கோர்ட்படி ஏறியது, இன்னும் சில ஸம்பவங்கள் இதில். இன்னும் ஐந்து வாரங்கள்தான் பாக்கி. படியுங்கள். அன்புடன்
அப்பா இறந்த போது காரியங்களில் ஒன்றான சர்மஸ்லோகம்
வாசித்தளித்த பேப்பர் என்னிடம் உள்ளதா?
அதைஆதாரமாகக் காட்டமுடியுமா என்ற ஒரு யோசனை.
என்னிடம் உள்ளதா எனக்கேட்டு ஒருகடிதம்.
கடிதம் கைக்குவரவே மூன்று வாரமாகி விட்டது.
பாரக்பூர்,காட்மாண்டு என எத்தனை குடிப்பெயற்சிகள்.
அதுவும் எங்கு ஒளிந்து கொண்டதோ கிடைக்கவில்லை.
அப்பா காலமான விஷயம், நமது விசேஷ நிருபர் என்ற
தலைப்பில் சுதேசமித்திரன் பாரத தேவியில் வந்தது, என எந்த பேப்பர்
கட்டிங்கும் கிடைக்கவில்லை.
நீ சிரமப்படாதே பென்ஷனுக்காக அலையவும் வேண்டாம்,நிம்மதியாய்
இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றுதான் சொல்ல முடிந்ததே
தவிர எந்த முயற்சியும் செய்ய யாருக்கும் நேரம்,காலம்,இல்லை
என்றுதான் சொல்ல முடிந்தது.
அயலூர் மாற்றலாகிச் சென்ற பேரன்,பெண் அவர்கள் குடும்பத்துடன்
வரபோக இருக்கிரார்கள் என்ற செய்தியும் இடையே கிடைத்தது.
இதில் அம்மாவிற்கு மகிழ்ச்சி.
நம்முடன் வரபோக இல்லாவிட்டாலும் அவர்கள் குடும்பம்
ஒற்றுமையுடன் இருந்தால் ஸரி என்ற எண்ணம் ஒரு மகிழ்ச்சியைத்
தந்தது. இப்படிச் சில காலம் கடந்தது. ஒருநாள்
பாட்டி உங்கள் பேரனுடன் ஜோடியாக ஸ்கூட்டரில் ஒரு பெண்ணும்
போவதைப் பார்த்தேன் என மாப்பிள்ளை சொல்ல
நீயாரைப் பார்த்தாயோ? நல்ல பிள்ளை அவன். நீ வேறு யாரையாவது
பார்த்திருப்பாய்.
அம்மாவின் மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கும். இது என்ன புது
ஸமாசாரம் என்று.
ஒரு பத்துப் பதினைந்து நாட் கழித்து, பேரன்,அவன் மனைவி,மாமியார்,
அம்மா என எல்லோரும் விஜயம்.
வாங்கோ என்று கூப்பிட்டதற்கு…
View original post 391 more words
இதுவும் ஒரு பூவே

பதிவை மேம்படுத்த
சேமிக்கப்பட்டதுPreview(ஒரு புதிய தாவலில் திறக்கிறது)தலைப்பைச் சேர்இதுவும் ஒரு பூவே

பூண்டின் பூவிது. மொட்டும் மலரும். நன்றாகவுள்ளதா?ஸாதாரணமாக வெங்காயத்தின் தாள்கள் தெரியும். இதையும் பாருங்கள்.