Archive for ஜூலை 26, 2021
அன்னையர் தினப்பதிவு—-28
இன்றையப்பதிவு 28 வேறு கோணத்தில் வருகிறது. மிகச்சிறிய பதிவு. பாருங்கள். படியுங்கள். அன்புடன்
அன்றய காட்மாண்டுவும் தராராவும்
காட்மாண்டுவிலிருந்து கடைசிப் பிள்ளையும் சென்னைக்குப் போகிறான். அவனும் அண்ணாக்களுடன் தங்க டில்லி போய்,அங்கிருந்து சென்னை போவதாகக் கிளம்பிப் போனான். வீட்டில் இரண்டேபேர். காரியமே இல்லை போலத் தோன்றியது. காலை ஆறு மணி. ஏர்போர்ட் போக வீட்டுக்காரரின் ஆபீஸ் கார்வந்து நிற்கிறது.வேலைக்குப்போகத் தயாரானவர் ஒரே தலைவலி. நெருப்பைக் கொட்டினாற்போல ஒரு உணர்ச்சி என்கிரார்.
சாதாரணமாக பெங்காலிகள் தலைவலி,அதிக ஜுரமென்றால், குழாயில்ப் பெருகும் தண்ணீரில், தலையை நன்றாக அலசித் துடைத்து விடுவார்கள். ஜுரமும்இறங்கி வலியும்குறையுமென்பார்கள்.எனக்கும் பத்து வருஷ பெங்கால் வாஸமாதலால், அப்படியே செய்து, ஆபீஸ் போக வேண்டாமென்று சொல்லி ஓய்வு எடுங்கள் என்றேன். எப்படி இருக்கிறது என்று கேட்கிறேன் . பதிலில்லை வாயில்.நுரை தள்ளுவதுபோல ஒரு தோற்றம். ஏதோ ஸரியில்லை.பயம் கவ்விக் கொள்கிறது. வீட்டை ஒட்டினாற்போலுள்ள டெரஸில் ஓடிப்போய் உதவிக்கு அழைக்கிறேன். ஐந்து நிமிஷத்திற்குள் ஜேஜே என்று அக்கம்பக்கத்தினர்,கீழ் வீட்டினர். நாங்கள் இருப்பது இரண்டாவது மாடி.
மளமளவென்று ஒரு நாற்காலியில், உட்காரவைத்தமாதிரி நான்கைந்து பேர்களாக கீழே இறக்கியாயிற்று. டாக்ஸியிலேற்றி பறக்காத குறையாகஆஸ்ப்பத்திரி.உடன்மனிதர்கள். என்ன செய்கிறோம்,ஏது செய்கிறோம் என்று கூடத் தோன்றாத ஒரு மன நிலை.
டாக்டர்கள் பரிசோதனை செய்து,ஆஸ்ப்பத்திரியில் சேர்த்து,பெரிய பிள்ளைக்குதகவல்கொடுத்து, அவன் வரும்வரை கூட இருந்து எவ்வளவு ஒத்தாசை. ஹைப்ளட் ப்ரஷர். இன்னும் ஏதேதோ டெஸ்டுகள் செய்து மைல்ட் ப்ரெயின் ஹெமரேஜ். பூரண ஓய்வுதான் தேவை. ஒரு மாதம் டாக்டர்கள் கண்காணிப்பில் ஆஸ்ப்பத்திரியில் இருக்க வேண்டும் என்று சொல்லி…
View original post 302 more words