Archive for ஜூலை 7, 2021
அரிநெல்லிக்காய் சாதம்.
இதுவும் சென்னையில் செய்தது. ருசியுங்கள். அன்புடன்
கலந்த சித்ரான்னம் மேலே உள்ள படம்.
இப்போதுஅரிநெல்லிக்காய்ஸீஸன்.அரிநெல்லிக்காயிலும்
பலவிதங்கள் செய்யலாம். ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.
சென்னையில் எங்கள் வீட்டு மனையில் அரிநெல்லிமரம் இருக்கிறது.
இரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்
வாங்கி பச்சையாகத் தின்போம். ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்
இப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி, ஜூஸ் என எல்லா விதத்திலும்
உபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.
வீட்டுமரம் என்றால் பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.
நீங்களும் செய்து பார்க்கலாமே!!!!!!! இதனுடைய புளிப்பு
ருசி வித்தியாஸமானது.
வேண்டியவைகள்.
அரிநெல்லிக்காய்——புளிப்புக்குத் தக்கபடி–12
உதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்
பச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்
இஞ்சி—சிறிதளவு
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு வகைக்கு
சிறிதளவு.
கலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி
பெருங்காயப் பொடி—வாஸனைக்குச் சிறிது
நல்லெண்ணெய்—-3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கறிவேப்பிலை சில இலைகள்.
செய்முறை.
நல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து
கொப்பரைத் துருவல் மூலம் துருவிக் கொள்ளவும்.
சாதம் இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஆறவிடவும்.
நான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ
எண்ணெயைக் காயவைத்து முறையே கடுகை வெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கவும்.
துருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.
உப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து சுருள வதக்கவும்.
கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, சாதத்தில்க் கொட்டிக்
கலக்கவும்.
வறுத்த வெந்தியப்பொடி,சீரகப்பொடி சேர்க்கலாம்.
காரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்
போது சேர்த்து வதக்கலாம்.
காரம் அதிகமாக்கிக்…
View original post 18 more words