டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
ஜூலை 26, 2011 at 6:06 பிப 7 பின்னூட்டங்கள்
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக் கொடுக்கும்.
காரம் வேண்டிய அளவு மிளகாயோ, பொடியோ கூட்டிக்
கொள்ளலாம்.
ரொட்டிக்காகவென்றால் டாலை சற்று திக்காகவும்,
சாதவகையுடனென்றால் சற்று நீர்க்கவும் தயாரிப்போம்.
பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கலாம்.
காப்ஸிகம் சேர்த்தால் கண்ணிற்கும் விருந்தாக இருக்கும்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு ஆதலால் வேக வைக்கும்
போது தண்ணீர் அதிகம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
தாளித்து பருப்பில் சேர்த்தாலும், பருப்பை தாளிதத்தில்
சேர்த்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
Entry filed under: டால் வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 6:12 முப இல் ஜூலை 27, 2011
முழு பாசிப்பயிறு அல்லது தோலில்லாத பாசிப்பருப்புதான் வாங்கிருக்கிறேன்..இந்த பருப்பு வாங்கியதில்லை. நல்லா இருக்கும்மா ரெசிப்பி!
கடைசி படம் அழகா இருக்கு,பச்சைக்கலர் டால்-சிவப்பு கலர் செர்ரி டொமட்டோன்னு கான்ட்ராஸ்ட்டா கலக்கறீங்க! சூப்பரா இருக்கு. 🙂
2.
chollukireen | 2:17 பிப இல் ஜூலை 27, 2011
ஏதோ எனக்குத் தெரிந்தபடி படங்கள். கான்ட்ராஸ்ட்டா வந்திருக்கா ஸந்தோஷம். ரொம்ப மெனக்கிடுவதில்லை. எப்படி அமைகிறதோ அப்படியே போட்டு விடுகிறேன். சமையல் ஒழுங்காகத்தான் செய்கிறேன். பார்க்கலாம்.
3.
chollukireen | 12:05 பிப இல் ஜூலை 15, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் எழுதியக் குறிப்பு இது. பார்த்து வையுங்கள். அன்புடன்
4.
Geetha Sambasivam | 12:46 பிப இல் ஜூலை 15, 2021
Super recipe Amma.
5.
chollukireen | 12:02 பிப இல் ஜூலை 16, 2021
மிக்க சந்தோஷம் உங்கள் கால் எப்படி இருக்கிறது சீக்கிரம் குணமடைய வேண்டும் அன்புடன்
6.
ஸ்ரீராம் | 1:38 பிப இல் ஜூலை 15, 2021
நாங்கள் பயத்தம் பருப்பை வேகவைத்து, சின்னவெங்காயமும், பச்சை மிளகாய், பெருங்காயமும், மட்டும் சேர்த்து வேகவைத்து எடுத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்வோம். இதுமாதிரியும் செய்து பார்க்கிறேன்.
7.
chollukireen | 12:05 பிப இல் ஜூலை 16, 2021
மிக்க நன்றி நீங்கள் செய்த முறையும் மிகவும் நன்றாக உள்ளது அன்புடன்