Archive for ஜனவரி, 2022
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.3
நிகழ்வுகள் எழுதுவது நான் இல்லையா!அந்த கால கட்டத்தில் என் எண்ணங்களின் போக்கும் கூடவே வருகிறது. பாருங்கள். படியுங்கள். வேறு நான் என்ன சொல்லப் போகிறேன். அன்புடன்
நமக்கு ஜும்ஸும் போனவர்கள் திரும்ப வந்தால்ப் போதுமென்றாகி
விட்டது. ராயல் ஃப்ளைட் கன்ட்ரோலருக்கோ அவ்விட விபத்துக்கு
ஆளான விமான பாகங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக
பின்னும் பட்ஜெட் போடாமல் இருப்பவர்களை அங்கேயே மேலும்
சில நாட்கள் தங்கவைத்து, மராமத்துப் பணிகளுக்கு அவர்களை உபயோகித்து
காப்டரை பாதுகாத்து மேலும் சில ட்ரிப்புகள் செய்து ராயல் ஃப்ளைட்டுக்கு
ஆதாயம் கொடுக்க தீர்மானம் செய்து விட்டார்.
ஸரி யாருக்கு முக்திநாத் போகவேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்.
போய்வாருங்கள் என்று சொல்லி விட்டார்.
குஷிக்கு கேட்க வேண்டுமா?
அப்பொழுதெல்லாம், குதிரையோ,இல்லை,இல்லை கோவேரி கழுதைன்னு,மட்டக் குதிரை என்று
தான் சொல்ல வேண்டும். அதனுடன் ஒரு ஆள் வருவான். சில இடங்களில்
அதன்மேல் உட்கார வைத்தும், கூட துணையாகவும் வந்து எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போய் திரும்ப மாலை வந்து சேர்ந்து விடுவார்கள்.
இப்படிக்,கும்பல்,கும்பலாக ஆட்கள் முக்திநாத் சென்று வருவார்களாம்.
அந்தக் கூட்டத்துடன் பாலஸில் வேலை செய்பவர்கள் என்ற விசேஷ
மரியாதைக்குரியவர்களாக இவர்களுக்கு வேண்டியதெல்லாம் வசதி
கொடுத்து, சாளக்ராமங்கள் அவ்விடம் சேகரித்திருந்தால் அதையும் சேர்த்து
கொடுத்தனுப்பும் படி விசேஷ V.I.P.ஆக 4,5 பேருக்கு போவதற்கு ஏற்பாடு
ஆகி விட்டது. விஷயங்களும் எங்களுக்கு சொல்லியனுப்பினார்கள்.
ஆக முக்திநாத் போய் சாளக்ராமம் வரப்போகிறது.
அப்படி என்ன ஸந்தோஷமா?
என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர்.
ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக
பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி
யாவும் நடைபெறும்,
வயதான…
View original post 257 more words
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.2
நேபாளத்தின் முடியாட்சியில் நடந்த சூழ்நிலைச் சம்பவங்கள். படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். என்னவரின் ஞாபகார்த்தப் பதிவு இது. அன்புடன்
ஸாதாரணமாக அரசர் வெளியே போய் நேபாலிலேயே மற்ற பகுதிகளில்
தங்கி இரண்டொரு மாதம் அவ்விட முன்னேற்றங்களை மனதில் வைத்து
ஒழுங்கு செய்து விட்டு வருவது வழக்கம். அம்மாதிறி ராஜ ஸவாரிகளின்
போது ஒரு சிறிய காட்மாண்டுவே இடம் பெயர்ந்தாற்போல இருக்கும்.
இம்மாதிரி, ஸவாரிகளின் போதும், அயல் நாட்டுக்குப் பிரயாணம்
செய்யும் போதும் அவர்களுக்கு ஸ்ரீ.பாஞ்ச்,மஹாராஜாதிராஜ் ஸர்கார்
வருகிறார், அல்லது போகிரார் என்று முன் கூட்டி அறிவித்து விடுவார்கள்.
காட்மாண்டுவிலும், நேபாலில் எவ்விடம் போனாலும்
வழியின் நெடுகிலும், யாவர் வீட்டு வாயிலிலும் பெறிய, பெறிய குடங்களில்
காக்ரிஎன்று சொல்லுவார்கள் நீரை நிரப்பி குங்கும, பூக்கள் என
அலங்காரம் செய்து பூரண கும்ப வரவேற்பு, அல்லது வழியனுப்புதல்
கட்டாயமாக கடை பிடிக்கப்படும். மக்கள்
உடலை வளைத்து இரு கைகளினாலும் கையைத் தட்டி ஓசையுடன்
வணக்கம் செய்யும் நிலையில் ஸந்தோஷமாக, வழியனுப்புதலும்,
வரவேற்பும் கொடுப்பார்கள். இப்படியே எந்த வொரு கூட்டங்களுக்குப்
போனாலும், கோவிலுக்குப் போனால் கூட உடல் வளைத்து
கைகூப்பித் தட்டி ராஜாவுக்கு ராஜ மறியாதை.
இப்படிப்பட்ட ராஜாவின் வாயுவிமானம் கூட டாக்ஸி மாதிரி ,கூட்ஸ்
வண்டி மாதிரியும் உபயோகப் படுத்தப் பட்டது.
முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி பேசுகிறேன்.
ராயல்ஃப்ளைட்டே பெயரில்லாமல் ஆர்மியில் இணைக்கப்பட்டு,
S.N.S.B.S என்று பெயர் மாறியதும் நடந்தது.
ஷாஹி,நேபாலி,ஸைனிக், பிமான ஸேவா என்று பெயர் மாறிய
ஆர்மியிலும் ஸிவிலியனாக இவர் வேலை செய்வதும் தொடர்ந்தது.
எங்கு திரும்ப …
View original post 281 more words
பிரண்டைத் துவையல்.
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிது தான். பிடித்தவர்கள் செய்யலாம். பாருங்கள். அன்புடன்
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
View original post 123 more words
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும். 1
என்னுடைய கணவரின் நினைவாக இதை மீள் பதிவு செய்திருக்கிறேன். கணினி புதியது வாங்கிய பிறகே இதைச் செய்திருக்கிறேன். மிகவும் பின்னோக்கிய வருடங்களின் நினைவுப் பதிவு இது. வசதிகள் குறைந்த காலமது. என் வாசகர்கள் திரும்பப் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.எல்லோருக்கும் என் அன்பு. அன்புடன்
சுண்டல் வினியோகம், ஸ்வீட் வினியோகம், ஏழைகளுக்கு புடவை
வேஷ்டிவினியோகம், தற்காலத்தில் ஸ்கூல் பசங்களுக்கு இலவச
லேப்டாப் வினியோகம், எலக்க்ஷன் காலத்தில் என்னென்னவோ
பலவித எலெக்டிரிக் ஸாமான்கள் இலவசம் இதெல்லாம்தான்
எல்லோருக்கும் தெரியும்.
எங்களின் காட்மாண்டு வாஸத்தின் போது வித்தியாஸமான ஸாளக்ராம
வினியோகம் செய்யும்படி ஒரு நேரம் அமைந்தது.
ராயல்ஃப்ளைட்டின் சேவையா, எங்கள் வீட்டுக்காரரின் சேவையா?
எதிர் பாராத விதமான காலகட்டம். எதுவும் நடந்திருக்கலாம்.
இப்பவும் யாராவது கேட்டால் முடிந்தபோது வாங்கிக் கொடுக்க
முயற்சிக்கிறோம். என் வீட்டுக்காரரின் அனுபவம்தானிது.
முதலில் ராயல்ஃப்ளைட்.
என்னுடைய பிள்ளைகள் ஆகாயத்தில் ஃப்ளைட் சப்தம் கேட்டவுடனே
அப்பா -ப்ளைட், ஆவ்ரோ, டகோடா, ஹெலிகாப்டர், பெல் என பார்க்காமலே
அதன் பெயரை நான் ஃபஸ்ட், நீ ஃபஸ்ட் என போட்டி போட்டுக்கொண்டு
சொல்வார்கள். அப்பா வேலை செய்யும் ப்ளேன் அவர்களுடயதாக எண்ணம்.
ராயல்ப்ளைட்டுடா அப்பாது இல்லை. என்ன சொன்னாலும் அவர்களுக்கு
அப்பா ப்ளேன்தான்.
ராஜ குடும்பத்திற்கான ப்ளேன்கள், டகோடD.C 3இ ல் ஆரம்பமாகிஆவ்ரோ,
ட்வின் ஆட்டர்,ட்வின் பைனர்,ஹெலிகாப்டர்கள் எல்யூட், பெல்,பூமா, என
வந்து கொண்டிருந்தது. வருடங்கள் ஸரியாக ஞாபகமில்லை. 1970 என்ற வருஷத்தின் பின்னாக இருக்கலாம்.
அப்பொழுதெல்லாம் முக்தி நாத்திற்குப் போக ப்ரைவேட் ஏர்லைன்ஸ் வசதி
எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்.
ராஜ குடும்பத்தினர் ஸவாரி, அதுதான் பிரயாணம் செய்யும் போது,எங்கு
போகவேண்டுமானாலும் விமானம், உள்ளே அலங்கரிக்கப்பட்டு விசேஷ
வசதிகளுடன் மாறுதலாகிவிடும்.
ஸவாரி இல்லாத நாட்களில், கார்கோவாக மாற்றி விடுவார்கள்.
View original post 195 more words