Archive for பிப்ரவரி, 2022
சிவராத்திரி மகிமை
நாளை மார்ச் முதல்தேதி 1-3-1922 மஹா சிவராத்திரி. முன்னாடி எழுதிய பதிவு ஒன்றை மீள்ப் பதிவு செய்கிறேன். உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன்
நிலாவுலாமலி நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
அன்புடன்
சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி…
View original post 224 more words
முளைக்கீரை மசியல்.
பத்துவருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவிது. சென்னை போயிருந்த போது செய்தது இது. மும்பையிலும் ஸரி, டில்லியிலும் ஸரி முளைக்கீரை கிடைத்து வாங்கியதில்லை. பார்த்தவுடன் போடத் தோன்றியது. வற்றல் குழம்பும், கீரை மசியலும் ஊர் ஞாபகம் வருகிறது. செய்யத் தோன்றுகிறதா? பார்ப்போம். அன்புடன்
இந்தக்கீரை எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய சத்து மிகுந்த ஒரு நல்ல கீரை. இதை
பருப்பு சேர்த்தும் சேர்க்காமலும் சமைக்கலாம்.
வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?
முளைக்கீரை—2கட்டு
அவசியமானால் பூண்டு—4 இதழ்
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்–1 டீஸ்பூன்
மிளகாய்—1
துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன். ஊறவைக்கவும்.
தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளித்துக் கொட்ட—1ஸ்பூன் நெய்
சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.
செய்முறை—–கீரையை நன்றாக சுத்தம் செய்துப்
பொடியாகநறுக்கி தண்ணீரில் 2, 3,முறை அலசித்
தண்ணீரைவடியவிடவும்.
துவரம்பருப்பை முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்
தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
மசியஅரைத்துக் கொள்ளவும்.
நிதான தீயில் வடியவைத்த கீரையுடன், பூண்டைத் தட்டிப்
போட்டு கால்கப் ஜலத்துடன் பாத்திரத்தில் சேர்த்து வேக
வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பச்சென்று
கீரை நிறம் மாறாமலிருக்கும்.
கீரை வெந்ததும் குழிக் கரண்டியாலோ, மத்தாலோ
நன்றாக மசிக்கவும்.
அறைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கீரையில்க்
கொட்டிக் கலக்கி பின்னும் இரண்டொரு கொதி விடவும்.
இறக்கி வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்
முதலியவைகளை நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில் வேகவைத்த பயத்தம்
பருப்போ அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.
சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்
சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்
கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.
அக்ரூட் சட்னி.

இன்று புதுவிதமான ஒரு சட்னி வகையை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.இது என் பேத்தி செய்வதைப் பார்த்தேன்.. எனக்குப் புதுமாதிரியாகத் தோன்றியது. இது தோய்த்துச் சாப்பிடுவதற்கானது. பச்சைப் பசேலென ஸுலபமாகத் தயாரிப்பது. மாதிரிக்குப் பண்ணி படங்களுடன் கொடு என்று கேட்டேன். நீங்களும் முயற்சிக்கலாமே!
படங்களுடன் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. பேத்தி விலாஸினியின் குறிப்பு இது.
வேண்டியவைகள்.



அக்ரூட் பருப்பு—–6. ஆய்ந்த பாலக்கீரை மூன்றுகைப்பிடி, பூண்டு ஒரு இதழ் [பல் 1]
மிளகாய்ப் பொடி—-1/4 டீஸ்பூன், கஸூரிமெத்தி 1/4டீஸ்பூன்,உப்பு ருசிகு ஏற்ப,
வினிகர் 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கொத்தமல்லி இலைகள் விருப்பத்திற்கு ஏற்ப.
வினிகர் பிடிக்காதவர்கள் எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாலக் கீரையை இலைகளாகத் தேர்ந்தெடுத்துத் தண்ணீரில் சுத்தம் செய்து வடிய வைக்கவும். நான்கு நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து கொள்ளவும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து, வேக வைத்து எடுக்கவும்.



மிக்ஸி கன்டெய்னரில் அக்ரூட் பருப்பை பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன்பாலக்கீரை,பூண்டு,கொத்தமல்லி இலை,கஸூரிமெத்தி , முதலானவைகளைச், சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடவேண்டாம்.
அரைத்த விழுதுடன் உப்பு ,மிளகாய்ப்பொடி, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலக்கவும். அக்ரூட் சட்னி தயார். உப்பு ,காரம் ஸரியாக இருக்கிறதா பார்த்து , வேண்டியவைகளை அதிகமாக்கவும். ஒரு அழகான அகலமான கிண்ணத்தில் ,எடுத்து வைக்கவும்.
ரெடியாக டேபிளில் வையுங்கள்.டோஸ்ட்செய்த பிரெட்,சீஸ்,டோக்லா, பஜ்ஜி வகைகளுடன் தோய்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
ருசி பாருங்கள். தற்கால சட்னி இது.அக்ரூட் ருசியுடன் இருக்கும்.

ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.5
சாளகிராமத்திற்கும் ராயல் ஃபிளைட்டிற்கும் என்ன உறவு புரிந்ததா? இப்படியெல்லாம் எழுதிய இந்தப்பதிவு அவரின் ஞாபகமார்த்தப் பதிவாக இப்போது பதிவாகிறது.சாளக்ராம வினியோகம் . அன்புடன்
இந்த ஒருமாதமாக என்ன செய்தீர்களென்று கேட்கிறீர்களா?
அக்கம்,பக்கம், அரிந்தவர்,தெரிந்தவர்கள் இப்படி யாவரின்
விசாரிப்புகளும், நல்லபடி வந்து சேர்ந்ததற்கு ஸந்தோஷமும்
தெரிவித்த வண்ணமிருந்தனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் C.P.W.D. இல் வேலை
செய்பவர் I.c.mஇல் காட்மாண்டுவில் வேலை செய்து கொண்டு
இருந்தார். வழிவழியாக தலைமுறை,தலை முறையாக நல்ல
பூஜை,புனஸ்காரங்கள் செய்து பழக்கப் பட்டவர்கள்
குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் விடாது
பூஜைகள்செய்பவர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு
சாளக்ராமம் வேண்டும் என்று சொன்ன போது, முன்னதாகவே
நான் கேட்டிருந்தேன். என்ன செய்யலாமென்று.
திருப்பதி போய்வந்தால்,வேங்கடாசலபதிக்கும், காசி,ராமேசுவரம்
போய்வந்தால், கங்கையை வைத்து ,பூஜை,ஸமாராதனைகள்
செய்வது போல இதையும், அப்படியே அபிஷேக ஆராதனைகள்
முடிந்த அளவு செய்து, வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என்று
சொல்லி இருந்தார்.அப்படி செய்வது நல்லதென்றும் சொன்னார்.
அதை ஞாபகப்படுத்தி அவரையே நம் வீட்டிற்கு வந்து நல்லபடி
பூஜையை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவரும் வந்தார். மற்றும் சில
குடும்பங்களையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட யாவரும் வந்து புஷ்பங்களும், பாலும்,பழங்களுமாக
நிரப்பி ஒரு பக்தி பூர்வமாக அருமையான ஸமாராதனையாக
நடத்திக் கொடுத்தனர்.
மந்திர பூர்வமாக, அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும்
வந்தவர்களுக்கும்,மனம் நிறைந்த ஒரு ஸொந்த
வீட்டு பூஜை,புனஸ்காரம் மாதிரி உணர்ந்தார்கள்.
வீட்டு,ஸமாராதனையாக ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்தது.
இதற்கு முன்னரே, சாளக்ராமங்களைப் பற்றிய அனுபவம் உள்ள
ஒரு பெரியவரிடம் வகை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டோம்.
கைக்கடக்கமானவைகள்தான் வீட்டில் வைத்து பூஜிப்பதற்குச்
சிரேஷ்டமானது.
பெரிய அளவுள்ளவைகள் கோவிலுக்குக் கொடுத்து விடுங்கள்,
என்று சொன்னவர்,சங்கு சக்கரம் உள்ளவைகள்…
View original post 369 more words
என்ன பிரஸாதம்?எப்படி?
பிிரஸாதம் எப்படி இருக்கிறது. உங்களுக்கும் ஒரு ஸாம்பிளுக்குத்தான்.இதுவும் ஒரு மலரும் நினைவுகளில்தான் சேர்த்தி.ருசித்துச் சொல்லுங்கள். அன்புடன்
பூஜை அறை. வரலக்ஷ்மி மற்றும் படங்கள்
லக்ஷ்மி பூஜை படமிருந்தது. நீங்களும் தரிசியுங்கள்.
பஜனைக்கு வரவர்கள் சாயங்காலமே புறப்பட்டுவந்து லேட்டாக
போவதை உத்தேசித்து எல்லோருமேகொஞ்சம் வயிறு
நிறையும்படி ப்ரஸாதம் செய்து வினியோகிக்க விரும்புவார்கள்.
மேலும் வெளியூர் படியாக பணம் கூட கிடைத்ததால் யாருமே
இதனை ஒரு பெறிய சிலவாக யோசிப்பதில்லை என்பது அங்கு
யாவரின் அபிப்ராயமாக இருந்தது.
பூண்டு, வெங்காயமில்லாத, ஏதாவது ஒரு பாத், டால்டா
கலப்பில்லாத ஒரு இனிப்பு , ஒரு சுண்டல். இருக்கவே இருக்கும்
நிவேதனமான வாழைப்பழங்கள்.
ஹூக்லி கரையோரம் பாரக்பூர். அக்கரைக்கு படகில் போனால்
சுராபுளி என்ற இடம். வாழைப்பழங்கள், வாழைஇலை,
காய்கறிகள் என எல்லாம் மலிவாகக் கிடைக்கும். யாராவது
போவார்கள். நிறைய வாங்கி வந்து எல்லோரும் பாகம் போட்டு
வாங்கிக் கொள்வார்கள். கேட்கணுமா?
மண்டலிக்கென்று சில பெறிய அலுமினியப் பாத்திரங்கள் உண்டு.
அடுப்புதான் சற்று கேள்விக்குறி? காஸ்,மைக்ரோவேவ்,அவன்
இதெல்லாம் வரவுமில்லை. தெறியவும் தெறியாது.
நான்தான் எப்பவும் செய்து கொண்டிருந்தேனா?
அதுவும்தான் இல்லை. யார்வீட்டிலாவது செய்து எடுத்து
வருவார்களாகத்தானிருக்கும்.
முதலில் இரண்டு முறை பாரக்பூர் அவுட் ஸ்டேஷன் போன
போது நான் பஜனைக்குப் போனதில்லை. கொஞ்சம் துலைவு.
ஆனால் போனவர்கள் ப்ரஸாதம் கொண்டு வருவதில்
கொடுப்பார்கள்.
எப்படியோ மூன்றாவது முறை அதே ஊர் வந்தபோது இருக்க
ஒரு போர்ஷன் பஜனைமண்டலியின் பக்கத்திலேயே கிடைத்தது.
நாங்களும் ஒருநாள் பஜனைச் சிலவை செய்ய உத்தேசித்து
ப்ரஸாதமும் நாங்களே செய்தோம்.
அப்புறம் …
View original post 422 more words
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும் 4
இன்று என் கணவரின், தமிழ்மாத காலண்டர்ப்ரகாரம் 5மாதங்கள் முடிவுறுகிறது. இந்தப் பதிவில் முக்தி நாத்திலிருந்து சாளிக்கிராமங்களுடன் வீடுவந்து சேர்ந்த விஷயமும் வருகிறது.நல்லது. அடுத்த பதிவில் பகிர்ந்துவிட்டு முடித்துவிடுகிறேன்.படியுங்கள் அன்புடன்
முக்திநாத் போனவர்கள் நல்ல முறையிலேயே வழியைக் கடந்து
நல்ல குளிர் உள்ள போதும் ஸரியான ஸமயத்தில் கோவிலில்
தரிசனம் செய்து கொண்டு அவ்விடம் தாராக்களில் வரும், தண்ணீரில்
குளித்தார்களா, அப்படியே தண்ணீரை ப்ரோக்ஷணம், செய்து
கொண்டோ எப்படியோ கையில் ப்ரஸாதங்களையும் வாங்கிக்கொண்டு
முக்கியமாக அவ்விடம் தெரிந்த நபர் பெற்றுக் கொடுத்த,சாளக்ராமங்கள்
கொஞ்சமாக இல்லை!!! வாரிக் கொடுத்து வழியனுப்பினர்.
நிறைய பைகள் கொள்ளாது ஒவ்வொருவருக்கும், நாமா சுமக்கப்
போகிறோம். நம்முடன் வரும் குதிரை சுமக்கப் போகிறது என்று
சொல்லிக் கொண்டே யாவரும் மிக்க ஆனந்தத்துடன் வரும் வழியில்
கூட துணைக்கு வந்தவர்கள் காட்டிய இடங்களில் கண்டகி நதியில்
சாளக்ராமங்களையும பொருக்கிக் கொண்டு, ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடம்.
முக்திநாத் பெயர் தெரியுமே தவிர அவர் விஷ்ணுவா, சிவனா என்று
கூட தெரியாது. அதிருஷ்டம் இருந்து இவ்விடம் வந்து போகிறோம்
என்று நினைத்துப் பேசியதை, பிறகு சொன்னதை இந்த வரிஎழுதும்போதுஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.
இங்கே காட்மாண்டுவில் ஒரு பழைய விங்கை செங்குத்தாக
ஹெலிகாப்டரில் தொங்கும் படியாக பொருத்திக்கொண்டு
கன்ட்ரோலரின் ப்ளைட் மேலே,மேலே போய்க்கொண்டிருக்கிறது.
ஹெலிகாப்டரிலிருந்து ஆபத்துக் காலங்களில் கீழே உள்ளவர்களைக்
காப்பாற்றுவதை எல்லாம் பார்த்திருப்பீர்களே!!
எந்த ஒரு பொருளையும் நான்கு புறமும் ஸபோர்ட் செய்து
ஊஞ்சல் மாதிரியோ, தராசு மாதிரியோ கட்டித் தூக்கினால்தான்
அலைக்கழியாது இருக்கும். ஒத்தையாக இருந்தால் மனம் போன போக்கில் ஊசலாடுமே தவிர ஒத்து வராது…
View original post 415 more words
பஜனை நினைவுகள்.
பாரக்பூரில் நடந்த 2012 வருஷத்திய ஒரு பதிவு இது. மலரும் நினைவுகள். நீங்களும் பங்கு கொள்ளுங்களேன் அன்புடன்
வயதானவர்களுக்கு பக்தி ஸம்பந்தப்பட்ட நினைவுகளும்,பாராட்டுகளும்
அன்பின் மூலம் கிடைத்ததையும், எல்லோருக்கும் வேண்டியவர்களாக
ஒரு சிநேகக் கூட்டம் கிடைத்ததையும், ஒரு கனவாக எண்ணமிடும்
அளவிற்கு காலங்கள் கடந்து ஓடிவிட்டாலும் பசுமையான
நினைவுகளை
உங்களுடன் அசை போடுவதில் ஒரு மன நிறைவு ஏற்படும் என்ற
எண்ணத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.கேளுங்கள்
பக்தி வலையிற் படுவோன் காண்க.
ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம
நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா
கோபிகா ஜீவன ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா
வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.
சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி
ஆரம்பமாகிவிட்டது பஜனை.
மும்பை வினாயக சதுர்த்தி வினாயகர்.
மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமரகர்ண விளம்பிதசூத்ரா
வாமனரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே
ஜயஜானகீ ரமண ஜய விபீஷண சரண ஜயஸரோருஹ சரண
ஜயதீன கருணா ஜயஜய
தொடர்ந்து
சரணு சரணு ஸுரேந்திர ஸன்னுத சரணு ச்ரீஸதி வல்லபா தேவ
சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயகா
ஸ்வாமி ச்ரீ ரகு நாயகா சரணு சரணு ஹரே
தோடய மங்களங்கள் காதில் ஒலிக்கிறது.
அடிக்கடி நாமாவளிகள்
மனது பறக்கிறது.
கோல்க்கத்தாவை அடுத்த பாரக்பூர். 24 பர்கானாவில் ஒன்று.
பூரா H.A.L. இல் வேலை செய்யும் பஜனைக்கு வரும் பக்தர்களின்
கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன், குடும்பத்தை விட்டு கருமமே
கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள், இளைஞர்கள், என
எல்லோரும்…
View original post 565 more words