Archive for பிப்ரவரி 23, 2022
முளைக்கீரை மசியல்.
பத்துவருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவிது. சென்னை போயிருந்த போது செய்தது இது. மும்பையிலும் ஸரி, டில்லியிலும் ஸரி முளைக்கீரை கிடைத்து வாங்கியதில்லை. பார்த்தவுடன் போடத் தோன்றியது. வற்றல் குழம்பும், கீரை மசியலும் ஊர் ஞாபகம் வருகிறது. செய்யத் தோன்றுகிறதா? பார்ப்போம். அன்புடன்
இந்தக்கீரை எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய சத்து மிகுந்த ஒரு நல்ல கீரை. இதை
பருப்பு சேர்த்தும் சேர்க்காமலும் சமைக்கலாம்.
வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?
முளைக்கீரை—2கட்டு
அவசியமானால் பூண்டு—4 இதழ்
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்–1 டீஸ்பூன்
மிளகாய்—1
துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன். ஊறவைக்கவும்.
தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளித்துக் கொட்ட—1ஸ்பூன் நெய்
சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.
செய்முறை—–கீரையை நன்றாக சுத்தம் செய்துப்
பொடியாகநறுக்கி தண்ணீரில் 2, 3,முறை அலசித்
தண்ணீரைவடியவிடவும்.
துவரம்பருப்பை முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்
தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
மசியஅரைத்துக் கொள்ளவும்.
நிதான தீயில் வடியவைத்த கீரையுடன், பூண்டைத் தட்டிப்
போட்டு கால்கப் ஜலத்துடன் பாத்திரத்தில் சேர்த்து வேக
வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பச்சென்று
கீரை நிறம் மாறாமலிருக்கும்.
கீரை வெந்ததும் குழிக் கரண்டியாலோ, மத்தாலோ
நன்றாக மசிக்கவும்.
அறைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கீரையில்க்
கொட்டிக் கலக்கி பின்னும் இரண்டொரு கொதி விடவும்.
இறக்கி வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்
முதலியவைகளை நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில் வேகவைத்த பயத்தம்
பருப்போ அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.
சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்
சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்
கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.