Posts filed under ‘Uncategorized’

எழுதாத குறிப்பின் படங்கள்.

 

P1040092
இப்படியும் சமையல் நடக்கிறது. மேலும்

திறந்தவெளிக் குடும்பம்

அரிசி உப்புமா

அரிசி உப்புமா[/capt

[caption id="attachment_12098" align="aligncenter" width="455"] உப்புமா குக்கரில்

 

திசெம்பர் 15, 2018 at 5:49 முப 6 பின்னூட்டங்கள்

தீபாவளி வாழ்த்துகள்.

th.
அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். Happy deepavali.

நவம்பர் 5, 2018 at 1:19 பிப 7 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

20181016_174911(1)

யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன்

தாம்பூலம்


எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒக்ரோபர் 17, 2018 at 1:40 பிப 3 பின்னூட்டங்கள்

மும்பைப்பிள்ளையார்கள்.

வழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.
மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.
வணங்குவோம் . வாழ்த்துவார்.

[

புல்லாங்குழல் வைப்பதற்கு முன்படமா? அதனாலென்ன?

இன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.

இவர் எப்படி?

அல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்

கணபதியைக் கைதொழுதக்கால்.

யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
அன்புடன்

செப்ரெம்பர் 12, 2018 at 12:10 பிப 14 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

வரலக்ஷ்மி பூஜை வாழ்த்துகள் அனைத்துப் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும். ஆசியும்,அன்பும் சொல்லுகிறேன்.

ஓகஸ்ட் 23, 2018 at 11:36 முப 13 பின்னூட்டங்கள்

மஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA


எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேறாக இருந்தாலும், கொண்டாடும் ஸமயம் வேறாக இருந்தாலும் கதை, புராணங்கள் ஒத்துப் போகும்.

வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதில், ஆந்திர கர்னாடக மானிலங்கள் கொண்டாடும் யுகாதி என்ற அதே தினத்தில்தான் மராட்டியரும் GUDI PADWA குடி பட்வா என்று வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்

குதி என்ற பதத்திற்கு மராட்டியில் வெற்றிக் கம்பம் என்ற பொருளாம். ராவண வதத்திற்குப்பின், வனவாஸம் முடிந்து ஸீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய அந்த நாளை, மக்கள் வெற்றிக்கம்பம் நாட்டிக் கொண்டாடியதாகவும், அதன் ஞாபகார்த்தமாகவே மராட்டிய மக்களும், தங்கள் இல்லந்தோறும் வெற்றிக் கம்பங்களை நட்டு, இவ்வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதாகவும் சொல்கிரார்கள். இந்நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு நன்னாள்.
சத்ரபதி சிவாஜி மஹாராஷ்டிரத்தை ஜெயித்த நன்னாளாகவும் இதைக்கொண்டாடுகிரார்கள்.

ரங்கோலி அலங்கார மத்தியில்
வீட்டின் முன்பாக ஒரு மூங்கிலில் மாவிலை,புஷ்ப அலங்காரங்கள் செய்து, உச்சியில் செப்புக் கலசத்தைக் கவிழ்த்து ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும்.
அதனடியில் வெற்றியின் ஞாபகார்த்தமாக காவிநிறத்துணி கட்டப்பட்டிருக்கும். மற்றும் அலங்காரங்களுடன் இருக்கும் அந்தக் கம்பமே வெற்றிக் கம்பம்.

அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பூஜை செய்கிறார்கள்.

வருஷப்பிறப்பன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடி, அவர்கள் வழக்கப்படி ஒன்பது கெஜ சேலைகளை பின்கச்சம்போட்டு முறைப்படி அணிந்து மூக்கில் நத்து என்ற அணிகலனையும்,மற்றும் கழுத்து,கை என்று எல்லா அணிகலன்களையும் அணிகின்றனர்.
ஆண்கள் குர்தா,பைஜாமா ,தலைக்குக் குல்லா
போன்ற உடைகளையும் அணிகின்றனர். சிறுவர்,சிறுமிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். வண்ணவண்ண உடைகள்தான்.
விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுகிறது யாவர் வீட்டிலும்.

ஸ்ரீகண்ட்,பூரண்போளி, மாங்காயில்தயாராகும் பன்னா இவைகள் முக்கியமானவை. விதவிதமான இனிப்புகள். வெற்றிக்கம்பத்திற்குப் பூஜை செய்கிரார்கள்.சிறுவர்,சிறுமிகள்,படிக்கும் வித்யார்த்திகள் ஸரஸ்வதி பூஜையும் இன்றே செய்கிரார்கள்.
உற்றார்,உறவினர்,நண்பர்கள் என யாவரும் கூடிக்களிக்கிரார்கள்.

புதிய வீட்டு கிரஹப்ரவேசம்,வாகனங்கள் புதியதாக வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் என இதைப்போன்ற முக்கிய பொருட்கள் வாங்கஉத்தமமான தினம்.
அன்று கசப்பான வேப்பிலையும் துவையல்போன்று சிறிது உண்பார்கள் என சொல்வது ஸுக துக்கங்களைக் கலந்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. யுகாதி,குடி பட்வாவை 18–3–2018 அன்று நாமும் கொண்டாடுவோம்.

படங்கள் உதவி இணையத்திற்கு நன்றி.

மார்ச் 17, 2018 at 3:07 பிப 25 பின்னூட்டங்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Continue Reading ஏப்ரல் 13, 2016 at 10:10 முப 14 பின்னூட்டங்கள்

காரடையான் நோன்பு.

இவ்வருஷத்திய பூஜை காரடையான்நோன்பு மார்ச் பதினான்காம்தேதி திங்கட்கிழமை காலை பத்து மணி முதல் பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குள் செய்யலாம் என்று வாத்தியார் சொல்லி சரடு கொடுத்துவிட்டுப் போனார். யாவரும் பூஜையை பக்தி சிரத்தையுடன் அனுஸரித்து, வேண்டும் வரங்களைப் பெறவேண்டும். உங்கள் யாவருக்கும் மஞ்சள்,குங்குமம்,தாம்பூலத்துடன் என்னுடைய அன்பான நல் ஆசிகளையும் சொல்லுகிறேன். அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

உருக்காத வெண்ணெயும், ஓரடையும் உருக்காத வெண்ணெயும், ஓரடையும்

பூஜைக்குச் செய்யும் முக்கியமான  நிவேதனப்  பொருளின்  பெயரைக்

கொண்டே இந்தப்பூஜையை,அதாவது நோன்பைச் செய்கிறோம்.

இதற்காகத் தொன்று தொட்டு ஒரு கதையும் உண்டு.

ஸாவித்ரி  அவள் கணவர்   ஸத்யவானின்  உயிரை மீட்டு வந்து

நன்றிக்காக இவ்விரதத்தை அநுஷ்டித்ததாகச்  சொல்லுவார்கள்.

அசுவபதி என்கிற அரசனுக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேரின்றி, தவமிருந்து

பெற்ற பெண் ஸாவித்ரி.

மிக்க அருமையான குணம் நிறைந்த,தெய்வ பக்தியுள்ள,, ஒரு பெண்.

அரசர் ஒருஸமயம் நாரதரைப் பார்க்கும் பொழுது இவ்வளவு உத்தம் சீலமான

பெண்ணின் வாழ்க்கை எப்படி  இருக்கும் என்று வினவினார்.

நாரதரும்  அவள் ஒரு உத்தமமான தாய்தந்தையரிடம்  பக்தி கொண்டு

அவர்களை ரட்சிக்கும்  ஒரு  நல்லவனை மணப்பாள் என்றாராம்.

ஆனால் அவனுக்கு ஆயுள் குறைவு என்றும் சொல்லி வைத்தார்.

வழக்கம்போல ஒருமுறை தோழிகளுடன்  ஸாவித்ரி  வனத்திற்குச் சென்ற

போது அவ்விடம்  ஸத்யவானைச் ஸந்திக்கிறாள்.

ஸத்யவானையே மனதில் வரித்து விடுகிறாள்

ஸத்யவானின்  தந்தை   பகையரசர்களால்  நாடு கடத்தப்பட்டு

வனத்தில் வசிக்கும், கண்தெரியாத  அரசர். மனைவிக்கும் கண்தெரியாது.

அவர்களைப் புதல்வன் ஸத்யவான்  காப்பாற்றி வருகிரார்.

காட்டில் விரகு வெட்டி, அதை நாட்டில் விற்று அந்தத் தொகையில்

காட்டில் குடிசை அமைத்து அதில்  வாழ்ந்து வருகிரார்கள்.

ஸத்யவானைச் சந்தித்த விஷயம் சொல்லி அவளின் விருப்பத்தைச்

சொல்லுகிறாள் தந்தையிடம்.

அவருக்கு   ஆயுள் குறைவு, என்று சொல்லியும் ,ஸாவித்ரியின் விருப்பப்படி

ஸத்யவானுடன்    மணமுடித்து வைக்கிரார்.

ஸாவித்ரியும்  மாமனார்,மாமியாருக்குச் சேவை செய்து கணவருடன்

உத்தமமான வாழ்வை நடத்தினாள்.

View original post 328 more words

மார்ச் 10, 2016 at 8:14 முப 6 பின்னூட்டங்கள்

தை பிறந்தால்–2

உஷாவின் நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது மானஸீகமாகப் பேசிக்கொள்வோம் கற்பனையில். மிகவும் அபிமானமுள்ள பெண். ஒரு ஆகாயவிமான பிரயாணம் மட்டுமல்ல.பல வித உணர்வுகளை பல ஸமயம் விமானப் பயணங்களில் அனுபவித்துள்ளேன். இது மனதை விட்டு அகலாத கற்பனையும் சேர்ந்ததுதான். உஷாவும் படித்து மகிழ்ந்திருப்பாள். அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து

அருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,

வேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான்  உலகத்திலே ,பெரிசு.

மக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.

ஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க,   உனக்குன்னு வாழ்க்கை

வேணும்,  அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.

எனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு

முறை இந்தியா வந்து போனால்,  அம்மா கை சாப்பாடு  தின்றாலே அது

போதும்மா.

ஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.

அவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.

இப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.

நான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.

உஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.

அவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்!

வெளி நாட்லே இருக்கே!ஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.

இது ஏது? புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா?

யோசனை வந்து விட்டது.

ட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு

தடை.

அப்பா சொல்வாங்க,  போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.

என் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா?

ஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்

ஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.

அவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்

முடிந்ததை   எல்லாம்  செய்வேங்க

ஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம்…

View original post 976 more words

பிப்ரவரி 3, 2016 at 1:43 பிப 8 பின்னூட்டங்கள்

தை பிறந்தால்–1

பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

ஏர் போர்ட்,   டிக்கெட் கவுண்டர்.

அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.

ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ்  ஃபுல் மேடம்.

நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்

என்று  சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட்  எதற்குத் தருகிறீர்கள்?

எங்கே உங்கள் ஆஃபீஸர்.  நான் பேசுகிறேன்.

ஸாரிமேடம்.

நோநோ.  ஸாரி,யெல்லாம்  வேண்டாம். கொடுத்த வார்த்தையை

காப்பாத்தணும்.  வயஸானவங்க,   வீல்ச்சேர்.

போன் செய்து விவரம் போக   ஆஃபீஸரே வருகிரார்.

ஒரு முறைகூட  இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.

உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?

வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.

எப்படியோ  பத்து  நிமிஷம் கொடுங்கள்,   பார்க்கிறேன்.

வேண்டாமே இ ப்படியே  அட்ஜஸ்ட் பண்ணலாமே.

என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது.  டிக்கட் வாங்க

முடியாதா என்ன?

வாதம் பலித்து.   கார்டை வாங்கி  ஸரி பார்த்து   அப்க்ரேட் செய்து

மூன்று  போர்டிங்பாஸ்.

சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு  இருக்கை.

கடைசியில்  ஒரு இருக்கை.

ஸாரி. இப்படிதான் கொடுக்க  முடிந்தது.  ரொம்ப சிரமப்பட்டுதான்

செஞ்ஜோம்.

இவ்வளவு சண்டை போட்டால்தான்  காரியம் நடக்கும்.

வீல்சேர்.   முன்னைடியே  போய்ச் சேரணும்.

நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.

மத்ததை நான் பாத்துக்கறேன்.

வீல்சேர்,  பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து

கொண்டிருக்கும் போதே  டோரில்  காத்துக் கிடக்கும்.

அதிகம் பாஸஞ்சரிருந்தால்   இன்னும் சீக்கிரமே   சுவர்க

வாசல்தான்.  உள்ளே போக  அனுமதிக்கு  .

தெறியாமல் பணத்தை , வீல் சேரைத்…

View original post 538 more words

பிப்ரவரி 2, 2016 at 11:23 முப 3 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,915 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.