Posts filed under ‘Uncategorized’
பேபி பொடேடோ வதக்கல்.
குட்டி உருளையின் கறி
Continue Reading மார்ச் 25, 2013 at 12:44 பிப 21 பின்னூட்டங்கள்
கதம்பக் கறி.
காய்களைக் கலந்து கதம்பம் போல் கலர்கலராக இருப்பதால் இதை
நான் கதம்பக்கறி என்று சொல்லுகிறேன். மிகஸ் வெஜிடபில்ஸ்.
உருளைக்கிழங்குடன் ,எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் செய்யவும்.
விருப்பம் போல காரத்திற்கு பொடிகளைச் சேர்க்கவும்
மஹா கும்பமேளா.
எனக்குக் கிடைத்த சில கும்ப மேளாவின் பார்வைகள்.
எனது மகன் அங்கு போனபோது, அனுப்பிய படங்கள்.
உங்கள் பார்வைக்காக . என் பிள்ளை தில்லியிலுள்ளவர் அனுப்பிய சில படங்களை
கொடுத்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
2013 ஆம் வருஷ ஆங்கிலப் புத்தாண்டை மனமுவந்து வரவேற்கும்
என் அன்பிற்குறிய உலகளாவிய சொல்லுகிறேனைப் படித்து,
ஆதரவு கொடுக்கும், மதிப்பு மிக்க பெரியோர்,சிறியோர் ஆகிய யாவருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்,மனமுவந்து இதன் மூலம், தெறிவித்துக் கொள்கிறேன்.
எல்லா,நன்மைகளையும் தந்து புத்தாண்டு இனிமையாக
பிறக்கட்டும். அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
2012 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.
Here’s an excerpt:
19,000 people fit into the new Barclays Center to see Jay-Z perform. This blog was viewed about 75,000 times in 2012. If it were a concert at the Barclays Center, it would take about 4 sold-out performances for that many people to see it.
கடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.
செய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
முன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.
View original post 68 more words
நன்றி தெறிவித்தல்.
அன்பார்ந்த சொல்லுகிறேனுடைய அன்பார்ந்த
அபிமானமுள்ள ஆதரவாளர்களுக்கு அன்பும், ஆசியும்
கலந்து, பெறியோர்களுக்கு வணக்கமும் கலந்துதெறிவித்து
இந்த சுருக்கமான என் ஸந்தோஷ வார்த்தைகளை
எழுதுகின்றேன்.
ஸெப்டம்பர் 2 ஆம் தேதி சொல்லுகிறேனைப் பற்றி
அறிமுகப்படுத்தி , பாராட்டியும், உள்ளதை உள்ளபடிச்
சொல்லி என்னை மிகவும் ஸந்தோஷத்தை அனுபவிக்கும்
பதிவாகப் பதிவிட்டு எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்
திரு ஸைபர்ஸிம்ஹன் அவர்கள்.
நம்முடைய வேர்ட்ப்ரஸ். டாட் காமின் பிரபல வலைப்
பதிவர். அவரைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது.
அவரிடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்தியது
திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள். குறுகிய கால
மாகத்தான் எங்கள் இருவருக்கும் எங்களின் வலைப்பூவின்
வாயிலாக பின்னூட்டங்களின் மூலம் நட்பு ஏற்பட்டது.
என் நல்ல அதிருஷ்டம் அவர் மூலமாக திரு .ஸிம்மன்
அவர்கள் என்னைப் பற்றி எழுதும்படியான வாய்ப்பைப்
பெற்றதற்கு நான் இப் பதிவு மூலம் அவர்களிருவருக்கும்
என்னுடைய நன்றியையும், அன்பையும் தெறிவித்துக்
கொள்கிறேன்.
விசேஷமாக பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்
திரு.ஸிம்ஹன் அவர்களே. எதுவும் நான் மிகைப்படுத்தவில்லை. என்னுடைய நன்றியை அன்புடன்
ஏற்றுக் கொள்ளுங்கள்.
திருமதி ரஞ்ஜனி உங்களுக்கும் இதையே சொல்லுகிறேன்.
திருமதி ரஞ்ஜனி நாராயணனும் நம்முடைய
வேர்ட்ப்ரஸ்டாட்காமின் பிரபலமான வலைப் பதிவர்.
என்னுடைய ஆதரவார்களே உங்களுக்கும்
ஸந்தோஷம்தான். எனக்குத் தெறியும். உங்கள் யாவருடனும்
இந்த வரைவு மூலம் என் ஸந்தோஷத்தைப் பகிர்ந்து
கொள்கிறேன். எல்லோருக்கும் அன்புடனும், ஆசிகளுடனும்
உங்கள் சொல்லுகிறேன்.
80 வயது பாட்டியின் வலைப்பதிவு.
கீழே லின்க் கொடுத்திருக்கிறேன்.
பீட்ரூட் ஜூஸ்
இதுவும் ரொம்பவே சுலபமானது. நான் கொஞ்சமா ஒரு பீட்ரூட்டில்
செய்து பார்த்தேன். மாதிரிக்கு துளித் துளி ருசி பார்த்ததிலேயே
அரைடம்ளர் காலியாகி விட்டது. பரவாயில்லை.
இன்னொரு தரம் செய்யமுயற்சிப்பதைவிட இருப்பதையே குடுத்தால் போதும்.
யார் குறை சொல்லப் போகிறார்கள் என்று தோன்றியது.
யாருக்கு வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள்.
செய்து அனுப்பி விட்டால் போகிறது.
நான் பீட்ரூட்டை வேகவைத்துச் செய்தேன். அதனால்
பச்சையான வாஸனை இல்லாமல் நன்றாக இருந்தது.
வேண்டியவைகள் அதிகம் ஒன்றுமில்லை
பீட்ரூட்—–ஒன்று
இஞ்சித் துருவல்—-சிறிது
எலுமிச்சை சாறு—-ருசிக்குத் தக்கபடி
சர்க்கரை—-4 டீஸ்பூன்
காலா நமக்—-அரை டீஸ்பூன்.
செய்முறை
பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டங்களாக்கி வேக வைக்கவும்.
மைக்ரோவேவில் வேகவைத்தாலும் ஸரி.
இஞ்சித் துருவலைச் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில்
சிறிது தண்ணீருடன் நன்றாக அறைக்கவும்.
வேகவைத்த தண்ணீர் இருந்தாலும் அதையும் சேர்த்துக்
கறைத்து பெறிய கண் உள்ள வடிக்கட்டியினால் ஜூஸை
வடிக்கட்டவும்.
சர்க்கரை, எலுமிச்சை சாறு. காலாநமக் சேர்த்துக் கலக்கவும்.
டம்ளரில் நல்ல கலருடன் ஜூஸ் தயார்.
ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பருகினால் ஜில் என்று
ருசியாக இருக்கும்.
என்ன சமையல்?
ஸிம்பிலாக சமைக்கிறேன் என்று பிரதீஷா செய்த சமையலை
நீங்களும் தான் ருசியுங்களேன். அஸ்ஸாம் டாலும் சென்னை
ரஸமும் பொதுவான கறிகளும்கலந்து ருசியுங்களேன்.
ஒரு டால். பயத்தம்பருப்பும், மசூர் டாலும் கலந்து வேகவைத்து
பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,
தக்காளியை நன்றாக வதக்கிச் சேர்த்து உப்பு, மஞ்சளுடன்
சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்தது.
மஸாலா போடலை. துளி சீரகப்பொடி போட்டது.
உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி 1ஸ்பூன்
எண்ணெயுடன் 5 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்து எடுத்து
வாணலியில் எண்ணெயில் கடுகைத் தாளித்து, உப்பு,காரம்
மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கியது.
அடுத்து நிறைய தக்காளியை மைக்ரோவேவில் வேகவைத்து
எடுத்து துளி புளி சேர்த்து கறைத்து சாறு எடுத்து, ரஸப்பொடி,உப்பு,
பூண்டு விழுதுடன் நிதான தீயில் நன்றாகக் கொதித்துக்
குறைந்தவுடன், துவரம்பருப்பு வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி
ஒது கொதி வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு, பெருங்காயம்
பொரித்துக் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கியது.
கமகம ரஸம்.
வீட்டில் தோய்த்த புளிப்பில்லாத தயிர்.
கொஞ்சம் ஊறுகாய்.
வதக்கிய வெண்டைக்காய் கறி.
நடுவில் குட்டி காப்ஸிகம் பஜ்ஜி அதுவும் சுடச்சுட
பாக்கலாமா, கேட்கலாமா, ருசிக்கலாமா
பஜ்ஜியைச் செய்யலாம்.
வேண்டிய அளவு–
-கடலைமாவு,துளி அரிசி மாவு
ருசிக்கு வேண்டிய உப்பு,மிளகாய்ப்பொடி
துளி ஸோடா உப்பு
துளி பெருங்காயப்பொடி
கொத்தமல்லி இலை கொஞ்சம்
கேப்ஸிகம் வேண்டியஅளவு.
செய்முறை
மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முழுதாகவும் போடலாம்.
உப்பு, ஸோடா, பெருங்காயம், மிளகாய்ப்பொடி யாவற்றையும்
மாவுடன் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவு பதத்தில்
நன்றாகக் கறைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லியையும்
சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கி வைத்திருப்பதை
மாவில் அமிழும்படி தோய்த்து பஜ்ஜிகளாகப் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டாமல் சட்டுவத்தால் பிரித்து விட்டு,
சிவந்து வரும்போது திருப்பிவிட்டு மறுபுறமும் சிவந்ததும்
எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்தெடுத்து உபயோகப் படுத்தவும்.
எண்ணெய் திட்டமான சூட்டில் இருக்கவும்.
புகையும்படி அதிக சூடு வேண்டாம்.
என்ன சமையல் என்கிற தலைப்பு. சமையல் சொல்லிவிட்டேன்.
குக்கரில் சாதம் ரெடி. அப்பளாமும் பொரித்தாகிறது.
எல்லாரும் வந்து சாப்பிடலாம்.
மேஜையிலும் வைத்தாகிவிட்டது.
காரடை. உப்பு
பச்சரிசி–1கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு
ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—வாஸனைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு
செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்
ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது
உலர்த்தவும்.
கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை
வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில்
பொடிக்கவும்.
காராமணியை வெறும் வாணலியில் சற்று முன்னதாகவே
வறுத்து ஹாட்கேஸில் வென்னீர் விட்டு ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உ.பருப்பு
தாளித்து இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி ரவையின் அளவைப்
போல இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை சேர்த்து
தண்ணீரைக் கொதிக்க விடவும்.
ஊறின காராமணி, பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் ரவையச் சேர்த்துக் கிளறவும்.
தீயை மட்டுப் படுத்தவும்.
பந்துபோல வெந்து சேர்ந்து வரும்போது கிளறி மூடி இறக்கி
வைக்கவும்.
சற்று நன்றாக ஆறியபின் மாவைப் பிறித்து ஸமமாக உருட்டி
கனமான வடைகளின் உருவத்தில் , ஒரு பாலிதீன் கவர் மீது
எண்ணெயோ ஜலமோ தொட்டுத் தடவி
தட்டி எடுத்து, நீராவியில் 15 நிமிஷங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இட்லி ஸ்டீம் செய்வது போலவேதான்.
உப்பு அடை தயார். தேங்காய் மணத்துடன் உப்பு காரத்துடன்
கூடிய மெத்தென்ற காரடை தயார்.
எது இஷ்டமோ அதை கூடச் சாப்பிடலாம்.
2010 மார்ச் 11 காரடை இனிப்பு எழுதினேன். இன்று
2012 மார்ச் 14 சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.
பெண் செய்தாள். இன்று காரடையான் நோன்பு. இதை
எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அடையைச்
சொல்கிறேன். அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்
அடை மிருதுவாக மெத்தென்று வருகிறது. உடன் வெண்ணெய்,
வேறு இன்று சாப்பிடுவதால் எல்லாமே ஸாஃப்ட்தான்.















