தொட்டில்-5
இந்த ஐந்தாவது பகுதி வேறு விதமாக முடிகிறது. சில விஷயங்கள் முன்னேற்பாடாக செய்ததும் ஸரியாகவேப் படுகிறது. இன்னும் பதிவுகள் இருக்கிறதே! னான் என்ன சொல்லுகிறேன்? என் பதிவு பார்த்தவர்கள் பதில் எனக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான்.அன்புடன்

ஸந்தோஷமாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஈரல் குலைக்கட்டி. இப்போது இம்மாதிரி பெயரே கேள்விப்படவில்லை. ஒன்று இரண்டு குழந்தைகளில்லை. எங்கு பார்த்தாலும் இதே வியாதி. சோகமே சோகம் பேரன் போய்விட்டான். பட்ட காலிலே படும் என்பர். வாஸ்தவமாக ஏழை பணக்காரன் யாவரையும் எந்த நோயும் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய அழகான, ஆதரவான பெரியவர் மாப்பிள்ளையும் ஃப்ளூவின் கைப்பிடியில் மீளவில்லை. என்ன இப்படி சோகமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. எங்கள் அப்பாவின் குடும்பத்திலும் எங்கள் பெரியம்மா வேறு ஊரிலும்,எங்கள் சித்தப்பா எங்கள் ஊரிலும் ஒரு வாரத்தில் போய்விட்டார்கள். ஊரில் இதற்கு குடும்பத்தில் ஒருவராவது இரையானார்கள். ஊர் எப்படி இருந்திருக்கும். வைத்தியமே கண்டு பிடிக்காத ஃப்ளூவின் காலம்.எப்போதோ நடந்த விஷயங்கள் ஆனாலும் படிக்கும்போது மனது நெகிழ்கிறது
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. இதைப் படிப்பவர்கள்கூட ஸாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு சுனாமி மாதிரிதான். காலம் போகப்போக எல்லாவற்றிற்கும் மாற்று தேடிக்கொண்டும், விடிவுகள் அமைந்து கொண்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டும்தானிருக்கிறது. எதிர்பார்க்க முடியாத கஷ்டங்கள் வந்த பின் ஏற்றுக்கொண்டு ஓரளவு மாற்று கண்டுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
பெரியவருக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. பால்ய விதவைபெண். ஓரிரண்டு வயது பெரியவளாக இருக்கக் கூடிய மனைவி. யாருக்காக விசாரப்படுவது. பெண்ணைக் கண்ணின் இமைபோலக் காத்தும்.அன்பு காட்டியும் வருகிறார். தனக்குப்பின் இவர்களுக்கு ஆதரவு யார் கொடுப்பார்கள்? அதுவும் தன் பெண்ணிற்கு. தன்னைப்போல யார் அன்பு கொடுக்க முடியும். மனைவிக்காகிலும் …
View original post 410 more words
நவராத்திரி வாழ்த்துகள்

- பதினேழாம் தேதி நாளை சனிக்கிழமை ஆரம்பமாகும் நவராத்திரி கொண்டாட்டத்ததிற்கு உங்கள் யாவருக்கும் வாழ்த்துகளையும், ஆசிகளையும் இதன் மூலம்தெரிவித்துக் கொண்டு மானஸீகமாக என் மஞ்சள் குங்கும புஷ்ப தக்ஷிணைதாம்பூலத்தை அன்புமிக்க பெண்கள் ஸமுதாயத்திற்கு கொடுக்கின்றேன். இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் திடீரென்று ஒரு யோசனை. பதிவுகள் போடும் முறையே மாறி இருப்பதால் எதுவும் புதிய பதிவுகள் இடும்போது ஸரிவர வருவதில்லை. எங்கள் வீட்டு மும்பையின் நித்ய பூஜைக் கொலுவிது. உங்கள் யாவரின் மேன்மையைக் கோரி பிரார்த்திக்கிறேன். வாருங்கள் யாவரும் தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
தொட்டில் 2
தொட்டில் இரண்டு ஆட வந்துள்ளது. இது ஒருவிதமானது.தொடர்ந்து இந்தத் தலைப்பில் உள்ள எல்லா தொட்டில்களையும் வாராவாரம் பதிவிடுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேறுமாதிரியானது. காலையிலேயே பதிவிட்டிருக்க வேண்டுமோ என்னவோ? நான் மாலையில் சிறிதுநேரமே கணினியில் உட்காருகிறேன். பார்க்கலாமா உங்களை எல்லாம்! அன்புடன்
தொட்டில்கள்
லக்ஷ்மி அக்காவிற்கு ஏதோ கருப்பைக் கோளாறுகள். அவளக்காவிற்கு நிறைய குழந்தைகள் . பிள்ளையோ,பெண்ணோ அக்கா கர்பமாக இருக்கும்போதே அவளை அழைத்துக் கொண்டு வந்து பிறந்தது முதல் குழந்தையை வளர்க்க உத்தேசம். மாமியார் பிள்ளைக்கு வேறு கல்யாணம் செய்து விடப்போகிறாள் என்ற பயம்.அக்காவிற்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஸொத்து ஸுகத்திற்கா பஞ்சம். ஒருமாதம் வரை உடனிருந்து விட்டு அக்கா ஊர் போய்ச் சேர்ந்தாள்
.லக்ஷ்மியின் மாமியார் சொல்லுவாள். சின்னக்குழந்தை பிறந்து வளர்ந்து, அழணும்,சிரிக்கணும், விளையாடணும், படுத்தணும், விழணும், எழுந்திருக்கணும், கூட இருக்கும் பசங்களுடன் சண்டை போடணும்,ஸமாதானம் ஆகணும், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளணும்,பாத்து,பாத்து வளக்கணும், இப்படி எல்லாம் இருக்க பெரியவனாக்க குழந்தை வேண்டுமென்பாள் அது ஞாபகம் வந்தது..
என்ன கோலாகலமான தொட்டில் வைபவம்? அதனைத்தொடர்ந்து,பார்த்ததும்,கேட்டதும் ஞாபகம் வரத்துடங்கியது. ஸாதாரணமாக தொட்டிலுக்கு அலங்காரம்அதிகம் இருக்காது. மெத்தென்று பழைய துணியை மடித்துப்,போட்டு சுற்றிலும் வேப்பிலை தொங்கும். தரையில் அரிசியைப்பரப்பிஅதில்பெயரைஎழுதி,துளிபவுனைப்போட்டுஅதில்பெரியவர்களான,
பாட்டியோ அத்தையோகுழந்தையின் பெயரை அதன் காதில் மெல்ல மூன்று முறைச்சொல்லி விட்டு தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடுவார்கள்.இதெல்லாம் ஸாயங்கால வேளையில். ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னிருத்தியே பாட்டுகள் இருக்கும். லாலி என்ன தாலாட்டு என்ன வந்தவர்கள் குழந்தைக்கு கையில் பணத்தைத் திணிப்பதென்ன? பணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதே!. சமர்த்து. கேட்கணுமா என்ற ஸர்டிபிகேட்டுகளும் கிடைக்கும். பதினொன்றாம் நாள் காலையிலேயே புண்யாசனத்தின் போதே பெயரிடுபவர்களும் உண்டு.
தொட்டிலில் ஒரு சிறிய சுண்டல் மூட்டையும் இருக்கும்.அப்பா இவர்கள் வீட்டிலோ ஏகதடபுடல். வந்த குழந்தைகளுக்கெல்லாம்…
View original post 358 more words
தொட்டில் 1
எதுவும் எழுத முடியவில்லை. இந்தத் தொட்டிலையாவது மறுபதிவு செய்து தாலாட்டுவோம் என்று தோன்றியது. கட்டாயம் வந்து மறுபடி படித்து அபிப்ராயம் சொல்லுங்கள் அன்புடன் காத்திருக்கிறேன். அன்புடன்

பொழுது போகாமல் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்,வெளியில் போகாமல் தன் தள்ளாமையைக் காரணம் காட்டும் தாயைப் பார்த்தவுடன் மனம் கனத்தது. பிள்ளையல்லவா?
ஆபீஸிலிருந்தும் வந்ததும் வராததுமாய் அம்மா நான்உன்னைக் கூட அங்கு அழைத்துப்போகிறேன்.கட்டாயம் பெரியவர்கள் வந்துதான் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமாம்.வந்ததும் வராததுமாக அவ்வளவு முக்கிய செய்தி அம்மாவிற்கு.
ஆமாம் 75வயது முதியவளை அழைத்துப் போகிறானாம். வந்ததும் வராததும் அம்மாவிற்கு மனம் குளிர வார்த்தைகள். இந்த வயதானவர்கள் வீட்டிலிருந்தால் ஏதோ பெரிய உபசாரம் அவர்களுக்கு. வீட்டில் எத்தனைப் பிரசினைகளை நாம் கவனிக்கிறோம். நாம் பின்னுக்குப் போவது இவர்களால்தான் போலுள்ளது. இப்படி சில மருமகள்களின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கிறது.
என்ன அவஸரம் எங்கு ஓடிவிடப் போகிரார்கள். அப்புறம் விசாரித்தால் போதாதா. தான்தான் பெரிய ஆஸாமி என்ற எண்ணம் இப்படிதான் வந்து விடும் இவர்களுக்கு.
அழைத்துப் போகிறேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே அம்மாமார்களுக்கு வேண்டியவர்கள் வீட்டிற்குப்போய், வந்திருப்பவர்களிடம் அளவளாவிய ஒரு பெருமையை மனது ஒரு க்ஷணத்தில் அனுபவித்து விடுகிறது.போய் என்ன செய்யப்போகிறோம்?
நம்மை சற்று ஜாக்கிரதையாக அழைத்துப் போகும் பொருப்பு, இன்னும் போன இடத்திலும் நம்மைசற்று கவனிக்கும் பொருப்பு இவையெல்லாம் பிள்ளைக்கா?இன்னும் அக்கரையாக வேலைதான் பிரமோஷன் ஆகும். வாஸ்தவமும் அதுதானே.இப்படி சிந்திக்கும் மருமகளின் முகத்தை பார்த்து விட்டு நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் போன மாதிரிதான் என்று ஒரு நொடியில் மனதை மாற்றிக்கொண்டு வாய்கள் மொழியை உதிர்க்கும். வாஸ்தவமும் அதுதானே!
முகமே காட்டிக் கொடுக்கிறதே
ஏன் அப்படி…
View original post 487 more words
விநாயக சதுர்த்தி மும்பையில்

கொரானா பரவுதலைக் கட்டுபபடுத்தும் காரணங்களினால் அதிகம் படாடோபமாகக் கொண்டாட முடியாத நிலை மும்பை வாசிகளுக்கு.. இருப்பினும் திட்டமான உருவச்சிலைகளைப் பார்க்க முடிகிறது. அழகு வடிவங்களை பல விதங்களில் காண இப்போதும் முடிகிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நான் பல அழகுச் சிலைகளை முன்பெல்லாம் பார்த்து வெளியிடுவது வழககம்.
இப்போதும் கிடைத்த சில அழகு கணேசர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன். முற்கூட்டியே!!!!

கணேசசரணம் சரணம் கணேசா. விக்ன கோடி ஹரண விமல கஜாநன கணேச வரதா மாம் பாஹி கணேசவரதா மாம் பாஹி.
பஜனைப் பாட்டா? ஆமாம் ! மனதில் வந்ததை எழுதியிருக்கிறேன்.

யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள். அன்புடன்
வாழ்த்துகள்

கணினி உபயோகமே முற்றிலும் மறந்து போன நான் முயன்று பார்க்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகளைச் சொல்லி உங்கள் யாவரின் நன்மையைக் கோரி கடவுளிடம் வேண்டும் அன்புடன் சொல்லுகிறேன்.

வாழ்த்துகள்.

வலைத்தள நட்பினர்கள் யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்
. காமாட்சி மஹாலிங்கம்.
பொங்கல் வாழ்த்துகள்

யாவருக்கும் இனிமையான மகரஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. பொங்கலோ பொங்கல்.
ஆசிகளும் அன்பும் சொல்லுகிறேன்.
Happy pongal 15—-1–2019
வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட யாவருக்கும் சொல்லுகிறேனின் ஆங்கிலப் புத்தாண்டு 2019ற்கான வாழ்த்துகள்.
HAPPY NEW YEAR 2019
இன்னும்சில
சேம்பு இலை. அஸ்ஸாம் கூட்டு.பயத்தம் பருப்புடன்.
குக்கரில் பருப்பு,மிளகாய், தக்காளியுடன்வேகும் சேம்பிலை.

சும்மா எழுதியது.



