டால்மஃக்னி. ராஜ்மா
2012 போட்ட பதிவு இது. டால் மக்னி செய்துதான் பாருங்கள். பதிவு ஸரியாகப் பதிவாகவில்லை. திரும்பவும் போஸ்ட் செய்த பிறகுதான் வந்தது என்று நினைக்கிறேன். பார்க்கலாம். அன்புடன்
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8…
View original post 23 more words
வாழ்த்துகள்

யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்திப் பொங்கல் நல் வாழ்த்துகள். 14—1—2021
பொங்கலோ பொங்கல் அன்புடன்
அன்னையர் தினம்.
இது ஒரு தொடராகவே நான் எழுதியது. 2013 இல் அன்னையர் தினத்திற்காக நான் எழுதிய பதிவு இது. தொடர்ந்து கதைபோல இருக்கும் இதைப் படிததுக் கருத்து சொல்லுங்கள். புதுப் பதிவு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவும் சரித்திரம் தான். எல்லா திங்கட் கிழமைகளில்த் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.அன்புடன்
அன்னையர் தினம் என்று பிரித்துக் கொண்டாட வேண்டிய அவசியம்
இல்லாமலேயே ஒவ்வொருநாளும் அன்னையை மனதிலிருத்தி
கொண்டாடிக்கொண்டே இருக்கும் , மகன்கள்,மகள்களின் ஞாபகப்
பிரதிபலிப்பாகத்தான் இந்தநாள் இருக்கிறது.
இந்த நாள் இனிய நாளாகவும் இருக்கிறது.
ஓ. இன்று அன்னையர் தினம் என்று கேட்டவுடனே அவரவர்கள்
எண்ணக் குவியல்களுக்கிடையே தாயைப் பற்றிய முக்கிய
நிகழ்வுகள் வரிசையாக கோர்வையாக பவனிவர ஆரம்பித்து
விடுகிறது.தாய் உடனிருந்தால் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களுடன் பகிர்ந்தால் அவர்களின் தாயைப்பற்றிய எண்ணக்
குவியல்களையும், அன்பையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த அன்னையர் தினம் நேபாலில் சித்திரை மாத அமாவாஸை
அன்று கொண்டாடப் படுகிரது.
ஆமாகோ மூங் ஹேர்னி என்பார்கள். ஆமா–அம்மா. மூங்—முகம்
ஹேர்னி—பார்ப்பது.
பிள்ளையானாலும், பெண் ஆனாலும், அவர்களாலியன்ற
பரிசுப்பொருள்கள், இனிப்பு பழம் என்று வாங்கிப்போய் கொடுத்து
நமஸ்கரித்து ஆசி பெருவார்கள்.
இது கட்டாயமாகச் செய்யவேண்டியது என்று சொல்லியும்,செய்தும்
பழக்கத்திலிருத்துவார்கள். என்னுடைய மூத்த பிள்ளையும்
காட்மாண்டுவினின்றும் போன் செய்து ஆசிகளைப் பெற்றான்.
அதனால் இதைக் குறிப்பிட்டேன்.
அம்மாஇல்லாதவர்கள்கோவிலுக்குப்போய்தேவியைவணங்கிவிட்டு
வரவேண்டும்.
இதே மாதிரி தகப்பனார்கள் தினமும் அவர்களுக்குண்டு. மஹாளய
பக்ஷத்தில் தகப்பனார் தினம் கொண்டாடுவார்கள்.
மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் இந்தியாவிலும் கொண்டாடப் படுகிரது.
இப்போது பரவலாக பிள்ளை, மருமகள் எனஇருவரும் வேலைக்குப் போவது வழக்கத்திலிருக்கிரது.
வயதான தாயாரை கூட வைத்துக்கொள்ள யோசிக்கிரார்கள்.
நடப்பதுதான் நடக்கும். அதனால் யாரும் யோசனை செய்யாதீர்கள்.
தாய்மார்களும் அனுஸரித்துப் போவார்களே தவிர வேறு என்ன
வேண்டும்.
View original post 274 more words
தொட்டில்–16
நேபாலப்பின்னணியின் தொடர்ச்சி இது. சுதேச,விதேசத்துடன்,தாராளமான மனதுடன் ஆடுகின்ற அழகே தனியழகு இல்லையா அன்புடன்
ன்
பண்டிட் எங்கிருந்து வந்தான்?
அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.
ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?
தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.
பையனுக்கும் சாய் ஒன்று.
இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.
வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா
. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.
பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.
நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.
அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும்…
View original post 479 more words
புதுவருஷ வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.அன்புடன்காமாட்சி
தொட்டில்—15
தொட்டில்களில் இது நேபாளப்பின்னணியுடன் வருகிறது. இதுவும் அவ
அழகானத் தொட்டில்தான். சறறு மன விசாலத்துடன் ஆடுகிரது அன்புடன்கானத் தொட்டில்தாந்
ன்.
.
குளிர் இல்லை. வெளிநாட்டுப் பிள்ளைகள் வரும்போது ரொம்பவே நாடு சூடாக ஆகிப்போகிறது. காட்மாண்டு. முன்பெல்லாம் வெயிலே இவ்வளவு கிடையாது. ஒரு வீட்டிலும் மின் விசிறியே கிடையாது.
இப்போது எல்லோர் வீட்டிலும் மின் விசிறி. வீடுகளில் ஹீட்டர் வசதியும் கிடையாது. குளிர் நாளில் எங்கோ ஒருவர் வீட்டில் மண்ணெண்ணெயில் சூடு கொடுக்கும் ஹீட்டர். அபூர்வமாக இருக்கும். வேலைகள் முடிந்து ஒரு அகலமான மண் மடக்கு அதாவது பேஸன் போன்ற வாயகன்ற மண் பாண்டத்தில் அடுப்பு எறித்து மீந்த தணல்,மேலும் மேலும் போட சிறிது அணைத்த கரி.
சுற்றிலும் சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பெண்கள் மூன்றடுக்கு துணியால் தைத்த சௌபந்தி அதாவது நான்கு இடத்தில் இருக்கமாக முடிச்சு போடும் படியாகத் தைத்த முழுக்கை இரவிக்கை அணிந்து மேலே வீட்டிலேயே தறியில் நெய்த சால், அதாவது போர்வை அணிந்து விட்டால் ஆஜ் இத்னா தண்டி சோய்ன என்று பேசிக் கொள்வார்கள்.அதாவது இன்று அவ்வளவாகக் குளிர் இல்லையாம்.
குளிர்நாளில் கொரிப்பதற்கு மக்காச்சோளப்பொரி, ஒருவகை ஸோயா பீன்ஸ் விதை வறுத்தது கொரித்துக் கொண்டே இருந்தால் குளிரே தெரியாது என்பார்கள். மக்கை,பட்மாஸ் எளிய எல்லோரும் சாப்பிடும் ஒரு பண்டம். அதுவும் வீட்டில் விளைந்து குளிர் காலத்திற்காக சேமித்து வைத்திருப்பார்கள். வறுத்துச் சாப்பிட.
வெயிலில் உட்கார்ந்து சாப்பிட நாம் பொம்மனாஸ் என்று சொல்லும் பழத்திற்கு பொகடே என்பார்கள். புளிப்பும்,இனிப்புமான சுவை கொண்டது. அதில் உப்பு,மிளகாய்ப்பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் கடுகு…
View original post 498 more words
ரஸஎலுமிச்சை
இந்த இனிப்பு ஊறுகாயையும் ரஸியுங்கள். அன்புடன்
இது உப்பும் தித்திப்பும் காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.
எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்
முக்கிய ஆதாரம்.
எலுமிச்சம் பழம் —–பழுத்ததாக 12
திட்டமாக ருசிக்கேற்ற உப்பு
சர்க்கரை—–சாற்றின் அளவு
மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்
செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து
கொட்டை நீக்கி வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு
சேர்க்கவும்.
மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்
நறுக்கி கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்
எலுமிச்சை சாற்றை அளந்து அதே அளவில் சர்க்கரையைச்
சேர்த்து நறுக்கிய மெல்லிய துண்டங்களையும் அதில்
கலந்து ஒரு நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.
பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்
கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.
வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.
பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை
வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும், மஞ்சள்
பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து
எடுத்து உபயோகிக்கவும்.
இனிப்பும், காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான
ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.
ஊறும் பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு
அவசியம்.
சாற்றின் அளவு சர்க்கரை. குறைந்த அளவு உப்பு காரம்
நம் விருப்ப அளவு. முக்கியமான வஸ்து தொடர்ந்த
வெய்யில். நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.
தொட்டில்—14
இது ஒரு புதிய தொட்டில். பாருங்கள்
என்னடி இவ்வளவு நேரமா பேசறே யார் என்ன ஸமாசாரம்?
இரு வந்து சொல்றேன். என்ன விசேஷம் என்று சொல்லாமல் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி அனுப்பிச்சா அம்மாவுக்கு சொல்ல வேணாமா? அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அக்காங்களுக்கும் இவரு டிக்கட் புக் பண்ணி அனுபிச்சாச்சுன்னு சொல்ராரு. நீங்களும் எல்லாரும் வந்திடுங்க. எல்லாம் ரிஸர்வ் டிக்கட்டுங்கதான்.
என்னடி உனக்கு தெரியாம என்ன விஷயம் இருக்கும். ஒரு விஷயமும் இல்லே. எல்லாரும் கும்பலா கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செலுத்துவதாக வேண்டுதலாம். சும்மா வேடிக்கைக்குச் சொல்ராருன்னு நெனச்சா டிக்கட்டெல்லாம் காமிச்சுதான் அனுப்பிச்சாரு. தெரியுமே உனக்கு. இவரு மனஸுலே பட்டதை உடனே செஞ்சாகணும். நான் சொன்னேன் என்னங்க இது. அவங்க என்னவோ ஏதோ என்று நினைப்பாங்க என்று.
கோயிலுக்குப் போக அவங்க நெனைக்க என்ன இருக்குது? உனக்குதான் ஏதாவது நினைப்பு.இப்படிதான் அவங்க சொல்ராரு. வாங்க எனக்கும் ஸந்தோஷமாயிருக்கும். அத்தையும் இதையே சொல்ராங்க. வந்திடுங்க என்ன
இத்தனைநேரம் பேசரையான்னு ஸுலபமா கேட்டா போதுமா. ஒம் பொண்ணுதான் பேசிச்சு. அவுங்க வீட்லே சாமி கும்பிட போவதற்கு நாமெல்லாம் வரணுமாம். டிக்கட் அனுப்பிச்சு கூப்புடரா?
ஏதாவது விசேஷம் இல்லாங்காட்டி இப்படிச் செய்வாங்களா?
அவங்க வூட்லேதான் எல்லாமே மூடு மந்திரம்தான். கடைசிலேதான் என்னான்னு சேதியே தெரியும். ஒரு புது ஸாமான் வாங்கினா கூட திருஷ்டி பட்டுடும்னு ,சினேகிதங்க வைச்சுட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. அப்புறமா, இல்லே நாங்களே வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க. எல்லாமே அப்படிதான் அவங்க ஊட்டு வழக்கமே…
View original post 493 more words
தொட்டில்—13
தொட்டில் 13 முததாய்ப்பு வைத்தமாதிரி நிகழ்ச்சிகள். அரசுக்கல்யாணம்,தொட்டில்கள் என பல நிகழ்ச்சிகள். அழகுதான். பாருங்கள். வாருங்கள். அன்புடன்
முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!
இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.
எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை ஜமாய்க்கலாமே.
செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.
மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு, இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.
எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.
வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே…
View original post 479 more words
தொட்டில் 12
இந்தவாரம் தொட்டில் 12 வரனின் விவரங்கள் சேகரிப்பாக மேலும் தொடர்கிரது. ஊர்க்கதை என்றாலும் விஷயங்கள் ஸ்வாரஸ்யம் பாருங்கள். அன்புடன்
வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.
என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.
என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.
பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.
அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில்…
View original post 397 more words