சிங்கராஜனிடமிருந்து மகனை மீட்டதாய்.

அதிசய உண்மை

Continue Reading ஜூன் 22, 2016 at 9:32 முப 3 பின்னூட்டங்கள்

தொட்டில்—8

8 வதுதொட்டிலை ஆட்டுவதற்கு ஆ.யத்தம். பாருங்கள் உங்களுக்கும் இப்படி ஏதாவது கதைகள் ஞாபகத்திற்கு வரலாம்.

Continue Reading ஜூன் 21, 2016 at 12:29 பிப 9 பின்னூட்டங்கள்

மயிலத்திலிருந்து திருவருணை—4

குலதெய்வம்கோவிலும்அடுத்த, ஊர், விசேஷ மாரியம்மன், வாலீசுவரரையும் தரிசியுங்கள்மு

Continue Reading ஜூன் 16, 2016 at 8:41 முப 6 பின்னூட்டங்கள்

தொட்டில்–7

தொட்டில்களாகவே ஆட்டிக் கொண்டிருக்கிறேன். வண்ணவண்ணத் தொட்டில்கள். இது நம்பர் ஏழு.

Continue Reading ஜூன் 11, 2016 at 12:56 பிப 21 பின்னூட்டங்கள்

மயிலத்திலிருந்து திருவருணை–3

வண்டி விரைகிறது புதுவையை நோக்கி.மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை சாற்றி விடுவார்கள். மூன்று மணிக்குள் வளவனூரில் இருக்க வேண்டும்.
மணக்குளவினாயகர் கோவில்

கண்டேன்  சீதையை என்ற கணக்கில் கோவிலை நெருங்கி விட்டோம். வண்ணவண்ண  மலர்கள்,அருகம்புல் மாலைகள்,தாமரை மொட்டுக்கள்,பூஜா திரவியங்கள்  என கடைகளும்,கூட்டத்திற்கும் குறைவில்லை.
தாமரை மொட்டுக்களும்,புஷ்பங்களும்

மூலவரே வினாயகர். கச்சிதமான கோவில்.  நேராக கோவில்   படிகளை மிதித்து ஏறும் போதே  இப்படி,அப்படி.  இதோ,அதோ என்று கணேஷர் காட்சிதருகிறார்.வேகவேகமாக தரிசனத்திற்கு விரைகிறோம்.

பக்தர்கள் முகப்பில் யாரோ போட்டோ எடுக்கிரார்கள்.நாமும்

பக்தர்கள் முகப்பில் யாரோ போட்டோ எடுக்கிரார்கள்.நாமும்

பிரெஞ்சுக்காரர் ஆட்சியின் போது 1688 இலேயே   இவ்விடம்  அவர்கள் கோட்டையை அமைத்திருந்தனர். அந்தக் கோட்டைக்குப் பின் புறம்  மணலும்,குளமுமாக இருந்தது. ஸமுத்திரக் கரைக்கு அருகிலிருந்ததால் மணல் அதிகமாக இருந்தது. உடன் குளமுமிருந்தது. அதனாலேயே மணலும் ,குளமும் சேர்ந்து மணற்குளமாயிற்று.இக் குளமிருந்த  கீழ்க்கரையில் தான் இந்த ஆலயமிருந்தது. ஆதலால் மணக்குள வினாயகர் என்ற பெயர்   பிரபலமாயிற்று.

பிரெஞ்சு பிரபலங்களுக்கும் இவ்வினாயகர் மீது பக்தி உண்டு.   அரவிந்தாசிரம அன்னையும்  இக்கோவிலை விரிவு படுத்த பக்தர்கள் சிரமமின்றி வலம்வர  இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள் என்பர்.

வினாயகர் அருகில் இப்பொழுதும் ஒரு பள்ளத்தில்  அதில் எப்போதும் தண்ணீர்  ஊறிக்கொண்டே  இருக்கிறதென்றும்,கூட்டமில்லாத காலமானால்,அந்தத் தண்ணீரையும், பக்தர்களின் மீது தெளிப்பதுண்டு என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்..

எந்தக் கோவிலிலும் இல்லாத முறையில்     வினாயகருக்கு இங்கு  பள்ளியறை உண்டு.   பிரகாரத்திலேயே இருக்கிறது.  வினாயகரின் தாய் சக்தி தேவியும் உடனிருப்பதாக ஐதீகம்.   இதனால்  பாதம் மட்டுமே இருக்கும்  வினாயகரின் உற்சவ விக்கிரகம் இங்கு கொண்டு செல்லப் படுகிறது.

கீழே இருப்பது மணக்குள வினாயகரின் தங்கத்தேர்
மணக்குளவினாயகரின் தங்கத்தேர்

கடைசிப்பேர்வழிகளாக நாங்கள் இருந்ததால்   தரிசனம் நல்ல முறையில் ஆயிற்று. யாவருக்கும் எல்லா வரங்களையும்  அளித்து   மன அபீஷ்டங்களை  நிறைவேற்றுவார் இந்த கணநாயகர்.  நமக்காக மட்டும் இல்லை  எல்லோருக்கும் நன்மையைக் கொடு என்று நினைத்துக் கொண்டேன்.
மணக்குளவினாயகர்

கோவிலைச் சுற்றி ஆங்காங்கே  தொன்னையில் தயிர்சாதப் பிரஸாதம் ஒவ்வொருவர்கையிலும்.சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தனர். பிரஸாத வினியோகம் நடப்பதும்   தெரிந்தது. மூன்று வேளையும் கோவிலில் பிரஸாத வினியோகம் உண்டாம். நாங்கள் பிரதக்ஷிணம் முடிந்து வரும்போது, இடம் காலி செய்யும் மும்முரத்தில் இருந்தனர்.

பிரஸாதம் சாப்பிடுபவர்களைப் பார்த்தே சென்ற முறைகளில் சாப்பிட்ட குழைவான தயிர் சாதம் நாக்கில்  ருசித்தது. ஐந்து நிமிஷம் தாமதித்திருந்தால் தரிசனமே கிடைத்திருக்காது. தரிசனமே பெரிய வரபிரஸாதமல்லவா?

வண்டி மாப்பிள்ளையின்  ஸஹோதரியின் வீட்டை நோக்கிச் சென்றடைந்தது. எனக்குக் குழைய வடித்து மசித்த சாதம் கூடவே வருகிறது . விசாரமில்லை.

மயிலத்திலிருந்து நாங்கள் வருவதாகத் தகவல் கொடுத்ததால்  அவர்களும் வாசலிலேயே  இன்னும் வரவில்லையே என்று பார்க்க வந்தனர் போலும்.!

வாங்கவாங்க என்று வரவேற்பு கொடுத்தனர்.  நான் வராது போகமாட்டேன் என்று எனக்கு இரண்டொரு வார்த்தைகள் அதிகமாகச் சொல்லி வரவேற்றனர்.

எங்கள் மாப்பிள்ளையின் தங்கை புருஷரும்  எங்கள் ஊர்தான். அவர்களுக்கெல்லாம் சிறுவயதில்   பாடம் சொல்லிக் கொடுத்தவள்நான்.. அவரம்மா வயதில் பெரியவரானாலும் அவருக்கு நான் நல்ல சிநேகிதி. அவர்கள் மருமகள்கள். நான் அந்த ஊர் பெண் அல்லவா? அதனால் பல விதங்களிலும்   நான் அவர்களுக்கு ஸிநேகிதி. எங்கள் ஊரின் நட்பு அவ்வளவு பெயர் போனது.

என் பெண்ணிற்கும் அவள்சினேகிதி. மாப்பிள்ளையின்அண்ணா,மன்னிகொடுத்தனுப்பிய புடவை ரவிக்கை,வந்த அண்ணா மன்னியின்  அன்பளிப்புகள் என  மஞ்சள் குங்கும  மகிமை விசாரிப்புகளுடன் முடிந்தது.

அம்மா நீ சாப்பிடு. உன் நேரம் ஆகி விட்டது என்றாள் கொஞ்சம் மோர் வாங்கிக் கொண்டு கரைத்துக் குடித்தேன் என் பிரதான உணவை.எதுவும் சாப்பிடுவதில்லை.குழம்புத்தான் சிறிது கொடு போதும் என்றேன்  அவள் பயந்து கொண்டே ஒரு முருங்கைக்காய் தானைப் போட்டாள்.  கேஸரி செய்திருந்தாள். மிக்க நன்றாக இருந்தது.    அவர்களின் சாப்பாடும் முடிந்தது.

பரஸ்பரம் புதிய,பழைய கதைகளைப் பேசிக்கொண்டே மணி ஆகி விட்டது. வளவனூரில்   அம்மைச்சார் அம்மன் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளுக்கு நண்பர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. அதனால் கிளம்பி விட்டோம். பரஸ்பரம்  போன் நம்பர்கள்  வாங்கிக் கொண்டு.  எப்போது போனாலும்  எனக்கு புடவை ரவிக்கை அன்பளிப்பு இல்லாமல் அனுப்புவதே கிடையாது. வயதான ஸுமங்கலி என்ற மரியாதையைக் கொடுத்து விடுவதால்   என்ன செய்வது.

ஸரியாக மூன்று மணிக்கு  வளவனூர் வந்து சேரும்போதே  ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே நேராக கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.  நண்பர் அவரும் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்ததுடன் ,கோவிலுக்கும் வந்திருந்தார்,. ஆக வளவனூர் வந்து விட்டோம்.அடுத்து மற்ற இடங்களுக்குப் போவோம்.
எங்கும் நிறைந்த பிள்ளையார்
எங்கு சென்றாலும் நம் மும்பைப் பிள்ளையாரும் உடன் வருகிரார்.இது சொல்லுகிறேன் பிள்ளையார்தான்.

படங்கள் சில கூகல்..மிக்க நன்றி

ஜூன் 8, 2016 at 2:13 பிப 8 பின்னூட்டங்கள்

தொட்டில்–6

தொட்டில்

தொட்டில்

பாட்டி வீட்டு வாசலில் புதுப்பாளையத்தா வந்துவிட்டாளா? அதிகாலை ஆறு மணிக்கே வந்து விடும் தயிர்காகாரியைப் பற்றி யாவரும் விஜாரித்துக் கொள்ளும் கேள்வி இது. என்ன புதுப்பாளையத்தா ஏதாவது மாரி அம்மனா என்று தோன்றும். இல்லை. எங்கள் கிராமத்தின் அதுவும் எங்கள் வீட்டு சுற்றுப்புறமுள்ள எல்லோர் வீட்டிற்கும் தயிர் வழங்கும் பெண்மணி. ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருவாள். பெரிய கூடையில் சுற்றிலும் அண்டையாக ஏதாவதை வைத்து பெரிய பானையில் தயிர் இருக்கும். தவிர அதன்மேல் வேண்டியவர்களுக்காக சிறியசிறிய மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும் எப்படி லாவகமாகச் சுமந்து வருகிராளோ என்று எண்ண வைக்கும்.

பெரிம்மா நான் வந்துட்டேங்கோ. பக்கத்தில் அக்கத்தில் யாராவது இறக்கி விடுவார்கள். தயிர்க்காரி வந்துட்டா,வந்துட்டா செய்திகள் அஞ்சலாகும். யாருக்கும் முதல்லே அவ குடுக்கமாட்டா. ஸரிபோவோம்

என்றுஎல்லார்வீட்டுஈயச்சொம்புகளும்,ஈயக்கிண்ணங்களும்அவரவர்கள் கையில். பெரிம்மா வரும் வரை கூடையை திறக்கமாட்டாள். எங்கே பெரிம்மா வா. ஒங்கையாலே போணி பண்ணு.
ஒரு சின்ன தடியை ஊன்றிக்கொண்டு பாட்டி வரும்போதே அவாளுக்கெல்லாம் கொடுக்கறதுதானே. சின்ன குழந்தைகாரி அவள்.
இல்லே இந்தா பிடி. உள்ளார போயி பாத்திரத்தில் ஊத்திக்கோ என்ற சொல்லுடன் ஒரு சின்ன கலயம் கைமாறும்.
அடுத்தது சுப்பம்மா. இது அவங்களுக்கு.எங்கே அவங்க? இன்னொரு கலயம் கைமாரும். எல்லாம் பாட்டி வீட்டுத் திண்ணையில்தான். பெரிய பானை திறக்கும். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பாத்திரம் நீளும். நறைய இருக்குது தயிரு. நீ கொண்டா உனக்குதான் பிள்ளை அழுவும். காசு எம்மாம் வைச்சிருக்கே, கடன் குடுக்க மாட்டேன்.

நாலு மொந்தை குடு. உனக்கு மூணு மொந்தைதான் . மீந்தா குடுக்கறேன்.கெட்டியாகத் தோய்த்த தயிரில் கெட்டியாக சிறிது மோர் கலந்துமற்றவர்களுக்குக் கொடுப்பாள். அதுவும் அவ்வளவு நன்றாக இருக்கும். இது ஒரு காட்சி. நான்கு மைல் தூரத்திலிருந்து வருகிறாள். அவளுக்கு பழையதும் குழம்பும் பாட்டி கொடுக்காத நாளே இருக்காது.வேறு யார் கொடுத்தாலும்  வாணாம்  பெரிம்மா வைச்சிருக்கும் என்பாள்.

அப்பளாத்துக்கு மாவு அறைக்க பாட்டியாத்து ஏந்திரம்தான் எல்லோருக்கும் வேண்டும் . மாவைப் பூராவும் எடுப்பதற்கு முழுத்தேங்காயின் மேல் மட்டையை ஒரு பகுதியை நறுக்கி அதை ஒழுங்கு செய்து அதுதான் மாவை ஒட்ட எடுக்கும் பிரஷ்.
மத்தியானம் அதுவும் வீட்டிற்கு ஒரு இளம் பாட்டி இருப்பார்களே!அவர்களின் பொழுது போக்கும் இடமும்,பல்லாங்குழியும், தாயக்கட்டமும், பத்து கட்டமும்,பரமபதமும் மும்முரமாக இருக்கும். ஆடு புலி ஆட்டம் என்று கூட ஒன்று வரைந்து ஆடுவார்கள்.பாட்டியின் தவலை தோசை பெயர் போனது.  வீட்டு அரிசியும்.காணத்தில் ஆட்டிய நல்லெண்ணையும்   சேர்த்தது. வந்தவர்கள

வீட்டின் பின்பக்கம் நெல் உலர்த்த பெரிய செங்கல் பதித்த களம். பொரிவடாம் இட மூன்று காச்சல் போட,மற்றும் வடாமிட, ஸாமான்கள் காயவைக்க பத்திரமான இடம். பாட்டியின் மாப்பிள்ளை ஊரில் இல்லாத போதெல்லாம் பாட்டி ஒரு வி.வி.ஐ.பி தான். யார் இவர் அகிலாண்டம் பாட்டிதான்.

கருப்பான சிறிய உருவம்தான்.பேச்சில் அவ்வளவு இனிமை கலந்திருக்கும்.  நிறைய க்ஷேத்திரங்களுக்கும்,தீர்த்த யாத்திரைகளுக்கும்  சென்ற அனுபவம் உண்டு. அதைப்பற்றி எல்லாம் சொல்லும் போது யாவரும் ஆச்சரியப் படும்படி இருக்கும்.நேபாளத்திற்க்கு அந்த நாளில் போவதென்றால்    அதுவும் காட்மாண்டு பசுபதி தரிசனமென்றால் யாவருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. இப்போது பஸ்,ஆகாய விமானம் முதலானது உண்டு.  மட்டக் குதிரைகளின் மீது ஸவாரி செய்துதான் போக வேண்டுமாம். அந்த முறையில்   பசுபதி தரிசனம் செய்ததைச்  சொன்ன போதுஎல்லோரும் ஆச்சரியப் பட்டுப் போனோம்.

பாட்டி சின்ன வயதிலேயே விதவையானவர். ஒரு பெண் குழந்தை, அவளையும் விவாகம் செய்து கொடுத்தாகி நிறைய காலமாகிறது. பாட்டியின் உறவினருக்குத் தெரிந்தவர், திருவாங்கூர் ஸமஸ்தான திவான் ஸி.பி. ராமஸ்வாமி அய்யர். அவர்கள் மனைவி, தாயார் இருவருடனும் பூஜை முதலான நல்ல காரியங்களுக்கு உதவி செய்து கொண்டு, அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர் அகிலாண்டம்மா. ஆக நல்ல வாய்ப்பாக அவர் ஏராளமான இடங்களைப் பார்க்கவும், விசாலமான மனதையுடையவராகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஓரளவுவயதான பின்பு பெண்ணுடன் இருக்க வந்தவர்.

இவ்வளவு நல்ல மனதுடைய அந்தம்மாவின் பெண்ணிற்கு மகப்பேறு ஏற்படவில்லை. வயித்தியங்கள் செய்யாது இருந்திருப்பார்களா? பெண்ணின்
புகுந்த வீட்டில் மைத்துனர்களுக்கு அந்தபாக்கியம் இருந்தது. அவர்களின் குழந்தைகளைப் பார்த்தே பாட்டியின் பெண் தங்க விக்கிரஹம்மாதிரி குழந்தைகள் என்று பெருமை பட்டுக்கொள்ளும் ஒரு தங்கமான மனம். வம்சம் விளங்குகிறது, என்று பெருமை அடைந்து பேசுவாள். பெரியவர்களைத் தேடி நமஸ்காரம் செய்து எனக்கும் வம்சம் விளங்கவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் என்று வெகுளியாகக் கேட்பாள்.

தொட்டில் அந்தகாலம்
படம் உதவி கூகல் நன்றி

பாட்டி ஊரில் வீடு,நிலம் முதலானது வாங்கி இருந்தாள். அவ்வப்போது மாப்பிள்ளை அவர்கள் உடன் பிறந்தவர்களுக்கும் ஒத்தாசை செய்வார். அவரும்
கவர்மென்ட் வேலையில் இருந்தார். பார்க்கிறவர்கள் என்ன இருந்தாலும் அவளுக்கென்று குழந்தை குட்டி இல்லாத போது தனக்கென சேமிக்கவேண்டாமா? என கேட்கத் துவங்கினர். இதெல்லாம் வழக்கம்தானே! காலம் அப்படியேவும் ஓடவில்லை.

பாட்டியின் பெண்ணிற்கு ஓயாத தலைவலி அடிக்கடி வந்து எவ்வளவு வயித்தியங்கள் செய்தும் பலனில்லாமல் இரண்டு கண்களிலும் பார்வை குறைந்து கொண்டே வந்து பார்வை பறிபோனது. பாட்டியின் மனது எப்படி இருந்திருக்கும். ஊரோடு, தாராளமான ஸொந்த வீட்டில் இருக்க பெண்ணுடன் பாட்டி ஊரோடு வந்து விட்டாள். மாப்பிள்ளை சென்னையினின்றும் அடிக்கடி வந்து போவார். பாட்டிக்கும் கால் சற்று ஊனமானதால் ஒத்தாசைக்கும் ஒரு உறவின வயதானவளையும் உடன் வைத்திருந்தார். தண்ணீர் கஷ்டம் அப்போது.

வீட்டிலும் பொழுது போக வேண்டுமே!கலகலக்க அக்கம்பக்கத்தினர்கள்,கலகத்தையும் செய்வார்கள்.

தொட்டிலுக்கும் இதற்கும் என்ன ஸம்பந்தமா? பாட்டியின் கதை என்றே தலைப்பு அளித்திருக்கலாமா? தொடருவோம்.

 

ஜூன் 6, 2016 at 12:16 பிப 17 பின்னூட்டங்கள்

மயிலத்திலிருந்து திருவருணை 2

வள்ளி தேவஸேனாஸமேதசுப்பிரமண்யர்

வள்ளி தேவஸேனாஸமேதசுப்பிரமண்யர்

பெண்ணும் பிள்ளையும் உட்கார்ந்து சாப்பிட நியூஸ் பேப்பர் ஆஸனம்போலுள்ளது. அடேடே ஃபோட்டோ கிராபரும் இருக்கிறார். அதெல்லாம் அவர் எடுத்துக் கொள்ளட்டும். நாம் முன்னாடி தரிசனம் பண்ணலாம். திரும்பிப்பார்த்துக் கொண்டே மேலே கோவிலுக்கு நடைபோட வேண்டியதாயிற்று.
  சாப்பிட ஆஸனமா
சொல்லமுடியாத கூட்டம் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தால், ராகுகாலத்திற்கு முன் விவாகங்கள் முடிந்து அவரவர்கள் தெருவோர அமைப்பிற்குப் போய் விட்டதால், அடுத்த நல்ல நேரத்தை நோக்கி ஏற்பாடுகள் நடப்பது ஓரளவு யூகிக்க முடிந்தது. கோவிலுள்ளே கட்டண தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓரளவு கூட்டமின்றியே ஸன்னிதானத்தை அடைய முடிந்தது.
லக்ஷணமாக ஓரளவு நபர்களாக தரிசனத்திற்கு அனுமதித்ததால் தெரிந்த குருக்கள் அவர்களும் இருந்தபடியால், நல்ல தரிசனமும்,அர்ச்சனையும் செய்து பிரஸாதம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு சுற்று சுற்றி விட்டு நான் ஓரிடத்தில் தங்கிக் கொண்டு, பெண்,மாப்பிள்ளை இருவரையும் நிதானமாக எவ்வளவு பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமோ, செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.

மயிலம் கோவில் பிரகாரம்

மயிலம் கோவில் பிரகாரம்

 

அவர்களுக்கு அடிக்கடி எங்காவது கோவில்களுக்குப் போய்க்கொண்டே இருப்பது வழக்கம். மயிலம் வந்து சேருமுன்னரே வழியில் காரை நிறுத்தி டிபனும் உட்கொண்டாயிற்று. அந்த விசாரமும் இல்லை. ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தால் ஆங்காங்கே காது குத்தும் வைபவங்களுக்கான வைபோகங்கள். தனித்தனி கும்பல், இராகுகாலம் கழித்து முகூர்த்தம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப் பலதரப்பட்ட வைபவங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காத்திருந்தது.
மயிலத்திலிருந்து பாண்டிச்சேரி சென்று என்பெண்ணின் நாத்தனாரையும் பார்ப்பதாக நிரல். அது காரில்தானே போகிறோம். இவ்விடநிகழ்ச்சிகள் படம் வேண்டும். நீங்கள் யார் எடுத்துக் கொடுத்தாலும் ஸரி, இதை எடுங்கள்,அதை எடுங்கள் என்று விரைவாக இயங்க முடியாததால் சொல்லி விட்டேன்.
தட்டுத் தட்டாய்ப் பக்ஷணங்கள், எல்லாதினுஸு பழவகைகள், இனிப்பு பக்ஷணங்கள் பல தினுஸில், என்ன இல்லை என்று வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம். சீர் வகைகள் போலும்.! பரப்பப் பட்டிருந்தது. குலையோடு வாழைப்பழம். ஆப்பிள்,அன்னாஸி, ஆரஞ்ச்,சாத்துக்குடி. கவனித்துப் பார்த்தால் நேர்ந்து கொண்டு மொட்டையடித்துக் காது குத்தும் வைபவம். இரண்டு குழந்தைகளுக்கு. ஓஹோ இதுவும் நான் பார்த்து கண்டு களிப்பதற்காகவே என்று நினைத்துக் கொண்டேன். இந்தியாவை விட்டு வெளியிலிருந்தால் எல்லா நிகழ்ச்சிகளுமே அபூர்வம்தான். அதுவும் கோவில் போன்ற புண்ணிஸ்தலங்களில். வகைவகையான சீர் வரிசைகளுடன் பாருங்கள் இரண்டு குழந்தைகள் மழித்த தலையில் சந்தனப் பூச்சுடன். இதுவும் ஒரு அழகுதான்.
காதுகுத்த சீர்வரிசைகளுடன் குழந்தைகள்

ஒன்றோடொன்று சிரித்துக் கொண்டே குழந்தைகள் மாமாமடியில். தாத்தா பிள்ளையார் பூஜை செய்து கற்பூர மேற்றும் தாத்தா போலும் பக்ஷணம் பழம் இன்னும் வரும் பாருங்கள் மாலை போட்டுக் கொள்ள வேண்டாமா?  அடுத்து
P1030997படங்கள்

ஆசீர்வாதம் பாட்டி

ஆசீர்வாதம் பாட்டி

அழாமல் சமத்தாக காது குத்திக் கொள்கிறதா? கொஞ்சம் பார்க்கலாம்.

காதணிஅணிவித்தல்

காதணிஅணிவித்தல்

பக்கத்திலேயே இன்னொரு வசதியான சீர் வரிசையுடன் ஆனால் அழகான எவர்ஸில்வர் தவலை,ஜோடுதவலைகளுடன் என்னென்ன பக்ஷணங்களோ? பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா? பெண்ணின் தலை மட்டும் படத்தில் என்று நினைக்கிறேன்.

என்ன பக்ஷணங்கள்

என்ன பக்ஷணங்கள்

மங்களகரமாக

மங்களகரமாக

வெளியில் முருகருக்குப் பொங்கலிடுவதைப் பார்க்க வேண்டாமா?வாருங்கள்.

பொங்கல்

பொங்கல்[/caption
]எல்லா வைபவங்களும் பார்த்தாயிற்று. வீல்சேர்தான் வரும்போது பார்த்தாயிற்று.படி வழி இறங்க முடியுமா?மெல்ல இறங்கினால் ஆயிற்று. நாங்களும் பிடித்துக் கொள்கிறோம் என்றனர். நானே மாற்றி இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு இறங்கி விடுவேன். இந்த வழிதான் இறங்கியாயிற்று.

[caption id="attachment_8393" align="aligncenter" width="455"]மயிலத்துப் படிகள் மயிலத்துப் படிகள்

தரிசனம் நல்லபடி  முடித்து விட்டோம்.  அடுத்து   கோவில் மூடுமுன்  மணக்குள வினாயகரைத் தரிசிக்க  புதுவையை நோக்கி   வண்டி விரைகிறது.  மானஸீகமாக நீங்கள் யாவரும்  உடன் வருகிறீர்கள். போவோம் யாவரும் புதுவைக்கு. முருகா,முருகா!!!!!!!!!!!!

மே 31, 2016 at 7:06 முப 10 பின்னூட்டங்கள்

தொட்டில்-5

பலபல வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த ஸ்வீகரங்கள் எந்த வகைகளில் இருந்தது. அப்போதைய உறவு முறைகளும்,மருத்துவ வசதி குறைவுகளும்,பார்த்த கேட்டவைகள் இவை.நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்ததுதான் இவைகள். தெரிந்து கொள்ளலாமே. அவ்வளவுதான் மேலும் வரும்.

Continue Reading மே 27, 2016 at 10:31 முப 13 பின்னூட்டங்கள்

மயிலத்திலிருந்து திருவருணை.

மயிலத்தை நெருங்குகிறோம்

மயிலத்தை நெருங்குகிறோம்

நகரங்களில் வயதான முதியவர்களுக்கு வெளியுலகம் மாடி வீடுகளாயின் ஜன்னல் மூலமும், உடம்பு அஸௌகரியங்களின்போது, டாக்டரிடம் போகும்போதும்,வரும்போதும் தரிசனமாகிறது. போன இடத்தில் பலவித நோயாளிகளைப் பார்க்கும் போது இன்னும் மனது இடிந்து போகிறது. எல்லாம் அவரவர்களுக்கு விதித்தது நடக்கும் என்று மனதிற்குத் தெரிந்தாலும் ஸமயத்தில் யாவும் மறந்து விடுகிறது. படிக்கும் விஷயங்களும், கேட்கும் விஷயங்களும் கொஞ்சமா,நஞ்சமா? எதற்கு இவ்வளவு பீடிகை.கோவில்களுக்குப் போவதானாலும் கூட ஒருவர் துணை வேண்டியுள்ளது. நகர வாஸங்களிள்  நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும்.  யாவரும் அவ்வளவு    பிஸி.

ஒரு நாற்பது தினங்கள் நானும் சென்னை சென்று தாற்காலிகமாக தங்க வந்த பெண்,மாப்பிள்ளையுடன் தங்கி சற்று வெளியூர்கள் பார்த்து வந்தேன். அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிய வீட்டின் கீழ்த்தளத்தைச் சீர் செய்ய நியூ ஜெர்ஸியிலிருந்து வந்தார்கள். குலதெய்வம் மயிலம் கோவிலுக்குப் போகவேண்டும் உன்னால் முடியுமா என்றார்கள். நான் இரண்டு மணிக்கொருதரம் சிறிது ஆகாரம் உண்டு கொண்டு முன்னே,பின்னே என்று மருந்துகளுடன் அப்போது, இப்போது மாத்திரம் என்ன இருந்து கொண்டு இருந்தேன். ஸெரிலாக் கணக்கில் சாதத்தை மோருடன் கரைத்து, அல்லது ஸத்துமாக்கஞ்சி என்று ஆகாரம் வரையறுக்கப் பட்டிருந்தது.

பரவாயில்லை வீட்டுக் காரில்தானே போகிறோம் என்று காலையிலேயே எனக்கு ஆகாரம் தயாரிக்கப்பட்டு,அவர்களுக்கான சிற்றுண்டியுடன் அதிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.

மும்பையினின்றும் ப்ளைட்டில் கூட தனியாக வர முடியாது என மருமகள் உடன் வந்து மறு ப்ளைட்டில் மும்பை சென்றாள். ஜெனிவா பத்து வருஷங்களாகத் தனி
யாகவே போய்வந்தவள். அமெரிக்காவும் அப்படியே! இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளதான் முடிகிறது

காரில் போகிறோம். கோவில் வாசலில் இறங்கி உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்தால் போதும். அத்துடன் வேறு சில இடங்களும் போக வேண்டும்.
வளவனூர் மாரி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்யணும். கோலியனூர் போகணும். எங்காவது ஹோட்டலில் இரவு தங்கி விட்டு மறுநாள் நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையும் போக வேண்டும். இப்போது முடியாவிட்டால் இனி எப்போதுமே முடியாது என்று என் மனதின் ஆசைகளைச் சொன்னேன்.

எல்லாம் ஸரி என்ற முடிவுடன் இரவு நேரத்தில் அதிகப்படியாக உயரம் வேண்டுமென்று ரிஃப்ளெக்ஸ் இருப்பதால் மூன்று குஷன்களுடன் வண்டி. மயிலத்தை நோக்கி விரைந்தது. மயிலம் என்றஇவ்வூரின்  பெயர் வரக்காரணம் சொல்வார்கள் அது ஞாபகம் வந்தது.

திருச்செந்தூரில்  சூர ஸம்ஹாரத்திற்குப் பிறகு, சூர பத்மன்   தன்னை முருகப் பெருமானுக்கு    வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான். அப்போது முருகப் பெருமான்     இத்தலத்தில் மயில் வடிவத்தில்   அமர்ந்துதவம் புரியும்படி அருளினார்.    அதன் பிரகாரம்   சூரபத்மன்   இங்கு தவம் புரிந்து மயிலாக மாறி   முருகப்பெருமானுக்கு   வாகனமாக மாறினான்.   அதனால் இத்தலம் மயிலம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.

இது சிறிய குன்றம்தான்.பெரியமலை இல்லை. மலை ஏறும்போதே குளத்தின் கரையில் குழந்தைகளும்,வேண்டுதல் செய்து கொண்ட பெரியவர்களும் தலையை மழித்துக் கொள்ளும் காட்சிகள். .இன்னும் மேலே நிறைய கல்யாண கோஷ்டிகோவிலில்   கல்யாணத்தை   முடித்துக் கொண்டுவேன்களிளிருந்து இறங்கி ரோடோரத்திலேயே சில ஸம்பிரதாயங்கள் செய்வித்துக் கொண்டே பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட வீதி ஓரங்களில் மரத்தினடியில் ஸம்ப்ரமமாக நுணி வாழையிலைச் சாப்பாடும் நடந்து கொண்டு இருந்தது.இவையெல்லாம்கல்யாணத்தை முடித்துவிட்ட கோஷ்டி.  ஆற அமற  சாப்பாடு.   பேச்சுகள், விமரிசனங்கள்.

பெரியபெரிய அகலமான அடுக்குகளிள் சமைத்ததை அப்படியே மூடி வேனில் ஏற்றி இருப்பார்கள் போலும். கீழிறங்கி இவைகளை எல்லாம் பார்க்க படம் பிடிக்க ஆவல். நீ கீழிறங்கினால் உனக்கும் சாப்பாடு போட்டு விடுவார்கள். இன்னும் கோவிலிலும் கல்யாணம் பாக்கி இருக்கும். அங்கு போய் விஸ்தாரமாகப் பார். முன்னே கோவிலுக்குப் போவதைப்பார் என்றாள் என் பெண்.  எங்கோ தூரதேசத்தில் இருந்த படியால்   ஸம்ஸாரியகவும் இருந்ததால் நான் பார்த்த கல்யாணங்கள் மிகக் குறைவு.இம்மாதிரியான  கல்யாணங்கள் பார்க்கவும் ஆசை.ஆச்சு வீல்சேருக்கு வருவோம்.

மயிலத்தில் வயதானவர்களுக்காக வீல்சேர் வசதி இருந்தது. கார்களில் செல்பவர்கள் ஒரு இடத்திலிருந்து அதில் போகலாம். மற்றபடி அவ்வளவாக செங்குத்தானபடிகளில்லை. வேறு இடத்திலிருந்து படிகளேறியே செல்வது வழக்கம். கடினமானது ஒன்றுமில்லை.
மயிலம்கோபுரமும்,வீல்சேரும்.மேலே இருப்பது  சென்ற முறை சென்ற வீல்சேர்.. மண்ரோடு. இந்தமுறை ரோடு நல்லது. இருந்த ஒரு வீல்சேர்   சக்கரங்கள்,அப்படி,இப்படி மக்கார் செய்தது.  ஏர்போர்ட்டில்  ட்ராலி தள்ளுவதுபோல நடை வண்டி மாதிரி அதைப் பிடித்துகைகொண்டே மேலே போய்விட்டேன்..

எனக்காக காத்திருந்தது போல ஒரு கல்யாணசாப்பாடு, அலங்கரிக்கப்பட்ட மண் கலசங்கள்,இலை.   மனிதர்கள்,  பெண்,மாப்பிள்ளை, எளிய திருமண உடையில் பார்ப்போமா?  உண்ட இலைகள் ஒரு புறம், உண்ணும் இலைகள் ஒருபுறம்.பாலிகைக் குண்டான்கள்   . இன்னும் சாப்பாடு பூராவும் முடியவில்லை.

முடிந்தவிவாகம்

முடிந்தவிவாகம்

எளிய மணப்பெண்ணும்,மாப்பிள்ளையும்

எளிய மணப்பெண்ணும்,மாப்பிள்ளையும்

இன்னும் கோவிலுக்குள்ளே போகலை.  வேஷ்டி கட்டினவர்களைவிட பேண்ட்போட்டவர்களையே நிறைய பார்க்க முடிந்தது.  கட்டம்போட்ட எளிய வழக்கமான கூரைப்புடவையில் பெண்.  கோவிலுக்கு போய்விட்டு , அங்கும் சில காட்சிகளைக் காணலாம். தொடர்ந்து வாருங்கள்.

மே 22, 2016 at 10:57 முப 6 பின்னூட்டங்கள்

தொட்டில்–4

imagesஅழகுத் தொட்டில்கள் உதவி—கூகல்—நன்றி
என்னது திரும்பவும் ஆசாரமான குடும்பத்துத் தொட்டிலேவாா?   நீங்கள் கட்டாயம் நினைப்பீர்கள் . இம்மாதிரி   கதைகளெல்லாம் நான் சொன்னால்தானே உண்டு.  எல்லா இடத்திலேயும்   எதிர்மறையேதானா?  நல்லது ஒன்றுமே இல்லையா?   சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்..    ஞாபகம்     வரும் அளவிற்கு  எழுத்து வேகம்  போதவில்லை.ஆமாம்   இன்னொரு வைதீகக் குடும்பம்  இப்படிதானே ஆரம்பிப்பீர்கள். என்ன செய்வது. இப்படிப்பட்ட ஸமுதாயத்தில்தான்  புத்ரன் இல்லைவிட்டால்  பித்ருக்கள் கடைதேற மாட்டார்கள் என்ற எண்ணங்கள் ஆழப் பதிந்திருந்த காலம். அவர் ஒருவேதமூர்த்தி.

வேதவித்துஎன்றேசொல்வார்கள்வேதங்கள்,தர்மசாஸ்திரம்,தத்துவ வியாகரணங்கள்  எல்லாம்   கரைத்துக் குடித்தவர்.  கிரஹஸ்தன் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணமானவர்.  குடும்பத்துக்கு ஒரே பிள்ளை.   அவருக்குப் பெண்தானா கிடைக்காது. நல்ல குடும்பத்துப்  பெண்ணுடன் விவாகமாகி     பல வருஷங்களுக்குப் பின்    பெண் மகவு.  ஸந்தோஷம் அநுபவிக்கக விடாமல், அடுத்த மூன்று நாட்களிலேயேே      மகராஜி போய்ச் சேர்ந்து விட்டாள்.  அம்மாவினால்க் குழந்தையை எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொள்ள முடியும்?    அப்படியும்         ஐந்தாறு  வருஷங்கள் போயிற்று.  இன்னொரு விவாகம்     செய்தாலும்  சிறிய பெண்கள்தானே கிடைக்கும்.    திரும்பவும்  விவாகம் செய்தார்கள்.. நாலைந்து வருஷங்கள் கடந்தது.பாட்டிக்கு பேரன்  பிறக்கப் போகிறான் என்று ஸந்தோஷம்.

பார்க்கிறவர்கள் எல்லோரும் தாயும்,பிள்ளையும் நல்லபடி      வெவ்வேறாகி ஸுகப்பிரஸவம் ஆக வேண்டும் என்றே ஆசிகள் வழங்கும் காலமது. பிரஸவம் என்பது மறு பிறவி..        ஆயிரம் காலத்துப் பயிராக இருக்க வேண்டும் என்பார்கள்.    வைத்திய வசதி கிடையாது.   நம்மது என்ன ஆயிற்று பார்ப்போமா?

எவ்வளவு ஜாக்கிரதை,எப்படி இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும். சோதனை என்பது இதுதானோ? மூத்தவளாவது ஒரு குழந்தையை விட்டுப் போனாள். இவளது குழந்தை உலகத்தையே பார்க்கவில்லை.மறுபடியும் சோகம்.இவளும் போய்ச் சேர்ந்தாள். அந்தகாலகட்டத்தில் பெண்களைக் கொடுக்கவும் மனிதர்கள் தயார்.  காலம் ஓடவேண்டுமே.  பெண்ணுக்கும் நல்ல இடமாகப் பார்த்து   பிறகும்  ஒத்தாசை

வேண்டுமே!
ஊருக்குள்ளேயே ஸம்பந்தம் வேண்டுமே? அவரும் பெண்ணுக்கு முதலில் நல்ல இடத்தில் விவாகம் செய்து விட்டுத் தானும் கலியாணம் செய்து கொள்கிரார். நல்ல வேளை இந்தக் கல்யாணத்தின் மூலம் ஸந்ததி உண்டாகவில்லை..
பெண் கர்பவதி ஆகிராள். நல்லபடி ஆகவேண்டுமே என்ற பயம்தான் மேலிடுகிறது. அந்த நாட்களில் இப்படி எவ்வளவு காலம் முன்நின்றது யூகிக்க முடியவில்லை. குடும்பத்தின் முதல் ஸந்தோஷமாகப் பேரன் பிறந்தான். ஸந்தோஷம் கரை புரண்டது. எவ்வளவுவருஷங்களுக்குப்பின்வீட்டில்சம்பந்திகள்,மாப்பிள்ளை,வருவோர்,போவோர் என களை கட்டியது.மூன்றாவதாக பெண்ணைக் கொடுத்தவர்களுக்கு மட்டும் நம் பெண்ணிற்கு ஒன்றுமில்லாது போய்விடுமோ என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்து விட்டத

.எந்த காலத்திலும்எல்லோரிடமும் எல்லா குணங்களும் ஆங்காங்கே தலை தூக்கிக் கொண்டுதான் இருந்தது.ஆனால் ஸம்பந்தப் பட்டவளோ எவ்வளவோ கஷ்டங்களை நேரில் பார்த்ததின் பயன் குடும்பத்தின் ஸந்தோஷத்தை அவளுடயதாகவே ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் தோழமையுடன் பாராட்டுவதும்,சீராட்டுவதாகவும் பெரிய மனுஷியாகவே செயல்பட்டு குடும்பத்தை அழகுற நடத்தினாள். குழந்தை பேரனாகவும்,பிள்ளையாகவும் அவ்வளவு உயர்வுடன் கொண்டாடப்பட்டு ஊரே அவர்களை மெச்சும் படி அவ்வளவு ஸந்தோஷமாக இருந்தது குடும்பம்.

. நாட்டிலும் வியாதிகள் கண்டு பிடிப்பும்,நிவாரணங்களும்,டாக்டர்களும் வைத்திய வசதிகளும் ஓரளவு பெருகின என்றே சொல்ல வேண்டும்.
வசூரி,விஷ ஜுரங்கள், குழந்தைகளுக்கு ஈரல் குலைக்கட்டி இன்னும் இப்படி எத்தனையோ வியாதிகளும் ,அவைகளுக்கான மருந்துகளும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் நேரம்.நாமும் தொட்டிலுடன் இன்னும் சற்று மேலே போவோமா? தொடருவோம். மே மாதம் 18 ஆம்தேதி 2016 அன்று பதிப்பிக்கப் பட்டது இந்த நான்காவது பாகம்.

மே 18, 2016 at 1:47 பிப 12 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,806 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Preferred Travel's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.