சிங்கராஜனிடமிருந்து மகனை மீட்டதாய்.
ஜூன் 22, 2016 at 9:32 முப 3 பின்னூட்டங்கள்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஆஸ்பென் நகர் உள்ளது.இதன் அருகிலுள்ளலோயர்உட்டி கிரீக் என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுவன் தனது ஸகோதரனுடன்இரவு வெளியே முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் தாய்க்கு அவன் அலறுகிற சப்தம் கேட்டது.
உடனேதாய் ஓடி வந்து வெளியே பார்க்கிராள். பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே ஒரு சிங்கம் அவரது ஐந்து வயது மகனை வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு இருந்தது. வாயினின்றும் விடுபட சிறுவன் கைகால்களை உதறிப் போராடிக் கொண்டு இருந்தான்.
பயத்தை ஸுதாரித்துக்கொண்டு அந்த தாய் ஓடிப்போய் சிங்கத்தின் ஒரு பாதத்தைப் பிடித்து உயர்த்தியவாறு,சிங்கத்தின் வாய்க்குள் தனது வலதுகையைக் கொண்டு சென்று போராடி மகனை இழுத்து வெளியே போட்டார்.
அதைத் தொடர்ந்து சிங்கம் அருகில் உள்ள காட்டிற்குள் ஓடிவிட்டது.
அந்தச் சிறுவனுக்கு, முகம்,கழுத்துப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. சிங்கத்திடம் போராடியதில் அவனது தாய்க்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டது.
காயமடைந்த சிறுவன் டென்வர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றான். இது பதினேழாம் தேதி நடை பெற்றது. இந்த ஸம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் சுமார் 4,500 சிங்கங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
பழைய காலங்களில் துணிக்கு அவுரித்தழை மூலம் சாயம் ஏற்றுவார்கள். நீலக்கலர் இது. சாயம் ஸரிவர பிடிபடாமற்போனால் ஆச்சரியமான ஸம்பவங்களாக ப் புனைந்து வதந்தியைப் பரப்பி விடுவார்களாம். கலர் பிடித்து விடுமாம். நீலம் பிடிபடாத வார்த்தை என்று எல்லோரும் சொல்வார்களாம்.
ஆனால் இது உண்மையான பேப்பர் ஸமாசாரம்தான். தினத்தந்தி வெளிநாட்டுச் செய்திகள்.. நன்றி. கூகலுடைய சிங்கத்திற்கும் நன்றி.
இந்தத்தாய் வீராங்கனை. போற்றுவோம்.
Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை..
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 11:33 முப இல் ஜூன் 22, 2016
ஆச்சரியமான தகவல்!
2.
Revathi Narasimhan | 3:47 பிப இல் ஜூன் 22, 2016
மிக அதிசயமாக இருக்கிறது. அந்த வீரத்தாய்க்கு வணக்கங்கள். கொலராடோவில் சிங்கங்களா.
மலைச் சிங்கமாக இருக்கும். Mountain Lion.
3.
chitrasundar5 | 2:31 முப இல் ஜூன் 23, 2016
ஆமாம் அம்மா, செய்தியில் படித்தேன். தைரியமான அம்மாதான் !
நீங்க சொல்லும் வதந்தி மாதிரியே இன்னொன்று. சாமி சிலை வார்க்கும்போது சரியாகக் கூடாமல் இருந்தால் நடக்காத ஒன்றை நடந்ததாக வதந்தி பரப்புவாங்களாம். பிறகு நன்றாக வந்துவிடுமாம்.
அன்புடன் சித்ரா.