லெஸொதோ LESOTHOஅனுபவமும்,தென் ஆப்ரிகாவும். 1

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பார்வை

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பார்வை

இது ஒரு பார்வை  மலைகளி்ன் வடிவம்.

இது ஒரு பார்வை மலைகளி்ன் வடிவம்.

ஜோஹான்ஸ் பர்க்,மண்டேலா உருவச் சிலையுடன்

ஜோஹான்ஸ் பர்க்,மண்டேலா உருவச் சிலையுடன்

ஐந்தாறு வருஷங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் உள்ள

லொஸேத்தோ என்ற தேசத்திற்குப் போயிருந்தோம்.

அது ஒரு கிங்டம்.   வரண்டபூமி.  தலைநகர் மஸேரு. அந்த தேசத்தில்

விசேஷம் என்ன வென்றால் எய்ட்ஸ் பேஷன்டுகள் அதிகம்.

மிகவும் வரண்ட பூமி. மலைப் பகுதிகளே அதிகம்.

மலையும் கற்குவியல்களாக இருக்குமே தவிர பசுமையாக இராது.

பல அறியவகை வண்ண, வண்ணக் கற்கள்  கனிஜங்களாக இருக்கும் போல

உள்ளது.

ஜோஹான்ஸ்பர்க்போய், அங்கிருந்து    சிறிய விமானத்தில் மஸேரு

,செல்ல வேண்டும்.

அதிகம்  வசதிகளில்லாத ஏர்போர்ட் காண்மாண்டுவை, ஞாபகப் படுத்தியது.

இப்போதைய காட்மாண்டுவைச் சொல்லவில்லை.

விமானத்திலிருந்து  ஸாமான்கள் இறக்கி, ஆட்கள் தூக்கி வந்து ஹாலில்

வைப்பார்கள்.   கஸ்டம்ஸ் கெடுபிடி இருக்கும்.

பெயரளவிற்கு ஏதோ கூலி ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம் ஸாமான்கள்

வெளிக் கொணரவேண்டும்.

ஆனால்  காட்மாண்டுவில்  டகோடா ஸர்வீஸ்     இருந்தது. பிறகு ஆவ்ரோவும்

வந்தது.

மஸேரு போன விமானம் மிகக் குட்டியானது. பதினாறு இருக்கைகளே.

பதினைந்து கிலோ ஸாமான்களே உடன் எடுத்துப் போக முடியும்.

அதனாலே  துணி மணிகள்கூட  மிக்கக்  குறைந்த அளவிலே எடுத்துப்  போனோம்.

உள் நாட்டில்அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை.

இளைய தலைமுறையினர்   வேலைதேடி வெளிநாட்டிற்குப் போய்

விடுகிரார்கள்

அவர்கள் பணம் கொண்டு வருகிரார்களோ இல்லையோ, எய்ட்ஸைக்

கொண்டுவருகிரார்கள். மனைவிகளுக்குக் கொடுக்கிரார்கள்.

குழந்தைகளும் அதனுடனேயே  பிறக்கிரார்கள். ஆக எய்ட்ஸ் நோய் தலை

விரித்தாடும்தேசமாக இருந்தது.

கைத்தொழிலும்அ திகம் கிடையாது.

என்னுடைய பிள்ளை இந்த வியாதியை கண்ட்ரோலுக்குக் கொண்டுவரும்

,அத்தேசத்தின் தலைமைபதவியில் அவ்விடம்   யூ என்    எய்ட்ஸ்  நிறுவனத்தால்

நியமிக்கப் பட்டிருந்தார்.

எதற்கு இதை எழுதினென்றால்   இப்படியும் பல தேசங்கள் இருக்கிறது.

அங்கு அவர் போனபோது   சமைக்கத் தெரியாது. ஸ்கைப் மூலமே

வெண்ணெய் காய்ச்சுவது     முதல் பாடமெடுத்தோம்.

எல்லாம் கற்றுக்கொண்டு அவரும் பிறறைச் சாப்பிடக் கூப்பிட்டு

விருந்து கொடுக்கும் அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.

உதவிக்கு ஒரு பெண்மணி உண்டு. அவரை மே என்றுதான்

கூப்பிடவேண்டும்.

வாசலில் ஸெக்யூரிடிக்கு ஆட்கள் உண்டு. அவர்களை

தாதே என்று கூப்பிட வேண்டும்.

எல்லாம் இங்லீஷ் தெரிந்து பேசுபவர்கள்.  மரியாதையும் உண்டு.

ஸுய கௌரவமும் உண்டு.

வேலைக்காரர்கள் என்று குற்றம் குறை சொல்ல முடியாது.

அப்படி நாங்கள்  டிஸம்பர் லீவிற்கு அங்குச் சென்றபோது, வாராவாரம்

விருந்துதான் தான் அவ்விடம்.

நாங்கள் குறைந்த அவகாசத்திற்காக அங்கு போயிருந்ததால் இருந்த நாட்கள்வரை

நாங்கள் அங்குள்ளவர்களுக்கு விருந்துகொடுப்பதும், அவர்கள் எங்களுக்குக் கொடுப்பதுமாக

இருந்தவரை இப்படியே காலம் ஓடியது.

ஒரு 10 குடும்பத்தினர்   இம்மாதிரி வெவ்வேறு வேலைகள் நிமித்தம் வந்தவர்கள்

வாராவாரம் ஒவ்வொரு வீட்டில் எல்லோரும் கூடி பொழுதைக் கழிப்பது  வழக்கம்.

வேறு எந்த விதமான பொழுது போக்குகளோ,.  கேளிக்கைஸ்தலங்களோ கிடையாது.

ஆக அவர்களே வாராவாரம் ஒவ்வொருவர் வீட்டில் ஸந்தித்து, ஏதாவது

தங்களுக்குள்ளே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டு, பேசிமகிழ்ந்து,உண்டு களித்து

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கொண்டாட்டம் ஒரு இல்லம்

கொண்டாட்டம் ஒரு இல்லம்

விருந்தினர்கள்

விருந்தினர்கள்

விருந்தினர்கள் நம்வீடு

விருந்தினர்கள் நம்வீடு

நாங்கள் அதாவது என் மகன்

தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் ,இங்கு இட்லி,தோசை,வடை

உப்புமா என்பதெல்லாம் எங்களின் ப்ரதான ஐட்டமாக இருந்தது.

அது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதை

செய்யச் சொல்லியே விருந்தினர்கள் ருசித்தனர்.

என் மகனுக்கு யூஎன் நிருவனத்தில் ஸாமான்கள் கொண்டுபோக

. ஷிப்மென்ட் வசதி இருந்ததால் கிரைண்டர்,மிக்ஸி,வேண்டிய ஸாமான்கள்

என  ஒரு அழகிய குடும்பஸாமான்கள் எல்லாம் எடுத்துப் போக முடிந்தது.

அதெல்லாம் டில்லியிலிருந்து வாங்கி மஸேரு வந்து சேர்ந்தது.

அதனால்தான் இவைகளை நினைத்துப் பார்க்க முடிந்தது.

தவிர மருமகள் வேலையிலிருந்ததால் ஜினிவா குடும்பமும் நடந்து கொண்டு

இருந்தது.தற்செயலாக அவ்விடத்திய படங்களை பார்க்க நேர்ந்தபோது

எல்லோருடைய ஞாபகமும் வந்தது.

வேர்ல்ட் ஃபுட் ப்ரோக்ராம்,  யுநிஸெஃப்,   யுஎன்டிபி ,   ஜெர்மன் டெவலப்மென்ட் ஏஜன்ஸி,

மினிஸ்ட்ரி ஆஃப் எஜுகேஷன்,

லொஸேத்தோ ஆர்மிக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்காக,    இண்டியன் ஆர்மியின்

பிரிகேடியர் யாதவ் அவர்களுடன், 12 குடும்பத்தினர்,தமிழர்களும் உண்டு,

பெயர்போன பாகிஸ்தானி ஸர்ஜன்  அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்,

அவர்களது குடும்பம், 40 வருஷங்களாக அவ்விடம் பிஸினஸ் செய்து வரும்

பகாயா குடும்பத்தினர் என ஞாபகம் உள்ளவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதிலும் ஸ்ரீலங்காத் தமிழர் குடும்பம் மிகவும் அன்போடு, பழகியது.

சற்று வயதான பெண்மணி. அவர் உத்தியோகம் செய்யவில்லை.

பேரன் பேத்தி எடுத்தவர். வெகு வருஷங்களாக வெளியிலேயே இருப்பவர்.

அயல்நாட்டு மருமகள்,மருமகன் உண்டு. குடும்ப விஷயங்கள் பூராவும்

சொல்லி, எல்லா விஷயங்களையும்,பகிர்ந்து கொள்ள அவருக்கு நான்

உற்ற ஒரு மனுஷியாக இருந்தேன்.

ஸ்ரீதனமெல்லாம் அப்படியே விட்டு வந்து விட்டோம் என்று அவர் சொல்லும்போது

நமக்கும் கண்கள் பனிக்கச் செய்யும்.

பாஷைகள் எப்படி நெருங்கி உறவாடியது. இப்போது நினைத்தாலும் மனது

அந்த நினைவுகளை அசை போட வைக்கிறது.

நேபாலி,இந்தியர், வடதென் மாநிலத்தவர் என்று ஒரு குட்டி உலகமாகத் தோன்றியது

எனக்கு.

பாஷைகள்,தேசம் எல்லாம் மிஞ்சிய ஒரு நட்புக் கூட்டமாகத் தோன்றியதெனக்கு.

நேபாலிக் குடும்பம்,  அவர்களது குடும்பமாகவே பாவித்தது.

ஆந்திரக் குடும்பம்,   அவர்களுடயதாகவே எங்களை மதித்தது.

வட இந்தியக் குடும்பங்கள்,   சம்பந்தி எனக் கொண்டாடியது.

தமிழ்க் குடும்பங்கள் ஸந்திக்க நேர்ந்தபோது   என்னை அவர்களின்

அருகிலுள்ள ஊரின்  பிறந்தவள் என பெரியம்மா முறை கொண்டாடியது.

புது வருஷப்பிறப்பை   பிரிகேடியர் வீட்டில் கொண்டாடியபோது அவர்கள்

செய்து வந்த பண்டங்கள், அவ்வளவு சிறப்பாகச் செய்து வந்தர்கள்.

ஈரானியக் குடும்பம், என எல்லோர் வீட்டிற்கும் போய்வந்தோம்.

இளமைகளுக்கு எல்லோரும் முக்கியத்துவம் அளிக்கும் போது

வயதான எங்களுக்கும் அவ்விடம் நல்ல வரவேற்பிருந்ததை மறக்க

முடியாது.

ஜோஹான்ஸ்பர்க்  ஒரு நேபாலிக் குடும்பத்துடன் போய் அவ்விடமிருந்து

பல இடங்களுக்குப் போய் வந்ததை மறக்க முடியாது.

ஆப்ரிக்கா கனிஜங்களின் ஆபரண அங்காடி ஜோஹான்ஸ்பர்க்

ஆப்ரிக்கா கனிஜங்களின் ஆபரண அங்காடி
ஜோஹான்ஸ்பர்க்

ப்ளாக் எல்லாம் எழுத ஆரம்பிக்காத காலமது.

எவ்வளவு இடங்களை வர்ணித்திருக்கலாம். காலம் தாழ்ந்த

கனவு இது. குறிப்புகளும் ஏதும் வைக்கவில்லை.

இருப்பினும்    படங்கள் குறிப்புகளுக்குப் பதிலாக உள்ளது.

அப்படிச் சென்ற சில இடங்களின் படங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசையே

தவிர பயணக் கட்டுரை இல்லை இது.

மேலும்RUST FONTEIN DAM  மற்றும் கோல்டன்கேட் ஹைலேட்ஸ், நேஷனல்பார்க்

ஸௌத் ஆப்ரிகா முதலான இடங்களுக்குச் சென்ற போது எடுத்த சில

படங்களுடன்  அடுத்து உங்களிடம் பெருமை பேச வருகிறேன்.

கட்டாயம் பாருங்கள்.   வருகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.

பிப்ரவரி 11, 2014 at 10:23 முப 22 பின்னூட்டங்கள்

க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.

ஸுலபமான குறிப்பொன்றை விஸ்தாரமாக எழுதியிருக்கிறேன். கொஞ்சம் விலை ஜாஸ்தி அவகேடோவிற்கு. கார்ன் சிப்ஸ் கிடைக்காத இடமே இல்லை. வாங்கி ஜோடி சேருங்கள்.
எல்லா சிப்ஸுடனும் ருசிதான்.

Continue Reading ஜனவரி 31, 2014 at 11:18 முப 33 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம்—12

அன்னையர் தினம் 12 எழுதியிருக்கிறேன். படியுங்கள். கமென்ட் கொடுங்கள். ஸந்தோஷமாயிருக்கும்.அன்புடன் சொல்லுகிறேன்.

Continue Reading ஜனவரி 22, 2014 at 3:24 பிப 22 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்துகள்

எங்கள் தோட்டத்து வாழைப் பழங்கள்.

அன்பிற்குரிய   சொல்லுகிறேனின்   ஆதரவாளர்களாகிய அன்பு உள்ளங்களுக்கு

என் மனமார்ந்த மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல். அன்புடன் சொல்லுகிறேன்.

ஜனவரி 13, 2014 at 5:03 பிப 8 பின்னூட்டங்கள்

புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.

Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள்– கெட்டியாக உருட்டிய 2 எலுமிச்சை அளவு புளியை  அரைகப் தண்ணீரில் ஊற வைக்கவும். வறுப்பதற்குச் சாமான்கள் தனியா—-2 டீஸ்பூன்,  மிளகு அரை டீஸ்பூன், மிளகாய் 4 , இவைகளைத் தனியாக வெறும் வாணலியில்வறுத்துக் கொள்ளவும். கடுகு கால் டீஸ்பூன்,      வெந்தயம் அரைடீஸ்பூன்,          சீரகம்கால்டீஸ்பூன்- இவைகளைத் தனியாக கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் சிவப்பாகவறுத்துக் கொள்ளவும். எள் இரண்டு டேபிள்ஸ்பூன் கருகாமல்  சிவக்க…

Continue Reading ஜனவரி 12, 2014 at 11:41 முப 10 பின்னூட்டங்கள்

சக்கரைப் பொங்கல்

Originally posted on சொல்லுகிறேன்:
சக்கரைப்பொங்கல் பொங்கல்ப் பண்டிகை  அடுத்து வருவதால்  பொங்கல் செய்யும் முறையையும் பார்ப்போமா. வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்.   பாஸ்மதி பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு பாகுவெல்லம்—பொடித்தது—2 கப் நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்–5   பொடித்துக் கொள்ளவும் முந்திரி,   திராட்சை–விருப்பத்திற்கு குங்குமப்பூ–சில இதழ்கள் ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை   வாஸனைக்கு தேன்—2 ஸ்பூன்   ருசிக்கு பால்—-அரைகப் செய்முறை——.வாணலியைச் சூடாக்கி  அரிசி, பருப்பை தனித்தனியே வாஸனை வரும்படி சற்றுச்   சிவக்க வறுத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பை, இரண்டு  மூன்று முறை…

Continue Reading ஜனவரி 9, 2014 at 12:59 பிப 14 பின்னூட்டங்கள்

2013 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 84,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 4 days for that many people to see it.

Click here to see the complete report.

ஜனவரி 4, 2014 at 6:10 முப 2 பின்னூட்டங்கள்

2013 WordPress Blogging Chollukireen Annual Report

2013 WordPress Blogging Chollukireen Annual Report

ஜனவரி 4, 2014 at 4:58 முப பின்னூட்டமொன்றை இடுக

வாழ்த்துகள்

2014 ஆம் ஆண்டை அன்புடன் வரவேற்க உங்கள் யாவருக்கும் மலர்ச் செண்டை அன்புடன் அளிக்கிறேன். சொல்லுகிறேனாகிய நான்.

Continue Reading திசெம்பர் 31, 2013 at 3:25 பிப 25 பின்னூட்டங்கள்

அன்னையர்தினம். 11

வேளைக்கீரை  அம்மாவின்   மனதில்    புகுந்து விட்டது.

ஊரிலுள்ளவர்கள்கூடவேளைக்கீரை விளைச்சலை நம்புபவர்கள்.

ஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.

வேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.

அம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்

குழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.

ஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்

பேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.

குறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர்.   ஸரி

அவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்

இரண்டொரு  பிள்ளைகள்  ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்

திண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும்  ஸமயம்    போவதென்று

தீர்மானமாகியது.

புடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு

ஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே

வாம்மா,வாவா.

எப்படி இருக்கேள் இரண்டுபேரும்.  அவரே வந்து விடுகிறார்.

இல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.

உள்ளே போகலாம்  வா,வா.

இல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.

அதிகமாக பேச ஒன்றும் இல்லே.

ஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.

என்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா?

அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க

ஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்

கலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.

பையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.

அதிகம் பேசினாலும் கோபம் வரது.

விடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.

நீங்க ஏதாவது வரன் பார்த்துச் சொல்லணும்.

உங்க உறவில்கூட  ஸ்ரீநிவாஸன் இருக்கான். நீங்க பார்த்துச் சொன்னால்

ஸரியாக இருக்குமே.

அதிகப் பணம் காசு கிடையாது.

அதெல்லாம் தானாக வரும்,போகும்,  அதுக்கெல்லாம் கவலையில்லை.

..ஸ்ரீநிவாஸனா    வேண்டாம்மா,வேண்டாம். அது தத்தாரி.

நம்ம பசங்க கண்காணாது இருந்தாலும், சோத்துக்கு கஷ்டப்படாத இடமா

இருக்கணும். பாக்கலாம்மா,   அவனுக்குத் தெரியுமா நீ வந்தது.

இல்லே உங்களைப் பார்த்து கேட்கப்போறேன்னு  சொல்லி இருக்கேன்.

எதுவும் நாளைக்காலையிலேயிலேயாஆகிவிடப்போறதா என்ன?

ஸரிம்மா பார்க்கலாம்.

வரன் தேடு்ம் படலம் ஆரம்பமாகிவிட்டது,

நம்ம தெருவில் வேண்டியவர்களே.  கிட்டண்ணா பேரன்.

எங்களுக்குச் சேப்பு பெண் வேணும் என்று அடுத்த பெண்ணுக்கு அச்சாரம்

போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

என்ன செய்வது அம்மா நிறம் கம்மி. அம்மாவைப்போல் அவள்.

நிறம்தான் கம்மி. பொருமையான நல்ல பெண்.

சின்னது அப்பாவைப்போல்     நல்ல நிறம்.

எந்த நிறம் இருந்தாலும் அம்மாவிற்கு யாவும் ஒரே ஸமம்தானே!!!!!!!!!!!!!!.

மனது கொஞ்சம் கஷ்டப்படும்.

அத்தை சொல்லுவாள்  அவளுக்கென்று பிறந்தவன்  எங்கும் ஓடிப்போக

மாட்டான் விசாரப்படாதே என்பாள் . இது தினமும் நடைமுறை.

இன்னும் இரண்டொரு      பையன்கள்.

அவர்கள் அம்மாமார்களுக்கு   பெண் வைரத்தோட்டுடன் வரவேண்டுமென்று

ஆசை.

நல்ல பெண் எங்களுக்கு ஆக்ஷேபணையே இல்லை. தோடு போட்டால்

போதும்,ஸம்மதமா கேளுங்கள் என்று தூது.

கடவுளே வேண்டாம் இந்த ஸம்பந்தம். நாளைக்கே அதுவேண்டும்   ,இது

வேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் எங்கே போவது?

இவளையொத்த பெண்களுக்கெல்லாம்  கல்யாணம் அது இது என்று

அமர்க்களமாக நடக்கிறது.

நாமும் எப்படியாவது வரன் பார்த்து முடிக்க வேண்டும் என்ற அம்மாவின்

தீவுரமான முடிவு.

வெளியூர் வரன் ஒன்று செவ்வாய்தோஷமுள்ள ஜாதகம். மற்றொன்று

ஜாதகம் பொருந்தலே.

இடையே அம்மாவின் அண்ணாவின் மருமகள்  பிரஸவத்தின்போது

காலமாகி விட்டாள்.

அவர்கள் கதையே வேறுமாதிரி.

மாமாவின் பிள்ளைக்கு போலியோ வந்து கால் ஊனம்.

சென்னை  வந்து படிக்க வைத்து ஒரு வேலையும் வாங்கி வைத்துவிட்டார்கள்.

அம்மாவின்  வயது அவருக்கு.  பண்டாபீஸில் வேலை.  அதே கட்டிடத்தில்

பின்புறம் வசிக்க இடம்.

தாய்தப்பனில்லாத மிக ஏழைப்பெண் கிடைத்து  கலியாணமாகி இருந்தது.

அந்தப் பெண்ணிற்கு பிரஸவம் மிகக் கஷ்டம்.

ஐந்து ஆறு குழந்தைகளுக்குப் பிரகு   இரண்டு குழந்தைகள் தங்கின.

ஸிஸேரியன் ஆரம்பித்த காலம்.

இவ்வளவு கஷ்யமாயிற்றே, ஒருவருக்கும்,குடும்பக் கட்டுப்பாடு,அது

இது என்று தெரியாத காலம்.

பிரஸவகாலத்திலே முடியாமற்போய் அப்படியே காலமாகி விட்டாள்

அந்தப் பெண்.

அந்த சமயம் உபசாரத்திற்கு அம்மா போயிருந்தாள்.

வேண்டியவர்கள் பலரும் ஒறுசேரக் கூடும் ஸமயமல்லவா?

வந்தவர்கள் பலரிடமும்ஜாதகத்திற்கு சொல்லி வைத்தாள். எல்லோரும் என்ன பிரமாதம்

நான் பார்த்துச் சொல்கிறேனென்ரார்கள்

காரியம்முடிந்து  ஊர் திரும்புவதற்கு முன்னே வேண்டியவர்கள்

நீ ஒருமுறை ஆத்துக்கு வா. என்று கூப்பிட்டார்கள்.

அங்கு போன போது அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் காட்டி

அறிமுகம் செய்து, இந்த மாமிக்கு வேண்டியவர்கள்  யாரோ இருக்கிரார்கள்.

அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு  பெண் வேண்டுமாம். பார்க்கிராயா?

அதுக்கென்ன இப்போ பார்த்தால் போகிறது. ஜாதகம் அனுப்புகிறேன்.

உங்கள் விலாஸம் கொடுங்கள்.

விலாஸப் பரிவர்த்தனை ஆகிறது. வீட்டுக்கு வந்து கிளம்புமுன்

எங்கே போயிருந்தாய்   பெரிம்மா கேட்கிராள்.

அதாந் காயத்ரி மாமி கூப்பிட்டாளே

ஜாதகம்கேக்கப் போனயா, ஆமாம் அதனாலென்ன?

பதிலொன்றும் சொல்லாமல் மொணமொணப்புகள்.

அத்தையை அழைத்துக் கொண்டு  ஊருக்கு வந்தாயிற்று.

நடுவிலா னமாமிக்கு கடிதம் போட்டு,   விசாரித்து அவர்கள் அட்ரஸ்

வாங்கியாயிற்று.

அத்தை சொல்கிறாள் நாலு இடத்தில் பார்க்கத்தைன் வேணும்.

பெரியம்மா   அத்தையைக்    கேட்கிராள்.

உனக்கு இவர்கள் மட்டும் தான் பேத்திகளா?  பேரன்கள் இல்லையா??

அதனால் என்ன இப்போ?

இவ வேறெ எதோ கதை ஆரம்பிக்கிரா. விடு உன் வேலையைப்பார்.

இந்த மனுஷரோ  யாரோ,எங்கேயோ ஜாதகம் அனுப்ப வாங்க,

இதெல்லாம் நான் எழுத மாட்டேன்.

ஸரி சின்னவளை விட்டு எல்லாம் செஞ்சுகிறேன்.

எல்லாம்நீயே செய்து கொள்.

அந்த மெட்ராஸ் வரன் அதிகம் கேட்க மாட்டார்கள்.

அதைத்தான் பார்க்கணும்.     அம்மா மனதில் கணக்குப் போட

ஆரம்பித்தாயிற்று. பார்க்கலாம் நாமும்——–

உங்கள் யாவருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்,

2014 ஆம் ஆண்டே நல்லபடி வருகவருக.  யாவருக்கும் வாழ்த்துகள்

தருகதருக அன்புடன்

திசெம்பர் 30, 2013 at 8:48 முப 17 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,836 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Pandian Ramaiah's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.