பாதாம்ஹல்வா

ஆங்கிலப் புத்தாண்டை ஆசையுடன் வரவேற்று அதற்காக பாதாம் ஹல்வாவை செய்து பாருங்கள். கொஞ்சம் கேஸரிக் கலரோ,குங்குமப்பூவோ அதிகம் சேர்த்துக் கிளருங்கள். முந்திரியை நெய்யில் வருத்துப் போடுங்கள். அருமையான
ஹல்வா. ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

வேண்டியவைகள்.

பாதாம் பருப்பு—–1 கப் நிறைய.    கோபுரம்போல

பால்—–~ஒரு   கப்

சர்க்கரை—-ஒன்றறை கப்

நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு  அதிகம்

குங்குமப்பூ—-சில இதழ்கள்.  1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.

ஏலப்பொடி—சிறிது

வேண்டுமானால்  அலங்கரிக்க   முந்திரிப்பருப்பு

செய்முறை.

இரண்டு 3கப் கொதிக்கும்  தண்ணீரை விட்டு,   ஒரு  10நிமிஷம்

பாதாம் பருப்பை   ஊற வைக்கவும்.  ஊறிய

பருப்பைப்  பிதுக்கினால்   தோல் சுலபமாக உறிக்க வரும்.

தோலை  உறிக்கவும்.

உறித்த பருப்பை  நன்றாக   அலம்பி   மிக்ஸியில் போட்டு

வேண்டிய அளவு பால் விட்டு    நன்றாகவும்,  நறநறப்பாகவும்

அறைத்துக் கொள்ளவும்.

கெட்டியான  துவையல் பதம்ஸரியாக இருக்கும்.

அடி கனமான பாத்திரத்தில்  சர்க்கரையையும், அறைத்த

விழுதையும் சேர்த்துக்  கலந்து   நிதான தீயில் வைத்துக்

கிளறவும்.

சர்க்கரை சேர்த்ததினால்   கலவை இளகி பின் கொதிக்க

ஆரம்பிக்கும்.

ஒரு ஸ்பூன் பாலில்  ஊற வைத்த  குங்குமப்பூவைச்

சேர்க்கவும்.

கை விடாது  கிளறிக் கொண்டே இருந்தால்   கலவை கொதித்துப்

பின்  இறுக  ஆரம்பிக்கும்.

இறுக  ஆரம்பித்த பிறகு  சிறிது சிறிதாக   நெய்யைச் சேர்த்துக்

கிளறவும்.

பொருமையாகக்   கிளறவும்.   கலவை கெட்டியான பதத்தில்

வரும் போது  ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

திரட்டிப்பால்   மாதிரி   திரண்டு  வரும் பதம் ஸரியாக

இருக்கும்

முந்திரியினால்  அலங்கரிக்கவும்.

குங்குமப்பூ சேர்ப்பதால்  இளம் மஞ்சளில் கலரும் அழகாக

வரும்.

சுவைக்கத் திகட்டாத   நல்ல   இனிப்பு.

ஒவ்வொரு   டேபிள்ஸ்பூனாக  சிறிது  இடைவெளி விட்டு

நெய்யைச் சேர்க்கவும்.

பட்டர்  பேப்பரில்  சிறிது சிறிதாக  சுருட்டி வைத்தாலும்

View original post 8 more words

திசெம்பர் 27, 2013 at 6:25 முப 14 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம் பதிவு 10

பதிவு நம்பர் பத்து. இன்னும் அம்மாவைப்பற்றி எழுத விவரங்கள் தோன்றி கொண்டே இருக்கிரது. நானும் எழுதுகிறேன். நீங்களும் படியுங்கள். பார்க்கலாம்,அன்புடன்

Continue Reading திசெம்பர் 18, 2013 at 11:14 முப 27 பின்னூட்டங்கள்

திருவாதிரைக் குழம்பு

படங்கள் போட முடியாதபடி என்னால் ஸரி செய்யமுடியாத அளவில் இருக்கிறது எனது கணினி. திருவாதிரைக் குழம்பும்
கூட வரட்டுமே. பருப்பு அதிகம் போட்டும் செய்யலாம். பாருங்கள் இதுவும் திருப்பிப் போடும் பதிவுதான்.அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

இதை   ஏழுதான் குழம்பு  என்று சொல்வார்கள்.

பேர்தான் ஏழே தவிர  எத்தனை  தான் போட்டோமென்று மிகைப்

பட்டுப் போகும் அளவிற்கு காய்கள் கிடைத்து விடும்.

களியும் கூட்டும்  நிவேதனம் என்று சொல்லி முருங்கை,

சுரைக்காய்,     முள்ளங்கி  இதெல்லாம்   சேர்க்க மாட்டார்கள்,

அது ஒரு கால  பழக்கம்.

நாம்  வேண்டியவைகளைப் பார்க்கலாம்.

பூசணி, பறங்கி,  அவரை,   கொத்தவரை, மொச்சைப்பருப்பு,

பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ

சேனை,   வெள்ளிக்கிழங்கு,காரட்,   தக்காளி

என    பட்டியல் போட்டால்  எதைவிட்டு  எதைப் பிடிப்பது.

கத்ரிக்காய்,   பாகற்காய்,   வாழைக்காய்,வேறு இருக்கிறது.

இனிப்பு காய் வகைகளைக் குறைத்துப் போடலாம்.

நீர்ப் பண்டங்களான,   பூசணி,சௌசௌ ஏதாவதொன்று.

வேண்டிய   காய்களைச்  சற்று  நீளவாக்கில்   நறுக்கிக் கொள்ளவும்.

சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும்.

மொத்தமாக    5 , 6   கப் காய்கள் எடுத்துக் கொள்வோம்.

பருப்பு —துவரம்பருப்பு    முக்கால் கப்

வறுத்தரைக்க   சாமான்கள்.

வற்றல் மிளகாய்—-10

தனியா—2 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு——ஒரு   டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்   ஒரு மூடி

எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்

புளி    ஒருபெரிய எலுமிச்சை அளவு   கரைப்பதற்கு

தாளிப்பிற்கு  —கடுகு,    பெருங்காயம்

வாஸனைக்கு—-கொத்தமல்லி கறிவேப்பிலை

ருசிக்கு உப்பு

செய்முறை.   —பு்ளியை ஊறவைத்துக் கறைத்து

வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு.

வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில்

வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து

மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும்.

குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில்  காய்களை

வதக்கி      புளி ஜலத்தைச் சேர்த்து …

View original post 76 more words

திசெம்பர் 17, 2013 at 9:35 முப 2 பின்னூட்டங்கள்

திருவாதிரைக் களி.

மூன்று வருஷத்திற்கு முன்பு எழுதியது. படம் பிரகு போடுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்

என்னுடைய சொல்லுகிறேனில் எழுதியது.  பார்த்தேன். பிரசுரித்தேன் வாழ்த்துகள்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

திருவாதிரை    ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி

இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.

நாம் களியை செய்து பார்த்து விடலாம்.

வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்

துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்

பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்

வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்

நெய்—2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துறுவல்—அரைகப்

முந்திரி  திராட்சை—-விருப்பம்போல்

ஏலப்பொடி—-சிறிது

இருந்தால்—ஒருஸ்பூன்  தேன்

செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து

மிக்ஸியில்  ரவை போல்  பொடித்துக் கொள்ளவும்.

பருப்புக்களையும் வறுத்து  ரவைபதத்தில் பொடிக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில்   இரண்டரைகப்  ஜலத்தைநன்றாகக்

கொதிக்க  விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.

தீயை நிதானப்படுத்தி     கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்

கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.

உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக  வேக

வைக்கவும்.

வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு

வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.

காய்ச்சிய  பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி

கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.

நெய்யில்,   முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்

சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.

ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

களி ரெடி.    பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்

முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்

பிழிந்தும்  சேர்க்கலாம்.     நான் தற்போது டில்லி

வந்திருப்பதால்  படம் எடுத்துப் போட சௌகரியப்

படவில்லை.

   கொதிக்கும் ஜலத்திலே யே  வெல்லத்தைப் போட்டு

கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்

செய்வதும் உண்டு.

View original post 12 more words

திசெம்பர் 16, 2013 at 6:22 முப 10 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம்.பதிவு 9

பதிவு ஒன்பதை எழுதியிருக்கிறேன். பாருங்கள்.

Continue Reading திசெம்பர் 5, 2013 at 5:20 பிப 20 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம் 8

அன்னையர் தினம் எட்டாவது பதிவு எழுதியிருக்கிறேன். பண்டிகை,பருவங்கள் என தாமதமாகத்தான் எழுத முடிந்தது. அதனாலென்ன. சிறு பதில் போட்டால்கூட போதுமே!!!!!!!!!!!!!!!!!

Continue Reading நவம்பர் 21, 2013 at 11:00 முப 27 பின்னூட்டங்கள்

மிக்சர் விசேஷமானது.

தீபாவளிக்கு வாழ்த்து எழுதும்போது உங்களுக்காக இந்த மிக்சரை ச்

செய்தது. ஆனால்  வாழ்த்துடன் இதைப் பகிர முடியவில்லை.

ஏதோ கம்யுட்டர் எரர் காரணம்.

அப்போதில்லாவிட்டால் இப்போது  எழுதுவதால் என்ன வித்தியாஸம்?

பாருங்கள். சாப்பிடுங்கள்.

ஸ்பெஷல் மிக்சர்

ஸ்பெஷல் மிக்சர்

அதிகம் கடலைமாவு சேராத வகை தேன்குழல், ரிப்பன், பயத்தம் பருப்பு சேர்த்த முருக்கு

சோள அவல்,அவல்,வேர்க்கடலை,முந்திரி,பாதாம்,உலர் திராக்ஷை, கறிவேப்பிலை

மஸாலாவாக  வறுத்த ஜீரக,பெருஞ்ஜீரகப் பொடிகள்,பெருங்காயம், மிளகாய்ப்பொடி,துளி

மாங்காய்ப்பொடி,உப்பு, மஸாலா கலக்க துளிநெய்.

மேலோடு துளி சாஸ்திரத்துக்கு வாங்கின காரா பூந்தி, இவைகள்தான்.

தீபாவளிப் பக்ஷணங்களுடன்,சோள அவலையும்,அவலையும், பொரித்துப் போட்டு,

பாதாம்,முந்திரி,திராக்ஷையும்  வருத்துச் சேர்த்து, கறிவேப்பிலையைப் பொரித்துப்

போட்டு,  வேண்டிய அளவு உப்பு காரம்,பொடிகள் துளி நெய்யில் கலந்துக் கலக்கி

ட்ரேயில் வைத்து விட்டால்,  விசேஷமான மிக்சர் தயார்.

பக்ஷணம் எல்லாம் இருக்குமே!!!!!!!

அவசியமானால் சொல்லுங்கள் எழுதுகிறேன். எப்படி இருக்கு?

நவம்பர் 6, 2013 at 2:22 பிப 19 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

சொல்லுகிறேன்  ஆதரவாளர்களுக்கும், ஸக பதிவர்கள் யாவருக்கும்,  உலகத்திலுள்ள தமிழன்பர்கள் யாவருக்கும்,மகிழ்ச்சிகரமான தீபாவளி நல் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.

வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களுடன் மற்றவைகள் கொடுக்க கணினி உதவி செய்யவில்லை.  . அன்புடன் சொல்லுகிறேன்.

நவம்பர் 1, 2013 at 2:53 பிப 10 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

அனைவருக்கும் ஸரஸ்வதிபூஜை,    விஜயதசமியின் அன்பான வாழ்த்துக்களைச்

சொல்லுகிறேன்.

ஒக்ரோபர் 12, 2013 at 5:56 பிப 10 பின்னூட்டங்கள்

கல்கண்டுப் பொங்கல்.

நவராத்திரி  விசேஶ நிவேதனப்  பொருள்  கல்கண்டுப் பொங்கலுடன் நான் வந்திருக்கிறேன்.

விசேஶமாக அதிகம் ஸாமான்களில்லாமல் இருப்பதைக் கொண்டு செய்ததிது.

வழக்கமான சில குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகி விட்டது.

அடிக்கடி செய்யும் பொங்லில்லை இது.

ஆதலால் செய்தபோது பதிவிடவேண்டும் என்று விருப்பம்.

வேண்டியவைகள்

சீரகச்சம்பா அரிசி—கால்கப்.

டைமண்ட் கல்கண்டு—முக்கால்கப்

அரிசியும் கல்க்கண்டும்

அரிசியும் கல்க்கண்டும்

பால்—ஒருகப்

ஏலக்காய்—இரண்டு

பாதாம்,முந்திரி,திராக்ஷை, எது கைவசமோ அதில் சிறிது.

செய்முறை

அடிகனமான பாத்திரம், எடுத்துக் கொள்ளவும்.

பாலுடன் ஸரி அளவு தண்ணீரும் கலந்து கொள்ளவும்.

அரிசியைக் களைந்து பாதி அளவு பால்க் கலவையுடன் தீயைஸிம்மில் வைத்து

அரிசியை வேக வைக்கவு்ம்.

அரிசி வேக வேக மீதிக் கலவையை சேர்த்துக் கொண்டே வரவும்.

நன்றாக வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.

பாலில் வெந்தஅரிசி

பாலில் வெந்தஅரிசி

கல்க்கண்டுப் பாகுடன் கலவை
கல்க்கண்டுப் பாகுடன் கலவை

நான் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்தேன்.

ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சற்று நீர்க்க ஆகிப் பிறகு

இறுகிவரும். எல்லாமே நிதான தீயில்தான்.

இறக்கிவைத்து நெய்யில் முந்திரி,பாதாம்,திராக்ஷை எது இருக்கிறதோ அதை வறுத்துப்

போடவும். குங்குமப்பூ போட்டால் அதிக வாஸனையுடன் கலரும் அழகாக வரும்.

கல்க்கண்டுப் பொங்கல்

கல்க்கண்டுப் பொங்கல்

நவராத்திரி. அம்மனுக்கு நிவேதனம் செய்யவும்.ஒருஸ்பூன் சாப்பிட்டாலும், ருசியாக

இருக்கும். நிவேதனப் பொங்கல் அல்லவா?

நல்ல நெய் முந்திரி வறுக்கப் போதுமானதிருந்தால்ப் போதும்.

சுலபமாகத்தானிருக்கு. என்ன கல்கண்டுதான் வாங்க வேண்டும்.

சின்ன அளவில்ச் செய்தது.  ருசித்து மகிழுங்கள்.

ஒக்ரோபர் 8, 2013 at 8:04 முப 16 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


செப்ரெம்பர் 2026
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 569,115 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • chitrasundar5's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com Blog

News, Tips & Website Tutorials

wordpress.com/

WordPress.com is the best place for your personal blog or business site.