மஸாலாபொடி

வேண்டியவைகள்

சீரகம்—–100 கிராம்—-

மிளகு—50கிராம்

லவங்கம்—-15

பெறிய ஏலக்காய்—-8

வெந்தயம்—-100கிராம்

லவங்கப் பட்டை—-2அங்குல அளவு

வெறும்   வாணலியைச்     சூடாக்கி

மேற்கூறியவைகளை   லேசாக வறுத்துக்  கொள்ளவும்.

சுக்கு—-2அங்குல  நீளத்திற்கு   2துண்டுகள்  சிறிது அதிகமோ,

குறைவோ  ஆனாலும் பரவாயில்லை

.சின்ன ஏலக்காய்—12

ஜாதிக்காய்—–1

மஸாலா இலை—பிரிஞ்சி இலை–2

வறுத்த சாமான்களுடன்    இவைகளையும் துண்டுகளாகச்

சேர்த்து  மிக்ஸியில்  நன்றாகப்  பொடித்து வைத்துக் கொண்டால்

வேண்டியபோது,    இதில்   சிறிது போட்டால்      சமையல்

மஸாலா  வாஸனையுடன் ருசியாக இருக்கும்.  பொடியை

காற்று புகாத    பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

வீட்டில் பொடி இருந்தால்   சமயத்திற்கு   உதவும்.

மே 13, 2011 at 1:19 பிப 2 பின்னூட்டங்கள்

பகோடா மோர்க் குழம்பு

இதுவும்   நம்முடைய மோர்க்குழம்பு வகைபோல  செய்தேன்

சென்ற ஆகஸ்ட்டில்   அமெரிக்காவில்    தயானந்த ஸரஸ்வதி

ஸ்வாமிகள்ஆசிரமத்தில்பென்ஸில் வேனியா குருகுலத்தில்,அவருடையஸதாபிஷேகக்கொண்டாட்டத்தில்

கலந்துகொண்டு   சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.    அதில்  இந்த

மோர்க்குழம்பு      சற்று  வித்தியாஸ  முறையில்   ருசித்தது.

அப்போதே  இதை மனதில்க் கொண்டு எழுதப்   ப்ளான் மனதில்

தோன்றியது.    நேரம் இப்போதுதான் என்று  நினைக்கிறேன்.

வெங்காயம்  நான் சேர்த்து செய்தேன்.  சாதாரணமாக நாம்

வெங்காயம்  மோர்க் குழம்பில் சேர்ப்பது  கிடையாது.

இதுவும்.ஒரு   தனி ருசிதான்.

பகோடாக்களைச் செய்து கொண்டு   மோர்க் குழம்பில் சேர்த்து ச்

செய்வதுதான்  இதன் முக்கியம். கடலைமாவைக் கரைத்து

செய்யாமல்அரைத்து செய்திருப்பதுதான் நம்முடைய வழி.

வேண்டியவைகள்

பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்

பெறிய வெங்காயம் —1   பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்

உப்பு—-கால் டீஸ்பூன்

எண்ணெய்—-பொறிப்பதற்கு    வேண்டிய அளவு

மோர்க் குழம்பிற்கு  வேண்டியவைகள்

கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்

கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்

தனியா—-2 டீஸ்பூன்

கடுகு—-1 டீஸ்பூன்

பச்சைமிளகாய்—–3

வற்றல் மிளகாய்—1

தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க—-கடுகு,  சிறிது   பெருங்காயம்

மஞ்சள்ப் பொடி—–சிறிது

ருசிக்கு—-உப்பு

செய்முறை

கடலைப்பருப்பு,தனியா.கடுகை   ஊரவைத்து பச்சைமிளகாய்,

தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து   மிக்ஸியில்

திட்டமாக ஜலம் சேர்த்து   மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை   மோருடன்    உப்பு,    மஞ்சள்ப்பொடி சேர்த்து

கரைத்து வைக்கவும்.

கடலைமாவுடன்,  நறுக்கிய வெங்காயம்,உப்பு,  மிளகாய்ப்பொடி

சேர்த்துக் கலந்து    ஜலம் விட்டுத் தளரப்  பிசைந்துகொள்ளவும்.

சற்று   லூஸாக இருக்கட்டும்.

வாணலியில் எண்ணெயைக்    காயவைத்துக்,   கலந்த மாவை

பகோடாக்களாக  உருட்டிப் போட்டு   பொன்நிறமாகப்

பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக்   கவலை வேண்டாம்.

மோர்க் கலவையை    குழம்பு வைக்கும் பாத்திரத்தில்  கொட்டி

மிதமான தீயில்   கொதிக்க வைக்கவும்.

பொறித்தெடுக்கும் போதே   பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து

விடவும்.

நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது    கிளறி

தீயை மட்டுப்படுத்தி     இரண்டு நிமிஷங்கள் மேலும்

வைத்திருந்து    குழம்பை  இறக்கவும்.

கடுகு,  பெருங்காயம் தாளித்து   மூடி வைக்கவும்.

பகோடா மிருதுவாக ஆகி,    குழம்பும்   சாப்பிட தயாராகிவிடும்.

இருக்கவே இருக்கிறது   கொத்தமல்லி,கறிவேப்பிலை.

மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க  மிளகாயை   தாளிப்பில்

சேர்க்கவும்.

வேண்டுமானவைகளுடன்  சேர்த்து  உண்ணலாம்.

பகோடா மோர்க்குழம்பு

மே 9, 2011 at 3:34 பிப 11 பின்னூட்டங்கள்

Introducing-Manasvini, my Granddaughter!

Hey, people! this is chollukireen’s granddaughter manasvini (mannu) here! Sorry i did this without telling you, patti! I like to blog, just like patti! (my blogs are mannu98 and othermannu98) Anyways, just wanted to say to patti- You are a great patti and keep blogging, ‘cuz your recipies are delicious! Come back to Mumbai/Bombay soon! (in time for my BIRTHDAY!) I don’t have your e-mail id and your not on skye EVER, so  this is the only way icould say this! Hope you didnt mind me blogging on your account! SORRY SORRY SORRY!!! Also- you forgot the diary appa gave you in your cupboard.

LOVE YOU and MISS YOU LOTS!

LOADS OF KISSES FROM,

MANNU ❤


மே 6, 2011 at 5:43 முப 2 பின்னூட்டங்கள்

புழுங்கலரிசி சேவை

பிழியும் நிலையில் சேவை

சேவை என்பது    இடியாப்பம்.  எனக்கு இந்த பெயர்   முன்பெல்லாம்

தெரியாது.    சேவை என்றே  சொல்லி வழக்கம்.

இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது.  இதனுடன் கலக்கும் பொருளைக்

கொண்டு பெயர் சொல்லுவோம்.  தேங்காய்,   எள்,   எலுமிச்சை,வெல்லம்,

தயிர்,காய்கறி,   மோர்க்குழம்பு,   தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.

இப்போது   இடியாப்பம்  குருமா தான்   முதலிடத்தில் இருக்கிறது.

நாம் முதலில்   ப்ளெயின்   சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்

புழுங்கலரிசியில்   தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

வேண்டியவைகள்

புழுங்கலரிசி—3கப்.      இட்டிலிக்கு  உபயோகிக்கும்  அ ரிசி

இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் —    சேவை நாழி

அரிசியைக்  களைந்து  நன்றாக    ஊறவைக்கவும்.

செய்முறை-

கிரைண்டரில் ,  ஊறிய அரிசியை ப்  போட்டு  அதிகம்  ஜலம் விடாமல்

கெட்டியாகவும்,    நைஸாகவும்   அரைத்தெடுக்கவும்.

இட்டிலி வார்ப்பது போல     குழித்தட்டுகளில்   எண்ணெய்  தடவி  மாவை

விட்டு ரெடி செய்யவும்.

சேவை  நாழியில்   உட்புறம் லேசாக எண்ணெய்   தடவி வைக்கவும்.

குக்கரில் அளவாக   தண்ணீர்விட்டு     இட்டிலி ஸ்டேண்டை வைத்து,

வெயிட் போட்டு    இரண்டு  விஸில் வரும் வரை  மிதமான தீயில்

இட்டிலிகளாக  வார்க்கவும்.

சாதாரண  இட்டிலி   வார்க்க வெயிட் போட மாட்டோம்.

நீராவி அடங்கிய பின்  இட்டிலிகளை ஒன்றன்  பின்  ஒன்றாக

எடுத்து  அச்சில் போட்டு    அழுத்தி   சேவைகளாகப்  பிழிந்து

எடுக்கவும்.  சூட்டுடன்   பிழியவும்.

திருகு  முறையிலும்,  ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்

சேவை நாழிகள் கிடைக்கின்றன.

ப்ளெய்ன்  சேவை   ரெடி.

இதனுடன்  குருமா சேர்த்து    சாப்பிடலாம்.

தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல  தாளிதம் செய்து

தேங்காயை  வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.

எலுமிச்சை சாற்றில்    தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை

சேவை.

தயிரில் தாளித்து  தயாரித்தால்   தயிர் சேவை.

எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.

வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.

மோர்க் குழம்பு,   தேங்காய்ப் பாலுடனும்,  சாப்பிடும்

வழக்கம் உண்டு.

எல்லா காய் கறிகளுடனும்,   உப்பு சேர்த்து வதக்கி

ஸோயா ஸாஸ் கலந்தும்  தயாரிக்கலாம்.

தக்காளியை உபயோகப் படுத்தலாம்.

குருமா தயாரித்து   உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக

உள்ளது.

நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு  பலவிதங்கள்.

சுலபமாக   மாவை அறைத்து     முதல்நாளே  பிரிஜ்ஜில்

வைத்துக் கொண்டு   வேண்டும் போது  தயாரித்து

உபயோகிக்கலாம்.

குருமா செய்முறை முன்பே   இருக்கிறது.

சேவை படங்கள் சில.

இட்டிலியாக

பிழியும் நிலையில் சேவை

புழுங்கலரிசி சேவை

எந்த விதமான  ருசி வேண்டுமோ    அந்த விதமான மேல் சாமான்கள்

கலவையைத் தயார் செய்து     தக்கபடி   ப்ளெயின் சேவையுடன்,

திட்டமாகக்  கலந்தால்    விருப்பமானது தயார்.

குருமா,  தேங்காய்ப்பால்,  மோர்க்குழம்பு வகைகளை   கிண்ணங்களில்

ஸ்பூனுடன்  கொடுத்து    ப்ளேட்டில்   ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.

மற்ற வகைகளைக்  கலந்த நிலையிலே  சித்ரான்னங்கள்  டைப்பில்

அழகாகக்  கொடுக்கலாம்.

மே 3, 2011 at 8:15 முப 22 பின்னூட்டங்கள்

பன்னீர் துக்கடா

மிகவும்  சுலபமாக   தயாரிக்கலாம் இதை.

வேண்டியவைகள்.

பன்னீர்—-200கிராம்

ஸாம்பார் வெங்காயம்—உறித்தது  5 அல்லது 6

தக்காளி—-சின்னதாக  1

பச்சை  மிளகாய்—-சின்னதாக  ஒன்று

பச்சைக் கொத்தமல்லி இலை—–அரைகப்

பன்னீர்  பொறிக்க  வேண்டிய—  எண்ணெய்

ருசிக்கு –உப்பு

செய்முறை—-பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக  நறுக்கவும்.

வெங்காயம்,மிளகாய்,   தக்காளி,   கொத்தமல்லி உப்பு சேர்த்து   மிக்ஸியில்

ஜலம் விடாமல் பேஸ்ட்டாக   அறைத்துக் கொள்ளவும்.

அடுத்து  நான் ஸ்டிக்  பேனில் , நிதான தீயில்    பரவலாக  சிறிது எண்ணெய்

விட்டு சூடாக்கி   பனீர் துக்கடாக்களைப்   பரப்பவும்.

ஒரு புறம்  சிவந்ததும்   நிதானமாக மறுபுறம்    திருப்பிப்   போட்டு சற்று

சிவக்கவைத்து     எடுத்து   டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்

நீக்கவும்.             ஒரு பாத்திரத்தில்தயாரான   துண்டங்களின் மேல்

வேண்டிய  அளவிற்கு    அறைத்த பேஸ்ட்டைப்    பிசறி     தட்டுகளில்

அலங்கரித்து வைக்கவும்.

பேஸ்ட் மிகுதியானால்    தயிரில் கலந்தால்    பச்சடியாகிவிடும்.

பன்னீர் பிடித்தவர்களுக்கு     துக்கடா   ருசியான ஒன்று.

பன்னீர் துக்கடா

ஏப்ரல் 29, 2011 at 5:41 முப 4 பின்னூட்டங்கள்

கடாரங்காய் ஊறுகாய்

இதுவும்     நாட்பட     இருக்கும்   ருசியான  ஊறுகாய்தான்.

ஹிந்தியில்  இதை கல்கல்என்று  சொல்லுவார்கள்.  பழுத்த கடாரங்காயில்

ஊறுகாய் தயாரித்தல்,    கலந்த சாதம்  தயாரித்தல்  என எல்லாம் ருசியாக

இருக்கும்.

வேண்டியவைகள்—-

கடாரங்காய்—–3

வறுத்துப் பொடிக்க  சாமான்கள்

கடுகு—-2 டேபிள் ஸ்பூன்

சீரகம்—-2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்—2 டீஸ்பூன்

பொடிகள்

பெருங்காயப்பொடி—-2 டீஸ்பூன்

மஞ்சள்ப் பொடி—-1டேபிள்ஸ்பூன்

மிளகாய்ப் பொடி—4 டேபிள்ஸ்பூன்

உப்புப் பொடி—–3டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய்—முக்கால் கப்

கடாரங்காய்  என்று  சொல்லுகிறோமே  தவிர   இதுவும்  பழுத்து  மஞ்சள்-

-நிறம் வந்த  பிறகுதான் ஊறுகாய் போடுகிறோம்.

அவசரத்திற்கு   ஊறுகாய் போடுவதானால்காயைமுழுவதாகஎண்ணெயில்

வதக்கி,   பிறகு நறுக்கி  உப்பு காரம் சேர்த்து    உபயோகிப்பதும்  உண்டு.

நாம் நிதான முறையிலேயே செய்வோம்.

செய்முறை—-2 காய்களைச்   சுருளாக  நறுக்கி     சிறிய துண்டுகளாக

நறுக்கிக் கொள்ளவும்.

சிறிது  உப்பைக்கலந்துகசக்கினாற்போலதுண்டுகளைக் கலந்துவைத்தால்

,விதைகளைச்   சுலபமாக   நீக்க முடியும். விதைகளை நீக்கவும்.

ஒரு   கடாரங்காயை    இரண்டாக   நறுக்கி   அதன் ரஸத்தைப் பிழிந்து

நறுக்கிய துண்டுகளுடன்    கலக்கவும்.

பாட்டிலிலோ,    சுத்தமான ஜாடியிலோ   மிகுதி உப்பைக் கலந்து 2அல்லது3

நாட்கள்     நன்றாக  ஊறவிடவும்.

ஊறின    துண்டங்களை ,   பாட்டிலின் வாயில்  ஒரு மெல்லிய துணியைக்

கட்டி   வெய்யிலில் 2 நாட்கள் வைத்து எடுக்கவும்.

வெந்தயத்தைச் சிவப்பாக வறுத்து பொடிக்கவும்.

கடுகு,   சீரகத்தைச் சூடு ஏறும்படி வறுக்கவும்.

யாவற்றையும்  பொடிக்கவும்.

அடுத்து    எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவிடவும்.

பொடி வகைகள்,யாவற்றையும் சேர்த்துக் கிளறி     ஊறின  கடாரங்காய்த்-

-துண்டுகளையும் சேர்த்துக் கலந்து     பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.

ஊறஊற   ருசியாக இருக்கும்.

கை படாமலும்,   மரக் கரண்டியினால்  கிளறி விட்டும்,  அழுத்தமாக

மூடி வைத்தும்   உபயோகிக்கவும்.

காயின்   சைஸைப் பொறுத்து ,  உப்பு காரம் ,  ருசி பார்த்து  கூட்டிக்

குறைக்கவும். எண்ணெய் அளவும்   கூட்டவும்.

டில்லியில் போட்ட ஊறுகாய்.  படம் எடுக்க  மறந்து போனேன்.

ஏப்ரல் 28, 2011 at 8:54 முப 2 பின்னூட்டங்கள்

ஜெவ்வரிசி வடாம்

இதுவும்   தயாரிப்பது    எளிதானதுதான்.    நல்ல வெயிலில்  காயவைத்துத் தயாரித்தால்

வருஷத்திற்கு   அதிகமாகவே வைத்து அவ்வப்போது  உபயோகிக்கலாம்.

வெய்யில் உள்ள போது    அதிகம் தயாரிக்க வேண்டும்.

ஸௌகரியம்போல         காட்போர்டுகளின்  மீதோ     பெரிய     அட்டைகளின்   மீதோ

பாலிதீன்  பேப்பர்களைச் சுற்றி   வடாம் இட    ட்ரேக்கள் தயார் செய்து   கொள்ளவும்.

வேண்டியவைகள்

ஜெவ்வரிசி—-2கப்

பச்சைமிளகாய்—-5

எலுமிச்சம்பழம்—-1

தேவைக்கு—உப்பு

பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்

செய்முறை.

ஜெவ்வரிசியைத்    தண்ணீர் விட்டுக்  களைந்து  சுத்தம் செய்து

மேலும்   தண்ணீர் விட்டு    ஒரு மணி  நேரம்  ஊறவைத்து   நீரை

வடிக்கட்டவும்.

பச்சை மிளகாயை    அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான   அகலப் பாத்திரத்தில்    5    கப் தண்ணீரைக் கொதிக்க

வைக்கவும்.  வடிக்கட்டிய    ஜெவ்வரிசியைச்  சேர்த்துக் கிளரவும்.

தீயை ஸிம்மில் வைத்து   பொங்கி வழியாமலும்,    பாத்திரத்தின்

அடியில்   பிடிக்காமலும்   அடிக்கடி   கரண்டியினால்   கிளறிக்

கொடுக்கவும்.

ஜெவ்வரிசி வெந்ததும்     அரைத்த மிளகாய்,   உப்பு சேர்த்துக் கிளறி

இறக்கவும்.    எலுமிச்சை    ரஸத்தைச் சேர்த்துக்   கிளறி    தட்டினால்

மூடி வைக்கவும்.  பெருங்காயம் சேர்க்கவும்.

சற்று நேரம்  கழித்து   கிளறியதை    வேறு பாத்திரத்தில்   எடுத்து

ஆறிய  பதத்தில்    கையினாலோ,    ஸ்பூனினாலோ     வடாங்களாக

இடவும்.

பாலிதீன்  பேப்பரை  ஈரத்துணியினால்   துடைத்துவிட்டு ,    கையையும்

ஈரப் படுத்திக் கொண்டு    கையினாலும் சிறிது    இடம் விட்டு,  விட்டு

வடாத்தைத் தயாரிக்கலாம்.

வடாக்கூழ்   ஆறிவிட்டால்     கெட்டியாகிவிடும்.   ஸ்பூனினால் இட

சிறிது மோரோ,   ஜலமோ வேண்டியபோது  சேர்க்கலாம்.

நல்ல  வெய்யிலில்   வைத்து,   மறுநாளும் வைத்து  எடுத்து   வடாங்களைத்

திருப்பிப் போட்டுக் காயவைக்கவும்.கையால்   பிறித்தெடுக்க   முடியும்.

நன்றாகக் காயவைக்க வேண்டும்.

ஜெவ்வரிசி பாயஸம் மாதிரி    இது சற்று கெட்டியாக வேகவைத்தபதம்.

அவ்வளவுதான்.

ஒருஸ்பூன்    ஓமம்,   அல்லது சீரகம்    சேர்த்தும் செய்யலாம்.

அரைத்த தக்காளி,   தயிர்,  முதலானதும்   புளிப்பிற்காக   எலுமிச்சைக்குப்

பதிலாக சேர்த்துச் செய்தால்  நிறம்,  மணம்,   ருசி மாறுதலாகவும்

நன்றாகவும் இருக்கும்.

நல்ல    வெய்யில்      அவசியம்.    ஈரப்பதம் துளிகூட  இல்லாமல்

காயவைத்தெடுத்து    பத்திரப் படுத்தவும்.

எண்ணெயில் பொறித்தெடுத்தால்  சீறிக்கொண்டு பொரியும்.

இந்தியாவில் வெய்யில்    ஸீஸன்  இது .

வெளிநாட்டு  வெய்யிலைக் கூட விடமாட்டேன்நான்.

வெதர் ரிபோர்ட்  ஒத்தாசை செய்யும்  எனக்கு.

வெங்காயம் அரைத்துப் போட்டும் வடாத்தைச்  செய்யலாம்.

சமயத்தில்   எண்ணெயில் பொரித்து    சாப்பாட்டுடன் , அதுவும்

ரஸம் சாதத்துடன் சாப்பிட ஒப்பற்ற தோழன் இது

.திறந்த வெளி   மாடி டெரஸுகளானால்   வடாம் சீக்கிரம் காயும்.

நூலைக்கொண்டு     பெறிய வலைமாதிரி வடாத்தைச் சுற்றி

கட்டி விடுவோம். காக்கைகள் பயந்துகொண்டு வராது.  வடாத்துக்கு

காவல் என்று   வேலை செய்யாது    புத்தகம் படிக்க சான்ஸ்

கிடைக்கும்.   வடாம் ஸீஸனின் மலரும் நினைவுகள்  ஏராளம்.

படங்கள் சுமாராகத் தோன்றினாலும் வடாங்கள் ரொம்பவும்

ருசியாகவும்,  அருமையாகவும் இருக்கு. மும்பை அபார்ட்மென்ட்

வெயிலின் வடாம் இது.   சுருங்கச் சொன்னால்    ஜெவ்வரிசியைக்

கூழாகக் கிளறி,   உப்பு,காரம்,  புளிப்பு சேர்த்துத்  தயிர் சாதம் மாதிரி

ஆறவைத்து  ,   கையினால் பாலிதீன் பேப்பர்கள் மீது    வடாம்களாக

இட்டு    வெயிலில்  2, 3,   நாட்கள்  காயவைத்து     நன்றாக உலர்ந்த

வடாங்களைப் பத்திரப் படுத்த வேண்டும்.  அவ்வளவுதான்.

இடப்பட்ட ஜெவ்வரிசி வடாம்

திருப்பியவகையில் வடாம்

ஜெவ்வரிசி வடாம் காய்ந்தது.

ஏப்ரல் 19, 2011 at 5:45 முப 2 பின்னூட்டங்கள்

முள்ளங்கிக்கறி,அதன் கீரையுடன்.

பிஞ்சு முள்ளங்கி   அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம்

கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக

தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே

தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில்

போதுமென     கறி செய்தேன்.

எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது  ப்ளாகிற்காக  ப்ளான்

செய்துவிடுகிறேன்.

ஒரு கட்டில் சின்னதாக  நாலோ ஐந்தோ இருந்தது.

வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1

கடுகு,   உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன்

ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர்

துளி சீரகப்பொடி,   இஞ்சித்துருவல்   சிறிது.

எண்ணெய்—2,   3   டீஸ்பூன்

ருசிக்கு –உப்பு

செய்முறை

முள்ளங்கிக் கீரையை   காம்பு,  நரம்புகள் நீக்கிப்  பொடியாக

நறுக்கித்   தண்ணீரில்  அலசி   வடிக்கட்டவும்.

முள்ளங்கியையும்  தோல் சீவி மெல்லிய வட்டங்களாக

நறுக்கி     நீரில் அலசி   வடிக்கட்டவும்.

நான் ஸ்டிக் பேனில்    எண்ணெய்விட்டுக்    காயவைத்து

கடுகை   வெடிக்கவிட்டு,   உளுத்தம்பருப்பை    சிவக்க வறுத்து

மிளகாயைஇரண்டாகக்கிள்ளிப்போட்டுஇஞ்சியுடன்வதக்கவும்.

கீரையை உடன் சேர்த்து  வதக்கவும்.    மட்டரைச்  சேர்த்துக்

,கிளரி நிதான தீயில்   தட்டினால் மூடி  சில நிமிஷங்கள்

வைக்கவும்.

கீரை வதங்க ஆரம்பித்ததும்   முள்ளங்கி வில்லைகளையும்

சேர்த்து    உப்பு,   சீரகப் பொடி சேர்க்கவும்.

நீர் வற்றி   நன்றாக வதங்கும்வரை      வதக்கி இறக்கி

உபயோகிக்கவும்.

சுயமாக     தன் மணத்துடன்   ருசியாக இருக்கும்.

தேங்காய்த் துருவல்  சேர்க்கலாம்.

வெங்காயம்,   பூண்டு,     பயத்தம்பருப்பு முதலானவைகளும்

சேர்த்துச்  செய்வதுண்டு.   உடல் நலத்திற்குகந்த    சாதாரண

ஸப்ஜி இது.

முள்ளங்கிக் கறி அதன் கீரையுடன்

ஏப்ரல் 15, 2011 at 11:03 முப 2 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

ஸக  பதிவர்களுக்கும்,    மற்றும்   எல்லா  ஸகோதர,ஸகோதரிகளுக்கும்,

மற்றும்  அனைவருக்கும்    சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன்

சொல்லுகிறேன்,   காமாட்சி.

ஏப்ரல் 14, 2011 at 7:28 முப 2 பின்னூட்டங்கள்

காப்ஸிகம் க்ரேவி

இதுவும்  சுலபமான  ஒன்றுதான்.  ரொட்டியுடன்   சாப்பிடநன்றாக

இருக்கும்.

வேண்டிய    சாமான்கள்

திட்டமான சைஸில்—-3 உருளைக் கிழங்குகள்

காப்ஸிகம்—5

வெங்காயம்—பெரியதாக ஒன்று

அரைப்பதற்கு

தக்காளி—-1

வெங்காயம்—1

பூண்டு இதழ்கள்—5

சீரகம்—அரை டீஸ்பூன்

சின்ன துண்டு—இஞ்சி

பொடிகள்

மிளகாய்ப் பொடி—-1டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி–அரைடீஸ்பூன்

ருசிக்கு—-உப்பு

எண்ணெய்—–2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க–லவங்கம்   3

செய்முறை—–உருளைக்கிழங்கை   வேகவைத்து   உறித்து

துண்டங்களாகச்  செய்து கொள்ளவும்.

அரைக்கக்  கொடுத்தவைகளை  மிக்ஸியில்நன்றாகஅரைத்துக்

கொள்ளவும்.

காப்ஸிகத்தை  திட்டமானதுண்டங்களாகச்செய்துகொள்ளவும்.

வெங்காயத்தையும்  நறுக்கிக் கொள்ளவும்.

நான்ஸ்டிக்பேனிலஎண்ணெயைக்காயவைத்துவெங்காயத்துடன்

லவங்கம் சேர்த்து   வதக்கி  ,  அரைத்த விழுதைக்கொட்டி

சுருள வதக்கவும்.

கேப்ஸிகம்    சேர்த்து   சிறிது வதக்கி , வேகவைத்த கிழங்குத்

துண்டங்கள்   ,உப்புகாரம்,   மஞ்சள்பொடி , ஒன்றரைகப்தண்ணீர்

முதலானவைகளைச் சேர்த்து   கொதிக்க வைக்கவும்.

க்ரேவி சற்று  கெட்டியாகும் வரை கொதிக்கவைத்துஇறக்கவும்.

காரத்திற்கு  பச்சை  மிளகாயும்  சேர்க்கலாம்.

இதையும் விருப்பமான   ரொட்டி, பூரி முதலானவற்றுடன்

ருசிக்கலாம்.

காப்ஸிகம் க்ரேவி

ஏப்ரல் 12, 2011 at 10:06 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


ஏப்ரல் 2026
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,958 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.