தேங்காய்ச் சாதம்.

            ஒரு கப் அரிசியை  உதிர் உதிரான சாதமாக வடித்து ஆற விடவும்.

ஒரு மூடி தேங்காயை அடி சுரண்டாமல் வெண்மையாக பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும். 

தாளிக்க சாமான்கள்.—-கடுகுஅரைடீஸ்பூன்,—- உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்   ஸ்பூன்——உடைத்த முந்திரிப் பருப்பு 7அல்லது8,- பெருங்காயப்பொடிசிறிது,——நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு,–

10அல்லது15 கறிவேப்பிலை இலைகள், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,—ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்.

 

உப்பு வேண்டிய அளவு,——– எண்ணெயில் பொரித்த உளுந்து அப்பளாம் ஒன்று,.

செய்முறை—————– நெய எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து பருப்புகளையும் பொன்நிறமாக வறுத்து, பச்சைமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை தேங்காய்த்துருவல் போட்டு

நிதானமான தீயில், பெருஙகாயப் பொடியும் சேர்த்து புரட்டவும்.சற்று ஈரப்பசை குறைந்ததும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து  உதிர் உதிராக   சற்று சிவக்கும் வரை கிளறி இறக்கவும்.  ஆறியபின் சாதத்தில் சீராகக் கலந்து    அப்பளாத்தை ப் பொடியாக உடைத்துக் கலந்து தயார் செய்யவும். தேங்காய்ச் சாதம் தயார்.

ஜூலை 24, 2009 at 1:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

சித்ரான்னங்கள். ,எலுமிச்சை, தேங்காய், எள், மற்றும்—–

                                                                    எலுமிச்சை—-

                 உதிராக வடிக்கப்பட்ட ஒருகப் அரிசியில்சமைத்த சாதத்தைஆற விடவும்.

மற்றும் வேண்டியவைகள்     பச்சைமிளகாய்இரண்டு,—-பொடியாக நறுக்கிய  சிறு துண்டு இஞ்சி,

                                                   பச்சைப் பட்டாணிஇரண்டு டேபிள்ஸ்பூன்,–நறுக்கிய குடமிளகாய் நான்கு டேபிள் ஸ்பூன்—–10,அல்லது15 கறிவேப்பிலை இலைகள்,–திட்டமான சாருள்ள ஒரு எலுமிச்சம் பழம்

தாளிக்க, வேண்டியவை——நல்எண்ணெய் 3டேபிள் ஸ்பூன்,—–கடுகு அரை டீஸ்பூன்,

வேர்க்கடலை2 டேபிள்ஸ்பூன்,—-கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,- பெருங்காயப்பொடி கால்டீஸ்பூன், —மஞ்சள்பொடி கால் டீஸ்பூன்

ருசிக்குத் தேவையான உப்பு.

செய் முறை———–மிளகாயை நான்காகக் கீறிக் கொள்ளவும்.   வாணலியில் தாளிக்க

 எண்ணெயைக் காய வைத்து, கடுகைமுதலில்போட்டு வறுத்துக் கொண்டு பருப்பு வகைகளைப் போட்டு சிவக்கவறுத்து   கறிவேப்பிலை மிளகாய்  , பட்டாணி, குடமிளகாய் இஞ்சி முதலியவைகளைச்

சேர்த்து நிதானமான தீயில் வதக்கவும்.  உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயப் பொடி சேர்த்து இறக்கி ஆற விடவும்.

                    ஆறின கலவையில் எலுமிச்சம் பழத்தை நறுக்கி கொட்டையை நீக்கி சாற்றைப் பிழியவும். ஆற வைத்துள்ள சாதத்தில் கலவையைக் கொட்டி  சீராகக் கலக்கவும்.

சிவக்க வறுத்துப்பொடித்த வெந்தயப்பொடி இருந்தால் வாசனைக்கு ஒர் துளி பிடித்தவர்கள் சேர்க்கலாம்.    எலுமிச்சம் சாதம் தயார். தொடர்ந்து மற்றவைகள்——-

ஜூலை 24, 2009 at 12:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

ரொட்டிக்கு உதவும் டால்

 வேணடியவைகள்—-முக்கால்கப் பயத்தம் பருப்பு

                                   கால்கப் கடலைப்பருப்பு,     ஒரு துளி மஞ்சள்பப்பொடி.

மஸாலா ஸாமான் பொடிக்க—லவங்கம்-8 ,    பட்டை ஒரு சிறிய துண்டு,——-பெரியவகைஏலக்காய்1,—–மிளகுஅரை டீஸ்பூன் இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

நறுக்க வேண்டிய சாமான்கள்-பெரிய்ளவுபழுத்த தக்காளி 2,-

பச்சைமிளகாய 2,—சி றிய துண்டு இஞ்சி, விருப்பப் பட்டவர்கள்  2  பல்பூண்டும் சேர்க்கலாம். பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ருசிக்கு உப்பு,——தாளிக்க நெய,எண்ணெய்,சீரகம் .அலங்கரிக்கபச்சை கொத்தமல்லி,எலுமிச்சைத் துண்டுகள்.-

செய்முறை———-பருப்புகளை அரைமணிநேரம் ஊறவைத்துக் களைந்து தண்ணீர் சேர்த்து குக்கரிலோ  பாத்திரத்திலோ மலர வேக வைத்துக் கொள்ளவும். அதிகம் குழையாமல் இருக்க  நிதான தீயில் பாத்திரத்திலேயே  மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

 இரண்டு டேபிள்ஸேபூன் எண்ணெயும் நெய்யுமாகக் கலந்து,வாண  லியில் காயவைத்து அரைஸ்பூன் சீரகம் தாளித்து நறுககிய மிளகாய்,இஞ்சி,வெங்காயம் சேர்த்து சுருள வதக்கவும். பின் மஸாலாப்பொடியைச் சேர்த்து  ஒர் நிமிஷம் வதக்கிய பின்னர், தக்காளியையும்  சேர்த்து வதக்கவும். யாவும் குழைந்து சேர்ந்து வரும்போது  கரண்டியால் நனறாக மசித்து வெந்த பருப்பையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து இரக்கவும்.

 நறுக்கிய கொத்தமல்லிஇலையைத்தூவி எலுமிச்சைத் துண்டுகளுடன் கிண்ணங்களில்பருப்பை நிரப்பி  , ரொட்டியுடன் பரிமாறவும்.

பருப்பை கெட்டியாகவோ சற்று நீர்க்கவோ செய்ய கொதிக்கும்போதே  தண்ணீரைச் சேர்க்க வேண்டும். எல்லா வகைப் பருப்புகளிலும், தயார் செய்யலாம்.

ஜூலை 20, 2009 at 2:23 பிப பின்னூட்டமொன்றை இடுக

மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி

                 வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்

                                                                                                 அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்                 

                                                         கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்

                                        மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன்      ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்

                                        சீரகப்பொடி—அரைடீஸ்பூன்  -ருசிக்கு வேண்டியஉப்பு

         அலம்பி சுத்தம் செய்து    பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்

                   மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.

                                                                               இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில்  மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

 ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க  விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.

   திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால்     ஊறினமாவை  வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு  அவரவர்கள் அடுப்பில்  தோசைக் கல்லில்     நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும்   .    டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

ஜூலை 10, 2009 at 1:34 பிப 2 பின்னூட்டங்கள்

அக்கி ரொட்டி[அல்லது]அரிசி மாவுரொட்டி.

அரிசிமாவு—-ஒருகப்

தேங்காய்த் துருவல்–முக்கால்கப்

சீரகம்—கால்டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லிடீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒன்று

துளி பெருங்காயப்பொடி 

ருசிக்கு உப்பு  

ரொட்டி தயாரிக்க எண்ணெய்  

                                                                எண்ணெய் நீங்கலாக மற்றவைகளைச் சேர்த்துக் கலந்து  தண்ணீர்விட்டு  சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவைப் பிசைந்து கொள்ளவும்.

 வாணலியோ அல்லது நான்ஸ்டிக் பேனோ இரண்டு எடுத்துக்கொண்டு உட்புறம் நன்றாக எண்ணெயைத் தடவவும். பின்னர்   ஒர் சின்ன மாங்காயளவு மாவை எடுத்து  உருட்டி கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு வாணலியில் வைத்து மெல்லியதாக  அடைபோல வாணலியின் , ஷேப்பிலேயே பரத்தித் தட்டவும். நடுவில் இரண்டு பொத்தல்கள் இடவும்.  சுற்றிலும் பரவலாக  2,3 ஸ்பூன் எண்ணெய்விட்டுப் பிறகே[கவனிக்கவும்]        வாணலியை  காஸிலோ ஸ்டவ்விலோ வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்.இரண்டொரு நிமிஷ,ங்கள்  தட்டினால் மூடித் திறக்கவும்.  சறறு முறுகலாகச் சிவந்த பிறகு  சல்லிக் கரண்டியினால் திருப்பிப் போட்டு  சிறிது எண்ணெய் விட்டு  பதமாக வேகவிட்டு எடுக்கவும். வாணலியைக்  கீழே இறக்கி விட்டு அடுத்து மற்ற வாணலியை ரொட்டியுடன் அடுப்பிலேற்றவும்.   முதல் வாணலியைத் தண்ணீர்விட்டு அலம்பி சூட்டைப் போக்கி அடுத்த ரொட்டியைத் தயாரித்துக் கொண்டால்     தொடர்ந்து செய்ய சுலபமாக இருக்கும்.

                                                                            சூடு இல்லாத லாணலியில்தான் கையினால் ரொட்டியை மெல்லியதாகத்    தட்ட முடியும். ஆதலால்  இரட்டை வாணலி முறை. சுடச்சுட ஊருகாய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

                                                                                             இதையே பச்சை மொச்சைப்பருப்பு,  பச்சைப் பட்டாணி பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயம் முதலானவாகளைச் சேர்த்தும்  நமது ரஸனைக்கேற்ப  பல ருசிகளில் கார சார மாகவும்     தயாரிக்கலாம்.

ஜூலை 7, 2009 at 2:46 பிப 1 மறுமொழி

ஆலுகோ ஆசார்

DSC02640 வேண்டியவை–கால்கிலோ  உருளைக் கிழங்கு.

சுமாராக நறுக்கிய குடமிளகாய்சிகப்பு ,பச்சை,தலாஒருகப்

பச்சைமிளகாய்ஆறு–இஞ்சி ஒருதுண்டு.

சிவக்க வறுத்துப் பொடித்த எள் 4டேபிள் ஸ்பூன்

மஞ்சள்பொடி ஒருடீஸ்பூன்,  கடுகு,சீரகம் வகைக்கு ஒருடீஸ்பூன்

வெந்தயம், அரைடீஸ்பூன் பொடியாகநறுக்கியகொத்தமல்லிஅரைகப்.

கறிவேப்பிலை சிறிது—ஐந்து,ஆறு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்.

விருப்பமுள்ளவர்கள் தாளிப்பில்.சோம்பு,–7.-8.பல்நசுக்கிய பூண்டு. பட்டை, கிராம்பும் சேர்க்கலாம்.

புளிப்பிற்கு  எலுமிச்சை சாறு, அல்லது  மாங்காய்த் துருவல்

வாசனைக்கு சிறிது பெருங்காயத்தூள்.   சுவைக்கு உப்பு.

செய்முரை——கிழஙகைக், குழையாமல் முழுதாக வேகவைத்து தோல் உரித்து திட்டமான துண்டுகளாக ஆக்கிக கொள்ளவும்.    வாணலியில்,  எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் பெருங்காயம்  தாளித்து  வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து நறுக்கிய இஞ்சி மிளகாய், கறிவேப்பிலை,குடமிளகாய் சேர்த்து வதக்கவும், தீயைக் குறைக்கவும், நன்றாக வதஙகியதும் மஞ்சள்பொடி உப்பு கிழங்குத் துண்டங்களைச் சேர்த்துப்  பின்னும் சிறிது வதக்கி எளளுப்பொடி  கொத்தமல்லி சேர்த்து  நான்கு கரண்டி கொதிக்கும் நீரைவிட்டுக் கலந்து இறக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாரவும்,      மாங்காய்த் துருவல் வதக்கும் போது சேர்த்தால் எலுமிச்சை தேவையில்லை.   பச்சைப் பட்டாணி, மெல்லியதாக நறுக்கியகாரட், முள்ளங்கி இவைகளையும்  வதக்கி சேர்க்கலாம். இது ஒரு நேபாள நாட்டு  வகை. அவரவர்கள், விருப்பத்திற்கு   இணங்க கார மஸாலா வகைகளை  கூட்டியும் குறைத்தும் தயாரிக்கலாம்.  சாதம், பூரி,  தோசை, ரொட்டி வகைகளுடன் ருசியாகக் கொடுக்கலாம்.சற்று தளர்வாக இருப்பதற்கே  தண்ணீர் சேர்க்கிரோம்.

ஜூன் 29, 2009 at 6:08 பிப பின்னூட்டமொன்றை இடுக

சர்க்கரைப் போளி

கடலைப்  பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை   2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட  அரிசிமாவு வேண்டிய அளவு.     போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.

செய்முறை—–பருப்புகளைக்  களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து  இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.

அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ  3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த  விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல்  கிளறி கையில்  ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

போளி பூர்ணம்

போளி பூர்ணம்

முன்னதாகவேமைதாமாவுடன்       3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத்  துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது.  மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

மாவு

மாவு

பிசைந்த போளி மாவு

பிசைந்த போளி மாவு

                                            பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை   12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.

                                                        மாவு உருண்டைகளை அரிசிமாவில்   தோய்த்து  ஒவவொன்றாக   சப்பாத்திப் பலகையில்,      உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும்.       பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து   வட்டத்தின்   விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில்  பிரடடி  குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும்.   இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும்.         அப்பளாம்போல  மெல்லியதாக இடவரும்.DSC02568

             4,5,—4,5ஆகதயாரித்துக்  கொண்டு மிதமான சூட்டில் தோசைக்கல்லைக் காயவைத்து போளிகளைப போட்டு,   ரொடடி தயாரிப்பது போல நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து  போளியின் இருபுறமும் ஸ்பூனினால் தடவி , எடுக்கும்போதே இரண்டாக மடித்தும் எடுத்து வைக்கவும்.       இப்படியே எல்லாவற்றையும்   பொருமையாக  போளிகளாகத்,  தயாரிக்கவும்.  தீயாமல், கருகாமல் பதமாக எடுக்கவும். நல்ல ருசியாகவும் மிருதுவாகவும் இருககும்.

                                                             மாவில் எண்ணெய் சேர்ப்பதால்  கல்லில் போடடெடுப்பதற்கு அதிக நெய, எண்ணெய் தேவையிராது.

பருப்புகளை ஸப்ரேட்டரில் வேகவைத்தால்  இரண்டு விஸில்  வைக்கலாம். உட் பாத்திரத்தை மூட வேண்டும்.20 போளியைவிட அதிகமாகவே என் கணக்கில் வருகிறது.                               

பருப்பு நன்றாக வேகவேண்டிய அவசியமில்லை.DSC02581

ஜூன் 22, 2009 at 12:16 பிப 4 பின்னூட்டங்கள்

மைசூர் போண்டா

வேண்டியவை—–ஒருகப் உளுத்தம் பருப்பு.—2பச்சைமிளகாய்—-ஒரு டேபிள்ஸ்பூன்பச்சரிசி—–இவைகளை த் தண்ணீரில்     ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிக்கட்டி மிக்ஸியில்  அரைத்துக் கொள்ளவும்.  சிறிது  நீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய சாமான்கள்—-சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய்  மூன்று டேபிள்ஸ்பூன்,— உடைத்த மிளகு ஒரு டீஸ்பூன், —–பொடியாக நறுக்கிய கொத்த மல்லி    —- பெருங்காயம் சிறிது—ருசிக்குத் தேவையான உப்பு.

பொரிக்க எண்ணெய்,————————————அரைத்த மாவுடன் சாமான்களைச்  சேர்த்துக்   கலந்து  வாணலியில்  எண்ணெயைக் காய வைத்து ஈரக்கையினால்  மாவை எடுத்து  ஒரே சீராக உருண்டை வடிவ த்தில்      உருட்டிப்போட்டு  பொன்நிறமாக பொரித்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் போண்டாக்கள் ஒத்துப் போகும்.

 மாவில் அதிகம் தண்ணீர் கூடாது.  நைஸாக அரைப்பது அவசியம்.

ஜூன் 18, 2009 at 12:47 பிப 2 பின்னூட்டங்கள்

கதம்ப பகோடா

 வேண்டியவை—கடலைமாவு2கப்   —                     அரிசிமாவு2டேபிள்ஸ்பூன்——–

வெண்ணெய் ஒரு டீஸ்பூன்   ,–வெங்காயம்2,      பச்சைமிளகாய்3,——பொடியாக நறுக்கிய வகையில் கோஸ், காரட், குடமிளகாய்2கப்—கொத்தமல்லிசிறிது,—–கால்ஸ்பூன்இஞ்சித்துருவல்—வேண்டியஅளவுஉப்பு,———-பொரிப்பதற்கு எண்ணெய்.விருப்பமுள்ளவர்கள் பூண்டு சீரகம் சேர்க்கலாம்.

செய்முறை——மாவுகளுடன் உப்பு வெண்ணெய் 2ஸபூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு, பொடியாக நறுக்கியவெங்காயம் மிளகாய் காய்கறி மற்றவைகளையும் சேர்த்து திட்டமாக தண்ணீர் தெளித்துக் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெயைக்

காயவைத்து,  மாவைக் கிள்ளிப் போட்டு பகோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.    இதையே தனியாக  வெஙகாயத்தை மட்டிலும் அதிகமாகச் சேர்த்தும் செய்யலாம்.காரம் அதிகம் சேர்த்து செய்தால் சட்னிக்கு அவசியமிராது.

ஸோடா உப்புவிற்கு பதில்தான் இரண்டுஸ்பூன் காய்ச்சிய  எண்ணெய் உபயோகிப்பது. கரகரப்பைக் கொடுக்கும்.

ஜூன் 17, 2009 at 11:35 முப பின்னூட்டமொன்றை இடுக

மசூர் பருப்பு குணுக்கு

வேண்டியவை—-200கிராம்மசூர்டால்—–2பெரிய சைஸ் தோலுரித்து வேகவைத்த உருளைக்கிழங்கு—-3பச்சைமிளகாய்—1ஸ்பூன் சீரகம்—-1துண்டு இஞ்சி—-வேண்டிய அளவு உப்பு–பொரிப்பதற்கு எண்ணெய்.

2மணிநேரம் பருப்பை ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். கிழஙகைச் சிறிதும்,பெரிதுமாக உதிர்த்துக் கொள்ளவும்.   பருப்புடன் இஞ்சி,மிளகாய், சீரகம் சேர்த்து     ஒன்றிரண்டாய் கரகரப்பாக தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உப்பும் கிழங்கையும் சேர்த்துக் கலந்து இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெயையும் விட்டு பகோடா மாதிரி  எணணெயில் ஒரே சீராக  திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும்.  விரும்பும் சட்னிகளோடு சாப்பிடலாம்.  புதினா, புளிச்சட்னி, தோதாக இருக்கும்.

                 பாலக் பட்டாணிபருப்பு வடை-

வேண்டியவை.-பட்டாணிபருப்பு200கிராம்—உளுத்தம்பருப்பு50கிராம்—-துவரம்பருப்பு50கிராம்.–இரண்டுவத்தல்மிளகாய்—-இரண்டுபச்சை மிளகாய்— ஒரு டேபிள்ஸ்பூன்பெரும் சீரகம்—-உப்பு,—–நறுக்கிய பாலக்கீரை ஒருகப்,—-கொத்தமல்லி அரைகப்,இஞ்சிஒரு துண்டு—-பொரிப்பதற்கு எண்ணெய்.

பருப்பு    வகைகளை 2-3மணி நேரம் ஊறவைத்து நீரைவடித்து,உப்பு காரம், இஞ்சி,பெருஞ்சீரகத்தைச் சேர்த்து மிகஸியில் கரகரப்பாக அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த கீரை கொத்தமல்லியுடன் துளி மஞ்சள் பொடி  2ஸபூன் காய்ச்சிய  எண்ணெய் இவைகளுடன் மாவைக்கலந்து    வடைகளாகத் தட்டி காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.  இந்த பருப்புக் கலவையில் வடைகள் சீக்கிரம் நமுத்துப் போகாமல் கரகரப்பாக நீண்ட நேரம் இருக்கும்.  வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். சூடாகச் சாப்பிட வேண்டும். .

                             மசால்வடை—கடலைப்பருப்பு——வேண்டியவை—-கடலைப்பருப்பு200கிராம்,—-உளுத்தம்பருப்பு50கிராம்–பச்சைமிளகாய்4,—பெரியஸைஸ்வெங்காயம்3,-கொத்தமல்லி,கறிவேப்பிலை,உப்பு,–பொரிப்பதற்கு எண்ணெய்.

பருப்புகளை ஊறவைத்து தண்ணீரை வடித்து உப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  பொடியாக நறுக்கிய  வெங்காயம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து,  காயும் எண்ணெயில் வடைகளாகத்தட்டிப்போட்டு சிவக்க வேகவைத்து எடுக்கவும்.  புதினா,சோம்பும் சேர்க்கலாம். உப்பு காரம் வேண்டிய அளவு கூட்டியும் குரைத்தும் சேர்க்கவும். ஊறவைக்கும்   நேரம் 2மணி போதுமானது.பூண்டு 2-3-துண்டு உங்கள் விருப்பம்.

ஜூன் 3, 2009 at 1:49 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


ஏப்ரல் 2026
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 561,218 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • பிரபுவின்'s avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.