Archive for ஏப்ரல் 29, 2009
பிடி குழக்கட்டை.
அரிசிரவை–250கிராம். துருவிய தேங்காய்த் துருவல் ஒருமூடி.[பாதிதேங்காய்.]—-இஞ்சி-ஒருதுண்டு.–பச்சைமிளகாய்2-கடுகுஒருடீஸ்பூன்–உளுத்தம்பருப்பு இரண்டு டேபிலஸ்பூன் எண்ணெய்இரண்டுடேபிள்ஸ்பூன்.பெருங்காயம்சிறிது. தேவையான உப்பு.
ரவைதயாரிக்க–பச்சரிசியுடன் இரண்டுடேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து ஒருமணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் ரவைபோல் உடைத்து வைத்துக் கொள்ளவும்.
ரவை அளவிற்குஇரண்டு பங்கு நீரை ப் பாத்திரத்தில விடடு உப்பு தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். எணணெயில கடுகு உளுத்தம்பருப்பு ,பெருங்காயம்சிவக்க வ றுத்து நருக்கிய மிளகாயை யும் சேர்த்து வதக்கி தாளித்து இஞ்சியையும் நசுக்கி சேர்த்து கொதிக்க விடவும். தீயை நிதானப்படுத்தி ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை பாதி வெந்து பந்து போல சேர்ந்து உப்புமாபோல ஆகும்போது கீழே இறக்கி வைத்து மூடி வைக்கவும். ஆறியவுடன் ஈரக்கையினால் மாவுக்கலவையை முட்டை வடிவத்தில சிறிய உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். குக்கரில் தண்ணீர விடடு கொதிக்க வைத்து இடலி ஸ்டாண்டில் பரவலாக வைத்து 12-நிமிஷங்களுக்கு நல்ல நீராவியில் ஸ்டீம் செய்து நிதானமாக எடுக்கவும் இ.ட்டிலித் தட்டுகளில் மறவாமல் எண்ணெய் தடவ வேண்டும். பிடி குழக்கட்டை தயார். எல்லாவித சட்டினிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். செய்து பாருஙகள்.