Archive for நவம்பர், 2011
எலுமிச்சை சாதம் பலவிதம்.
அடிக்கடி கையில் டிபன் கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை
சாதம் என நினைக்காமல் சற்று தாளித்துக் கொட்டுவதை
மாற்றி, ருசியையும் சற்று மாற்றியதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். பிரமாதம் ஒன்றுமில்லை. ஆனாலும் யோசிக்க
முடியாத ஒரு ஸமயத்தில் படம் வேறு எடுத்திருந்தேன்.
நீங்களும்தான் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
நல்ல மெல்லியதான அரிசியில் ஒருகப் எடுத்து உதிர் உதிரான
சாதமாக வடித்து ஸ்டீல் தம்பாளத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் நல்ல சாறுள்ளதாக—–1
சிகப்புநிற காப்ஸிகம்—-1 . சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்–2 . நீட்டுவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி பிஞ்சு—1. கைப்பிடி, பொடியாக நறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது 1, டீஸ்பூன்
சில கரிவேப்பிலை இலைகள்
நல்லெண்ணெய்–2 டேபிள்ஸ்பூன்
கடுகு–1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
மஞ்சள்ப்பொடி–சிறிது
பெருங்காயப்பொடி—-சிறிது
ருசிக்கு உப்பு
வறுத்துப் பொடி செய்த வெந்தய, கடுகுப்பொடி 1/2டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய கேப்ஸிகம், பிஞ்சு பட்டாணியை ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டுக் கலந்து 3 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்து
எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து , இஞ்சி பச்சைமிளகாய்.
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மைக்ரோவேவ் செய்ததையும்
சேர்த்துப் பிரட்டி இரக்கவும். மஞ்சள்ப் பொடி சேர்க்கவும்.
ஆறினவுடன் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் சேர்த்துக்
கலந்து ஆறின சாதத்தில் கொட்டிக் கலக்கவும். பொடிகளைச்
சேர்த்துக் கலந்தால் சாதம் ரெடி.
மற்றும், பூண்டு, இஞ்சி விழுதை வதக்கி ரெட் கேப்ஸிகம்,கேரட்,
மட்டர், ப.மிளகாய் சேர்த்து, கடுகு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு
தாளித்துக்கொட்டி எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து,
சாதத்துடன் கலந்து பூண்டு வாஸனை மேலோங்க
தயாரிக்கலாம். பொடிகள் அவசியம்.
பெறிய எலுமிச்சை வகையுடன், கிரீன் காப்ஸிகம்,கேரட்,
பேபிகார்ன், காரமில்லாத பெறியவகைமிளகாய், லேசாக
வேண்டியவகை மஸாலாவும் சேர்த்து. உப்பு காரம் கூட்டி
வகையாக முந்திரி வகைகளுடன் தயாரிக்கலாம்.
எல்லாம் ஒரே மாதிரி தோன்றினாலும் காய்களை மைக்ரோவேவ்
செய்து , ருசியை சிறிது மாற்றி செய்யலாம். ஒரே நாளில்
யாவற்றையும் செய்யப் போவதில்லை.கலர்க் கலராக
செய்யலாமே. பாதாம், பிஸ்தா, மற்றும் வேறுவித பருப்புகளும்
அலங்காரமாகச் சேர்க்கலாம்.
பெறிய எலுமிச்சை சாற்றில் செய்யும்போது திட்டமாக சாற்றைச்
சேர்க்கவும். சிறிய வகைப் பழத்தில் வாஸனைநன்றாகஇருக்கும்.
சுட்டரைத்தத் துவையல்
நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை
அனலில் சுட்டு துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.
மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்
ஜெனிவா குறிப்புதான் இதுவும்,
கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து அரைக்கலாம்.
புளி சேர்த்த துவையலில் சிவக்க வறுத்த வெந்தயம் ருசியைக் கொடுக்கும்.
சுட்ட கத்தரிக் காயுடன் துளி,தேங்காய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்து
தயிரில் கலந்து கடுகு தாளித்தால் பச்சடி தயார்.
கொத்ஸு தயாரிக்கலம்.
இப்படி சுட்ட கத்தரிக் காயில் அநேகவிதம் தயாரிக்கலாம்.
அரைக்கும் போதே கொத்தமல்லி கறிவேப்பிலையை மறக்க வேண்டாம்.
உப்பு காரம் , தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
பர்த்தா தயாரிப்பதும் இப்படி சுட்ட கத்தரிக்காயில்தான்.
கத்தரிக்காய் சேர்க்கும் பத்திய சமையலில் சுட்ட காயை மசித்து
துளி நெய்யில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து,
உப்புபோட்டு கொடுப்பார்கள்
கிராமத்து ஐட்டம் இது. எதுவோ வேண்டியவர்கள் செய்து பாருங்கள்
.இரண்டாவதுபடம் மேலே வந்திருக்கிரது.கீழே 1, 3, 4.