Archive for திசெம்பர், 2011
வாழ்த்துக்கள்
என் அன்பிற்குறிய சொல்லுகிறேனை ஆதரித்து எழுத ஊக்கம்
கொடுக்கும் எல்லா மதிப்புடையவர்களுக்கும், மற்றும் எல்லா
ஸகோதர ஸகோரிகளுக்கும், அனைவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்
இதன் மூலம் தெறிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் இனிதே
செய்க என்று முகமன் கூறி 2012 ஆம் புத்தாண்டே வருகவருக
என்று வரவேர்ப்போம், சொல்லுகிறேன் காமாட்சி.
சுரைக்காய் கோப்தா
வேண்டியவைகள்
சுரைக்காய்—திட்டமாக –1
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—அரை டீஸ்பூன்
புதியதாய்ப் பொடிக்க
லவங்கம்—4
மிளகு—–அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
அரைக்க
வெங்காயம்—2அல்லது 3
இஞ்சி—-சிறியதுண்டு
பூண்டு இதழ்—4
பழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்
ருசிக்கு உப்பு
கடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க
மாவு மீதி இருக்கும்.
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
பிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.
செய்முறை
சுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்
துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
சற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.
வெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
சுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்
கலக்கவும்.
துருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.
வடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.
அடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை
போலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு
எடுக்கவும்.
இதுவே கோப்தாவின் முதல்ப்படி.
அகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்
சூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து
வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து
பிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
எண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் கொதித்துச் சுருண்டு வரும்
பதத்தில் முக்கால்கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கோப்தாக்களைப் பரவலாக அதில் சேர்க்கவும்.
மிதமான தீயில் இரண்டொரு கொதிவிட்டு ஒவ்வொன்றாகத்
திருப்பிவிட்டு இறக்கவும். கோப்தாவின் அளவிற்குத் தக்கபடி
கிரேவியில் முன்னதாகவே நீரின் அளவை சற்று
அதிகம்செய்யவும்.அதிகம் வேக வேண்டாம்.
ரொட்டி பூரி வகைகளுடன் நன்றாக இருக்கும்.
விருப்பத்திற்கிணங்க காரமும் கூட்டிக் குரைக்கலாம்.
கீழுள்ள படங்கள் யாவும் மாதிரிக்குதான்.
கோப்தா தயார். லௌகிகா கோப்தா இதுதான்.
பால்ப்போளி
கார்த்திகைப் பண்டிகை வருகிரதே ஏதாவது எழுதுவோம்
என்று தோன்றியது. ஸரி, பால்ப்போளி இன்று செய்து
ப்லாகிலும் போடலாமென்று நினைத்தேன். செய்து
முடித்து எழுதவும் ஆரம்பித்தாகி விட்டது.
நீங்களும் செய்து பாருங்களேன். வேண்டியஸாமான்களை
பார்ப்போமா.
வேண்டியவைகள்
மைதா–1கப்
மெல்லிய பேணிரவை—அரைகப்
பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய்
பால்—அரைலிட்டர்
சக்கரை—ஒன்றரைகப்
ஏலக்காய்–3
முந்திரிப் பருப்பு—10
பாதாம் பருப்பு—10
ஒரு சிட்டிகை—உப்பு
குங்குமப்பூ—துளி.
அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட
செய்முறை
பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்
பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்
பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்
கொள்ளவும்.
மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு
சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை
கெட்டியாகப் பிசையவும்.
நன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர
விடவும்.
பாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.
ஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்
பிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து
வட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி
வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
கரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
அகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ
சக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை
கரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து
கொள்ளவும்.
குங்குமப்பூகரைசல்,பொடித்தபொடி இவைகளைக் கலந்து
காய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3
நிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.
பூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,
இரண்டொரு நிமிஷங்களில்மடித்தமாதிரிஅரைவட்டஷேப்பில்
தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற
வைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.
பால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்
சூடான பாலில் பூரிகள் சீக்கிரம் ஊறும்.
தட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.
பால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்
நன்றாக ஊறும்.
உடனேயும் சாப்பிடலாம்.
இரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,
மிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்
கொடுக்கலாம்.
விருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.
பூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது
சுலபமாக இருக்கும்.
அதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.
பால்ப் போளி ரெடி.
திட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்.