திசெம்பர் 24, 2012 at 12:46 பிப 13 பின்னூட்டங்கள்
கடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.
செய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
முன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.
View original post 68 more words
Entry filed under: Uncategorized.
13 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:16 பிப இல் திசெம்பர் 24, 2012
அன்புள்ள மாமி, நமஸ்காரங்கள்.
சர்க்கரை போளியின் படங்களும் செய்முறையும் ரொம்ப ஜோர். சாப்பிடணும்போல ஆசை ஏற்பட்டு விட்டது.
பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 2:13 பிப இல் திசெம்பர் 24, 2012
ஆசிகளும், நன்றிகளும், அன்புடன் மாமி.
3.
chollukireen | 2:07 பிப இல் திசெம்பர் 24, 2012
ஆசிகள். ரீ ப்ளாக் எப்படி பண்றதுன்னு தெரிஞ்சிண்டேன். 2009 இல் எழுதினது. பருப்பை அரை வேக்காடு வேகவைத்து
வடிக்கட்டியும் சேர்த்து அரைக்கலாம்னு எழுத நினைத்தேன். ஜெனிவா பிள்ளை வந்திருக்கிறான்,குடும்பத்துடன். புதுவருஷத்தை தித்திப்பு போளியாக எழுதி வரவேர்க்கலாம் என்று தோன்றியது.
வாலாம்பா அவர்கள் இதைவிட அருமையாக தயாரிப்பார்.
சாப்பிட்டுவிட்டு என் அன்பைப் பகிர்ந்ததாகச் சொல்லவும்.
பெயர் யூகம் ஸரிதானா? உடனே பின்னூட்டம்! வெல்லத்தைவிட இனிப்பானது.நன்றி. அன்புடன்
4.
chitrasundar5 | 2:44 முப இல் திசெம்பர் 25, 2012
காமாஷிமா,
படங்களுடன் சர்க்கரை போளி ஒரே தித்திப்பா இருக்கு. நான் இதுவரை சர்க்கரை சேர்த்து செய்ததில்லை. மேலும் உள்ளங்கை அளவைவிட கொஞ்ஜம் பெரியதாக இருக்கும்.இப்படி மடித்து,எடுத்து வைக்கும் அளவிற்கு பெரியதாக செய்ததில்லை,அதாவது வராது.
“20 போளியைவிட அதிகமாகவே என் கணக்கில் வருகிறது”____ என்பதால் மீதமுள்ளவற்றை இங்கே அனுப்பிடுங்க.நானும் உங்களுடன் சேர்ந்து புது வருடத்தை இனிப்பாகக் கொண்டாடிவிடுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.அன்புடன் சித்ரா.
5.
chollukireen | 10:41 முப இல் திசெம்பர் 29, 2012
நீ முயற்சி எடுத்து செய்துபார். வராத பெரிய காரியமில்லையிது. பூரணம்,செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டு அவ்வப்போதும் செய்யலாம். ஆலு பரோட்டா செய்யவில்லையா? அதுமாதிரி பூரண பரோட்டாதானிது.மீதி எதற்கு? புதுசாகவே செய்து அனுப்பி விடுகிறேன். மனதால் அனுப்புவதற்கு எந்த சிலவும்,பக்குவமும்கூட, வேண்டாம்.புத்தாண்டு வாழ்த்துகளுடன் போளியும் வருகிறது. வாழ்க,வெல்க
அன்புடன்
6.
Mahi | 2:59 முப இல் திசெம்பர் 25, 2012
Poli Looks soft n delicious! Thanks for the stepwise pictures Ma!
7.
chollukireen | 10:46 முப இல் திசெம்பர் 29, 2012
மஹிக்கும்,சித்ராவுக்கும்.போளி வராது. யாரும் நம்பமாட்டார்கள். சும்மா,ஒரு கரண்டி பருப்பில் செய்துபார். நான் உனக்கு எழுதுகிறேன்.அச்சு அசல் போளி என்று. சந்தோஷம் மஹி, அன்புடன்புதுவருட
நல்வாழ்த்துகள்.
8.
Mahi | 3:00 முப இல் திசெம்பர் 25, 2012
இப்படி மடித்து,எடுத்து வைக்கும் அளவிற்கு பெரியதாக செய்ததில்லை,அதாவது வராது./////// Chitrakka, same pinch! 😉
9.
chitrasundar5 | 12:39 முப இல் திசெம்பர் 26, 2012
மகி,
உங்களுக்கும் வராது என்பதில் எனக்கு எவ்ளோஓஓ மகிழ்ச்சி தெரியுமா!
10.
chollukireen | 10:47 முப இல் திசெம்பர் 29, 2012
வரும்வரும்,அழகாக வரும். அன்புடன்
11.
chollukireen | 10:50 முப இல் திசெம்பர் 29, 2012
எந்தமாதிரி குஷி. இப்படியும் !ஸந்தோஷப்படலாம்போலிருக்கு!!!!!
12.
இளமதி | 8:52 முப இல் திசெம்பர் 25, 2012
அடடா..சூப்பரா இருக்கு போளி..:) பார்க்கவே செய்திடணும்னு தோணுது..
மாவுக்கும் லேசா மஞ்சள் பொடி சேர்த்தீங்களோ அம்மா…
நல்ல இளம் மஞ்சள் கலரில் போளி அசத்தலா இருக்கு…..
நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன்…
அம்மா உங்களுக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் இனிய நத்தார் புதுவருட நல்வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி அம்மா இனிப்பான நல்லதொரு குறிப்பு பகிர்வுக்கு….
13.
chollukireen | 10:55 முப இல் திசெம்பர் 29, 2012
இளமதி ஆசிகள்.சூப்பர் போளியா? செய்து,ருசித்து.எழுது.
வாழ்த்துக்களுக்கு நன்றி. உனக்கும்,குடும்பத்தினருக்கும்
அன்பான புதுவருஷ வாழ்த்துக்கள். அன்புடன்