Archive for ஒக்ரோபர் 10, 2014
புத்துருக்குநெய் மைசூர் பாகு
நான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு
தயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்
அம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
கால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்
ஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்
நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து
மைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்
வைத்தெடுக்கவும்.
அல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்
போட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்
கிளறவும்.
கூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்
கொண்டே இருக்கவும்.
சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது
மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.
நல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது
கிளறவும்.
நெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி
பாத்திரத்தை விட்டு விலகி நுறைத்து மேலே வர ஆரம்பிக்கும்
நன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய
தட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை
இரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.
View original post 32 more words