Archive for ஒக்ரோபர் 18, 2014
மாலாடு
இந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளியையொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.
ஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,
அன்புடனும் சொல்லுகிறேன்.
இதுவும் மிகவும் சுலபமாக நினைத்தால் செய்யக்கூடிய
லட்டு. வாயில் போட்டால் கரையக்கூடியதும், ருசியானது
மானது. நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்—
பொட்டுக்கடலை—-ஒருகப்
சர்க்கரை—1 கப்
பாதாம்—– 8
முந்திரி—8
பிஸ்தா—8
ஏலக்காய்—3
நெய்—-2 கரண்டிகளுக்கு அதிகம்.
லாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர
செய்முறை
பொட்டுக்கடலை அதாவது தேங்காய் சட்னியில் கூட
வைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.
வாணலியிலோ, மைக்ரோவேவில் வைத்தோ பொட்டுக்
கடலையை சற்று சூடாக்கி மிக்ஸியில் நன்றாக அறைத்து
சலித்து எடுத்துக் கொள்ளவும். சில ஸமயம் பொட்டுக்கடலை
நமுத்துப் போயிருக்கலாம். அதற்காகவும்,வாஸனைக்காகவும்
சூடாக்க வேண்டும்.
பருப்பு வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில்
நறநறப்பாகப் பொடிக்கவும்
உறித்த ஏலக்காயுடன் சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்
அறைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில் அறைத்தால்
யாவையையும் நைஸாகப் பொடி செய்ய முடியும்
பொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி
அறைத்த சர்க்கரைப் பொடி
இப்போது பொடித்த எல்லாவற்றையும் ஒரு அகன்ற
தாம்பாளத்திலோ தட்டிலோ சேர்த்துக் கலக்கவும்.
இனிப்பு குறைவாக வேண்டியவர்கள் சர்க்கரைப் பொடியைக்
குறைக்கவும்.
முந்திரி, பாதாம் வகைகளை ஸவுகரியம் போல சேர்க்கவும்.
எல்லாமே அவசியம் என்று நினைக்க வேண்டாம்.
வாணலியில் பாதியளவு நெய்யை விட்டு மிதமான தீயில்
நன்றாகச் சூடாக்கவும்.
தாம்பாளத்தில் கலவையை பாதியாக பிரித்துக் கொள்ளவும்.
பாதிக் கலவையில் நன்றாகக் காய்ச்சிய நெய்யைவிட்டு
அகலமான கரண்டியினால் நன்றாகக் கலக்கவும்.
நெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி உருண்டை…
View original post 82 more words