லெஸொதோ அனுபவமும் தென்னாப்பிரிக்காவும்.4

திசெம்பர் 30, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்

Rustfountein dam.ரஸ்ட்-பௌன்டன்  அணைக்கட்டு.                                                 ரஸ்ட் ஃபௌன்டன் அணைக்கட்டு. Rustfuntein dam.

தண்ணீரே கண்ணில் தென்படாத ஒரு மலையை  சுற்றி வந்தாயிற்று.

தண்ணீரைக் கண்ணாலே கூட பார்க்க முடியாத ஊர் போல உள்ளதே!

நான்  அப்படிதான் நினைத்தேன். நீங்களும் நினைத்திருக்கலாம்.

இவ்வளவு தூரம் வந்து விட்டு  கங்கையைக் கண்ணால் பார்க்காது போவதா?

கங்கையா?

கல்கத்தாவின் பாரக்பூரில் ஹூக்ளி நதியை   கங்கா என்றே சொல்லுவார்கள்.

அதிலிருந்து  பிள்ளைகள் யாவரும் எந்தத் தண்ணீரைப் பார்த்தாலும்

கங்கா,கங்கா என்றே சொல்லுவார்கள். சின்ன வயது வழக்கம் என்னிடம்

கங்கா என்றால்   தண்ணீர் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

அம்மா இங்கேயும் ஒரு கங்கா ஸாகர் உனக்காக இருக்கிறது என்றான்

மகன்.

அதுவும் உனக்காக ஒரு தாத்தா,பாட்டியும் கூட வருகிறார்கள்.

அவர்கள்தான் உங்களுக்காக யாவரையும் அழைத்திருக்கிரார்கள்

போகலாமா?

என்னை ஏதோ கேலி செய்கிரான் என்று எண்ணி   அசுவாரஸ்யமாகப்

பதிலே சொல்லவில்லை நான்.

பிக்னிக் எல்லாம் நீங்கள் போய் வாருங்கள். நாங்கள் வீட்டிலேயே

இருக்கிறோம். இல்லை, இல்லை. அவர்களுடைய அப்பா,அம்மாவும்

நீங்கள் வருவதாகச் சொல்லி இருக்கிரார்கள். அதனால்தான் அவர்கள்

வருகிறார்கள்.

நீங்கள் யாவரும்  ஜெனிவா திரும்புவதால்   பகாயா குடும்பத்தினர்

அவர்கள் பெற்றோர்கள் சார்பில் அழைத்திருக்கிரார்கள்.

அவர்களுக்காக நாங்களா?எங்களுக்காக அவர்களா?

எங்களைவிடவே சற்று பெரியவர்களாக இருக்கும்.

இது அணைக்கட்டு. நாளைக்கு இங்கு கூட்டமே இருக்காது.

ஆற அமர  பேசலாம். இவ்வூரின் விசேஷம் இன்று. ஆதலால்

கூட்டமே இருக்காது.

அவர்கள் இந்த ஊரிலேயே இருப்பவர்கள், பிறகு கூட போகலாம்.

அவர்களும் எங்கும் போக விருப்பப் படுவதில்லை. உங்களைச்

சாக்கிட்டு  எங்காவது வெளியில் அழைத்துப்போக பிள்ளைகள்

விருப்பப் படுகிறார்கள். அவ்வளவுதான்.  நாம் அதற்காக எதுவும் செய்து

கொண்டும் வரக்கூடாது என்றும் சொல்லியுள்ளார்கள்.ஆக நாம் போகிறோம்.

மறுக்க முடியவில்லை.

உங்கள் யாவருக்காகவும் சேர் முதலானதும் அவரவர்கள் கொண்டு

வருகிறோம். விசாரமில்லாமல்க் கிளம்பு.

ஸரி என்பதைத் தவிர வேறு வழி இல்லை.

உங்களிடம் சொல்லிக்கொள்ள ஓரிடம் இப்படிக் கிடைத்தது.

ஊர் திரும்பும் ஸமயம்.. ஸரி  பிள்ளைக்காக செய்து வைத்திருந்த

பக்ஷணங்களில்   ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு போவது  என்று

தீர்மானித்து சொல்லாமல் கொள்ளாமல்  எடுத்துக் கொண்டாயிற்று.

காரின் பின்புறம் ஸாமான் வைக்கும்   இடத்தில்  இரண்டு மூன்று மடக்கும்

வசதி கொண்ட நாற்காலிகளை வைத்தனர்.

விளையாட கொள்ள  என ஏதேதோ  பின்புறம் நிரம்பி வழிந்தது.

நீச்சல் உடையும்..

ஆக காலை உணவு உட்கொண்டு கிளம்பியாயிற்று.

இன்னும் யார் யார் வருகிறார்கள்.

பிரிகேடியர் குடும்பம், பகாயா  பிள்ளை,நாட்டுப்பெண் என இரண்டு குடும்பம்

வயதானவர்கள், மற்றும் சில பேர்கள்.

எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஸந்தித்து மேற்கொண்டு பிரயாணம்

தொடர்ந்தது.

மஸேருவிலிருந்து   ப்ளோமவுன்டன் போகும் வழியில் இருக்கிறது

இந்த ரஸ்ட் -பௌன்டன் அணைக்கட்டு.

ப்ளோ மவுன்டன் என்ற இடத்திலும் ஒரு சிறிய  ஏர்போர்ட் உள்ளது.

அவ்விடமிருந்தும்     ஜோஹான்ஸ் பர்க் போக வசதி உண்டு.

ஒரு பத்து மணி ஸுமாருக்கு   அணைக்கட்டு போய்ச் சேர்ந்தோம்.

டேமில் சேரா?

இருக்கை போடப்பட்டு விட்டது. சேர்ரெடி.

ஆண்கள் முதலில்

ஆண்கள் முதலில்

காரின் பக்கத்தில்     கற்குவியல்கள் எதற்கா?

அதை நிறைய இடங்களில்ப் பார்க்க முடிகிறது. எதற்காக?

இறைச்சியை சுட்டுச் சாப்பிடுவதற்காக.

அவர்களுக்கு    இதை எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தி வழக்கம்.

அடுத்து  பாட்டிகளான எங்களுக்கு உட்கார வசதி.

சேர்டிக்கெட்

சேர்டிக்கெட்

ஸ்டூலின்மீது   கடை பரப்பியாகி விட்டது.

தரையில்   விரிப்பின்மீது    மருமகள்கள். தரைடிக்கட் இல்லை

பொருப்பான பெண்களின் விரிப்புமேல்   அளவளாவுதல்.

டெண்டும் போட்டாகிவிட்டது.

யங்ஸ்டர்களின் கடை விரிப்பு

யங்ஸ்டர்களின் கடை விரிப்பு

ஆண்கள்  விளையாடத் தயார்.

பெண்கள் பேச்சுக் கச்சேரி  ஆரம்பமாகிவிட்டது.

பேசாத ஸப்ஜெக்டே இல்லை.ஃபேஷன் முதல்,அரசியல்,சமையல்

உத்தியோகம்,   குடும்பம்,படிப்பு,  பிறந்த வீடு,ஊர்,நடுநடுவே ,அம்மா

அதுதான் மாமியர் இப்படி ஸகல விஷயங்களுக்கும் நேரமே போதாது.

விளையாடத் தயார்

விளையாடத் தயார்

ஜோராக

ஜோராக

போட்,கார்,சேர்

போட்,கார்,சேர்

இளம் பெண்கள்

இளம் பெண்கள்

ஆட்டமெல்லாம்    ஓரளவு முடிந்து   சாப்பாடு  ரெடி.

காரிலிருந்து சாப்பாடு இன்னும் இறங்கவில்லை.

வெயிலுக்காகப் போட்ட டெண்டிலுட்கார்ந்து, ஸேலட்

நறுக்கியாகிறது. ஆண்களின் கைங்கரியம்.

ஸேலட் கட்டிங்

ஸேலட் கட்டிங்

நறுக்கியாச்சா

நறுக்கியாச்சா

சாப்பாடு வந்து சாப்பிட்டாயிற்று.   போட்டோ யார்

எடுப்பது?  ;சாப்பிடும் மும்முரம்..  ரஸிக்க சாப்பாடு.

கேமரா மறந்து போய்விட்டது.

அவரவர்கள் சிறிது ஓய்வு. எடுத்துக்கொண்டபின் திரும்பவும் விளையாட்டு.

அலுக்காதா,சலிக்காதா?

அலுக்கலியா?

அலுக்கலியா?

நேரமாகிவிட்டது. அழகான பார்வையில்

நேரமாகிவிட்டது. அழகான பார்வையில்

கருத்தமேகமா

கருத்தமேகமா

சூரியன் மலைவாயில் விழுகிறது

சூரியன் மலைவாயில் விழுகிறது

எல்லா ஸாமான்களும்  பேக் ஆகிறது.   போகும் வழியில் இரவு

சாப்பாடாம். பக்ஷணங்கள் அவர்கள் வீட்டிற்குப் பார்ஸல்.

நேரம் போவது தெரியாமல்  அவரவர்களுக்கேற்றவர்களுடன்

அளவளாவல்.    கடைசியாக சில காட்சிகள்.

இருள் கவ்வும் நேரம்

இருள் கவ்வும் நேரம்

பை,பை ஆப்பிரிக்க கங்கை அணைக்கட்டே. நான் வைத்த பெயர்இது.

பை,பை ஆப்பிரிக்க கங்கை அணைக்கட்டே. நான் வைத்த பெயர்இது.

என்ன சாப்பாடு?   ஸேலட்,  பிட்ஸா! வயதானவர்கள் அதிலும்

பெண்கள்  உணர்ச்சி வசப்பட்டோம்.  பிரியா விடை பெற்று

வந்தோம். ஜெனிவாவும் திரும்பினோம்.  எவ்வளவு  காலம் கழிந்தும்

நினைவுகள் மறப்பதில்லை.   அசை போடுவதிலும் ஒரு ஸுகம் உள்ளது.

இவ்வளவு தூரம் என் அனுபவம்,ஒரு சிறிய காலம் தங்கியது, உங்களிடம்

பகிர்ந்தது, என்னைப் பொருத்த வரையில்   எதிர் பார்க்காதது.

இத்தோடு நிறைவு செய்கிறேன். அன்புடன்.

Entry filed under: சிலநினைவுகள். Tags: .

2014 in review புத்தாண்டு வாழ்த்துகள்

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135's avatar ranjani135  |  5:05 பிப இல் திசெம்பர் 30, 2014

    மிகப் பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். பலருடனும் வெளியில் செல்லுவது என்றுமே உற்சாகம் கொடுக்கக்கூடிய ஒன்று. நீங்கள் சின்ன வயதுக் காரர்களுடன் சுலபமாகப் பழகுவீர்கள் போலிருக்கிறது. எல்லோரும் உங்கள் நட்பை அதிகம் விரும்புவார்கள் என்று தோன்றுகிறது. துளிக்கூட குறை சொல்லாமல் நல்லவற்றைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். அருமை. உங்கள் மனப்பக்குவம் எனக்கும் வரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  12:20 பிப இல் ஜனவரி 1, 2015

      நம்முடைய பிள்ளையின் சினேகிதர்கள்,அவர்களின் மனைவிகள், குடும்பம் என்று வரும்போது, சற்று இளமையானவர்கள்தானே. இப்படியே பழகிப்பழகி
      ஒரு சினேகிதமான உறவு முறை ஏற்பட்டு விட்டது.
      மனம் விட்டு எல்லாம் நமது என்ற மனப்பான்மையே
      வந்து விடுகிறது. நன்றாக கவனித்துக்கொள்கிறோம் என்ற சினேக மனப்பான்மை அவர்களுக்கும் வந்து விடுகிறது. எங்கும் எப்போதும் ஞாபகம் வருகிறது..
      சினேகமும் தொடர்கிறது. இதுதான் உண்மையானகாரணம்.. பிள்ளை மட்டுமா? உத்தியோகத்திலிருக்கும் நாட்டுப் பெண்களின்,தோழிகளும் இதற்கு விதி விலக்கல்ல!!!!
      நமக்கும் அன்பு கிடைக்கிறது.
      இதெல்லாம் அந்தந்த நேரத்தில் தானாக வந்து விடும்
      குணங்கள். நீண்ட பதில் எழுத சான்ஸ் கொடுத்த உனக்கு மிகவும் நன்றி. நம்முடைய நட்பையே யோசியுங்கள். உங்களுக்கும் ஆல் ரெடி அந்த குணம் இருக்கிறது. மேல்ப்பூச்சான வார்த்தை இல்லை.
      அன்புடன்

      மறுமொழி
  • 3. chitrasundar's avatar chitrasundar  |  11:17 பிப இல் திசெம்பர் 30, 2014

    காமாக்ஷிமா,

    எந்த ஆறாக இருந்தாலும் அதன் புணிதத்துவம் நம் மனதிலேயேதான் உள்ளது. இனி எந்த நீர்நிலையைப் பார்த்தாலும் கங்கை ஞாப‌கம்தான் வரும்போல் தெரிகிறது.

    படங்களுடன் சொல்லிச் சென்ற விதம் நேரில் சென்று பார்த்ததைப் போலவே உள்ளது. மாலைநேரக் காட்சிகள் மனதை மயக்குகின்றன. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  12:27 பிப இல் ஜனவரி 1, 2015

      வாஸ்தவமாக எங்கு நதி,குளங்கள் என நீராடினாலும்,கங்கேச,யமுனாதீரே கோதாவரி,ஸரஸ்வதி,நர்மதா,ஸிந்து காவேரி என்றுதான் ஸங்கல்ப மந்திரம் ஆரம்பிக்கும்.. காமாக்ஷிமாவிற்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கும் உன் பின்னூட்டம் மிகவும் நன்றாக உள்ளது. புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 5. dawnpages.wordpress.com's avatar marubadiyumpookkum  |  5:08 பிப இல் திசெம்பர் 31, 2014

    good travel good hobby

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  9:25 முப இல் ஜனவரி 2, 2015

      மறக்க முடியாத ஞாபகங்கள். எழுதுவதற்கு ஒரு இடுகை. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 7. Meenakshi's avatar Meenakshi  |  9:02 முப இல் ஜனவரி 2, 2015

    mighavum nandraga ulladhu. namaskarams. ungal blessings vendum.
    Sri Meenakshi

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  9:33 முப இல் ஜனவரி 2, 2015

      முதல் வருகையை வரவேற்கிறேன்.. ஆசீர்வாதங்களையும் அன்பையும் தவிர வேறுஎன்ன கொடுக்க முடியும். புத்தாண்டு வாழ்த்துகளையும்,அன்பையும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க ஸந்தோஷமுண்டாகிறது. தொடர்ந்து வாருங்கள். .பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 9. mahalakshmivijayan's avatar mahalakshmivijayan  |  4:16 முப இல் ஜனவரி 3, 2015

    நல்ல ஒரு அனுபவம் அம்மா! உங்களோடு சேர்ந்து நாங்களும் சுத்தி பார்த்து விட்டோம் 🙂

    மறுமொழி
    • 10. chollukireen's avatar chollukireen  |  8:54 முப இல் ஜனவரி 3, 2015

      நீங்கள் யாவரும் என்னோடு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி

Meenakshi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


திசெம்பர் 2014
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,014 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.