தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.
மார்ச் 31, 2014 at 7:19 முப 19 பின்னூட்டங்கள்
ஒருமாதத்திற்கு அதிகமாகவே உடல்நலம் ஸரியில்லாததால் எதுவும்
புதியதாகஎழுத முடியவில்லை. ஜெனிவாவிலிருந்து மருமகள் இதைச்
செய்து படங்களும்அனுப்பி இருந்தாள்
நீங்களும் செய்து ரஸியுங்கள்.
தாய்லாந்து வகை நூடல்ஸ் இது. நமக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு
நாம் தயாரிக்கலாம். ஏதாவதொரு ஸாமான் இல்லாவிட்டால் அதற்கு மாற்றாக
ஏதாவதை உபயோகித்தால்ப் போகிறது.
வேண்டியவைகள்.
நூடல்ஸ்—-250 கிராம்.
எண்ணெய்—வதக்க,பொரிக்க—-4 டேபிள்ஸ்பூன்.
வெரும் வாணலியில் வறுத்துத் தோல்நீக்கி ஒன்றிரண்டாய்ப் பொடித்த வேர்க்கடலை கால் கப்.
நல்ல பனீரோ,அல்லது ஸோயா பனீரோ நறுக்கியது—1 கப்
பனீரை ஊறவைக்க ஸோயா சாஸ் —-1டீஸ்பூன்.
அரைப்பதற்கு வேண்டிய ஸாமான்கள்
சிகப்பு மிளகாய்—ஒன்று.பச்சை மிளகாயும் போடலாம்.
லவங்கம்—3
பூண்டு—2 இதழ்
இஞ்சி–தோல் சீவியது ஒரு அங்குல நீளம்.
ஸோயாசாஸ்—3 டீஸ்பூன்
இவைகளுடன் ஒருபாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
மேலே தூவி அலங்கரிக்க, ருசி கொடுக்க வேண்டிய ஸாமன்கள்.
ஸ்பிரிங் ஆனியன், அதாவது வெங்காயத்தாள் மூன்று செடிகள், துண்டுதுண்டாக
நறுக்கியது
அரை கப் பச்சைக் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது.
பேஸில் என்னும் துளசி இலை விருப்பத்திற்கு சிறிது.
ஒருகப் முளைவிட்ட தானியங்கள், விருப்பத்தைப் பொறுத்து.
ருசிக்கு,உப்பு. காரம் அதிகமாக்க,சில்லி சாஸ்.அல்லது பச்சை மிளகாய்.
மேகி விஜிடபிள் க்யூப் மஸாலாவும் உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாத்திரத்தில் அதிகமாக தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தபின் , நூடல்ஸைப் போட்டு வேகவைத்து, வடிதட்டில்க் கொட்டி,
அதன்மேல்க், குளிர்ந்த தண்ணீரை தாராளமாக
விட்டு அலசி, வடிக்கட்டித் துளிஎண்ணெய் சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும்.
பனீரோ அல்லது டோபுவோ அதில் ஒரு டீஸ்பூன் ஸோயா சாஸைக் கலந்து
ஊறவைக்கவும்.
அறைக்கக் கொடுத்த ஸாமான்களை, ஸோயாசாஸ் சேர்த்து அறைத்து எடுக்கவும்.
எலுமிச்சை சாற்றைக் கலந்து வைக்கவும்.
கொத்தமல்லி, பேஸில், வெங்காயத்தாள் , இவைகளை சுத்தப்படுத்தி அலம்பி நறுக்கி வைக்கவும்.
அடி கனமான வாணலியில் நாலா பக்கமும் எண்ணெயைப் பரவலாகப் படும்படி
விட்டு நன்றாகச் சூடானவுடன்,நிதான தீயில் பனீர் அல்லது டோபுத் துண்டங்களைச்
சேர்த்து வறுக்கவும்.
பனீர் நன்றாகச் சூடாகட்டும்.
இப்போது அரைத்த மஸாலாவில் பாதியைச் சேர்த்து வதக்கவும்.
நன்றாக மஸாலா கலந்து சுருங்கும்போது ஒரு நிமிஷம் அடுப்பை அணைக்கவும்.
மஸாலாவை பாத்திரத்தின் ஓரமாக ஒதுக்கி நடுவில் இடம் செய்யவும்.
அல்லது வேறுபாத்திரத்தில் நூடல்ஸை, சூடாக்கியும்,பனீரைச் சேர்க்கலாம்
இதில் எண்ணெய் சிறிது விட்டுச் சூடாக்கி,வேகவைத்த நூடல்ஸ், பாக்கி மஸாலா,வேண்டிய
உப்புக் கலந்து , எல்லாவற்றையுமாகச் சேர்த்து நன்றாகச் சூடாகும்படி நான்கு நிமிஷத்திற்கு
வதக்கவும். நல்ல சூடாக வதக்கவும்
ஓ இந்தப் படம் இல்லை. நீங்களாகவே பதமாக நன்றாகச் சூடுசெய்து இறக்குமுன் ருசிபார்த்து
சில்லிசாஸோ, மிளகாயோ கூடுதலாகச் சேர்த்து இறக்கி
அலங்கரிக்கும் ஸாமான்களைத் தூவி கலக்கவும். வெங்காயத்தாள், கொத்தமல்லி,
பேஸில், முளைப்பயிறு, இவைகள்தான்.
இதையும் நீங்களே செய்யுங்கள். வேர்கடலைப் பொடி சேர்த்து சுடச் சுடப்
பரிமாறவும். கண்ணுக்கும் விருந்து நாவிற்கும் சுவை.
கீழே கொடுத்திருப்பதை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளுங்கள். எடுக்க எடுக்கக்
குறையாது.
Entry filed under: டிபன் வகைகள்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 7:27 முப இல் மார்ச் 31, 2014
படங்களும் விளக்கங்களும் அருமை. தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கோ மாமி. அன்புடன் கோபு.
2.
chollukireen | 5:32 முப இல் ஏப்ரல் 5, 2014
மிகவும் நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 8:12 முப இல் மார்ச் 31, 2014
பனீர் வேகுவதைப் பார்த்தால் உடனே சாப்பிட வேண்டும் போலுள்ளது… ஹிஹி…
செய்து பார்ப்போம் அம்மா… நன்றி…
4.
chollukireen | 5:34 முப இல் ஏப்ரல் 5, 2014
செய்து,சாப்பிட்டுச் சொல்லுங்கள். நன்றி. அன்புடன்
5.
chitrasundar | 12:28 முப இல் ஏப்ரல் 1, 2014
காமாக்ஷிமா,
என்ன ஆச்சு? உடல் நலனைப் பார்த்துக்கோங்கம்மா.
ஜெனிவாவிலிருந்து இறக்குமதியான டோஃபு, வெங்காயத்தாள் எல்லாம் சேர்ந்து தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ் பார்க்கவே சுவைக்கத் தூண்டுகிறது. இங்கும் சைனீஸ் கடைகளில் விதவிதமான நூடுல்ஸ் கிடைக்கிறது. நான்தான் வாங்குவதில்லை.
இங்கு பூண்டிதழ்கள் நட்டு வைத்தேன், வெங்காயத்தாள் மாதிரியே வந்திருக்கிறது. சிறிது கசக்கி முகர்ந்து பார்த்தேன், பூண்டு வாசனை எக்கச்செக்கம். இதை வைத்து ஏதாவது ரெஸிபி இருந்தால் அல்லது வேறு எதிலாவது சேர்க்கலாமா என்று உடல்நிலை சரியானபிறகு சொல்லுங்கம்மா. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 5:39 முப இல் ஏப்ரல் 5, 2014
நன்றி சித்ரா. பூண்டுத்தாளை,வெங்காயத் தாள் மாதரியே எல்லாவற்றிலும் உபயோகிக்கலாம். லஸுன் கல்லி என்று சொல்வார்கள். எதிலும் வதக்கிப் போட்டால் ருசிதான். பிறகு எழுதுகிறேன். பகோடா,வடையில் அப்படியே நறுக்கிச் சேர்க்கலாம். அன்புடன்
7.
ranjani135 | 11:26 முப இல் ஏப்ரல் 1, 2014
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நூடுல்ஸ் அவ்வளவாகப் பிடிக்காது. என் மகளுக்கும், மருமகளுக்கும் சொல்லுகிறேன். அவர்கள் செய்து பார்க்கட்டும்.
உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்,
ரஞ்சனி
8.
chollukireen | 5:41 முப இல் ஏப்ரல் 5, 2014
நன்றி. முடிகிரதோ இல்லையோ சற்று இங்கு வந்தால்தான் மனது ஸரியாகிறது. அன்புடன்
9.
mahalakshmivijayan | 1:03 பிப இல் ஏப்ரல் 3, 2014
தங்கள் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அம்மா..
10.
chollukireen | 5:41 முப இல் ஏப்ரல் 5, 2014
நன்றி மஹா. அன்புடன்
11.
Pattu | 5:20 பிப இல் ஏப்ரல் 10, 2014
செய்து பார்க்க வேண்டியது .
உங்கள் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? கவனித்து கொள்ளவும்.
12.
chollukireen | 10:28 முப இல் ஜூலை 10, 2014
இன்று பார்க்கிறேன் உங்கள் விசாரிப்பை. மிகவும் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும். அன்புடன்
13.
chollukireen | 11:14 முப இல் ஏப்ரல் 8, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தாய்லாந்துஸ்டைல் நூடல்ஸ் செய்முறைக் குறிப்புகள் இது. இக்காலத்தில் யாவருக்கும் புதுப்புது முறைகள் விரும்புகிரார்கள். ரஸிக்கிரார்கள். அப்படி இதுவும் ஒன்று. பாருங்கள்.செய்யுங்கள் விரும்பினால். அன்புடன்
14.
ஸ்ரீராம் | 2:42 பிப இல் ஏப்ரல் 8, 2021
மேகி நூடுல்ஸ் செய்வதுண்டு. இதுபோன்ற நூடுல்சுக்கு பாஸ்தாவும் சில சமயம் செய்வதுண்டு. கிடைத்ததைப் போட்டு சேர்த்து தயார் செய்து விடுவோம்.
15.
chollukireen | 11:23 முப இல் ஏப்ரல் 9, 2021
மேகி நூடுல்ஸ் மிக்க சுலபம். குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து விட்டது. நம்முடைய சேவைக்கு ஈடு இணை கிடையாது.ருசிக்கு வேண்டியபடி தயாரித்தால் எல்லாமே அற்புதம்தான்.பாஸ்தாவும் அப்படியே. ஆரம்பத்தில் மேகி நூடுல்ஸில் எத்தனை வகைகள். இப்போது அவ்வளவு இல்லை. ஆமாம் நன்றி சொல்லாமல் கதை சொல்லுகிறேன் இல்லையா. நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 11:54 பிப இல் ஏப்ரல் 8, 2021
நூடுல்ஸ் நான் சாப்பிட்டதே இல்லை. இது, பாஸ்தா போன்றவை எனக்குப் பிடிக்காது. வீட்டில் பசங்களுக்கு எப்போவாவது செய்வார்கள். எனக்கெல்லாம் சேவைதான்.
படங்கள் அழகு.
17.
chollukireen | 11:29 முப இல் ஏப்ரல் 9, 2021
சேவையும்தான் ரெடிமேட் கிடைக்கிறது. வீட்டில் செய்யும் மாதிரி வராது. பிடிக்காத வஸ்துவில் அக்கரையும் வராது. எனக்கு எல்லாம் செய்யும்படியான ஒரு சூழல் ஏற்பட்டதால் செய்ய முடிந்தது. படங்கள் அழகு. மிக்க நன்றி. அந்புடன்
18.
Geetha Sambasivam | 12:48 முப இல் ஏப்ரல் 9, 2021
பதஞ்சலியின் கோதுமை நூடுல்ஸ் தவிர்த்து வேறே சாப்பிட்டதில்லை. ஒரு முறை அதை வாங்கி அதில் செய்து பார்க்கலாம். நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் சோயா சாஸ் வாங்கினதே இல்லை. தேவையானால் தக்காளி சாஸ் சேர்க்கலாமோ? பாஸ்தாவை ஒரு முறை இம்மாதிரிக் காய்கள் கலந்து பண்ணிச் சாப்பிட்டோம். அதே போல் நூடுல்ஸையும் செய்து பார்க்கணும். பார்ப்போம்,.
19.
chollukireen | 11:43 முப இல் ஏப்ரல் 9, 2021
காட்மாண்டுவில் இருக்கும்போதே அவ்விடம் சைனீஸ் நூடுல்ஸ் அறிமுகமாகி விட்டது. அப்போதெல்லாம் மலிவுகூட.. நன்றாகச் செய்ய வந்தது எல்லாம் ஜெனீவா வாஸத்தின்போதுதான். நம் ருசிக்குத் தக்கவாறு செய்யலாம். இப்போது பேத்திகள் பல தினுஸுகளில் செய்கிரார்கள். பாஸ்தா,நூடல்ஸ் யாவற்றையும் தக்காளிசாஸ் போட்டு செய்தால் நன்றாகவே இருக்கிறது. ஜமாயுங்கள். அன்புடன்
நன்றி