அரிநெல்லிக்காய் சாதம்.
பிப்ரவரி 16, 2015 at 12:09 பிப 16 பின்னூட்டங்கள்
கலந்த சித்ரான்னம் மேலே உள்ள படம்.
இப்போதுஅரிநெல்லிக்காய்ஸீஸன்.அரிநெல்லிக்காயிலும்
பலவிதங்கள் செய்யலாம். ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.
சென்னையில் எங்கள் வீட்டு மனையில் அரிநெல்லிமரம் இருக்கிறது.
இரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்
வாங்கி பச்சையாகத் தின்போம். ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்
இப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி, ஜூஸ் என எல்லா விதத்திலும்
உபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.
வீட்டுமரம் என்றால் பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.
நீங்களும் செய்து பார்க்கலாமே!!!!!!! இதனுடைய புளிப்பு
ருசி வித்தியாஸமானது.
வேண்டியவைகள்.
அரிநெல்லிக்காய்——புளிப்புக்குத் தக்கபடி–12
உதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்
பச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்
இஞ்சி—சிறிதளவு
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு வகைக்கு
சிறிதளவு.
கலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி
பெருங்காயப் பொடி—வாஸனைக்குச் சிறிது
நல்லெண்ணெய்—-3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கறிவேப்பிலை சில இலைகள்.
செய்முறை.
நல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து
கொப்பரைத் துருவல் மூலம் துருவிக் கொள்ளவும்.
சாதம் இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஆறவிடவும்.
நான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ
எண்ணெயைக் காயவைத்து முறையே கடுகை வெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கவும்.
துருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.
உப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து சுருள வதக்கவும்.
கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, சாதத்தில்க் கொட்டிக்
கலக்கவும்.
வறுத்த வெந்தியப்பொடி,சீரகப்பொடி சேர்க்கலாம்.
காரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்
போது சேர்த்து வதக்கலாம்.
காரம் அதிகமாக்கிக் கொள்ளவும்.
முந்திரி,மணிலாக் கொட்டையும் சேர்த்தால் கண்ணிற்கும் அழகு.
. வாய்க்கும் ருசி.
ஜூஸ் , ஊறுகாய் , தொக்கு முதலானவைகளும் எழுதுகிறேன்.
செய்து ருசியுங்கள்.
Entry filed under: சித்ரான்னங்கள். Tags: அரிநெல்லிக்காய் இஞ்சி, பச்சைமிளகாய்.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Kumar | 12:47 பிப இல் பிப்ரவரி 16, 2015
Hello !
Nangal seithu ruchithu sapittuvittom.
Very very tasty.
2.
chollukireen | 10:09 முப இல் பிப்ரவரி 17, 2015
ஆமாம். நெல்லிக்காய் ஒருமுறை செய்து பார்த்து விட்டால், திரும்பவும் செய்யத் தோன்றும்..தோப்பு நெல்லிக்காயிலும் செய்யலாம். பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
பிரபுவின் | 5:25 முப இல் பிப்ரவரி 17, 2015
நல்ல பதிவு அம்மா.என்றும் அன்புடன்…
4.
chollukireen | 10:11 முப இல் பிப்ரவரி 17, 2015
நெல்லிக்காயா,அல்லது என்பதிவா? மிக்க நன்றியும், ஸந்தோஷமும். அன்புடன்
5.
adhi venkat | 8:16 முப இல் பிப்ரவரி 17, 2015
சூப்பர் அம்மா. அரி நெல்லிக்காய் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. சாதம் ஜோரா இருக்கு. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
6.
chollukireen | 10:15 முப இல் பிப்ரவரி 17, 2015
ஆதி மிக்க ஸந்தோஷம். சென்னையில் கிடைக்கிறது,திருச்சியிலும் கிடைக்காமற் போகாது.
கண்ணில் தென்பட்டிராது. செய்துபார். பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்
7.
chitrasundar5 | 7:37 பிப இல் பிப்ரவரி 17, 2015
காமாக்ஷிமா,
அரிநெல்லிக்காயில் சாதமா ! புளிப்பும், இனிப்பும் கலந்து சூப்பராத்தான் இருக்கும். அரிநெல்லிக்காயைப் பார்த்தே பல வருடங்களாகிவிட்டது. இருங்கம்மா, படத்திலுள்ள நெல்லிக்காயை மீண்டும் ஒருமுறை நல்லாப் பார்த்துக்கிறேன்..
எங்க கொல்லியிலும் முன்பு இருந்துச்சு. ஊரில் இருந்தால் யாராவது கொடுப்பாங்க, சுவைத்துவிடலாம். இங்கே என்ன செய்வது. அன்புடன் சித்ரா.
‘நெல்லிக்காயா,அல்லது என்பதிவா?’ ___ உங்க பதில் பிடிச்சிருக்கு.
8.
chollukireen | 10:09 முப இல் பிப்ரவரி 18, 2015
இதுவும் ஸீஸனில் கிடைக்கும் காய். அதிகநாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வரவழைப்பதில்லை என்று நினைக்கிறேன். ஊறுகாய் முதலானதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கிறோம்.
ஆனாலும் நல்ல வாஸனையுடன் ருசி நன்றாக இருக்கிறது. நீ இந்தியா வரும் நேரம் அரிநெல்லி ஸீஸன் இல்லை போலும். மற்றபெரிய நெல்லிக்காய் வகைகள்
இங்கு எப்போதும் கிடைக்கிறது.. புளியங்கா மாதிரி அரிநெல்லிக்காயும் கிடைக்கும் என்ற வேறுமாதிரி சிந்தனை.. நல்லது நெல்லிக்காய் ஞாபகத்திற்கு இந்தக் குறிப்பு உதவும்., உன் பின் னூட்டத்திற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
9.
VAI. GOPALAKRISHNAN | 9:34 முப இல் மார்ச் 2, 2015
படங்களும் பதிவும் வெகு அருமை. அரிநெல்லிக்காய் சாதம் வாயில் நீர் ஊற வைக்கிறது. பாராட்டுக்கள்.
10.
chollukireen | 11:34 முப இல் ஜூலை 7, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் சென்னையில் செய்தது. ருசியுங்கள். அன்புடன்
11.
ஸ்ரீராம் | 1:51 பிப இல் ஜூலை 7, 2021
அரிநெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதா? நினைத்தாலே பல் கூசுகிறது! இதெல்லாம் நான் தஞ்சையில் இருக்கும் காலங்களில் அனுபவித்ததோடு போனது!
12.
chollukireen | 11:19 முப இல் ஜூலை 8, 2021
புளிப்பும் இனிப்புமாக ருசிப்பவர்களும் உண்டு இல்லையா? அன்புடன்
13.
Geetha Sambasivam | 1:23 முப இல் ஜூலை 8, 2021
அரிநெல்லிக்காய் சாதம் அருமையா இருக்கும் போல. இங்கே இவருக்கு மாங்காய் சாதம்/நெல்லிக்காய் சாதமெல்லாம் பிடிப்பதில்லை. எப்போவானும் ஒரு மாறுதலுக்குப் பண்ணுவேன். எனக்கு எப்போவும் கலந்த சாதங்கள் பிடிக்கும். சாம்பாரே பிடிப்பதில்லை. 🙂
14.
chollukireen | 11:14 முப இல் ஜூலை 8, 2021
விரும்பிச் சாப்பிடுவர்கள் இல்லாவிட்டால் செய்து என்னலாபம்? ஆனாலும் உங்கள் பின்னூட்டம் ருசியாக இருக்கிரது. அன்புடன்
15.
நெல்லைத்தமிழன் | 3:22 முப இல் ஜூலை 8, 2021
அரிநெல்லி அதிசயமா மார்க்கெட்டில் பார்த்தேன். 20 ரூபாய் இருக்கும்னு நினைத்தால் ஐம்பது ரூபாய்னு சொன்னாங்க. இப்போ வாங்கியிருக்கலாம்னு தோணுது.
இந்தப் பதிவை பத்து நாள் முன்பு போட்டிருந்தால் வாங்கியிருப்பேன். இதுவரை அரிநெல்லி சாதம் சாப்பிட்டதில்லை
16.
chollukireen | 11:17 முப இல் ஜூலை 8, 2021
அவ்வளவு விலையா? முன்பெல்லாம் கூறுகட்டி விற்பார்கள். மலிவாக இருக்கும். கலந்த சாதங்களில் இது ஒருவகை. அவ்வளவுதான். நன்றி.்ன்புடன்