தர்பூசணி ஜூஸ்.
ஏப்ரல் 29, 2015 at 7:59 முப 8 பின்னூட்டங்கள்
இதுவும் என்ன பிரமாதம் என்று கேட்கிறீர்களா?
திருப்பதி போயிருந்த போது ரோடில் பக்க வாட்டில் மலைபோலக்
குவிந்திருந்தஇந்தப் பழம் மலிவாகத் தோன்றியது. வாங்கி வந்தது
பெரிய பழம்.
எப்படிச் சிலவாகும் என்று யோசித்தபோது, பிளாகில் எழுத ஒரு ஐடம்
சிக்கியது என்று மனம் மகிழ்ந்தது.
ஜூஸும் செய்து,பருகி மகிழ்ந்து,படம் பிடித்து, எதற்காகப் படம்
பிடித்தோமோஅதை நிறைவேற்ற வேண்டாமா?
வேண்டிய அளவு செய்து பருகுங்கள்
வேண்டியவைகள்.
தர்பூசணிப்பழம்—-வேண்டிய அளவு . மேல்த்தோலையும், உள்ளிருக்கும் விதைகளையும் நீக்கவும். தோலை ஒட்டி வெண்மையான காய் போன்ற பகுதி இருந்தால் அதையும் நீக்கவும்.
பழப்குதியை மட்டும் உபயோகிக்கவும்.
துளி இஞ்சி
புதினா இலை —4
சர்க்கரை,அல்லது தேன்.–சிறிதளவு.
தேவைக்கேற்றார்போல எலுமிச்சைச் சாறு
உப்பு, அல்லது இந்துப்பு என்று சொல்லப்படும் காலா நமக்—கால் டீஸ்பூன்.
செய்முறை.
நறுக்கிய தர்பூசணிப்பழத்துண்டுகள்,இஞ்சி,இரண்டு புதினா இலை
இவைகளை மிக்ஸியில் அரைக்கவும்.
பழக்கூழை எடுத்து பாத்திரத்தில் விட்டு, காலாநமக்,சிறிது சர்க்கரை
சேர்த்துக் கலக்கவும். வேண்டிய அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
ருசிக்குத் தகுந்தாற்போல எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.. தேன்
சேர்க்கவும்.
அதிகம் தண்ணீர் விடத் தேவையில்லை. நீர்க்க வேண்டுமென்றால்
தண்ணீர் சிறிது சேர்த்து சர்க்கரை அதிகம் சேர்க்கவும்.
மிளகுகூட சிறிது பொடி செய்து சேர்க்கலாம் என்று தோன்றியது.
சாற்றை அப்படியே பருகினால் ருசி மிகவும் அதிகம்.
கண்ணாடிக் கோப்பைகளில் நிரப்பி, புதினாவால் அலங்கரிக்கவும்.
அழகான அருமையான ஜில் என்ற ஜுஸ் மனதையும் குளிர்விக்கிறது.
அளவெல்லாம் தரவில்லை. எவ்வளவு பழமோ உங்கள் விருப்பப்படி
செய்து சுவையுங்கள்.
Entry filed under: ஜூஸ்வகைகள். Tags: தர்பூசணி.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
yarlpavanan | 10:11 பிப இல் ஏப்ரல் 29, 2015
சுவையான பதிவு
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
2.
chollukireen | 8:47 முப இல் ஏப்ரல் 30, 2015
ஆமாம். பசியடங்கி ஜில்லுனு குடிக்க நன்றாக இருந்தது. நன்றி உங்கள் வருகைக்கு.
அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 1:03 முப இல் ஏப்ரல் 30, 2015
அருமையான ஜுஸ்…
ஜில்… ஜில்… ஜுஸ்…
4.
chollukireen | 8:49 முப இல் ஏப்ரல் 30, 2015
தலைப்புகூட ஜில்ஜில் ஜூஸ் என்று கொடுத்திருக்கலாம். நன்றி. அன்புடன்
5.
adhi venkat | 7:51 முப இல் ஏப்ரல் 30, 2015
ருசியான ஜூஸ். டிப்ஸ்க்கும் நன்றிம்மா.
6.
chollukireen | 8:50 முப இல் ஏப்ரல் 30, 2015
செய்து பார்த்தாயானால் எல்லோரும் விரும்புவார்கள். அன்புடன்
7.
ranjani135 | 12:07 பிப இல் மே 1, 2015
எங்கள் ஊரிலும் கொட்டிக் கிடக்கிறது இந்தப் பழம். உண்மையிலேயே ஜில் ஜில் ஜூஸ் தான்! சென்ற வருடம் ஒரு திருமணத்தில் இந்த ஜூஸ் – மேலே இந்தப் பழத்தை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டிருந்தார்கள். மறக்க முடியாத ஜூஸ்!
8.
chollukireen | 4:01 பிப இல் மே 1, 2015
என்ன பிரமாதம். செய்து அடுத்தவர்களுக்கும் கொடுக்கலாம். கொட்டிக்கிடப்பதில் உங்கள் பங்கைத் தேர்ந்தெடுங்கள். அன்புடன்