பனீர்பரோட்டா

செப்ரெம்பர் 7, 2015 at 2:57 பிப 15 பின்னூட்டங்கள்

நீங்கள்யாவரும்,வெந்தயக்கீரை,உருளைக்கிழங்கு,, முள்ளங்கி ஆக பலவித பரோட்டாக்களைப் பார்த்து,செய்து, சுவைத்து இருக்கிறீர்கள். இந்தவரிசையில் பனீர் பரோட்டாவை ருசிக்க வேண்டாமா?

பனீர்பரோட்டா

பனீர்பரோட்டா

இதுவும்  பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால்  பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு  இதைச் செய்து கொடுத்தால்  கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.

வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்

பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு.  காரத்திற்குத் தகுந்த அளவு.

பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.

வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.

ருசிக்கு உப்பு,   எண்ணெய் வேண்டிய அளவு.

மாவை எப்போதும் போல  சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து  ஊறவைக்கவும். ஸ்டஃப்  செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.

பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும்.  மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும்.  மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி   மிகவும்   இழைபோல நறுக்கிக் கொள்ளவும்.  வெங்காயத்தையும் உரித்து  கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும்.  யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.

அழுத்திப் பிசைந்த  பன்னீரை சிறிது நேரம்  குளிர் பதனப்பெட்டியில் வைத்தாலும் நல்லது. தயாரிப்பதற்கு முன்  பனீரை ஸம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மாவையும் பனீரைவிட சற்றுப் பெரியதாக உருட்டிக் கொள்ளவும்.

மேல்மாவில் ஒற்றி ஒரு சிறிய வட்டம் செய்யவும். லேசாக எண்ணெய் தடவி மேலே  பனீர் பூரணத்தைத் தட்டையான ,ஷேப்பில் வைத்து  விளிம்புகளால் இழுத்து மூடவும். திரும்பவும் மேல்மாவின் உதவியுடன் வட்டமான பரோட்டாவாக இடவும். இப்படியே ஒவ்வொன்றாகத் தயார் செய்து,    தோசைக்கல்லில்  போட்டு எண்ணெயோ,நெய்யோ விட்டு பரோட்டக்களாகச் செய்து எடுக்கவும்.

தயாராகும் பரோட்டாக்கள்

தயாராகும் பரோட்டாக்கள்

அழகான,ருசியான

அழகான,ருசியான

Entry filed under: ரொட்டி வகைகள். Tags: , .

மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி ஸந்தோஷச்செய்தி

15 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  4:35 பிப இல் செப்ரெம்பர் 7, 2015

    கொஞ்சம் லேட் ஆகி விட்டது. இன்று மாலை இதுதான் வீட்டில் செய்தோம். ஆனால் பனீர் போடவில்லை. முன்னாலேயே பார்த்திருந்தால் பனீர் சேர்த்திருப்பேனே.. வீட்டில் பனீர் இருக்கிறது..

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  11:03 முப இல் செப்ரெம்பர் 8, 2015

      அதனாலென்ன. இன்னொருநாள் செய்தால்ப் போயிற்று. அடுத்தடுத்து பரோட்டாக்கள் வெளியிட்டால் செய்யப்போவது யார்தான். ஆனால் நான் செய்ததை உடனே போடாவிட்டால், அப்புறம் அது பழசாகிப்போய்விடுகிறது. பனீர் பிடிக்கும் என்று தெரிகிரது. ஒருநாள் காமாக்ஷிம்மாவும் சமையலரைக்கு வந்து விடுவார். ஸரிதானே? அன்புடன்.

      மறுமொழி
  • 3. chitrasundar's avatar chitrasundar  |  9:15 பிப இல் செப்ரெம்பர் 7, 2015

    காமாஷிமா,

    படங்கள் பளிச் என பார்க்கவே சாப்பிடணும்போல் சூப்பரா இருக்குமா. செய்முறையும் எளிதாகவே இருக்கு.

    இவர்கள் பனீர் சாப்பிடமாட்டார்கள், அதனால் வாங்குவதில்லை, எனக்காக டோஃபு வாங்குவேன். அதில் செய்து பார்க்கலாம். ஆனாலும் பனீர் டேஸ்ட் வராது. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 4. chollukireen's avatar chollukireen  |  11:08 முப இல் செப்ரெம்பர் 8, 2015

    இது ஒருவிதம்,அது ஒருவிதம் என்று தலைப்பு வைத்து எழுதிவிடு. இந்தியா மாதிரி வெளிநாட்டில் பனீர் டேஸ்ட்டாக இருக்கா தெரியாது. டோஃபு பரோட்டா நன்றாகவே இருக்கும். பளிச்சென்று இருப்பதில் ஒன்றைச் சாப்பிட்டுவிடு. அழகான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 5. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  4:56 முப இல் செப்ரெம்பர் 11, 2015

    வணக்கம்…

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது… நன்றி…

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    மறுமொழி
  • 6. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  4:57 முப இல் செப்ரெம்பர் 11, 2015

    வணக்கம்…

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது… நன்றி…

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    மறுமொழி
  • 7. chollukireen's avatar chollukireen  |  11:20 முப இல் மே 19, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இன்று முள்ளங்கி பரோட்டாவை மீள் பதிவு செய்ய நினைத்தேன். எதிரே வந்து விட்டது பனீர் பரோட்டா.பராட்டாவா,பரோட்டாவா? ஸந்தேகம் வந்து விட்டது. தமிழ்நாடுநான். எதுஸரியோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.ருசி பாருங்கள் அன்புடன்

    மறுமொழி
  • 8. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  2:20 பிப இல் மே 19, 2021

    அடடே…  இந்தப் பதிவின் முதல் கமெண்ட்டே நான்தான்!

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  2:42 பிப இல் மே 19, 2021

      இப்போதும் அதே கமெண்ட் தானா ஒரு முறையாவது செய்து பார்த்தீர்களா இல்லையா அதை தானே எழுத வேண்டும் பரவாயில்லை ஒரு முறை செய்து பாருங்கள் அன்புடன்

      மறுமொழி
      • 10. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  12:02 முப இல் மே 20, 2021

        ஆம் அம்மா.  அப்புறம் ஓரிருமுறை செய்திருக்கிறோம்.

  • 11. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  1:26 முப இல் மே 20, 2021

    பராட்டா, பரோட்டா, பராந்தா எல்லாமும் சரிதான். வடக்கே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரிச் சொல்கின்றனர். ஹரியானாப்பகுதியில் இதைத் தவா பூரி என்றும் சிலர் சொல்கின்றனர். ருசியான பனீர் பராட்டா. அடிக்கடி இங்கே உ.கி. பராட்டா தான் செய்கிறேன். பனீர் என்னமோ அவருக்குப் பிடிப்பதில்லை. எப்போவாவது! 🙂

    மறுமொழி
    • 12. chollukireen's avatar chollukireen  |  11:37 முப இல் மே 20, 2021

      மருமகள் ஊரிலில்லாத போது பேத்திகளுக்காகச் செய்தது இது. பரோட்டா பலவிதங்களில் பெயர் உச்சரிக்கப் படுகிறது. நீங்கள் சொல்வது ஸரிதான். இளைய தலைமுறை விரும்பும் பண்டமிது. அடிக்கடி செய்யப்படுகிரது. நான் மீள்பதிவு செய்தே ருசித்து விடுகிரேன். உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன். ஏதோ நேரில் பேசுவது போன்ற உணர்ச்சி.

      மறுமொழி
  • 13. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  11:43 முப இல் மே 20, 2021

    அருமை. இதற்கு ஊறுகாய், தயிர் நன்றாக இருக்கும். இல்லை வெறும்னவும் சாப்பிடலாம்.

    அது சரி…யார் இதை இப்போ பண்ணித்தரப்போறா?

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  11:50 முப இல் மே 20, 2021

      முடிந்தபோது செய்து சாப்பிட்டால் நன்றாக இருந்தது என்று நெல்லைத்தமிழன் சொல்லுவார். என்று நான் நினைத்தால் , யார் இப்போ பண்ணித் தரப்போறா? நல்ல கேள்வி இது. எங்கள் ப்ளாக் கௌதமன் அவர்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். ஸரியா. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 15. chollukireen's avatar chollukireen  |  11:53 முப இல் மே 20, 2021

    ஸ்ரீராம் அவர்களுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி

Geetha Sambasivam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2015
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,679 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Preferred Travel's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • ranjani135's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Vijethkannan's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.