போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி.2
ஒக்ரோபர் 12, 2016 at 4:22 பிப 10 பின்னூட்டங்கள்
கிராமம் பார்க்க வேண்டும் என்று நான் சொன்னதற்காக ஏரிக்கரையோர கிராமத்திற்கு அதுவும் பிரான்ஸில். நம்மூர்மாதிரி தெருவோர நாய்களும்,வண்டிகளும், குப்பை மேடுகளும், குடிசைகளும் பார்க்க முடியாது. காரும், அழகிய வீடுகளும் தோட்டமும், ஏரியை ஒட்டின பிக்னிக் பாகமும்.ஏரியைவிட்டு கிராமத்துள் நுழைகிறோம். பிரான்ஸ்.
அடுத்து சிறிது தூரம் என்ன வருகிறது? பார்ப்போம்.
கிராமத்து வீடுகளா? இன்னும் என்னென்ன?
ஓஹோ எவ்வளவு அழகு!!!!!!
இன்னும் சிறிது மேலே
ஓட்டு வீடு பார்ப்போம்.
எல்லாமே அழகிய வீடுகள்தாமா? இல்லை,இல்லை இப்படியும் இருக்கிறது.
ஊருக்குள் நுழைவோமா?
பார்த்துக்கொண்டே கிராம வாயில் முகப்பில் நாம்
அழகான கண்ணாடியில் செய்த எல்லாவித அழகுப்பொருட்களும் அணி வகுத்திருக்கும் கடை. பார்ப்பதற்குதான் எவ்வளவு அழகு!!! வாங்க என்னவோப் போவதில்லை. பார்க்க என்ன கஷ்டம் வாங்க போகலாம்.
ஏதாகிலும் தேவையா உங்களுக்கு?
அடுத்தது என்னவாம்
இன்னும் ஒரு பகுதி.
ஆபரணங்களா
திரும்பப் போவோம் ஏரிக்கரைக்கு. பார்க்கத்தானே போகிறோம்.
அப்புறம் பார்க்கலாம். ஸரியா?
Entry filed under: பொழுதுபோக்கு.
10 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 4:34 பிப இல் ஒக்ரோபர் 12, 2016
படங்களும் பதிவும் பிரமாதம். கண்ணாடி ஆபரணங்கள் சும்மா ஜொலிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 4:37 பிப இல் ஒக்ரோபர் 12, 2016
போட்டவுடனே கமென்ட் பரிவுக்கு நன்றி. கடையைவிட்டு வெளியே வரவே மனதில்லை. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:44 முப இல் ஒக்ரோபர் 13, 2016
படங்களும், படங்கள் காட்டும் இடங்களும் மிக அழகு அம்மா.
4.
chollukireen | 8:25 முப இல் ஒக்ரோபர் 13, 2016
வந்தவுடனே குளிர் ஆரம்பிப்பதற்கு முன் போன இடங்கள். ரஸித்ததற்கு நன்றி. அன்புடன்
5.
கோமதி அரசு | 11:26 முப இல் ஒக்ரோபர் 14, 2016
நாங்களும் உங்களுடன் வந்த அனுபவம் கொடுத்த பதிவு.
படங்கள் அழகு.
6.
chollukireen | 12:04 பிப இல் ஒக்ரோபர் 15, 2016
ஆமாம் எல்லோரும் கூட வருமாறு அழைக்கிறேன். மானஸீகமாக வந்தாலும் ஸந்தோஷமே! அன்புடன்
7.
V Gurumurthy | 3:37 முப இல் ஒக்ரோபர் 12, 2020
நம் நாடு நம் நாடுதான்.
அயல் நாடு அயல் நாடுதான். இங்கே அரிசி
அங்கே கோதுமை.
இங்கே தில்லை
அங்கே அது இல்லை.
8.
chollukireen | 11:03 முப இல் ஒக்ரோபர் 12, 2020
இன்று மார்க் ஸகோதரர் ஞாபகமூட்டினார். நம் நாடு நாடுதான். பார்த்த நாடுகளின் ஞாபகங்கள் அவ்வப்போது வருமல்லவா? அங்கே கோதுமையும் இல்லை.அரிசியும் இல்லை.மக்காச் சோளம்தான். பழங்கள் பலவிதம். தில்லை இல்லை.தில்லையைத் தெரிந்தவர்களுண்டு. கலாசாரமே வேறுபட்ட நாடு இல்லயா? நன்றி அன்புடன்
9.
ஸ்ரீராம் | 6:25 முப இல் ஒக்ரோபர் 12, 2020
கிராமம் மாதிரியே தெரியவில்லை. அந்த ஊர் கிராமங்கள் எல்லாம் நம்மூர் நகரங்களைவிட நன்றாய் இருக்கும்போலும்.
10.
chollukireen | 11:19 முப இல் ஒக்ரோபர் 12, 2020
குளிர்ப்ரதேசம் அல்லவா? ஓரளவு வீடுகள் நல்ல முறையில் கட்டப்பட்டால்தான் வசிக்க முடியும். மக்கள்த் தொகையும் மிகக் குறைவு. நாகரீக முன்னேற்றமும் காரணமாக இருக்கலாம். வெளியில் மனிதர்களையே பார்க்க முடிவதில்லை. மொத்தத்தில் நீங்கள் நினைப்பதுபோல நானும நினைத்தேன். மிக்க நன்றி. அன்புடன்