தொட்டில்–16

நவம்பர் 8, 2016 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்

தொட்டில்

தொட்டில்

பண்டிட் எங்கிருந்து வந்தான்?

அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.

ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?

தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.

பையனுக்கும் சாய் ஒன்று.

இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.

வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா

. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு    ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.

பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.

நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.

அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும். அந்த தீதியும் நல்லவள்.
பேசிக்கொண்டே சாப்பாடு முடிகிரது. பையன் சுருசுருப்பா கூடமாட பழக்கப்பட்டவன்போல் ஒட்டிக்கொண்டு எல்லாவேலையும் செய்கிரான்.
ஸரி நான் பாத்துக்கறேன். மனதுக்கு பிடிக்கலைன்னா அனுப்பிடறேன் உங்கிட்டயேபஹினி..

வேலை செய்யும் சிறுவர்கள் காஞ்சா. சிறுமிகள் காஞ்சி.
இவன் பாவுன் என்றே அழைக்கப்பட்டான்.

அவனையும்  மாலை நேர பள்ளியில் சேர்த்து விட்டனர். சொல்லிக்கொடுத்த எளிய வேலைகளை சிக்கென பிடித்துக் கொண்டு, மேற்கொண்டு வேலைகளையும் தானே வலிய தெரிந்துகொண்டும்,     செய்து கொண்டும்  நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டு விட்டான்.அதிகம் படிப்பு ஏறவில்லை.
இதெல்லாம் பிள்ளைகளுக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவனும் பெரியவனானபோது அவனுக்கும் காதல் வந்தது. இவனைமாதிரியே அதுவும் ஒரு தாய்தந்தையரின் பிரிவால் கைவிடப்பட்ட அனாதைப் பெண்.
திரும்பவும் ஆள்தேடி அலைவதைவிட இவர்களையே நாம் நமதென பாவிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் , ஒரு சின்னஸ்வயம்வரம் வைத்து இருவருக்கும் மணம் முடித்து வைத்து, வீட்டிலேயே ஒருபகுதியில் தனிக்குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விட்டனர்.

பாசமான பிள்ளை மருமகள்போல் அவர்களின் உதவி இன்றிமையாதது என்ற நிலையும் வயோதிகத்தில் ஏற்பட்டு விட்டது. இதோ அந்த பெண்ணின் பெண் எப்படி பாசத்தைக் காட்டுகிறது. பார்த்தாயா?

கலர்க்கலர்

கலர்க்கலர்

தூங்கி எழுந்து வந்த பிள்ளைகளிடம் விவரித்து விட்டு, முன்போல் எங்களுடைய ஸொந்த காரியங்களையும், நாங்களாகவே செய்து கொள்ள முடிவதில்லை. அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டியுள்ளது. உங்கள் பெண் பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களின் வேறு கல்ச்சரில் வளர்ந்த மனப்பான்மையே வேறு விதமாக உள்ளது.

அவர்கள் விஷயத்திலும் நீங்களும் எவ்வளவோ ஈடு கொடுக்கும்படி உள்ளதையும், மன உளைச்சலையும் அறிய முடிகிறது.

எங்களுக்கு இங்கிருந்தால் எல்லாவித ஸௌகரியங்களையும் நாங்களே பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் மனைவிகளும் வேலைக்குப் போகிறவர்கள். யாரையும் குறை சொல்லவில்லை.

பண்டிட்டிற்காக சேர்ந்த பணத்திலேயே அவனுக்கும் வீடு வாங்கி வைத்து விட்டேன்.நிறைய உறவினர்கள் வரபோக இருக்கிரார்கள். பண்டிகை,பருவம் என எல்லோரும் வரபோக தனிமை அதிகம் வாட்டுவதில்லை.
ஸொந்த வீடு. நம் இஷ்டப்படி இருக்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மை குறைகிறது.

நம் ஸொத்து ஸுதந்திரத்தைப் பார்த்துக் கொள்ளும் வகையில் அவனுக்கும் சில ஏற்பாடுகள் செய்து விட்டேன்.
எங்களுக்குப் பிற்காலம் உஙகளிருவருக்கும் எல்லா ஸொத்துக்களும் பிரித்து எழுதப்பட்டு விட்டது.

பண்டிட்டின் பெண்ணிற்கும் கல்யாணம் ஏற்பாடு செய்து விட்டேன். நீங்கள் யாவரும் வாருங்கள்.
உங்களுக்கும் வயதானகாலத்தில் இங்கு வந்து ஸெட்டிலாக எண்ணம் தோன்றும்.
யோசனை செய்வதற்கே ஒன்றுமில்லை.

பிள்ளை குறுக்கிடுகிறான்.
பண்டிட் மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்வான் என்பது என்ன நிச்சயம்.

தேசம்,கலாசாரம்,சுற்றம்,அவனின் சூழ்நிலை. எங்களிடம் இதுவரை காட்டிய நேசம்,பணிவு எல்லாமாக எங்களை இந்த முடிவுக்கே கொண்டு வந்துள்ளது.

சில முடிவுகள் ஆண்டவனால் எடுக்கப்படுபவை. அதை மாற்ற யாராலும் முடியாது.
எங்கும்,யாருடனும்,எப்பொழுதேனும் எதுவும் மாறலாம். அதுவே தவிர வேறு என்ன செய்ய முடியும்.?

தீர்மான முடிவு. பார்ப்போம். பிள்ளைகளும் இப்படியே இரண்டு வருஷம் வந்துபோயினர்.

அவர்கள் பெண்ணுக்கும் அங்கேயே லவ் மேரேஜ் நடந்தது. அடுத்து பிள்ளையும் வரிசையில்

வருஷங்கள் உருளுகிறது. பண்டிட் மாறவேயில்லை.  வயதான பெற்றோரை அவன் பார்த்துக் கொள்ளும் விதமும்   அக்கரையாகவே இருக்கிறது..

பிள்ளைகள் வருவதாகப் போன் வருகிறது.    பண்டிட்டிற்குப் பேரன் பிறந்துள்ளது. அவர்கள் வரும் தேதியும் ஒத்துப் போகிறது.

பலூன்களுடன்

பலூன்களுடன்

தொட்டிலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

காலை எட்டு மணி ப்ளைட்டில் பிள்ளைகளின் குடும்பம்  வருகிறது.   ஏக குதூகலம்.
சொல்லாத தகவல். பேரன்மனைவியும்,கையில் குழந்தையும்.

புதியதாக  பெரிய பிள்ளையின் பேரன். அன்னியதேசக் கொள்ளுப்பேரன், இதுவரை சொல்லாத ஸஸ்பென்ஸ்    கோபம்,ஸந்தோஷம்,உண்மை கூறாததின் வருத்தம்  பல சுவைக் கதம்ப கூட்டலும்,மகிழ்ச்சியும்,கூடவே  கண்ணீரும். மருமகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே.அதற்கும் உடனே ஏற்பாடு.

புதியதாக வரும் மருமகளை ஆசீர்வதித்து , இருவருக்கும் டீக்கா எனப்படும் ,தயிரில்அக்ஷதைகலந்த சந்தன குங்குமப்பொட்டை திலகமிட்டு ஆசீர்வதித்து இனிப்பூட்டி பெரியவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அவர்கள் குடும்பத்து நபர் ஆவார்கள்.

இன்று இரட்டைத் தொட்டில் அலங்கரித்து எல்லோரையும் கூப்பிட்டு, விருந்துதான்.

மருமகளுக்கு  முதலில்  டீக்கா கொடுத்து வாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.

அடுத்து  கணவன் வீட்டில் வைத்து நாரண்.

நாம்புண்யாசனம் என்று சொல்லும் தூய்மைப்படுத்தலும்,பேரிடுதலும்.     அது கட்டாயமானது. வம்சத்து பெயர்கள் அதாவது ஸர்நேம் கொடுப்பது.  இரண்டு குழந்தைகளுக்கும்    செய்து விடலாம்.இதுவும் கட்டாயமானது.

விரைதானம் இந்துக்களின் வழக்கம் நேபாலி   வாத்தியார் வந்து  யாவற்றையும் இனிதாக நிறைவேற்றினார்.ஸூர்யகிருஷ்ணா ஒன்று, யுவகிருஷ்ணா மற்றொன்று.

மருமகள்கள், பேரன் பேத்திகள்,பிள்ளைகள்,உற்றார் உறவினர்களுடன்
பூக்களலங்காரத்துடன் இரட்டைத் தொட்டில்.
குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர் தொட்டிலில் கிடத்த

ஆடும் தொட்டில்

ஆடும் தொட்டில்

படங்கள் யாவும்  கூகல் உபயம்.  மிக்க நன்றி.

லாலிலாலய்யலாலி. ஓம்கார லாலிமால் மருகலாலி

லாலி சிவ புத்ர லாலீ  செந்தில் வளர் லாலி சிருங்காரலாலி.  என்று மனதில் பாட்டு தோன்றியது.

இரண்டொரு வருஷத்தில் நாங்களும் இங்கே வந்து விடுகிறோம் என்ற மகன்களை

ஆளுக்கொருவராக அணைத்துக் கொண்டனர் பெற்றோர்கள். தொட்டில்கள் நிதானமாகஆடுகின்றன!!!!!!!!!!!

Entry filed under: கதைகள். Tags: , , , .

ஜெனிவாஏரியைச்சுற்றி–4 பூர்ணிமா.

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  1:20 பிப இல் நவம்பர் 8, 2016

    அருமையான பதிவு. அழகழகான படத்தேர்வுகள். அதுவும் அந்தக்கடைசி படம் சூப்பரோ சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  3:37 பிப இல் நவம்பர் 8, 2016

      தொட்டில்களின் படங்கள் அழகாக யிருந்தது. எனக்கும் பிடித்தது. கடைசிபடம் ஸூப்பர். கருத்திற்கும் முதல் வருகைக்கும் மிகவும் நன்றி.அன்புடன்

      மறுமொழி
  • 3. chitrasundar5's avatar chitrasundar5  |  3:08 முப இல் நவம்பர் 9, 2016

    காமாக்ஷிமா,

    பெரியவர்களின் நன்மனதினால் மனநிறைவான தொட்டிலாக அமைந்துவிட்டது ! தேர்வு செய்த கலர்ஃபுல்லான படங்களும் பொருத்தமாய் அமைந்துள்ளன.

    இவ்வளவையும் நினைவுவைத்து அழகாய் கொடுத்ததற்கு நன்றிமா, அன்புடன் சித்ரா !

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  1:33 பிப இல் நவம்பர் 9, 2016

      பழமையும்,புதுமையும், மாற்றங்களும் நிறைந்த தொட்டில். கற்பனையும்,கலக்கங்களும்,முடிவும். நேபாள மனிதர்களின் நன்றியறிதல்களும் முக்கியமானது. பாசம் பேசுகிறது. படங்கள் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி சித்ரா. அன்புடன்

      மறுமொழி
  • 5. கோமதி அரசு's avatar கோமதி அரசு  |  4:46 முப இல் நவம்பர் 9, 2016

    அருமையாக சொல்லி செல்கிறீர்கள். நிறைவான கதை.
    தொட்டில் எல்லோர் மனதுக்கும் ஆனந்தம் அளித்து ஆடுகிறது.
    அன்புடன் கோமதிஅரசு

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  1:38 பிப இல் நவம்பர் 9, 2016

      மனிதர்களின் மனப் பின்னணி தெரிந்தால்தானே உள்ளர்த்தம் புரியும். உண்மையிலேயே நன்றியுள்ள வேலைக்காரர்களை நல்ல நிலையில் அமர்த்தும் பண்பு நேபாளிகளுக்கு உண்டு. உங்களின் ஆர்வம் கொடுக்கும் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  6:51 முப இல் நவம்பர் 9, 2016

    சுப முடிவு. மன மகிழ்வு.

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  1:44 பிப இல் நவம்பர் 9, 2016

      சுருக்கமாக சுபத்தையும்,மன மகிழ்வையும் ரஸித்து விட்டீர்கள். நன்றியுள்ள வேலைக்காரர்களுக்கு தன் குடும்பமாக பாவிக்கும் அளவிற்கு வசதிகளை அள்ளிக் கொடுக்கும் நேபாளிகள். அவர்களின் உறவுமுறைகள் என எழுதியிருப்பதாக எனக்கு ஒரு ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 9. chollukireen's avatar chollukireen  |  3:36 முப இல் ஜனவரி 5, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    நேபாலப்பின்னணியின் தொடர்ச்சி இது. சுதேச,விதேசத்துடன்,தாராளமான மனதுடன் ஆடுகின்ற அழகே தனியழகு இல்லையா அன்புடன்

    ன்

    மறுமொழி
  • 10. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  7:17 முப இல் ஜனவரி 5, 2021

    சுபமான நிறைவான முடிவு. நேபாளப் பின்னணியில் அழகான தொட்டில்கள். ஆயுசுடன் நன்றாக இருக்கட்டும்.

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  11:19 முப இல் ஜனவரி 5, 2021

      அவர்களுக்கு வாழ்த்துகள் கூறியதற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 12. புதியவன்'s avatar புதியவன்  |  11:03 முப இல் ஜனவரி 5, 2021

    நிறைவான குடும்பம். நேபாளப் பின்னணியுடன் தொட்டில் சுகமாக ஆடுகிறது.

    ஒவ்வொரு தேச மக்களின் பழக்கவழக்கம்தான் எவ்வளவு வேறுபடுகிறது.

    சுயம்வரம் என்பது என்ன? (நேபாளத்தில்)

    இப்போதுதான் ஒரு ஜோசியர் சொன்னார், 2021ல் நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் பெரிய பிரச்சனைகள் வரும், யுத்தம் வரை போகாவிட்டாலும் பிரச்சனைகள் அதிகமாகும் என்றார்.

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  11:37 முப இல் ஜனவரி 5, 2021

      சுயம்வரம் என்பது பார்த்துத் தேடிய வரனாக இருந்தாலும், அவர்களாகவே தேடிக்கொண்ட வரனாக இருந்தாலும், பெண் வீட்டில் மாப்பிள்ளையை அழைத்து, அருகம்புல் மாலை அணிவித்து சில சாங்கியங்களைச் செய்து,பெண் அவனுக்கு மாலை அணிவித்து, இனிப்பூட்டி வரித்ததை ஏற்றுக் கொள்வது. பின் சிலபேர்கள் வேறொரு நல்ல நாளில் கல்யாணமும் செய்வார்கள். செய்யாது இதையே காதல் விஷயமாக இருந்தால் அப்படியே அனுப்பவும் செய்வார்கள். எல்லாம் முற்கால சுயம்வரத்தின் சில அடிச்சுவடுகளதான்.
      அண்டை நாடுகள் என்றால் பிரச்சனைகள் ஸகஜம்தான். புதியவனாகிய உங்களை வரவேற்கிறேன். இதற்கு முன்பான தொட்டில்களையும் படியுங்கள். அன்புடன்

      மறுமொழி
  • 14. athiramiya's avatar athiramiya  |  5:59 பிப இல் ஜனவரி 5, 2021

    எல்லாமே மீள்பதிவாகப் போடுகிறீங்கள் போலும்.. நான் முன்பு படிக்கவில்லை, அழகிய தொடர்… கதைக்கேற்ப படங்களின் செலக்சனும் அழகு.

    மறுமொழி
    • 15. chollukireen's avatar chollukireen  |  11:17 முப இல் ஜனவரி 6, 2021

      எல்லோருடனும் தொடர்பு இருப்பதற்காக முடிந்த அளவு மீள்பதிவு மூலம் உலா வருகிறேன். இதையாவது தொடர்ந்து செய்ய முடிந்தால் அதுபோ தும். உங்கள் பாராட்டுதல்கள் பசுமரத்தாணியாக மனதில்ப் பதிந்து விட்டது. அடுத்து அன்னையர் தினப் பதிவுகளைப் போடலாமா என்று யோசிக்கிறேன். பார்க்கலாம் உங்களையும். அன்புடன்

      மறுமொழி
  • 16. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  12:17 முப இல் ஜனவரி 6, 2021

    இந்தத் தொட்டிலை ரசித்தேன். இன்னொரு நாட்டின், அதிலும் ஹிந்து தேசமாக இருந்தவர்களின் பழக்க வழக்கங்கள் படிக்க மிகவும் ரசனைக்குரியதாக இருக்கிறது.

    மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  11:24 முப இல் ஜனவரி 6, 2021

      நிறைய நேபாளிகளின் பழக்க வழக்கங்கள் கொண்ட கதைகள் மனதில்த் தோன்றுகிறது. எழுதுவதற்கு . எடுபடுமா தெரியாது. எழுதி அச்சேற்ற. வேண்டுமே! உங்களின் ரஸனை வரவேற்கத்தக்கது. தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 18. Revathi Narasimhan's avatar Revathi Narasimhan  |  5:41 முப இல் ஜனவரி 6, 2021

    அழகான கதை .வித்தியாசமான நடை.
    நன்றாக இருக்கிறது காமாட்சிமா.
    நேபாலையே நேரே பாசம் அனைவரையும் இணைக்கட்டும்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா,

    மறுமொழி
    • 19. chollukireen's avatar chollukireen  |  11:39 முப இல் ஜனவரி 6, 2021

      உஙகளுக்கும் இனிய புததாண்டு வாழ்த்துகள். உங்கள் மெயில் ஐடிக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன். சிந்திப்பதை எழுதுவதற்கு முடிவதில்லை. மீள்பதிவுதான் இது. கையில் உட்கார்ந்த இடத்தில் பேச தொலைபேசி. அதையே ஸரிவர பார்க்க முடிவதில்லை. எல்லா அவயவங்களுகும் வயதாகிவிட்டது. இதெல்லாம் ஸுய புராணம்.
      உங்கள் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி. வருகை தந்து கொண்டே இருங்கள். அன்புடன்

      மறுமொழி

புதியவன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நவம்பர் 2016
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,155 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.