Archive for நவம்பர் 6, 2017
பெருஞ்ஜீரகச் செடியின்அடி பாகம். bulb சமையலில்.
ஸாதாரணமாக இதன் கீரையை சமையலி்ல் உபயோகப் படுத்துவார்கள். பெருஞ்சீரகம் மருந்து வகைகளிலும், மஸாலா வகைகளிலும், மது தயாரிப்பிலும் உபயோகப் படுத்துகிறார்கள் என்பது நாம்படித்தும்,கேட்டும்,பார்த்தும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தக் கிழங்கு போன்ற அடிப்பாகத்தின் உபயோகம் எனக்குத் தெரியாது.
கீரையைப் பற்றி பகோடா,அடை,வடைஎன்று நானே கூட எழுதியிருக்கிறேன். இதன் அடி பாகம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
பார்க்க வெண்மையான நிறம். பூண்டு மாதிரியான , சற்றுப்பருமனான மடல் கொண்ட வடிவமைப்பு.
இதில் கால்ஷியம், காப்பர், இரும்பு,மெக்னீஷியம்,, பாஸ்பரஸ் போன்ற ஸத்துக்கள் நிறைந்திருக்கிரதாம். பிளட் பிரஷருக்கு மிகவும் நல்லதாம்.
இது எனக்கு அறிமுகமானதே ஜெனிவா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போதுதான். அதற்கு முன் அதிகம் இதைப் பற்றி நான் அக்கரை காட்டினதில்லை. இதனுடைய வடிவம் குழந்தைகள் விளையாடும் சொப்பினூடே காய்கறிகளில் இருந்தது. ஸரி நாம் இபபொழுது விஷயத்திற்கு வருவோம்.
இந்த அடிபாகத்து Bulb சமைக்க உதவுகிறது. ஸூப்,ஸேலட்,முதலானவைகள் செய்கிரார்கள். கோஸ் கறிபோல் சமைக்கவும் உதவுகிறது.
ஆஸ்ப்பத்திரியில் நோயுற்றவர்களுக்கு இதை வேகவைத்து அரைத்த மாதிரி உண்ணக் கொடுக்கிறார்கள். நமக்குதான் உபயோகப்படுத்தத் தெரிந்தால் போதுமே!
பொடியாக நறுக்கிப்போட்டு பகோடா,அடைவடைகளிலும் போட்டுப் பார்த்தது. எல்லாமே மிதமான சோம்பு வாஸனையுடன் கூடியதாக நன்றாக இருந்தது. தேங்காய் போடாத கறியாக ஜெனிவாவில் இருக்கும்போது செய்தது. அதை இங்கே எழுதுகிறேன். நறுக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்தேன்
கோஸ் நறுக்குவது போல மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலசி வடிக்கட்டவும். இது இரண்டுஅடிப்பகுதியில் செய்தது. கோஸ் நறுக்குவது போலதான். இதிலும் நடுவில் சற்று அழுத்தமான பாகம் இருக்கிறது.அதை நீக்கி விடவும்.
வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவைக்கவும். அரைஸ்பூன் கடுகை வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். வகைக்கு அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். சிறிதளவு நறுக்கி வைத்திருப்பதைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மீதியைச் சேர்த்து வேண்டிய உப்பு சேர்த்து வதக்கவும்.
கீழிறக்கி வேண்டுமானால் ஒருதுளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பெருஞ்சீரக வாஸனை லேசாகத் தெரிகிறது.
மூடித் திறந்து செய்தாலே வெந்து விடுகிறது. அவசியமானால் லேசாகத் தண்ணீர் தெளித்தாலும் போதும். நன்றாக வெந்து விடுகிறது.
காரட்,பீட்ரூட்,அவகேடோ, தக்காளி சேர்த்து ஸேலட்டும் பலவகைகளிற் செய்யலாம். இதன் கீரையையே சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நம்முடைய ஸ்டைலும் இல்லை. பலவித ருசிகளில் உப ஸாமான்கள் சேர்த்துச் செய்யலாம்.
உடனே கடைக்குப் போய் வாங்கும் பொருளாகத் தோன்றவில்லை. ஏதோ நமக்குப் புதியதாகத் தோன்றலாம்.
எழுதுவோமா வேண்டாமா என்ற யோசனையினூடேதான் எழுதுகிறேன்.
ஒரு குறிப்பு எப்போதாவது பிறருக்குச் சொல்லவாவது உதவும். இதன் கீரை சேர்த்துச் செய்யும் பகோடாக்கள் ருசியானது.
ஸூப்பில் கீரையும்சேர்த்துச் செய்யலாம். மற்றஸூப்களிலும் சேர்க்கலாம்.
மொத்தத்தில் ஸோம்ப் அதாவது பெருஞ்ஜீரக வாஸனை பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.