அன்னையர் தினப்பதிவு–19
மே 24, 2021 at 11:10 முப 3 பின்னூட்டங்கள்
பதிவு 19. அம்மாவின் வாழ்க்கையில் கிராமத்தில் ஒரு கால கட்டம் இது. விருந்தோம்பல்,ஸம்பிரதாயம், பங்கிடுதல், பேரன்,பேத்திகளுக்காக உபகாரங்கள் இப்படிச் சில நிகழ்வுகளுடன் வந்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
தொடருங்கள் எழுதுகிறேன் என்று சொன்னேனல்லவா?
வருஷா வருஷம் குப்பை மேட்டில் தானாக முளைத்துக் காய்க்கும்
சில கொடிகள். தப்பு முதல் என்று சொன்னாலும் காய்கள் அவ்வளவு
செழிப்பாகக் காய்த்து மகசூல் கொடுக்கும். பூசணி,பறங்கியைத்தான்
சொல்கிறேன்.
கிராமங்களில் அதிகம் ஓடு வேய்ந்த வீடுகளல்லவா? இப்படி முளைக்கும்
கொடிகளை மெள்ள ஓட்டின்மீது ஏற்றி விட்டு விட்டால்ப் போதும்.
பிறர் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் காய்களைக் காய்த்துத்
தள்ளும். பறங்கி,பூசணி எதுவானாலும் மார்கழிக்கோலங்களுக்கு அழகு
சேர்க்கஎனக்கு உனக்கென தேவை அதிகமாக இருக்கும்.கோலங்களின்
நடுவே, சிறிய பசுஞ்சாண உருண்டைகளின்மேல் மஞ்சள் நிற இப்பூவை
வைப்பதால் வீட்டிற்கும்,கன்னிப் பெண்களுக்கும் மிகவும் நல்லது என்ற
நம்பிக்கை.
மார்கழிக் கோலமும் பறங்கிப்பூவும்.
நன்றி கூகல்.தினமலர்.
பிஞ்சுகாய், முற்றினது, என வேண்டியவர்கள் எல்லோருக்கும் ஸப்ளை
ஆகும். இது வருஷாவருஷம் நிகழும் நிகழ்ச்சி.
சாம்பல் பூசணிக்காய் என்றால் வெயில் நாளில் பொரிவடாம் இட, சமைக்க
என நிறைய காய்கள் முன் ரிஸர்வு செய்து விடுவார்கள்.
எங்கள் ஊர் பூசணிக்காய் போட்ட பொரிவடாம் மிகவும் பிரஸித்தி..
தனியாகத்தான் பதிவு செய்ய வேண்டும்.
இது எங்கள் வீட்டில் காய்ப்பதும் பிரஸித்தி.
கொடியிலேயே காம்பு காய்ந்து நன்றாக முற்றின காய்களாகப் பார்த்து
பிறகு அதனைப் பறித்து , கயிற்றினாலான உறிகளில் பிரிமணையைப் போட்டு
அதன்மேல் வைத்து விடுவார்கள்.
காய்கள் ஆடாது அசங்காது, கெட்.டும் போகாது.
பார்ப்பதற்கு அவைகள் ஊஞ்சல் ஆடுவது போல் தான் இருக்கும்..
காய்கள் காய்க்கும் போதே முக்கியநாட்களில் …
View original post 334 more words
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed



1.
thulasithillaiakathu - கீதா | 3:40 முப இல் மே 25, 2021
நல்ல பசுமையான நினைவுகள் அம்மா. பூஷணி, மஞ்சள் பூஷணி ஆமாம் உரி போன்று அதில் வைத்து தொங்க விட்டால் எதுவும் ஆகாது. பூ வைத்த மார்கழி கோலம்.. என் நினைவுகளை மீட்டியது
ஆஹா பூஷணி (வெ பூ/இளவன்) பொரி வடாம் நம் வீட்டில் அம்மா போடுவதுண்டு. அவரிடம் கற்று நானும் போடுவதுண்டு. அம்மாவின் நினைவுகள் என்று பல நினைவுகளை மீட்டியது இப்பதிவு
உங்கள் அனுபவங்கள் நினைவுகள் வெகு சுவாரசியம் அம்மா
தொடர்கிறேன்
கீதா
2.
chollukireen | 11:12 முப இல் மே 25, 2021
பொரிவடாம் நல்ல வெயிலில் மூன்று நாட்கள் உலர வைக்க வேண்டும். வேலையும் அதிகம். இப்போது கடைகளில் கிடைக்கிறதோ என்னவோ தெரியவில்லை. உங்களுக்கும் செய்து வழக்கம் இருக்கிரது. படிக்கவே வடாம் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது.காரஸாரமாக. உங்கள் பதிவுகள் படித்தேன். ஸந்தோஷம். பதிலெழுதவில்லை. தொடர்ந்து வந்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
marubadiyumpookkum | 11:36 முப இல் ஜூலை 17, 2021
எனது மகன் மணியம் ஒரு ஆட்டோமொபைல் இஞ்சினியர் பி.ஈ. படித்து விட்டு
அசோக்லைலேண்ட் ஒசூர் in Tamil Nadu தொழிற்சாலையில் அரசுப்பட்டதாரி பயிற்சிப்
பணியில் இருப்பவர்க்கு ஏதாவது அங்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா அம்மா
உங்கள் மகன்கள் அல்லது குடும்பத்தார் மூலமாக…
நன்றி
அன்புடன்
கவிஞர் தணிகை.
உங்கள் பதில் கண்டு மேலும் விவரம் தருகிறேன்.