Archive for ஏப்ரல், 2021
ஜெவ்வரிசி கிச்சடி
உங்கள் பார்வைக்கு ஜெவ்வரிசிக் கிச்சடி பத்து வருஷங்களுக்கு முன்னர் பிரசுரித்ததைக் கொண்டுவந்து இருக்கிரேன். உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள். அன்புடன்
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.
அன்னையர் தினம்–15
எல்லாம் அடுத்தடுத்து இல்லாவிட்டாலும் நிகழ்வுகள் முக்யமானதை எழுதுகிறேன். மனம் கலந்த உணர்ச்சிகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம். அந்தக் குழந்தையின்
நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்
வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ. ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.
அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது
என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.
என்னுடைய இயலாமையை நினைத்துக் கொண்டேன்.
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி இருந்த நிலத்தையும் விற்று அடுத்த
பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து காலம் பறந்து கொண்டு இருந்தது.
எவ்வளவோ விஷயங்கள்.
என்னுடைய பெண்ணை தன்னுடன் இருக்க வேண்டும் என்று
சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்
கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி
மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்
ஆசைகள்.
கான்ஸர். இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி
பிடித்து விடும் என்று சொல்வார்கள்.
அந்த நோயினால் அப்பா பீடிக்கப் பட்டார். ஆனால் அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்
அவருடைய வாழ்வை முடித்தார்.
அம்மாதிரி…
View original post 357 more words
அன்னையர்தினம் 14
இன்று சொல்லுகிறேன் என்ற இந்த பிளாகை வேர்ல்ட் பிரஸ்ஸில் ஆரம்பித்து 12 வருஷங்கள் பூர்த்தி ஆகிறது. வாழ்த்து வந்தது. மிக்க நன்றி அவர்களுக்கு.
அன்னையர்தினப் பதிவு 14 உங்கள் பார்வைக்கு வருகிறது. பெண்ணிற்குப் பணிவு இருந்தால்மட்டும் போதாது. அவர்களின் பெற்றோருக்கும் பணிவு வேண்டும். இப்படியும் சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
கல்யாணம் ஆகிவி்ட்டது. விசாரம் விட்டது என்பது எல்லோருடைய
வாக்குகளும்.
விசாரங்கள், ஆரம்பம்தானே சிலருடைய வாழ்க்கைகளிில்.
ரிடயரான பின்னும் பெண்கள் பள்ளியில் அப்பாவிற்கு ஆங்காங்கே ஒரு
ஆறுமாத காலத்திற்கு வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு முறை
சென்னை வந்தபோது பெண் பாசம் பெண் வீட்டிற்குப் போயுள்ளார்.
இரண்டொருநாள் தங்கி விட்டு தங்க இடம் பார்த்துப் போவதாகச் சொல்லியும்
இருக்கிரார். அப்படி இருக்கையில் அவர்கள், அவ்விடமே தங்கி விடுவாரோ, என்ற
ஐயத்தில், அக்காவிடம் கேள்வி எழுப்பி இருக்கிரார்கள்.
அக்காவிற்கு மனது பொருக்க முடியாமல்,
அப்பா நீங்கள் இவ்விடமே தங்கிவிடுவீர்களோ என்று அச்சப் படுகிரார்கள்
என்று சொல்லி விட்டாள்.
போதுமே கோபக்கார மனிதர்களுள் ஒருவராகிய அப்பாவிற்கு, கிளம்பி விட்டார்.
எதிரே வந்த மாப்பிள்ளை, பெட்டியை கையில் வாங்கிக் கொண்டு, கொண்டுவிட
எத்தனித்தவரை, உங்கள் மரியாதை உங்களுடன் இருக்கட்டும், என்று சொல்லியபடி
வெளியே வந்தவர்தான்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், திரும்பப் போகவேயில்லை.
பெற்றவருக்கு இம்மாதிரி வீம்பு உண்டா? பெண்ணைப் படுத்துவதற்கு இதைவிட வேறு
காரணம் வேண்டுமா?
உங்களால் நம்ப முடியாது. இதை வைத்தே எவ்வளவோ நடந்து விட்டது.
அம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்
போனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.
யார் சென்னை சென்றாலும், போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி
அனுப்புவார்கள். இப்படியே மூன்று வருஷங்கள் கடந்தது.
அப்படிதான் அன்றொருநாள் கோவிலாராத்தில் ராஜி வந்திருந்தாள்.
அவளும் சென்னையில்தான் வாழ்க்கைப்…
View original post 529 more words
ஆசீர்வாதம் வேண்டுதல்
சொல்லுகிறேன் வலைப்பூவின் நட்புகள் all tomy,face book friendsயாவரின் ஆசிகளையும் வேண்டி இந்தப் பதிவு. அன்புடன் kamatchi mahalingam. காமாட்சி மஹாலிங்கம் மும்பை/ / யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 14—4–2021
மும்பை —13—4—2021

அன்னையர் தினம்—-13
கோபக்காரமனிதரை எப்படி எல்லாம் ஸமாளிக்க வேண்டியிருந்தது? இது ஒருமாதிரி ஸமாளிப்பு. பதிவு 13 ஆனாலும் பாருங்கள், இன்னும் வருமே. அன்புடன்
டிஸம்பரில் டில்லி
மாடியில் பூக்கள்
பணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்
அம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.
அதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்
கொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை
குடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்
வயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து
விடும்.
சந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக
சில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.
அம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.
ஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.
உனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.
போதாதா வார்த்தைகள்.
இதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.
வேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.
எனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.
கோபவார்த்தைகள். தாம்,தூம்
என்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி
இதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா
உன்னைச் சொல்ல முடியும்?
எல்லாம் தெரிந்த நீயே
ஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.
எவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது
அத்தை.
ஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி
எடுக்காதே. நான் பாத்துக்கறேன்.
ஓ!!!!!!!!!
இதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை
அப்படியே உணர்த்தி…
View original post 529 more words
தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.
தாய்லாந்துஸ்டைல் நூடல்ஸ் செய்முறைக் குறிப்புகள் இது. இக்காலத்தில் யாவருக்கும் புதுப்புது முறைகள் விரும்புகிரார்கள். ரஸிக்கிரார்கள். அப்படி இதுவும் ஒன்று. பாருங்கள்.செய்யுங்கள் விரும்பினால். அன்புடன்
ஒருமாதத்திற்கு அதிகமாகவே உடல்நலம் ஸரியில்லாததால் எதுவும்
புதியதாகஎழுத முடியவில்லை. ஜெனிவாவிலிருந்து மருமகள் இதைச்
செய்து படங்களும்அனுப்பி இருந்தாள்
நீங்களும் செய்து ரஸியுங்கள்.
தாய்லாந்து வகை நூடல்ஸ் இது. நமக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு
நாம் தயாரிக்கலாம். ஏதாவதொரு ஸாமான் இல்லாவிட்டால் அதற்கு மாற்றாக
ஏதாவதை உபயோகித்தால்ப் போகிறது.
வேண்டியவைகள்.
நூடல்ஸ்—-250 கிராம்.
எண்ணெய்—வதக்க,பொரிக்க—-4 டேபிள்ஸ்பூன்.
வெரும் வாணலியில் வறுத்துத் தோல்நீக்கி ஒன்றிரண்டாய்ப் பொடித்த வேர்க்கடலை கால் கப்.
நல்ல பனீரோ,அல்லது ஸோயா பனீரோ நறுக்கியது—1 கப்
பனீரை ஊறவைக்க ஸோயா சாஸ் —-1டீஸ்பூன்.
அரைப்பதற்கு வேண்டிய ஸாமான்கள்
சிகப்பு மிளகாய்—ஒன்று.பச்சை மிளகாயும் போடலாம்.
லவங்கம்—3
பூண்டு—2 இதழ்
இஞ்சி–தோல் சீவியது ஒரு அங்குல நீளம்.
ஸோயாசாஸ்—3 டீஸ்பூன்
இவைகளுடன் ஒருபாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
மேலே தூவி அலங்கரிக்க, ருசி கொடுக்க வேண்டிய ஸாமன்கள்.
ஸ்பிரிங் ஆனியன், அதாவது வெங்காயத்தாள் மூன்று செடிகள், துண்டுதுண்டாக
நறுக்கியது
அரை கப் பச்சைக் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது.
பேஸில் என்னும் துளசி இலை விருப்பத்திற்கு சிறிது.
ஒருகப் முளைவிட்ட தானியங்கள், விருப்பத்தைப் பொறுத்து.
ருசிக்கு,உப்பு. காரம் அதிகமாக்க,சில்லி சாஸ்.அல்லது பச்சை மிளகாய்.
மேகி விஜிடபிள் க்யூப் மஸாலாவும் உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாத்திரத்தில் அதிகமாக தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தபின் , நூடல்ஸைப் போட்டு வேகவைத்து, வடிதட்டில்க் கொட்டி,
அதன்மேல்க், குளிர்ந்த தண்ணீரை தாராளமாக
விட்டு அலசி, வடிக்கட்டித் துளிஎண்ணெய் சேர்த்துக்…
View original post 147 more words
அன்னையர் தினம்—12
வேளைக்கீரை மகிமையோ என்னவோ? எப்படிப்பட்ட இடங்கள், எந்தமாதிரி காலம், என்ன தேர்வு? வாருங்கள். அன்புடன்
அதென்ன வேளைக்கீரை ஸந்தேகம் எல்லோருக்கும். எங்களூரில்
கல்யாண வயதில் பெண்களிருந்தால், வீட்டுத் தோட்டத்தில்,தப்புச்
செடியாக, வேளை முளைத்தால், அது சுப சூசகமாகக் கருதப்படும்.
விவாகத் தேடல்களை சுருசுருப்பாகச் செய்தால், உடன் விவாகம் நடை
பெறும், என்ற ஒருநம்பிக்கை.
நம்பிக்கையில்லை, தேடலை ஊக்குவிக்கும் பூஸ்டர் என்றே சொல்லலாம்.
அந்த நாட்களில் குடும்பத்தில்,
பெண் ஒன்று பிறந்து விட்டாலே, அவர்களுக்கான, பாத்திரங்கள், ஏதாவது
நகை,நட்டுகள்,வெள்ளிப்பாத்திரங்கள்,என அம்மாமார்கள் சேமித்து விடுவார்கள்.
சின்ன குழந்தையாக இருக்கும்போதே சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?
பின் மூவாயிரம்போல் பணமிருந்தாலும்,கல்யாணத்தை ஒப்பேற்றி
விடுவார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது ஜோடிஜோடியாகச்
சேர்த்த பாத்திரங்கள் இருக்கிரது.
தான் போட்டுக் கொண்டிருக்கிர நகை இருக்கிரது. இரண்டையும் இரண்டாகப்
பிரித்தாலே ஓரளவு ஒப்பேற்றி விடலாம்.
மற்றது வரன் கூடிவந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
மனதில் தீர்மானமான யோசனை.
தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஏதாவது வரன் இருந்தா சொல்லு
இதே வாக்கியங்கள்தான்.
ஊரிலே வேம்பக்கா என்று எல்லோராலும் கூப்பிடப்படும் ஒரு
நடுத்தர வயது அம்மா உண்டு.
வாய் அவ்வளவு இனிமையாகப் பேசும். கையாலேயே ரவிக்கைகள்
அழகாகத் தைப்பாள்.
எல்லோருக்கும் தைத்தும் கொடுப்பாள். கூலி வாங்க மாட்டாள்.
அதற்கு மேலேயே மாங்காய்,தேங்காய், தோட்டத்து காய்கறிகள்
என சப்ளை செய்து விடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு பிள்ளை வாத்தியார் ட்ரெயினிங் முடித்து விட்டு
வாத்தியார் வேலை.
அவருக்குக் கிளி மாதிரி, பெண் என்பார்களே அப்படி ஒரு…
View original post 457 more words
உருளை கொத்தமல்லி பரோடா
இந்தப் பரோட்டா வகையையும் செய்து பாருங்களேன். அன்புடன்
மைக்ரோவேவில் உருளைக்கிழங்கைப் பதமாக வேகவைத்து.
ருசியான பூரணம் தயாரித்து இந்த ரொட்டியை நாம்
செய்யலாம்.
நிறைய பச்சைக் கொத்தமல்லி சேர்த்துச் செய்தால்
மிகவும் ருசியாக இருக்கிறது.
வேண்டியவைகள்
மூன்று நிதானமான சைஸ்—-உருளைக் கிழங்கு
பச்சைமிளகாய்–2
ருசிக்கு–உப்பு
சீரகப்பொடி,ஆம்சூர்–வகைக்கு அரை டீஸ்பூன்
கோதுமை மாவு–2கப்
வேண்டிய அளவு—எண்ணெய்
நெய்யும் கலந்து உபயோகிக்கலாம்.
ஆய்ந்த இலையாக கொத்தமல்லித் தழை–நிறையவே
செய்முறை—உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தம் செய்து
ஒரு மெல்லிய பாலிதீன் பையில் போட்டுச் சுருட்டி
7நிமிஷம் மைக்ரோவேவில் ஹை பவரில்வைத்து
எடுக்கவும். அல்லது
சுத்த பருத்தித் துணிப் பையை ஈரமாக்கிப் பிழிந்து, அதனுள்
உருளையை வைத்தும் 7 நிமிஷங்கள் ஹை பவரில்
வேகவைத்தும் எடுக்கலாம்.
அல்லது உங்களின் வழக்கம் எதுவோ அதைச் செய்யவும்.
வெந்த உருளைக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கிழங்கினை நன்றாக மாவாக
மசிக்கவும்.
கோதுமை மாவில் ஒன்றரை கப் எடுத்து,அதனுடன்
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, உப்பு சேர்த்து
திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்
மாவு ஊறட்டும். மீதி மாவு தோய்த்து இட.
பச்சை மிளகாயை நன்றாக வகிர்ந்து அதனுள்ளிருக்கும்
விதைகளை அகற்றி மெல்லியதாகக் கீறி மிகவும்
பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமாக உப்பு ,நறுக்கிய மிளகாய், சொல்லியுள்ள
பொடிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,
மசித்த உருளைக்கிழங்கு இவை யாவையும் ஒன்று
சேர்த்துப் பிசையவும்.
கொத்தமல்லிப் பூரணம் ரெடி
View original post 134 more words