Archive for மே, 2021
அன்னையர் தினப்பதிவு—20
பதிவு இருபதை எட்டி விட்டது. கையில் பணம் காசு எதுவும் ரெடி இல்லை. ஸம்ஸாரி.கல்யாணம் பேச வந்து, இப்போது எதிர் பார்ப்பு எது என்று தெரியாத நிலை. இப்படியும் எதிர்பார்ப்புகள்.ஸாமான்யகுடு்பத்தின் நிலை. அன்புடன்
நான் காட்மாண்டுவிலிருந்த பொழுது வழக்கமாக 2அல்லது மூன்று
வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தியா வருவது வழக்கம்.
அதுவும் ராயல் விமான சேவையின் பிளேன்கள் ஏதாவது
ஸாமான்கள் கொண்டுவர தில்லியோ,கல்கத்தாவோ வரும்.
அம்மாதிரி ஸமயங்களில் இலவசமாகப் ப்ளேன் ஸவாரி கிடைக்கும்.
எந்த இடமோ இடமோ அங்கு வந்து அவ்விடமிருந்து இரயில் பிடித்து
எங்கு போக வேண்டுமோ அங்கு போகலாம். பிள்ளைகளின் விடுமுறை
ஸமயம் வந்தால் மட்டுமே நான் வருவேன்.
ஊரில் எல்லோரும் உறவுக்காரர்கள்.
அப்படி முன்பு எப்பொழுதோ போன ஸமயம், அம்மா எங்கள்
உறவினரைக் காட்டி அவர்கள் வந்தபோது, உன் பொண்ணுக்கு உடம்பு
கிடம்பு ஏதாவது வந்து விட்டால், மருந்து மாத்திரை சாப்பிட அப்படி ஒரு
படுத்தல். இவர்களைத்தான் கூப்பிடுவேன்.
சிவனேன்னு நல்ல வார்த்தைகள் சொல்லி இவ கொடுத்து விட்டால்
மாத்திரை மெள்ள உள்ளே போகும்.
அப்படியா மாமி ரொம்ப நன்றி மாமி என்றேன். இதெல்லாம்தான் பெரிய
உதவி என்றேன்.
இதெல்லாம் எப்போது? பெண்ணெல்லாம் சின்னப் பெண்ணாக இருந்த
போது. இதெல்லாம் அம்மா செய்வதைவிட என்ன பெரிசு.
ஒரு வேளை இவ என் மாட்டுப்பெண்ணாக வரப்போகிறாளோ
என்னவோ?
ப்ராப்தம் இருந்தால் அப்படிக்கூட நடக்கலாம் இல்லையா?
இப்போபிடிச்சு என்ன வார்த்தை மாமி!
நாங்களெல்லாம் ஜாஸ்தி படிக்கலே. இவதானே பெரியவோ?
இவளை நன்னா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பணும்.
கல்யாணம் என்பதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.
அதற்குள் அம்மா குறுக்கிட்டு, இப்படியெல்லாம் பதில் சொல்லலாமா?
அதற்கென்ன…
View original post 503 more words
புடலங்காய்க் கறி.
தமிழ்நாட்டுக் காய்கறிகளே அலாதி ருசி.அப்படி எளிய முறையில் செய்த இந்தக் கறி சென்னை வந்தபோது செய்ததை மீள் பதிவு செய்திருக்கிறேன். ருசியுங்கள். அன்புடன்
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். …
View original post 5 more words
அன்னையர் தினப்பதிவு–19
பதிவு 19. அம்மாவின் வாழ்க்கையில் கிராமத்தில் ஒரு கால கட்டம் இது. விருந்தோம்பல்,ஸம்பிரதாயம், பங்கிடுதல், பேரன்,பேத்திகளுக்காக உபகாரங்கள் இப்படிச் சில நிகழ்வுகளுடன் வந்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
தொடருங்கள் எழுதுகிறேன் என்று சொன்னேனல்லவா?
வருஷா வருஷம் குப்பை மேட்டில் தானாக முளைத்துக் காய்க்கும்
சில கொடிகள். தப்பு முதல் என்று சொன்னாலும் காய்கள் அவ்வளவு
செழிப்பாகக் காய்த்து மகசூல் கொடுக்கும். பூசணி,பறங்கியைத்தான்
சொல்கிறேன்.
கிராமங்களில் அதிகம் ஓடு வேய்ந்த வீடுகளல்லவா? இப்படி முளைக்கும்
கொடிகளை மெள்ள ஓட்டின்மீது ஏற்றி விட்டு விட்டால்ப் போதும்.
பிறர் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் காய்களைக் காய்த்துத்
தள்ளும். பறங்கி,பூசணி எதுவானாலும் மார்கழிக்கோலங்களுக்கு அழகு
சேர்க்கஎனக்கு உனக்கென தேவை அதிகமாக இருக்கும்.கோலங்களின்
நடுவே, சிறிய பசுஞ்சாண உருண்டைகளின்மேல் மஞ்சள் நிற இப்பூவை
வைப்பதால் வீட்டிற்கும்,கன்னிப் பெண்களுக்கும் மிகவும் நல்லது என்ற
நம்பிக்கை.
மார்கழிக் கோலமும் பறங்கிப்பூவும்.
நன்றி கூகல்.தினமலர்.
பிஞ்சுகாய், முற்றினது, என வேண்டியவர்கள் எல்லோருக்கும் ஸப்ளை
ஆகும். இது வருஷாவருஷம் நிகழும் நிகழ்ச்சி.
சாம்பல் பூசணிக்காய் என்றால் வெயில் நாளில் பொரிவடாம் இட, சமைக்க
என நிறைய காய்கள் முன் ரிஸர்வு செய்து விடுவார்கள்.
எங்கள் ஊர் பூசணிக்காய் போட்ட பொரிவடாம் மிகவும் பிரஸித்தி..
தனியாகத்தான் பதிவு செய்ய வேண்டும்.
இது எங்கள் வீட்டில் காய்ப்பதும் பிரஸித்தி.
கொடியிலேயே காம்பு காய்ந்து நன்றாக முற்றின காய்களாகப் பார்த்து
பிறகு அதனைப் பறித்து , கயிற்றினாலான உறிகளில் பிரிமணையைப் போட்டு
அதன்மேல் வைத்து விடுவார்கள்.
காய்கள் ஆடாது அசங்காது, கெட்.டும் போகாது.
பார்ப்பதற்கு அவைகள் ஊஞ்சல் ஆடுவது போல் தான் இருக்கும்..
காய்கள் காய்க்கும் போதே முக்கியநாட்களில் …
View original post 334 more words
பனீர்பரோட்டா
இன்று முள்ளங்கி பரோட்டாவை மீள் பதிவு செய்ய நினைத்தேன். எதிரே வந்து விட்டது பனீர் பரோட்டா.பராட்டாவா,பரோட்டாவா? ஸந்தேகம் வந்து விட்டது. தமிழ்நாடுநான். எதுஸரியோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.ருசி பாருங்கள் அன்புடன்
நீங்கள்யாவரும்,வெந்தயக்கீரை,உருளைக்கிழங்கு,, முள்ளங்கி ஆக பலவித பரோட்டாக்களைப் பார்த்து,செய்து, சுவைத்து இருக்கிறீர்கள். இந்தவரிசையில் பனீர் பரோட்டாவை ருசிக்க வேண்டாமா?
இதுவும் பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால் பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு இதைச் செய்து கொடுத்தால் கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.
வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்
பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு. காரத்திற்குத் தகுந்த அளவு.
பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.
வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.
ருசிக்கு உப்பு, எண்ணெய் வேண்டிய அளவு.
மாவை எப்போதும் போல சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். ஸ்டஃப் செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.
பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும். மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி மிகவும் இழைபோல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் உரித்து கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும். யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.
அழுத்திப் பிசைந்த பன்னீரை சிறிது நேரம் …
View original post 57 more words
அன்னையர் தினப்பதிவு 18
நான்குபேர்கள் கூடி விசாரிக்கிரார்கல் என்றால் நாம் என்ன தப்பு செய்திருப்போம்? நிலம்,நீர் எல்லாம் பசங்கள்தானே? மனுஷா எல்லோருடனும் இருக்கிறோம். ஒருவரும் இல்லை,என்று சொல்வார்களா? இல்லே கஷ்டப்படுவதைப் பிறரிடம் சொல்வதா? யோசனைகள் இந்தவிதம். படியுங்கள்.பதிவு 18. அன்புடன்
உங்களுக்கு எத்தனை வயது? ஸொந்த வீடு நிலம் உள்ளதா? இப்படி
சில கேள்விகள் கேட்பதற்குத் தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
கூட யார் இருக்காங்கோ?
வாங்க உக்காருங்க, எல்லாரும் புதுசா இருக்கீங்க எனக்கு யார்,என்ன
எதுவுமே புரியலே!
யாரைப் பாக்கணும் உங்களுக்கு?
தலைப்புடவையை ஸரிசெய்து கொண்டு,தலைப்பை இழுத்துப்
போர்த்திக் கொண்டு, நிக்கறதைப் பார்த்து,
அக்கம்பக்கம் வாசலில் துணி உலர்த்த, அது இது என்று வந்தவர்கள் கூட
என்ன யார் வந்திருப்பதுபோல் பார்வை!
பாட்டியாத்துக்கு யார்யாரோ வந்திருக்காயென்று நியூஸ் கொடுத்துக்
கொண்டே ஓடும் சிறுவர்கள்.
என்னைப் பற்றி கேக்கறீங்க இல்லையா?
ஸொந்த நிலம்நீர் எல்லாம் இருக்கு,வேறெ வடிவத்தில்.
கூடவா, இந்த ஊரிலிருக்கறவங்க எல்லார் கூடவும் நான் இருக்கேன்.
பேத்தி இருக்கு. கூட.
ஒரு நிமிஷம் இருங்க, வந்துட்டேன்.
கீழே இறங்கிப் பார்க்கிறாள்.
அருணாசலம், வாப்பா,நல்லஸமயம் நீ வந்துட்டே.
என்னென்னவோ கேட்கிறார்கள்.
வழிவசமா நீயும் வந்தே,
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறேன்.
இவரு எங்க மனுஷரு.
மனுஷரு யார் தெரியுமா? ~ஒரு ஸ்கூல் வாத்தியார். உறவுகாரரும் கூட.
அம்மா மாதிரி ஒரு ஸோஷியல் ஒர்க்கரும் கூட.
நான் சொல்றேன் இப்போ இந்தப் பெயர். அவர்களுக்கு அந்த நாளில்
உபகாரி என்று சொல்லுவார்கள்.
எங்காவது பொதுக் கூட்டமா,ஆன்மீக பஜனையா? கோவில் ஸம்பந்த
வஸூலா, அவர் வருவார்.
ஓட்டுப்போட அழைத்துப் போகவும் வருவார்.
ரேஷன் காலத்தில் கவர்மென்ட் கட்டாய நெல் கொள் முதலா?
அதிகாரிகளுக்குஒத்தாசையாக நெல் வைத்திருப்பவர்களிடம்,
நியாயத்தைஎடுத்துச் சொல்லிஒரு …
View original post 384 more words
காரக்குழம்பு
எதையாவது மீள் பதிவு செய்யலாம் என்று யோசித்ததில் காரக்குழம்பு கூடவே இருந்தது. பிரமாதமானது இல்லை. ஒரு மாறுதல். நீங்களும் சற்று மாறுதல் செய்து கொள்ளுங்கள். அன்புடன்
சமையல் எழுதியும் வெகு நாட்களாயிற்று. ஏதாவது எழுதுவோம்
என்றுத் தோன்றியது.
சென்னையிலிருந்தபோது என் பெண்ணின் சினேகிதி ஒருவர்
வந்திருந்தாள்.
இது எப்படி,செய்வீர்கள், அது எப்படிச் செய்வீர்களென்று பல வித
குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் கேட்ட விஷயங்களில், சில வித்தியாஸமான அவளின்
சமையல் குறிப்புகளையும் சொன்னாள்.
நமது வழக்கமான குறிப்புகளில் அவர்களது சின்ன வித்தியாஸம்.
நான் காரக்குழம்பு என்ற பெயரில் செய்ததில்லை. மற்றும்
ஹோட்டலில் சாப்பிடப் போனால் கூட இப்படி ஒரு வகையும்
கொடுப்பது தெரிந்தது.
ஸரி இதையும் செய்ததில், நல்ல சுவையுடன் விரும்பிச்
சாப்பிடுவதை பார்க்க முடிந்தது.
ப்ரமாதம் ஒன்றுமில்லை. வெங்காயப்,பூண்டு சேர்மானம்.
பிடித்தவர்களுக்கு ருசி.
வாருங்கள். செய்து ருசியுங்கள். சின்ன அளவில்ச் செய்தது.
அதையே நீங்களும் செய்து பாருங்கள்.
கொதிக்கத் தயார்நிலையில்க் கலவை
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு.
செய்முறை.
புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்
கொள்ளவும்.
புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.
திட்டமாக உப்பு சேர்க்கவும்.
ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
View original post 43 more words
அன்னையர் தினப்பதிவு–17
அப்பா பூஜையில் உபயோகப்படுத்திய சங்கைப் பார்த்ததில் ஒரு ஆனந்தம். அதனை ஒட்டியே இந்தப்பதிவு நீள்கிறது. அம்மாவின் அந்த ஒருவருஷம். டாக்டரின் ராசி என்று செல்கிறதுஇந்தப் பதினேழாவதுப் பதிவு. நேற்று அன்னையர்தினப்பதிவு முதலாவதை வேர்ட்பிரஸ்ஸே ஞாபகப்படுத்தி இருந்தார்கள் விசேஷப் பதிவினில், படியுங்கள். அன்புடன்
வெள்ளி வேலைப்பாடுகளுடன் கூடிய அப்பாவின் புராதன சங்கு
தாமதமாகத் தொடர்ந்தாலும், ஒரு சங்கின் தரிசனம் பற்றி
எழுதுகிறேன்.
ஒருமாதத்திற்கு முன்னர் என்பிள்ளையின் குடும்பத்தினருடன் புனே போய்
வந்த போது,அவ்விடம்தங்கிய என்னுடையஅம்மா வழி மூன்றுதலை
முறையிலானநெருக்க உறவுகுடும்பத்தினருடன் ஒருநாள் தங்கி இருந்தேன்.
பேச்சுக்கள் எங்கெங்கோ சென்று அப்பாவின் பூஜையில் உபயோகித்த
சிறியஉருவிலான பழமை வாய்ந்த சங்கின் ஞாபகம்வந்தது.
அம்மா, அதை அவர்கள் அப்பாவை பூஜையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்
எனக் கொடுத்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தேன்.
அதை பூஜையில் உபயோகிப்பதாகவும், இவ்வளவு பழமை வாய்ந்தது
எனத்தெரியாதெனவும் சொல்லி அதை எடுத்துக் காட்டினார்
.அவரப்பாவின்பூஜையது.
எங்கள் வரவேற்பரையில்
நடராஜருடன் பித்தளைச் சங்கு.
கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்திலிருந்தாலும், ஆசார சீலமான
குடும்பம்,
அந்தச் சங்கின் தரிசனம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் குடும்பமும்
அவர்களின் அன்பும் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது.
பளிங்குக் கல்லிலான
நானும் இருக்கிறேன்.
சங்கை படமெடுத்து வந்தேன். பொக்கிஷமான தரிசனம் அல்லவா?
பின்னாடி வரும் டாக்டரும் பரிச்சயமானதும் அவரின் தாத்தாவிற்கு
வைத்தியம் செய்த போதுதான்.
இது ஒரு ஐம்பது வருஷக் கதை. உன் அப்பா பூஜையில் உபயோகித்தது,
என் அப்பாவின் பொக்கிஷம் என்றுசொல்லிவிட்டு வந்தேன்.
இனி அம்மாவைப் பார்க்கலாம்.
அம்மாவிற்கு எங்கும்,போகவர முடியாத அந்த வொரு வருடம் எப்படிக்
கழிந்தது என்ற போது அதுவும் ஸரியான முறையில்தான்க்
கழிந்தது. என் பெண் அவர்களுடன் இருந்தவளைத் தொடர்ந்து
படிக்க…
View original post 467 more words
சீஸ்பால்ஸ்
சற்று உலர்ந்த Bபிரட்டைப் பொடி செய்து தயாரித்த சிற்றுண்டி இது. சீஸ் யாவரும் விரும்பும் பொருளாகவும் ஆகிவிட்டது. செய்துதான் பாருங்களேன். அன்புடன்
மேலே இருப்பது சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய சில ஸாமான்கள். நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில் யாவரும் காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
செய்வது ஸுலபம்தான். இக்காலங்களில் சீஸ் சேர்த்த பண்டங்கள் யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது. பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள். வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.
பிரட்ஸ்லைஸ் —3, பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2. காப்ஸிகம்1 துருவின சீஸ் மூன்று டேபிள்ஸ்பூன், சிறிது முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய். ருசிக்கு–உப்பு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் அரைத்த விழுது சிறிதளவு
செய்முறை—–பிரட்டை மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உறித்து சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும். ஆறினவுடன் பிரட் பொடியில் ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு சேர்த்துக் கெட்டியான பதத்தில் பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.
அடுத்து பொடியாக நறுக்கிய கேப்ஸிகம்,கோஸுடன் சீஸ்,மிளகுப்பொடி,உப்பு சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கலவையில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய கிண்ணம் போல விரல்களால் அகட்டிச் செய்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து பக்குவமாக மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில் லேசாகப் பிரட்டவும்…
View original post 44 more words
அன்னையர்தினப்பதிவு—16
போகிறவர்கள் போய்விட்டாலும், காரியங்கள் நடக்க வேண்டுமே! அந்தநாள்க் கதைகள்.அம்மாவினுடயது அலாதிதானே. படியுங்கள். பகுதி 16. அன்புடன்
என்ன எந்தமாதிரி ஒரு இடத்தில்க் கொண்டு நிறுத்தி விட்டுத்
தொடரவில்லை. அந்த அளவிற்கு சுகவீனம் எனக்கு.
இப்போது எழுதத் துவங்க ஆரம்பித்து இருக்கிறேன்.
வாருங்கள். என்னவென்று,
வாசலில் சவுக்கு வண்டி அதாவது விரகுக்கட்டை விற்பனைக்கு
வந்திருக்கு, வாங்கிப்போட்டால்தான் காயும்.
பெரிய காரியம் இருக்கு. நேக்கு எங்கும் போக முடியாது.
நீதான் செய்யணும். பசங்கள் நீ அழுதால் அதுகளும் அழும்.
ஆச்சு ஒருகாரியம்.நல்லபடியா போயாச்சு. மீதியைச்
செய்து கடையேத்தணும். ஒரு பத்து குண்டாவது விரகுவேணும்.
அப்படியே பொளந்தும் குடுத்துடச் சொல்லு. காசு கொடுத்துடரேன்னு
சொல்லு. வேலை சுலபமாகப் போய்விடும். அம்மா.
வாசலில் வந்தவுடனே மத்தவாள்ளாம் வந்துடரா.
நீ போ நாங்க பொளந்து வாங்கி வைக்கிரோம். பணத்தை
வாங்கிக் கொண்டு பொருப்பை ஏற்றுக் கொள்கிரார்கள்.
உங்கப்பா கேட்டாள்னு இந்த சின்ன பையன்கையாலே
மீதி காரியம் எல்லாம் வேண்டாம்.
ஸொத்தா வைச்சிருக்கோம். என் கை பில்லு வாங்கி
உங்க அத்திம்போரோ, மாமாவோ செஞ்சூடட்டும். அது
போதும். மீதி என்ன வேண்டுமோ,வேண்டாதோ அதில்
கவனம் செய். இது அம்மா
பார் எனக்கும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது,அக்காவின்
குறை.
தானம்,தர்மம், எல்லாம் எது செய்யணுமோ அதெல்லாம்
குறையாதிருக்க ஏற்பாடுகள் நடந்தது.
மெட்ராஸுலே அவளுக்குச் சொல்லிகூட இருக்க மாட்டார்கள்.
இல்லாட்டா அனுப்பி இருக்க மாட்டார்களா. அம்மாவிற்கு
இப்போதாவது பெண் வருவாளா என்ற நைப்பாசை.
அம்மாவுடய உடன்பிறந்தவர், மாப்பிள்ளை என எல்லோரும் வந்தாகிவிட்டது.
ஆளுக்கொரு லக்ஷணமான புடவையுடன்.
உடன்பிறந்தவர்,மைத்துனர், மாப்பிள்ளை,பிள்ளை என…
View original post 462 more words