Archive for மார்ச், 2021
அன்னையர்தினம். 11
அம்மாவின் அனுபவங்கள் இது ஒரு மாதிரி. முடிகிரதோ முடியவில்லையோ ஏதோ முயற்சிகள்.படியுங்கள்.அன்புடன்
வேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.
ஊரிலுள்ளவர்கள்கூடவேளைக்கீரை விளைச்சலை நம்புபவர்கள்.
ஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.
வேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.
அம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்
குழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.
ஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்
பேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.
குறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி
அவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்
இரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்
திண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று
தீர்மானமாகியது.
புடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு
ஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே
வாம்மா,வாவா.
எப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.
இல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.
உள்ளே போகலாம் வா,வா.
இல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.
அதிகமாக பேச ஒன்றும் இல்லே.
ஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.
என்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க
ஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்
கலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.
பையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.
அதிகம் பேசினாலும் கோபம் வரது.
விடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.
நீங்க ஏதாவது…
View original post 406 more words
ஆலு டிக்கி.
சுலபமான ஆலுடிக்கி மீள்பதிவு செய்திருக்கிறேன்.சுலபமானது. செய்துதான் பாருங்களேன்.
அன்புடன்
என்ன ஹிந்திப் பெயரா இருக்கே என்று பார்க்கிறீர்களா?
அந்தப்பெயர்தான் எல்லோரும் சொல்கிரார்கள்.
வட இந்தியர்கள் விரும்பும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்
வரை மிக்க விரும்பும் நம்மவர்களும் கூட ருசிக்கும் சிற்றுண்டி இது.
முன்பே சோலே எழுதும்போது ஆலு டிக்கி எழுதுகிறேன் என்று
எழுதினேன்.
இப்போது ஒரு புளிச் சட்னி,வட இந்தியர் பாணியில் எழுதி டிக்கியும்
எழுதுகிறேன்.
சோலே,தயிரும் கூட போட்டு டிக்கியை செய்து ருசியுங்கள்.
அல்லது ரஸியுங்கள்.
ஜெனிவா பேத்தி, அவளுடைய சினேகிதிகளைக் கூப்பிட்டால்
பாட்டி,ஆலு பரோட்டா,அல்லது இந்த டிக்கியை செய்யச் சொல்லுவாள்.
வேண்டியவைகளைப் பார்ப்போமா?
புளிச்சட்னி பிரமாதம் ஒன்றுமில்லை.
செய்முறை — ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊறவைத்து
கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பொடித்துப் போடவும்
பெருஞ்சீரகமும் சேர்க்கலாம்.
வெல்லம் ஒரு சிறியத் துண்டு
ருசிக்கு—உப்பு
சாட்மஸாலா வின் ஒரு சிட்டிகை இந்துப்பு
பெருங்காயம் சிறிது. இவைகளைச் சேர்த்து நிதான தீயில்
கொதிக்க விடவும்.
சாஸ் மாதிரி திக்காக ஆகும்போது இறக்கி சிறிய கிண்ணத்தில்
மாற்றவும்.
இப்போது இம்லி சட்னி தயார். புளிக்குழம்பு என்றே வைத்துக்
கொள்ளுங்களேன்.
அடுத்து டிக்கி.வேண்டியவைகள்
உருளைக்கிழங்கு, திட்டமான சைஸ்—4
பச்சைமிளகாய்—-2
உப்பு–ருசிக்கு
பச்சைக் கொத்தமல்லி இலை சிறிது.
எண்ணெய்—-வேண்டிய அளவு.
செய்முறை.
உருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தண்ணீரில் வேக வைத்தோ
அல்லது மைக்ரோவேவில் ஒரு ஈரத்துணியில் பொதிந்து
உருளைக்கிழங்கை ஹைபவரில் 5 அல்லது 6 நிமிஷங்கள்
View original post 120 more words
அன்னையர் தினம் பதிவு 10
இதுவும் அம்மாவைப் பற்றிய தொடர்ச்சிகள்தான். இதனின்றும் அது என்கிறமாதிரி. பெரிய பதிவு இல்லை. படியுங்கள் அன்புடன்
ஊரே திரண்டு உபசாரம் சொல்ல வந்தார்கள். அந்த ஸமயம்
அவரவர்களுக்குத் தோன்றியபழைய ஞாபகங்கள் வந்து ஒவ்வொருவர்
ஒவ்வொன்றாகஞாபகப்படுத்திக் கொண்டுஅதை அப்போது புரிந்து கொள்ளவில்லையே,
இது இப்படி ஆயிற்றே, அம்மாதிரி செய்திருக்கலாமோ, நமக்கேன் அப்படி
தோன்றவில்லை, இந்த சகுனம் ஸரியில்லை,அது,இது என்று சொல்லி
புதுச்சேரி தான்போகாதிருந்தால் அவன் இருந்திருப்பான். எதுவும்
தோன்றவில்லையே என்ற புலம்பலும், அரற்றலும் தான் பாக்கியாக இருந்தது.
திருவண்ணாமலையினின்றும்,அவன்படித்த,அப்பாவுடன் வேலை செய்த
எல்லோரின்,அனுதாபக் கடிதங்களும்,நேரில் வந்தவர்களுமாக, புதிய
செய்தியாக இவன் காலத்தில், இவனைப்போல தெரிந்தவர்கள் இரண்டுபேரின்
அகால முடிவுகளும், அந்த விவரமும் இன்னும் மோசமாக இருந்தது.
அக்காவின் வீட்டிற்கு போய்வருகிறேன் என்று சொல்லிப் போனவன், ஒருவன்
ஆரணி போளூர் பக்கத்தில் கிராமம். அங்கெல்லாம் நடவாபி என்று சொல்லப்படும்
கிணறு. கிணற்றுக்குள் இரங்க படிகளிருக்குமாம்.
ஒருவருமில்லாத ஸமயத்தில் இறங்கிப்பார்க்க ஆசைப்பட்டு இறங்கி இருக்கிறான்.
அவ்வளவுதான். அவன் கதை முடிவுக்கு வந்து விட்டதாம். அவ்விடம் உடல்நிலை
ஸரியில்லாது போயிருக்கும்.ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளை அவன்.
இன்னொரு கேஸ் தீவிபத்து.
என்ன அக்கரையாகப் பார்த்தாலும், அங்கங்கே நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது.
இம்மாதிரி இல்லாமல் வைத்தியம் செய்தோம்,பலனில்லை என்ற அளவிற்கு
மனதை தேற்றிக் கொள்ளுங்கள், இப்படியெல்லாம் ஆறுதல் மொழிகளுடன்
செய்திகள் குவிந்து கொண்டிருந்தது
சின்ன வயதானாலும், வேறுவிதமான முடிவு வராமல், நல்ல முறையில் அவனின்
வியாதியிலிருந்து விடுபட்டு போய்விட்டான்
அவன் வரையில் அவனுக்கு நல்ல கதி வந்து விட்டது. இப்படி யாவரும் ஹிதாஹிதம்
ஏற்றுக்கொள்ள…
View original post 377 more words
வெஜிடபிள் பிட்ஸா
ஏதாவது சாப்பிடும் வஸ்து மீள்பதிவு செய்ய நினைத்தேன். பிட்ஸா நான் ஸீனியர் என்றது. பாருங்கள். வீட்டில் செய்து நிறைய அலங்காரங்களுடன் வலம் வருகிறது. மலரும் ஞாபகங்கள். அன்புடன்
என்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா?
கட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்
பார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்
இங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு
ஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்
படமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்
ஆயிற்றே என்றேன்.
வந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
பிட்ஸாவின் அடிபாகம் தயாரிப்பதற்கு
ஈஸ்ட்—-7 கிராம்…காய்ந்த பொடி
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்
மைதா—-350 கிராம் அல்லது
கோதுமைமாவு—200கிராம் இதனுடன்
மைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.
உப்பு —1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்—–3 டேபிள்ஸ்பூன்.
மேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.
3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி
3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது
3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது
காப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-
-வகையில் நறுக்கியது—-1 கப்
ப்ரகோலி நறுக்கியது—1 கப்
பேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்
மொஜரில்லாசீஸ்–துறுவியது—200 கிராம்
அமெரிக்கன் சோளம்–பதப்படுத்தியது. 2டேபிள்ஸ்பூன்.–டின்–
–களில் கிடைக்கும்.
கேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.
பர்மேஸன் சீஸ்—-துருவியது—2டேபிள்ஸ்பூன்
ரிகோட்டாசீஸ்—-50 கிராம்.
செய்முறை
1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்
தண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்
15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்டு…
View original post 345 more words
அன்னையர் தினம்.பதிவு 9
அன்னையர் தினப் பதிவு ஒன்பது9 இன்று பதிவாகிறது. பழைய கதைதான். ஆதலால் படியுங்கள்.அன்புடன்
அம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்
கொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்
நம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.
சித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்
கொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.
எங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்
புதுமருமகள் கூட இருக்கிராள்.
அவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.
எப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து
கொண்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய
நிலையிலிருந்த பெண்.
அவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற
ரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்
வேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.
புருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.
நான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்
என்னை கேட்பாள்.
ஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.
இதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.
ஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.
அந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு
தொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு
சாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து
கொடுப்பது வழக்கம்.
அந்தநாளையமாமியார்கள்,எல்லாரும்கெடுபிடிதான்.எதையாவதுசொல்லிக்
கொண்டும்…
View original post 555 more words
அன்னையர் தினம் 8
அன்னையர்தினப்பதிவு நம்பர் எட்டு இன்று பதிவாகிறது. இன்றும் அன்னையர்கள் தினம்தான். வழிவசமாக அமைந்து இருக்கிறது.விஷயங்கள் அடிப்படையாக இப்பதிவு அமைகிறதா.பாருங்கள். அன்புடன்
ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்பது வசனம் . அவ்வளவு அருமையான
காவிரிக்கரையோர பெரிய ஊர்.அப்படியே அவ்விடம்அப்பாவின் நண்பர், வெங்கட்ரமண ஐயா,
அப்பா வேலை செய்த நேஷனல் ஹைஸ்கூல், பல குடும்பங்கள், பல முக்கிய விஷயங்கள்
இப்படிப் பல விஷயங்களை நேரில் காட்டினார். அருமையான ஸந்திப்புக்களாக இருந்தது.
பட்டமங்கலம்தெருவில் குடி இருந்தது என அவரின் மலரும் நினைவுகளையும்
எங்களுக்கு நேரில்,காட்டியும்,உணர்த்தியதிலும் அவருக்கு மகிழ்ச்சி.
அந்தநாளைய ஞாபகங்களை நாங்களும் எங்களுக்குத் தெரிந்த முறையில் ரஸித்தோம்.
பெரியம்மா, பொங்கல் சீர் வரிசையின் காய்கறிகளைக் கொண்டு
எறிச்சகறி செய்வதை,அதன் ருசியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
அம்மாதிரி பிறகு யார் செய்தாலும் அந்த ருசி வரவில்லை என்று
சொல்லியதை மறக்கவே முடியாது.
காவேரிஸ்னானம்,கோவில் ,குளம் என மாயவரத்தை முடித்து க் கொண்டுதேரழுந்தூர்
சென்றோம். அந்த நாளில் உறவுகள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.
அப்பாவின் இரண்டாம் கலியாண வழி உறவுகளனைத்தும் பார்க்க கூப்பிட
என அணி வகுக்காத குறைதான். அதான் எறிச்ச கறி ஃபேமஸ் பெரியம்மவின்,
உறவுகள் இத்துடன் விட்டுப்போகக் கூடாது.
உங்கள் மருமகளாக எங்கள் வீட்டுப் பெண்ணை ஏற்கவேண்டும்.
நிச்சயம் செய்து வைத்து விடலாம். போகட்டுமே இரண்டொரு வருஷம்.
இப்படி அம்மாவிடமும்,அப்பாவிடமும் வேண்டுகோள்கள்.
எதைச்சொல்லுவது,எதைவிடுவது? மனக்கிலேசம் அதிகமாகிறதே தவிர
குறைவதாகக் காணவில்லை.
பார்ப்போம். எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்,என்ற பொது வார்த்தையையே
திருப்பித்,திருப்பிச் சொல்ல முடிந்தது அம்மாவிற்கு.
எங்காத்துப் பெண்ணுக்கு வீட்டிலே ரெண்டு பசுமாடு இருந்தால் போதும். அதை
வைத்தே அழகாக குடும்பம்…
View original post 473 more words
அன்னையர்தினத் தொடர்வு.7
அன்னையர்தின ஏழாவது பதிப்பு வழக்கப்படி திங்களன்று பிரசுரிக்க முடியவில்லை. கணினி ரிபேர். இதிலும் பழக்க வழக்கங்களும்,இராமேசுவர அனுபவங்களும். அடுத்து திங்களன்று எட்டாவதுப் பதிவும் வரும். பாருங்கள்.படியுங்கள். அன்புடன்
உங்களை எல்லாம் ஸஷ்டி அப்த பூர்த்திக்கு கூப்பிட்டேனேல்லவா?
எங்கு ஏது என்று யாருமே கேட்கவில்லை.
இராமேசுவரத்தில் தான் அறுபதாம் கல்யாணம். அப்படித்தான் பெயர்
சொல்லுவார்கள்.
இந்த நாளில் பெண்கள் சிலருக்கு முப்பத்தைந்து வயதுகூட விவாகத்தின்
போது ஆகி விடுகிறது.
அம்மாவுக்கோ அப்பாவின் ஷஷ்டியப்த பூர்த்தி.
பிள்ளைக்காக நிறைய சாந்திகள்,செய்ய வேண்டும், ஹோமங்கள்
வளர்த்துப் பரிஹாரங்கள் செய்து ஸமுத்திர ஸ்னானம் செய்ய வேண்டும்.
கன்னி கடலாடு என்று, பெண் குழந்தைகளுக்கும் நல்லது.
இப்படி அபார யோசனைகளோடு ஒரு சேது ஸ்நானம், ராமேசுவரப்
பிரயாணம். பயணம் நிச்சயம்
அவ்விடம் நல்லதாக வீடு ஒன்று பார்த்து, 8,10 நாட்கள் தங்கி எல்லாம்
செய்வதாகத் தீர்மானம்.
தேரழுந்தூரிலிருந்து அப்பாவின் ஷட்டகர் ராமநாத ஜடாவல்லபர் வந்து
எல்லாவற்றையும் செவ்வனே நடத்துவதாகவும், எல்லா ஏற்பாடும்
அவர் செய்வதாக ஒப்புக் கொண்டாகியும் விட்டது.
அப்பாவின் இரண்டாவது மனைவியின் அத்திம்பேர் அவர். உறவுகள்
நீடித்தது அக்காலத்தில்.
பெரிய வேத வித்து. அவர். முக்கிய விருந்தாளியும், அவர்தான்
ஒரு புடவை, வேஷ்டி வாங்கிக் கொண்டுவந்திருந்து பிரயாணம் பூராவும்
உடனிருந்தவர்.
எங்களுக்குப் புதியதாகத் தைத்த பாவாடையையும்,சொக்காயையும்
எப்போது கொடுப்பார்கள், அதைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படிதான் எண்ண ஓட்டங்கள் இருந்தது.
அத்தை,பருப்புத் தேங்காய் முதல்,சமையலுக்குப் பாத்திரங்கள்,விதவித
பக்ஷணங்கள், பொடி வகைகள், படுக்க தலைகாணி போர்வைகள்,
சுக்கு,ஓமம்,லேகியங்கள், மடி துணி எடுத்து வைக்க, 4,5 மடிஸஞ்சிகள்
என பிரயாண ஸாமான்களைத் , தனிப்படுத்தி ஏற்பாடு துரித கதியில்.
யார்…
View original post 541 more words