ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.2
ஜனவரி 24, 2022 at 11:55 முப 3 பின்னூட்டங்கள்
நேபாளத்தின் முடியாட்சியில் நடந்த சூழ்நிலைச் சம்பவங்கள். படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். என்னவரின் ஞாபகார்த்தப் பதிவு இது. அன்புடன்
ஸாதாரணமாக அரசர் வெளியே போய் நேபாலிலேயே மற்ற பகுதிகளில்
தங்கி இரண்டொரு மாதம் அவ்விட முன்னேற்றங்களை மனதில் வைத்து
ஒழுங்கு செய்து விட்டு வருவது வழக்கம். அம்மாதிறி ராஜ ஸவாரிகளின்
போது ஒரு சிறிய காட்மாண்டுவே இடம் பெயர்ந்தாற்போல இருக்கும்.
இம்மாதிரி, ஸவாரிகளின் போதும், அயல் நாட்டுக்குப் பிரயாணம்
செய்யும் போதும் அவர்களுக்கு ஸ்ரீ.பாஞ்ச்,மஹாராஜாதிராஜ் ஸர்கார்
வருகிறார், அல்லது போகிரார் என்று முன் கூட்டி அறிவித்து விடுவார்கள்.
காட்மாண்டுவிலும், நேபாலில் எவ்விடம் போனாலும்
வழியின் நெடுகிலும், யாவர் வீட்டு வாயிலிலும் பெறிய, பெறிய குடங்களில்
காக்ரிஎன்று சொல்லுவார்கள் நீரை நிரப்பி குங்கும, பூக்கள் என
அலங்காரம் செய்து பூரண கும்ப வரவேற்பு, அல்லது வழியனுப்புதல்
கட்டாயமாக கடை பிடிக்கப்படும். மக்கள்
உடலை வளைத்து இரு கைகளினாலும் கையைத் தட்டி ஓசையுடன்
வணக்கம் செய்யும் நிலையில் ஸந்தோஷமாக, வழியனுப்புதலும்,
வரவேற்பும் கொடுப்பார்கள். இப்படியே எந்த வொரு கூட்டங்களுக்குப்
போனாலும், கோவிலுக்குப் போனால் கூட உடல் வளைத்து
கைகூப்பித் தட்டி ராஜாவுக்கு ராஜ மறியாதை.
இப்படிப்பட்ட ராஜாவின் வாயுவிமானம் கூட டாக்ஸி மாதிரி ,கூட்ஸ்
வண்டி மாதிரியும் உபயோகப் படுத்தப் பட்டது.
முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி பேசுகிறேன்.
ராயல்ஃப்ளைட்டே பெயரில்லாமல் ஆர்மியில் இணைக்கப்பட்டு,
S.N.S.B.S என்று பெயர் மாறியதும் நடந்தது.
ஷாஹி,நேபாலி,ஸைனிக், பிமான ஸேவா என்று பெயர் மாறிய
ஆர்மியிலும் ஸிவிலியனாக இவர் வேலை செய்வதும் தொடர்ந்தது.
எங்கு திரும்ப …
View original post 281 more words
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 2:10 பிப இல் ஜனவரி 24, 2022
படம் ரொம்ப அழகாக இருக்கிறது அம்மா. விமானமும் அதன் பேக்ட்ராப் மலைகள் என்ன அழகு மலைகள்!!!! பனி படர்ந்த மலைகள். வாவ்.
புதிய தகவல்கள். சுவாரசியமாகவும் இருக்கிறது வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும். உங்கள் அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமான அனுபவங்கள்.
எனக்கும் புது புது ஊரைப் பற்றித் தெரிந்துகொள்வது, பார்ப்பது மிகவும் பிடித்தமான விஷயம். ரசித்து வாசித்தேன்
கீதா
2.
chollukireen | 7:56 பிப இல் ஜனவரி 25, 2022
உன்னுடைய பதில் பார்த்து மிக்க சந்தோஷம் ஹிமாலயன் பனிபடர்ந்த மலைகள் காட்சிகள் யாவும் மிகவும் அழகானது காத்மாண்டுவில் இருபத்தி ஆறு வருஷம் இருந்ததற்கு அவைகள் யாவும் மனதில் பதிந்து இருக்கிறது இப்பொழுது ஆல்ப்ஸ் மலையின் காட்சிகளும் காணக்கிடைத்தது விமான போக்குவரத்து சர்வீசில் என்னுடைய கணவர் இருந்தபடியால் இந்த அனுபவங்கள் கேட்க கிடைத்தது சிலவை பார்க்கவும் முடிந்தது எல்லாம் கடந்த கால அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததாக எழுதினது படித்து மிக்க சந்தோஷம் அன்புடன்
3.
chollukireen | 11:58 முப இல் ஜனவரி 26, 2022
விருப்பம் தெரிவித்த ரஞ்ஜனிக்கு மிகவும் நன்றி.அன்புடன்