அரைக்கீரை மசியல்.
ஏப்ரல் 18, 2022 at 11:12 முப 2 பின்னூட்டங்கள்
இந்த அரைக்கீரை மசியல் பூண்டு வெங்காயம் சேர்த்துச் செய்தது. வெங்காயம்,பூண்டு பிடிக்காதவர்கள் தேங்காயைச் சேர்த்து அரைத்துச் செய்யலாம். பாருங்கள். இதுவும் ஒரு ருசிதான். அன்புடன்
இந்தக்கீரையும் ருசியானதுதான்.பார்ப்போம்.
வேண்டியவைகள்
அரைக்கீரை—ஒருகட்டு
கீரையை ஆய்ந்து அலசி ப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—2
நறுக்கிய வெங்காயம்—சிறிது
பூண்டு இதழ்—-4
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்
பயத்தம் பருப்பு—-2 பிடித்தபிடி
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
செய்முறை.
பருப்பைச் சற்று வறுத்துக் களைந்து கீரையையும் வடிக்கட்டிச்
சேர்த்து திட்டமான தண்ணீருடன் ப்ரஷர் குக்கரில் வேக
வைத்து இறக்கவும்.
2 விஸிலே போதுமானது.
உளுத்தம் பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெயில் வறுத்து
நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.
சீரகம் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்புடன் கூடிய கீரையை நன்றாக மசிக்கவும்.
அறைத்த விழுதைக் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்க
விடவும். மசியலாக பதத்தில் இறக்கவும்.
கடுகு தாளித்துக் கொட்டவும்.
தேங்காயும் வேண்டுமானால் அறைக்கும் போது சேர்க்கவும்.
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
thulasithillaiakathu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed




1.
thulasithillaiakathu | 12:04 முப இல் ஏப்ரல் 19, 2022
அரைக்கீரை மசியல் அருமை. நாவூறுகிறது, அம்மா
கீரையுடன் தக்காளி சேர்த்துச் செய்வது நல்லது என்று சில வருடங்களுக்கு முன் அறிந்தேன். இரும்புச் சத்து நம் உடலில் சேர விட்டமின் சி முக்கியம் என்பதால் கீரையுடன் தக்காளி சேர்த்துச் செய்வது நல்லது என்று.
கீதா
2.
chollukireen | 11:36 முப இல் ஏப்ரல் 19, 2022
உங்களுக்கு இதெல்லாம் பிரமாதமானதும் இல்லை. பெங்களூரில் கீரைகளுக்குப் பஞ்சமே இல்லை. செய்துபாருங்கள். மிகவும் நன்றி. அன்புடன்