சுட்டரைத்தத் துவையல்
மே 30, 2022 at 10:51 முப 2 பின்னூட்டங்கள்
எனக்கு மைக்ரோவேவ் புதியதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தவிரவும் கத்தரிக்காய் இதில் சுட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ? ஞாபகமில்லை. எதுவோ மீள்பதிவுதான் இதுவும். எப்படி இருக்கு பாருங்கள். அன்புடன்
நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை
அனலில் சுட்டு துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.
மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்
ஜெனிவா குறிப்புதான் இதுவும்,
கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து…
View original post 72 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
chollukireen -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed


1.
geetha | 11:20 முப இல் மே 31, 2022
அம்மா, சூப்பர் செய்முறை.
பெரிய கத்தரிக்காயைச் சுட்டு செய்வதுண்டு. இப்படி. ஆனால் எள்ளு சேர்த்துச் செய்ததில்லை. மற்றவை நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்ததுண்டு. இதையும் நோட் செய்துகொண்டேன்.
மிக்க நன்றி, அம்மா
கீதா
2.
chollukireen | 11:31 முப இல் மே 31, 2022
புளி வைத்தரைத்த துவையல்களில் எள் ருசியைக் கொடுக்கும். ஆந்திராஸ்டைல் வெந்தயம் சேர்ப்பது. எப்போதாவது ஞாபகம் வந்தால் செய்து பார்க்கவும். என்னையும் நினைத்துக் கொள்ளவும். மிகவும் நன்றி. அன்புடன்