பருப்புப் பாயஸம்

இது ஒரு  சின்ன அளவில் நினைக்கும்போது வைக்கும் பாயஸம்

ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்தது.

இதன் குறிப்பையும் பார்க்கலாமா. நினைத்துக் கொண்டால்

நிவேதனத்திற்குச் செய்ய  உபயோகமாக இருக்கும்.

வேண்டிய ஸாமான்கள்

கடலைப் பருப்பு—1 டேபிள்ஸ்பூன்

பயத்தம் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன்

பச்சரிசி—1 டேபிள்ஸ்பூன்.   இவை மூன்றையும்  வெறும்

வாணலியில்  நன்றாக  வாஸனை வரும்படி   சற்று சிவப்பாக

வறுத்துக் கொள்ளவும்.

சக்கரை—  5,அல்லது 6  டேபிள்ஸ்பூன்.   இனிப்புக்குத் தக்கபடி

பால்— 1  டம்ளர்

ஏலப்பொடி—-வாஸனைக்கு சிறிது

பாதாம் பருப்புத் தூள்–2 டீஸ்பூன்.

நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை–விருப்பத்திற்கு.

செய்முறை–

வறுத்த அரிசி,  பருப்புக்களை நன்றாகத்  தண்ணீர் விட்டுக்

களைந்து,  திட்டமாகத் தண்ணீர் விட்டுப்  ப்ரஷர் குக்கரில்

2  விஸில்  வரும் வரை  வேகவிட்டு  இறக்கவும்.

பருப்பை   லேசாக   மசித்து    சக்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு

பாதாம்   தூளையும்,   பாலையும்   சேர்க்கவும்.

ஓரிரண்டு  கொதிவிட்டு    இறக்கி     முந்திரி    திராட்சையைச்

.சேர்த்து  ஏலப் பொடிபோட்டு  கலக்கி  உபயோகப் படுத்தவும்.

பாலிற்கு பதில்   சிறிது   தேங்காயை அறைத்தும்   செய்யலாம்.

குங்குமப்பூ சேர்த்தால்   கலரும் கூடும்.மணமும் கூடும்.

வெல்லம் சேர்த்து   செய்வதுதான் அதிகம். வேண்டிய அளவு

இனிப்பு  கூட்டவும்

பருப்புப் பாயஸம்.

ஓகஸ்ட் 8, 2011 at 4:14 பிப 4 பின்னூட்டங்கள்

இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.

இது வாய்க்கு ருசியாகவும்,  ஆரோக்கியமுமான தொக்கு.

செய்வதுமெளிது.  விருப்பமானவைகளுடன் சேர்த்துச்

சாப்பிடலாம்.  டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.

வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6

சக்கரை—ஒன்றரை கப்

மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்

மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்

வறுத்தறைத்த  வெந்தய   சீரகப்பொடி–1 டீஸ்பூன்.

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.

உப்பு—–ருசிக்கு ஏற்ப

செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக

இருந்தால்   4 ஆக   எடுத்துக் கொள்ளலாம்.

பழத்தை அலம்பி    சிறிய  ப்ரஷர் குக்கரில்  அரைகப்  தண்ணீர்

சேர்த்து  மிதமான தீயில்  2 விஸில் வரும்வரை   வேகவைத்து

இறக்கவும்.

ப்ரஷர் அடங்கியபின்   ஆறவைத்து,    பழத்தைப்பிய்த்துப்போட்டு

விதைகளை அகற்றிவிட்டு,   மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்

போட்டு   நன்றாக   அறைத்து  எடுக்கவும்.

வேகவைத்த ஜலமும் சேர்த்து  அறைக்கலாம்.

அடி கனமான   நான்ஸ்டிக் பேனில்   சக்கரையுடன்   சிறிது

ஜலம் சேர்த்து   சற்று கொதிக்கவிடவும்.

சக்கரை கறைந்து   கொதிக்க ஆரம்பித்தவுடன்  அறைத்த

விழுதை    அதனுடன் சேர்த்துக்  கிளறவும்.

நிதான தீயில்  ஹல்வா மாதிரி   சுருண்டு வரும் வரைக் கிளறி

உப்பு,மிளகாய்ப்பொடி,   வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்

பொடிகளைப் போட்டு    நன்றாகக்  கிளறி   இறக்கவும்.

வேக வைத்த அளவு   எண்ணிக்கையில்   எலுமிச்சம்   பழத்தின்

சாற்றை  எடுத்து      கொட்டைகளை நீக்கி  இறக்கி வைத்துள்ள

கலவையில்   சேர்த்துக்  கிளறவும். சாறு அதிகம்  சேர்க்கலாம்.

சூடு  ஆறிய  பின்னர்   சுத்தமானபாட்டில்களில்

சேமித்துவைக்கவும்.

பெருங்காயம் தூக்கலாக  இருந்தால்   வாஸனையாக இறுக்கும்.

விருப்பப்பட்டவர்கள்     சோம்பு,  ஏலக்காய், லவங்கம்,பட்டை,

ஜாதிக்காய்,   முதலாவதின்   ஏதாவதொன்றின்    பொடியையும்

ஒரு துளி சேர்க்கலாம்.

எண்ணெய் இல்லாத   தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்

அவசியமில்லை.

இதனுடனேயே   இன்னொரு பக்கம்   பூண்டு சேர்த்த டொமேடோ

தொக்கும்   தயாராயிற்று.

அதையும் சேர்த்துப் பாருங்களேன்.  ஏற்கெனவே  இஞ்சி சேர்த்துச்

செய்த  குறிப்பு   இருக்கிரது.

இது வேறு  ருசி. இதையும்  பாருங்களேன் ஸமயத்திற்குஉதவும்.

வேண்டியவைகள்—-பெறியசைஸ்   தக்காளிப்பழம்—6

உறித்த பூண்டு இதழ்கள்—15

மிளகாய்ப்பொடி—3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்—2

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—1டீஸ்பூன்

வறுத்தறைத்த   வெந்தய,   சீரகப் பொடி—தலா 1டீஸ்பூன்

ருசிக்கு—உப்பு

புளி—ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய்—கால் கப்பிற்கதிகம்

சக்கரை—1டீஸ்பூன்.

செய்முறை—தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு  நன்றாக

கொதிக்கும்  தண்ணீரை  பழம் அமிழும்படியாக அதன்மேல்

விட்டு   மூடிவைக்கவும்.

புளியை  ஈரப்படுத்தி  ஊர விடவும்.

ஜலம் ஆறியபின்    பழத்தை   எடுத்துத்  தோலை உறித்துத்

தனியாக வைக்கவும்.

உறித்து வைத்துள்ள  பூண்டை  சிறியதாக  நறுக்கிப் போட்டு

மிக்ஸியில் அறைக்கவும்.

தக்காளி,  புளியையும்  சேர்த்து  அறைக்கவும்.

நான்ஸ்டிக் பாத்திரத்திலோ,அல்லது  அகலமான பேனிலோ

கலவையைக்கொட்டி    நிதானமான தீயில் கொதிக்கவைத்துக்

கிளறவும்.

கலவை திக்காக சேர்ந்து வரும்போது   வாணலியில்எண்ணெயை

– க்காயவைத்து   மிளகாயை வறுத்து,  கடுகை வெடிக்கவிட்டு

கீழிறக்கி  பொடிகளைச் சேர்த்துக் கிளறி,   கலவையில்  கொட்டிக்

கிளறவும்.  வேண்டிய உப்பு  சேர்க்கவும்.

சக்கரையும்தான்.

துளி ஸ்பூனில் எடுத்து  ஆற வைத்து ருசி பார்க்கவும்.

சுருளக்கிளறி இறக்கி  ஆற வைத்து   பாட்டில்களில்  சேமிக்கவும்.

ப்ரிஜ்ஜில் வைத்து   நீண்ட நாள் உபயோகிக்கலாம்.

ருசி பார்க்கச் சொன்னது   உப்புக்காரம்   கூடக் குறைய

வேண்டுமானால் சேர்ப்பதற்காகத்தான்.படத்தில் சில பொடிகள்

வைக்கத் தவறியிருப்பேன்.   அதெல்லாம் ஒரு பிரமாதமில்லை.

குறிப்புகளே அவசியமானது.

எலுமிச்சை தொக்கிற்கான ஏற்பாடு.அறைத்த எலுமிச்சை மற்றும்ஸாமான்கள்.

எலுமிச்சை,தக்காளி தொக்குகள் ஜோடியாகத் தயாராகிரது.

பாட்டில்களில் வித்தியாஸமான தொக்குகள்.

ஜூலை 30, 2011 at 3:47 பிப 10 பின்னூட்டங்கள்

டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு

தோலுடன்கூடிய பாசிப் பருப்பு

இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்

தோலுடன் கூடிய  பருப்பு.   ருசி நன்றாகவே இருக்கிரது.

டால் வகைகளை   தோலுடன் கூடிய  உளுத்தம் பருப்பிலும்

தயாரிக்கலாம்.

ரொட்டி. பூரி வகைகளுடனும்,   சாத வகைகளுடனும்   சேர்த்தும்

.உண்ணலாம்.

எளிய வகைதான்.  வேண்டியவைகளைப் பார்ப்போம்.

தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்

பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்

சீரகம்—1டீஸ்பூன்

லவங்கம்—4

நறுக்க  வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3

வெங்காயம்—-2

உறித்த பூண்டு இதழ்கள்—4

தக்காளி—1

இஞ்சி—சிறிது

தாளிக்க   எண்ணெய்,  நெய்  வகைக்கு 2,  3 டீஸ்பூன்கள்

பிரிஞ்சி இலை—1

சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு

பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்

மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—சிறிது

ருசிக்கு,—உப்பு,  துளி சர்க்கரை

செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்

பொடி,   தண்ணீர் சேர்த்து   மிதமான தீயில்   ப்ரஷர் குக்கரில்

2விஸில் வரும்வரை வைத்து  வேகவிட்டு  இறக்கவும்.

பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.

வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியைத் தனியாக  நறுக்கிக் கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தில்   நெய்எண்ணெயைக்காயவைத்து

பிரிஞ்சி இலையைப்போட்டு ,   வெங்காய வகையாராக்களையும்

சேர்த்து    நன்றாக  வதக்கவும்.   சுருள வதக்கி ,  பொடித்த

பொடியைப்போட்டுப் பிரட்டி   நறுக்கிய தக்காளியையும் சேர்த்து

பின்னும் வதக்கவும்.

பெருங்காயம்,   மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.

வெந்த பருப்பைச் சிறிது மசித்து   தாளிப்பில் சேர்த்து,   வேண்டிய

உப்பு,   துளி சக்கரை சேர்த்துக்   கொதிக்கவிட்டு  இறக்கவும்.

ஆம்சூர் வேண்டாதவர்கள்,   எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

பொடித்து போடுவது  நல்ல   வாஸனையைக் கொடுக்கும்.

காரம் வேண்டிய அளவு   மிளகாயோ,   பொடியோ கூட்டிக்

கொள்ளலாம்.

ரொட்டிக்காகவென்றால்  டாலை  சற்று   திக்காகவும்,

சாதவகையுடனென்றால்   சற்று    நீர்க்கவும்  தயாரிப்போம்.

பச்சைக் கொத்தமல்லி தூவி   உபயோகிக்கலாம்.

காப்ஸிகம்  சேர்த்தால்   கண்ணிற்கும் விருந்தாக இருக்கும்.

தோலுடன் கூடிய   பயத்தம்  பருப்பு     ஆதலால் வேக வைக்கும்

போது   தண்ணீர்  அதிகம் சேர்த்து   வேக வைக்க வேண்டும்.

தாளித்து   பருப்பில் சேர்த்தாலும்,  பருப்பை தாளிதத்தில்

சேர்த்தாலும்   எல்லாம் ஒன்றுதான்.

டாலிற்கான தாளிப்பு

தயாரான டால்.

ஜூலை 26, 2011 at 6:06 பிப 7 பின்னூட்டங்கள்

பொடிபோட்ட ஸாம்பார்

நூல்கோல் ஸாம்பார்

ஸாதாரணமாக  ஸாம்பார் பொடி போட்டு செய்யும்  ஸாம்பார்களில்

காய்கறிகள் எதெது  சேர்த்துச் செய்தால்  நன்றாஇருக்கும். என்று

எனக்குத் தெறிந்ததைச்   சொல்லுகிறேன்,

1    காப்ஸிகம்,காரட், பச்சைமிளகாய்

2     பூசணி, கத்தரிக்காய்

3  நூல்கோல்,வெங்காயம்,   பச்சைமிளகாய்

4பரங்கிக்காய்,   கேப்ஸிகம்,பச்சைமிளகாய்

5  வெண்டை ,தக்காளி,   பச்சைமிளகாய், காப்ஸிகம்

வெண்டைக்காயை   வதக்கிப் போடவும்.

6   அவரைக்காய்,  வெந்தயக்கீரை,   பட்டாணி

7பாலக்,பட்டாணி,தக்காளி,சின்ன வெங்காயம்

8       காரட்,  பட்டாணி

9உருளைக்கிழங்கு,  பீன்ஸ்,  பட்டாணி

10     முள்ளங்கி,    சின்ன வெங்காயம்

11முருங்கக்காய், சின்ன வெங்காயம்

12  பச்சை சுண்டைக்காய்,தக்காளி

13   பாகற்காய்,  தக்காளி.

சேனைக் கிழங்கு,    சேப்பங்கிழங்கு,  வெள்ளிக் கிழங்கு,

இவை போன்ற கிழங்குகளைத்  தனித்துப் போட்டு   செய்யும்

பருப்புக் குழம்புகள் ருசியாக இருக்கும்.

எல்லா ஸாம்பாரிலுமே   தக்காளிப் பழம் ஒன்றை   சிறியதாக நறுக்கி

வதக்கி சேர்க்கலாம்.ஸாம்பாரில்  தக்காளியா  என்று கேட்கும் போரும்

உண்டு.   வறுத்து அறைத்த ஸாம்பார் என்றால்   தக்காளியை வறுத்த

ஸாமான்களுடன் வதக்கி,  சேர்த்து  அறைத்து விட்டால் கூடநன்றாக

இருக்கிறது.

சேப்பங்கிழங்கை வேகவைத்து   தோல் உறித்து ஸாம்பாரில் சேர்க்க

வேண்டும்.

சேனைக்கிழங்கை  தோல்  நீக்கி    சற்று    நீளமாக  நறுக்கி     சற்று

வேகவைத்து      ஸாம்பாரைச்  செய்ய வேண்டும்.

பொதுவாக      பாத்திரத்தில் தாளித்து   காயை சற்று  வதக்கி  பிறகு  புளி

ஜலம்,   ஸாம்பார்ப்ரொடி,   உப்பு ,சேர்த்து   நன்றாகக் கொதிக்க விட்டு,

வெந்த  பருப்பைச் சேர்த்து பின்னும் கொதிக்கவிட்டு    இறக்குவது

ஒரு முறை.

பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் காயைச்   சிறிது வேகவைத்து

புளிஜலத்தைச் சேர்த்து, ஸாம்பார்ப்பொடி,  உப்பு சேர்த்து  கொதிக்க

வைத்து,      வெந்த பருப்பு சேர்த்து , எண்ணெயில்கடுகு,வெந்தயம்

பெருங்காயம்  தாளித்து   இறக்குவதும் ஒரு முறை.

எதற்கும் ஒரு மாதிரிக்கு    காரட், காப்ஸிகம்   ஸாம்பார்  செய்வோமா.

பெருஜ்ஜீரகம்   ஸாம்பார்ப் பொடியில்   நான் போடுவதில்லை.

புடலங்காய்,பீர்க்கங்காய்வாழைக்காய்,கொத்தவரங்காய்,வெள்ளரிக்காய்

முதலானது  ஸாம்பாரில் போடுவதில்லை.    வெங்காயம் கூட சின்ன

வெங்காயம்தான் ஸாம்பாருக்கு ஏற்றது.

தனித்த வெங்காய   ஸாம்பார்  மிகவும்   எல்லோராலும்  விரும்பப்படுகிறது.

சின்ன அளவில்  புதியதாகப்   பொடி செய்வோம்.

மிளகாய் வற்றல்—4,    கொத்தமல்லி விதை—1டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்,  வெந்தயம்அரை டீஸ்பூன்,

மிளகு—எண்ணிக்கையில்  6அல்லது 7

மிளகாய் தவிர மற்றவற்றை   வெறும் வாணலியில்  சிவக்க

வறுக்கவும்.

மிளகாயை துளிஎண்ணெயிலகறுகாமல்வறுக்கவும்.யாவற்றையும்

ஆற வைத்து துளி மஞ்சள் பொடி சேர்த்து   மிக்ஸியில்பொடிக்கவும்.

ஸாம்பார்ப் பொடி   சின்ன அளவில் ரெடி.

அல்லது வீட்டில்வைத்திருக்கும்ஸாம்பார்பொடிஉபயோகித்தாலும்

ஸரி..

திட்டமான  காரட்—-3

பச்சையோ, சிகப்போ காப்ஸிகம்-1

பச்சைமிளகாய்–1

தக்காளி–1

துவரம் பருப்பு—முக்கால் கப் அளவிற்கு   களைந்து வேக வைத்துக் கொள்ளவும்.

புளி—ஒரு சின்ன    எலுமிச்சையளவு

தாளிக்க—எண்ணெய்

கடுகு, வெந்தயம்  தலா  அரைடீஸ்பூன்

வாஸனைக்கு வேண்டிய பெருங்காயம்

காரட்டைத் தோல் சீவி    சற்றுப் பருமனான வில்லைகளாக

நறுக்கிக் கொள்ளுவோம்.

காப்ஸிகமும் அப்படியே.  தக்காளியைச்துண்டுகளாக்குவோம்

புளியை ஊறவைத்து   2,   3   கப் ஜலம் சிறிதாகச்சேர்த்து

நன்றாகக்   கரைத்து சக்கையை நீக்குவோம் .

குழம்புப் பாத்திரத்தில்    எண்ணெயைக்   காயவைத்து  கடுகை

வெடிக்கவிட்டு.  வெந்தயத்தையும்  கூடவே சிவக்க வைத்து,

பெருங்காயத்தையும் தாளித்து,     பச்சைமிளகாய் ,தக்காளியை

வதக்கி,  அலம்பின  காய்களையும் போட்டு  2 பிரட்டு பிரட்டி

கரைத்த புளி ஜலத்தைச்   சேர்ப்போம்.

திட்டமாக  உப்பு,   பொடித்த ஸாம்பார்ப் பொடி ,   அல்லது

ஏற்கெனவே   இருக்கும்   ஸாம்பார்ப் பொடியில் 3 டீஸ்பூன்

சேர்த்து   கொதிக்க வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்த பிறகு   சற்று  தீயைக் குறைத்து, காய்

வெந்து,   புளி,  பொடி வாஸனை   குறைந்த பின்,    வெந்த

பருப்பைத் திட்டமாகக்   கலக்கிச் சேர்த்து   நன்றாகக்

கொதிக்க விட்டு   ஸாம்பார் நீர்க்க இருக்கும்போல்

தோன்றினால்      ஒருஸ்பூன்   அரிசி மாவைத்    துளி

தண்ணீரில்க்    கரைத்து விட்டு  ஒரு கொதி வந்ததும்

இறக்கி   கொத்தமல்லி   கறிவேப்பிலையைத் தூவி

உபயோகிக்கவும்.   காரம் வேண்டியளவிற்கு   மிளகாயை

அதிகரிக்கலாம்.

இந்தக் காய்கறி ஜோடிகள்      எனக்கு  மனதில்ப்பட்டு

நான் செய்கிறேன்.  அது ஒன்றுதான்  விசேஷமே தவிர

வேறொன்றுமில்லை.

சொல்லுகிறேன்னு   பேர் கொடுத்திருக்கிறேனே  அதனால்

சொல்லும் மாதிரியே  எழுத்து   வார்த்தைகள் அமைந்து

விட்டது.

பொடிபோட்ட ஸாம்பார்.  அதனால் தேங்காயைக்கூப்பிடவில்லை.

மொத்தமாக இயந்திரத்தில் ஸாம்பார்ப் பொடி செய்தால்

துவரம் பருப்பு  போடலாம்.  அரிசியும் நான் போடுவதில்லை.

கதை மாதிரி நீண்டு விட்டது பதிவு.

காரட் காப்ஸிகம் பொடி போட்ட ஸாம்பார்

பாலக்கீரை ஸாம்பார்

ஜூலை 12, 2011 at 1:56 பிப 2 பின்னூட்டங்கள்

மட்ரி.

இது ஒரு  வடஇந்திய வகை  மைதாமாவின் தயாரிப்பு.

பார்க்கப்போனால்     நம்முடைய  தட்டை மாதிரிதான்.   பருப்புகள்

போடுவதில்லை.  சற்று வித்தியாஸமான   ருசி.  கரகரப்பாகச்

செய்கிறார்கள்.   சிறிதளவு    வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.

இது மேத்தி மட்ரி.    அவசரத்திற்கு    ஊறுகாயுடன்காலைடிபனில்கூட

மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான்   கற்றுக்கொண்டேன்.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வேண்டியவைகள்.

மைதாமாவு—-2 கப்

ஓமம்—2 டீஸ்பூன்

மாவுடன்   சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்

ருசிக்கு உப்பு

மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய  எண்ணெய்

செய்முறை.

ஓமத்தை    சுத்தம் செய்து கொள்ளவும்.

அகன்ற  தாம்பாளத்தில்     மாவைக் கொட்டி  ஓமம்,  திட்டமான உப்பு

சேர்த்து நன்றாகக்   கலந்து கொள்ளவும்.

மாவில் சிறிது சிறிதாக  மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், 1ஸ்பூன்  நெய் விட்டு  நன்றாகக் கலக்கவும்.

புட்டுமாவுபோல  ,   மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால்   பிடிபட

வேண்டும்.

உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.

செய்து பார்க்கவும்.

பிறகு   கொஞ்சம் கொஞ்சமாக  லேசாக   ஜலத்தைத் தெளித்து மிகவும்

கெட்டியான    மாவாக    நன்றாகப்  பிசைந்து கொள்ளவும்..

அழுத்தமாகப்  பிசைந்த மாவைத் திரட்டி   பாதி மாவைச்  சிறிய

உருண்டைகளாக உருட்டி  அப்பளக் குழவியினால்  சிறிய   கனமான

வட்டங்களாகச் செய்து  கொள்ளவும்.

போர்க்கினால்  வில்லைகளின் மேல்  குத்தி  துளைகளிடவும்.

மீதிமாவைக் கனமான   அப்பளாமாக  இட்டு  போர்க்கினால் குத்தி

கத்தியினால்  துக்கடாக்களாகக்    கீறிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து   ஜாஸ்தி  புகையவிடாமல்

நிதானமான  சூட்டில்   இவைகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப்போட்டு

கிளறிவிட்டு   பொறித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில்ஆறவிடவும்.

கரகரப்பான மட்ரி  தயார்.

மாவு அழுத்தி இடும்படியான   கெட்டிப் பதத்தில்  நன்றாகப் பிசைய

வேண்டும்.   இது நன்றாக ஞாபகம் வைக்க வேண்டும்.

பெரிய அளவில்  சற்றுப் பெரியதாகச் செய்து வைத்துக்கொண்டு

டிபனில் ஒரு அயிட்டமாக  உபயோகிப்பார்களென  நினைக்கிறேன்.

இதையே  ஒருகப் மைதாவுடன்  1 டேபிள்ஸ்பூன்  கடலைமாவு,துளி

மிளகாய்ப்பொடி,   1டேபிள்ஸ்பூன்  நறுக்கிய வெந்தயக்கீரை,

எண்ணெயும்,நெய்யுமாக  2டேபிள்ஸ்பூன்,  உப்பு,ஜீரகப்பொடி சேர்த்து

ஸாதா மட்ரி செய்யும் முறையிலேயே  மேதி மட்ரியும் செய்யலாம்.

.

மட்ரிக்கான சாமான்களின் மாதிரி

எண்ணெய் சேர்ந்த மாவுக் கலவை. இதன் பிறகு மாவை ஜலம் தெளித்துப் பிசையவும்.

நறுக்கிய துண்டுகள் .

பொறித்த மட்ரி

மேதி மட்ரி. வெந்தயக்கீரை சேர்த்தது.

ஜூன் 28, 2011 at 10:09 முப 8 பின்னூட்டங்கள்

பாலக்கீரை மசியல்

இதுவும்  ஸாதாரண கீரை மசியல் போல்தான்.  கொஞ்சம்

வித்தியாஸம்     தாளித்துக் கொட்டுவதில் தான்.

வேண்டியவைகள்

பாலக் கீரை—-400 கிராம்வரை. முன்னே பின்னே இருந்தாலும்

பரவாயில்லை. நன்றாக  நறுக்கி அலம்பி நீரை வடிக்கவும்.

உறித்த பூண்டு—5 அல்லது 6 இதழ்கள்.பொடியாக நறுக்கவும்.

மிளகாய்ப் பொடி—காரத்திற்கேற்ப  கால் டீஸ்பூனிற்கு அதிகம்

தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—அரைடீஸ்பூன்

தாளித்துக் கொட்ட—2 டீஸ்பூன் நெய்

சீரகம்–அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய  தக்காளிப் பழம்–1

ருசிக்கு–உப்பு

சோளமாவு—-ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை—அடி கனமான  வாணலியில்  நெய்யைச் சூடாக்கி

சீரகத்தை வறுத்து,   பொடியாக நறுக்கிய  பூண்டை வதக்கி,

சிறிதளவு

நறுக்கிய கீரையும்,பொடிகளையும் போட்டுப் பிரட்டிப் பின்பு

எல்லா கீரையையும்  சேர்த்து  நன்றாக வதக்கவும்.

கால் டம்ளர் ஜலம் சேர்த்து    ருசிக்கு உப்பு,   ஒரு சிட்டிகை

சர்க்கரை, நறுக்கிய  தக்காளித் துண்டுகள்  சேர்த்து   நன்றாக

மூடிவைத்து   நிதான தீயில்  வேகவைத்து மசிக்கவும்.சோள

மாவைக் கெட்டியாக கரைத்துவிட்டு   இரண்டு கொதி  விட்டு

மசித்து இறக்கவும்.

இந்த மாதிரி என் போபால் சம்பந்தி செய்த கீரை மசியலிது.

சாதாரணமாக    கீரையை   நன்றாக வேகவைத்து  மிளகாய்,

சீரகம்,  சிறிது தேங்காய்,  துளி அரிசியை    மிக்ஸியில்

அரைத்துசேர்த்து மசித்து,  கடுகு உளுத்தம் பருப்பை நெய்யில்

தாளித்துக் கொட்டிஉப்புப் போட்டாலும்  கீரை ருசிதான்.

இதேமாதிரி  வெங்காயம், பச்சைமிளகாய்  பூண்டையும்

வதக்கிச் சேர்த்தும்,    அரைத்துவிட்டும் செய்யலாம்.

நாம் கீரை  சேர்ந்தாற்போல இருக்க துளி அரிசிமாவு கரைத்து

விடுவோம்.

பாலக்கிற்கு சிறிது தக்காளி சேர்த்தால்  ருசி கூடும்.

பெருங்காயம்    அதுவும்   வேண்டியவர்கள் சேர்க்கலாம்.

கீரை குறைவாக  இருந்தால்  வேகவைத்த பயத்தம் பருப்பு,

அல்லது  துவரம் பருப்பு சிறிது சேர்த்தும்   மசிக்கலாம்.

பருப்பு சேர்த்து மசிக்கும் போது ஒரு பச்சை மிளகாயை

காரத்திற்காக சேர்த்து  மசிக்கலாம்.

சோளமாவு சேர்த்த பாலக் மசியல்

ஜூன் 24, 2011 at 9:46 முப 2 பின்னூட்டங்கள்

பீன்ஸ் கறி

நல்ல இளசான பீன்ஸாக இருந்தால் மிகவும் நல்லது.

காம்பையும், நாரையும்  நீக்கி   பொடிப் பொடியாக   நறுக்கிக்

கொள்ளவும்.

வேண்டியவைகள்.

பீன்ஸ்—-கால்கிலோ

பச்சைமிளகாய்—2

இஞ்சி—ஒரு சிறு துண்டு

தேங்காய்த் துருவல்–அரைகப்.விருப்பத்திற்கிணங்க

ருசிக்கு—-உப்பு

மஞ்சள்பொடி—அரைடீஸ்பூன்

தாளித்துக் கொட்ட—4 டீஸ்பூன்   எண்ணெய்

கடுகு—1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு—2, 3 டீஸ்பூன்

சக்கரை—1 துளி

செய்முறை

பொடியாக நறுக்கிய பீன்ஸை தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.

துளி,சக்கரையும்,  2டீஸ்பூன்  எண்ணெயும் சேர்த்துக் கலந்து

மைக்ரோவேவில்  ஹைபவரில் ,7 நிமிஷங்கள்

வேகவைத்து  எடுக்கவும்.  அல்லது

அடிகனமான பாத்திரத்தில்  நறுக்கிய பீன்ஸைப் போட்டு சிறிது

ஜலம் சேர்த்து,  நிதான தீயில்  மூடி  வேக வைத்துக்

வடித்துக்  கொள்ளவும்.

கலர் பச்சென்றிருக்கவே  துளி சக்கரை சேர்ப்பது.

வாணலியில்எண்ணெயைக்காயவைத்கடுகு,உளுத்தம்பருப்பைத்

தாளித்துக் கொட்டி,  நறுக்கிய   இஞ்சிபச்சைமிளகாயைச்சேர்த்து

வதக்கவும்.

வெந்தபீன்ஸ்,உப்பு,  மஞ்சள் சேர்த்துப் பின்னும்வதக்கி

தேங்காய்த்  துருவலும் சேர்த்து   நன்றாக வதக்கி    இறக்கி

உபயோகிக்கவும்.

நம்முடைய தினப்படி சமையலில் இது ஒரு தினுஸு.

மற்றும்   பீன்ஸை சற்று நீளமாக நறுக்கி  எண்ணெயில்  வதக்கி

மஞ்சள்,மிளகாய்,தனியா,  சீரக,  மாங்காய்,  உப்புப் பொடிகள்

திட்டமாக சேர்த்து  ,துளி ஜலமும் தெளித்து   வதக்கி இறக்கியும்

ரொட்டி வகைகளுடன்   உபயோகிக்கலாம்.

பருப்புசிலியும் எல்லோரும் செய்வதொன்று.

பீன்ஸை  பெறிய  துண்டுகளாக  நறுக்கி  இட்டிலி தட்டுகளிலோ

அல்லது வேறு வகைகளிலோ 15நிமிஷத்திற்கதிகம்ஸ்டீம்செய்து

வெண்ணெயில் உப்பு,  மிளகுப்பொடி சேர்த்து வதக்கினாலும்

ருசியோருசிதான்.

பொடியாக  நறுக்கிய   உருளைத் துண்டுகளுடனும் பீன்ஸை

சேர்த்து வதக்கி உப்பு காரம் சேர்த்தால் அதுவும் ஒரு ருசிதான்.

இப்படியே எழுதிக்கொண்டே போகலாம்.

பட்டர் பீன்ஸ்  நாரில்லாமல்   நன்றாக இருக்கும்.

இஞ்சி,  பூண்டு,  வெங்காயம் இவைகளையும்  வேண்டியவர்கள்

உபயோகிக்கலாம்.  கறிப்பொடி சேர்த்து வதக்கவும்  செய்யலாம்.

பீன்ஸ் கறி தேங்காய் சேர்த்தது

ஜூன் 17, 2011 at 1:08 பிப 2 பின்னூட்டங்கள்

குர்ஜர் கறி

வேண்டியவைகள்.

குர்ஜர்—திட்டமானசைஸில்—4

மிளகாய்ப்பொடி—அரைடீஸ்பூன்

தனியாப்பொடி—1 டீஸ்பூன்

சீரகப்பொடி–அரை டீஸ்பூன்

மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—துளி

வேர்க்கடலை–2 டேபிள்ஸ்பூன்.  வெறும் வாணலியில்  வறுத்துப்

பொடிக்கவும்.

தாளிக்க எண்ணெய் —-4,5  டீஸ்பூன்

கடுகு—1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–1 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

துளி  இஞ்சித் துருவல்

செய்முறை

குர்ஜரைத் தோல்சீவி   சற்றுப்  பெறிய  துண்டங்களாகநறுக்கிக்

கொள்ளவும். அலம்பி நன்றாக  வடிக்கட்டிக் கொள்ளவும்.

அடிகனமான   வாணலியிலோ அல்லது  நான்ஸ்டிக்  பேனிலோ

எண்ணெயைக் காயவைத்து  கடுகு, உளுத்தம் பருப்பைத்

தாளித்து,  தீயைக் குறைத்து  நறுக்கிய தளரில் ஒரு பிடியைச்

சேர்க்கவும். வேர்க் கடலைப் பொடியைத் தவிர   மற்றவைகளைச்

சேர்த்துச்   சிறிது வதக்கவும்.

பூரா தளர்களையும் சேர்த்து   உப்பு       இஞ்சி  சேர்த்துக்   கிளறி

மூடிவைத்து 5 நிமிஷங்கள்  வேகவிடவும்.

சற்று நீர் விட்டுக் கொள்ளும்.  திறந்து வைத்து  வதக்கவும்.

வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து  வதக்கினால்  தண்ணீரை

ஓரளவு  இழுத்துக் கொள்ளும்.

பாத்திர சூட்டிலே இருந்தால்  ஸரியாக இருக்கும்.

வதக்கியகாயை இறக்கி,   மல்லித்தழை தூவி உபயோகிக்கவும்.

ரொட்டி வகைகளுடனும்.   ஸாதாரண சாப்பாட்டுடனும்  ஒத்துப்

போகும்.  கறி  சேர்ந்தாற்போல இருக்கும்.

வேண்டுமானால்    சிறிது ஆம் சூரும் சேர்க்கலாம்.

இந்தக் காயை,பஜ்ஜி போடும் போதும்  உபயேகிக்க முடியும்.

ஸேலட்டிலும்,  இது பங்கு  பெறுகிறது.

குர்ஜர்

குர்ஜர் கறி

ஜூன் 7, 2011 at 12:30 பிப 4 பின்னூட்டங்கள்

கார சாரமான பூண்டுப் பொடி

இதைச் சின்ன  அளவில்   செய்து பாருங்கள்.  ஊறுகாய் போலவும்

சட்னிக்குப்   பதிலாக  அவசரத்திற்கும் உபயோகப்படும்.

இதுவும்   கிராமங்களில்    செய்யும்   ஒரு  ருசியான  அவசர

தயாரிப்பு.

வேண்டியவைகள்
வேர்க் கடலை—3   டேபிள்ஸ்பூன்

வெள்ளை எள்—3   டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல்— 3,  அல்லது 4.

உறித்த  பூண்டு  இதழ்கள்—கால் கப்

ருசிக்கு  உப்பு

பெருங்காயம்—வாஸனைக்கு

ஆம்சூர்—ஒரு டீஸ்பூன்  அல்லது துளி  புளி

ஒரு துளி  எண்ணெய்

செய்முறை.

வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்

சிவக்க   வறுக்கவும்.

வேர்க் கடலையை   கையினால் தேய்த்து  தோலை நீக்கவும்.

துளிஎண்ணெயில்    மிளகாயையும் சிவக்க  வறுக்கவும்.

இவைகளைப்  பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்

பொடிக்கவும்.

உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்

உப்பு  சேர்த்து   சற்று மசியும்படி  2 சுற்று சுற்றவும்.

சேர்ந்தாற் போல  வரும்.

ஆம்சூர்.   சேர்த்து   சிறிய  உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்

வெளியில் வைத்து  பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.

புளிப்புக்காக   புளியோ,   ஆம்சூரோ  உபயோகிக்கவும்.

எள்,  வேர்க் கடலை உபயோகிப்பதால்,  எண்ணெய்ப் பசையுடன்

சேர்ந்தாற்போல இருக்கும்.  ஜலம் உபயோகிப்பதில்லை.

நீண்ட நாட்கள்  கெடாது.

எள்மட்டிலும்   சேர்த்தும்,    செய்யலாம்.

அதேபோல்   வேர்க்கடலை மட்டும் சேர்த்தும்  செய்யலாம்..

லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்

கொண்டேன்  அக்ரூட்,  பாதாம்,  முந்திரி,  ஸன்ப்ளவர் ஸீட்

என ஏதாவது   வீட்டிலிருப்பதையும்  ஏதாவதொன்றை    சிறிது

சேர்த்தும்   செய்து பார்க்க வேண்டுமென்று.

பூண்டை பச்சையாகவே  வதக்காமல் போட வேண்டும்.

சற்று ஊற,ஊற  பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.

காரம்  வேண்டிய அளவிற்கு  கூட்டவும். நான்

செய்தது,எள்,வேர்க்கடலை சேர்த்து செய்ததுதான்

பொடிக்கான மாதிரி சாமான்கள்

காரசாரமான பூண்டுப் பொடி

சாப்பிடும்போது   தனியாக சிறிது எடுத்து தயிர் கலந்தும் உபயோகிக்கலாம்.

மே 30, 2011 at 8:38 முப 7 பின்னூட்டங்கள்

பாகற்காய் இனிப்புப் பச்சடி

கசப்பு காயாக இருந்தாலும்   செய்யும்  விதத்தில் 

பச்சடி ருசியாக இருக்கும். 

  பாகற்காய் பிடித்தவர்களுக்கு இது சுலபமாக தயாரிக்க

முடியும்.   கிரேவியைச் சுருக்கி கெட்டியாகத் தயாரித்தால்

ரொட்டியுடன் எடுத்துப் போக மிகவும் ஸௌகரியமானது.

எண்ணெய் சற்று கூட விட்டால் 2,  3,   நாட்கள்   வரை கெடாது.

வேண்டியவைகள்

திட்டமான   நீளத்துடன் கூடிய  பாகற்காய்—2

பச்சை மிளகாய்—–3

தோல்நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள்– –2

-டேபிள்ஸ்பூன்

புளி—ஒரு பெறிய நெல்லிக்காயளவு

வெல்லம் பொடித்தது–4,5 டேபிள்ஸ்பூன்

தாளிக்க—-கடுகு, அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு—ஒருடேபிள்ஸ்பூன்

பெருங்காயம்—சிறிது

ரஸப்பொடி—ஒருடீஸ்பூன்

கரிவேப்பிலை–சிறிது

எண்ணெய்—5, 6 டீஸ்பூன்

உப்பு—-ருசிக்கு

விருப்பப் பட்டால்–ஏலக்காய்-1

பாகற்காயை அலம்பி   இரண்டாகப் பிளந்து  விதைகளை நீக்கி

மெல்லிய   துண்டுகளாக   நறுக்கிக் கொள்ளவும்.

சிறிது  உப்பு சேர்த்துக் கலந்து   கசக்கின மாதிரி பிசறி   ஒரு

பாத்திரத்தில்  அழுத்தி  வைக்கவும். புளியை ஊறவைத்து     ,

2, 3 ,முறை ஜலம் விட்டு கெட்டியாகசாரு பிழிந்து வைத்துக்

கொள்ளவும். பாகற்காயை ஒட்டப் பிழிந்து  ஒரு டீஸ்பூன்

எண்ணெய் விட்டுப் பிசறி   மைக்ரோவேவில்    ஹை பவரில்

5, நிமிஷங்கள் வைத்து எடுக்கவும். காய் நன்றாக வெந்து விடும்.

நான்ஸ்டிக்பேனில்,எண்ணெயைககாயவைத்து,கடுகு,

பெருங்காயம்,   பருப்பைத் தாளித்து   மிளகாய்,   கரிவேப்பிலை

இஞ்சி   சேர்த்து  வதக்கவும். வெந்த    காயையும் உடன் சேர்த்து

வதக்கி புளி ஜலம் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம்,உப்பு

,ரஸப்பொடி சேர்த்து நிதானமாகக் கொதிக்க விடவும். ஏலக்காய்ப்

பொடி,  மஸாலாப்பொடி   வேண்டியவர்கள் துளி சேர்க்கலாம்.

குழம்பை   நன்றாகக்   கொதிக்க விடவும்.

குழம்பு திக்காவதற்காக   ஒரு ஸ்பூன் அரிசி மாவைக்

கடைசியில்சிறிதுஜலத்தில் கரைத்துச் சேர்த்து  ஒரு

கொதிவிட்டு   இறக்கவும்.

காய் அதிகம் சேர்த்துச் செய்தால்   சுருளக் கிளறினாலே போதும்.

மாவு அவசியம் இல்லை

.டிபனுடன் எடுத்துப்போக சௌகரியமாக இருக்கும்.

உப்பு காரம்,மற்றும்  யாவும்  காய்க்குத் தக்கபடி  அதிகம்

சேர்க்கவும்.

இனிப்பு,  புளிப்பு கசப்பு,  எல்லாம் கலந்த அறுசுவைப்
பச்சடி.  வாஸனையுடன் கூடிய பச்சடி.  
பாகற்காய்பிடித்தவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 
நான்வீட்டிலசெய்ததால்உங்களுக்கும் பிடித்தவர்கள்
செய்யட்டுமே என்று  எழுதியிருக்கிறேன். பெருஞ்சீரகமும்
பிடித்தவர்கள்   தாளிப்பில் சேர்க்கலாம்.

பாகற்காய் இனிப்புப் பச்சடி

மே 20, 2011 at 9:58 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


ஏப்ரல் 2026
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,958 hits

காப்பகம்

பிரிவுகள்

  • chitrasundar5's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Great Foodies's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.