மக்னி அல்லது மகானா.makhana
பிப்ரவரி 13, 2012 at 6:32 முப 5 பின்னூட்டங்கள்
நான் மஃக்னி யைப்பற்றி இங்கே எழுதுகிறேன். மும்பையில்
மக்னி என்று சொல்வது பெரும்பாலான இடங்களில் மகானா
என்று அதுவும் வட இந்தியாவில் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி
விவரம் கேட்டு எழுதியதில் ஏராளமான விவரங்கள் அறிய
முடிந்தது. எனக்கு தெறிந்ததில் சிலவற்றை எழுதுகிறேன்.
மகானா. makhana இங்லீஷ் பெயர் foxnut
இது ஒரு தண்ணீரில் வளரும் தாவரம்.
லில்லி குடும்பத்தைச் சேர்ந்தது. இலை ரவுண்ட்ஷேப்.
பெறிய அளவு. இலை மேலே பச்சை நிறம். கீழே பர்பல் நிறம்.
பூவும்–பர்பல்நிறம்தான்.
ஒயிட் கலர், ஸ்டார்ச்சி ஸீட். சாப்பிடத் தகுந்தது.
விதைக்காக கல்ட்டிவேட் செய்கிரார்கள்.
விளையும் இடங்கள்—இந்தியா,சைனா, ஜப்பான்.
சீதோஷ்ணம்–ஹார்ட் ட்ரை ஸம்மர்,கோல்ட் வின்ட்டரில்
பயிராகும்.
லேட் ஸம்மரில் கலெக்ட் செய்வார்கள்.
3000 வருஷங்களாக சைனாவில் விளைவிக்கிறார்கள்.
இந்தியாவில் பீஹாரில் மாத்திரம் 96000 ஹெக்டேரில்
தண்ணீரில் பயிராகிரது.
இதை பச்சையாகவும், உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
சைனாபெயர்—- Qian’shi
சைனாவில் மருந்துகளிலும், ஸூப்புகளிலும், மற்றும் பல
விதங்களிலும் உபயோகிக்கிரார்கள்.
ஆண்மை பலப்படும், முதுமை தள்ளிப்போகும் என சைனீஸ்
நம்புகிறார்கள்.
இந்தியாவில் , வட இந்தியாவிலும்,, இந்தியாவின் மேற்குப்
பகுதிகளிலும், அதிக உபயோகமாகிறது.
பீஹாரில் பண்டிகைகளிலும், கடவுளுக்கான நிவேதனப்
பண்டங்களிலும், இது அதிகமாக உபயோகப் படுத்தப்
படுகிரது.
கஞ்சி, பாயஸம்,லட்டு, புட்டிங், சமையல் என பல
விதங்களில் மிகுதியாக உபயோகப் படுத்துகிறார்கள்.
நான் அறிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன்.
ஜெநிவாவில் என் சம்மந்தி அம்மா அவர்கள் செய்ததையும்,
படம்பிடித்து வைத்திருந்தேன். ஷாஹி மட்டர் மகானா.
இதை வழக்கமான ஸாமான்களுடன் முந்திரி பருப்பையும்
சேர்த்து அரைத்து,மட்டரை வேகவைத்துச் சேர்த்து, மகானாவை
வறுத்துச் சேர்த்துச் செய்தது.
எல்லா கடைகளிலும், வட இந்தியாவில் கிடைக்கிறது.
லோடஸ் ஸீட் என்று சிலரும்,இது வேறு என்று சிலரும்
சொல்கிறார்கள். இப்போது முக்கியமாக தென்நிந்தியாவிலும்
கிடைப்பதாகச் சொல்கிரார்கள்.
சோளப்பொரி மாதிரி சற்றுப் பெறிய சைஸில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.நான் இங்கு இன்னமும்
விசாரிக்கவில்லை. ரொட்டி, பூரி போன்ற வட இந்திய
உணவுகளுடன் நன்றாக இருக்கிரது.
Entry filed under: கூட்டு வகைகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 3:59 முப இல் பிப்ரவரி 14, 2012
தகவலுக்கு நன்றிமா! ரொம்பவே மெனக்கெட்டு தகவல் திரட்டியிருக்கிறீங்க..:)
Thanks ! 🙂
2.
chollukireen | 5:54 முப இல் பிப்ரவரி 14, 2012
தகவல் தெரிந்து எழுதின பிறகுதான் மனது சிந்திப்பதை நிறுத்தியது. தெறியாத வஸ்துவைப் பிரமாதமாக எழுதியதாக இருக்கக் கூடாது. உடனேபதில்.இப்போ எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா? உன்னுடைய பதிலைத்தான் சொல்லுகிறேன்.
3.
சித்ராசுந்தர் | 7:17 முப இல் பிப்ரவரி 17, 2012
காமாட்சி அம்மா,
எவ்வளவு விஷயங்களைச் சேகரித்துள்ளீர்கள்!
இது கிடைத்தால் வாங்குகிறேன்.வெறும் வாணலியில் போட்டு வறுக்கலாமா? அல்லது எண்ணெயில் போட்டு வறுத்துத்தான் சேர்க்க வேண்டுமா?நேரம் கிடைக்கும்போது பதில் தந்தால் போதும்.நன்றி அம்மா.
4.
chollukireen | 12:41 பிப இல் பிப்ரவரி 19, 2012
நான் விஷயங்கள் மற்ரவர்களுக்கு எழுதிக் கேட்டுதான் தெறிந்து கொண்டேன். சிரமமொன்றுமில்லை.
மகானாவை லேசாக எண்ணெயிலோ, நெய்யிலோ வறுத்தால் போதுமானது. வெண்ணெய், நெய்யில்
வறுத்தால் நல்ல வாஸனையாக இருக்கும். கிடைக்கும்.முடியும் போது செய்யவும். அன்புடன்
5.
chollukireen | 12:37 பிப இல் ஜனவரி 17, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
டால் மஃனி எழுதியதில் மஃனியப்பற்றிய தகவல்கள் இது. உபயோகப்பட்டால் நல்லது என்று பதிவு செய்திருக்கிறேன். அன்புடன்