என்ன சமையல்?
ஜூன் 1, 2012 at 2:49 பிப 14 பின்னூட்டங்கள்
ஸிம்பிலாக சமைக்கிறேன் என்று பிரதீஷா செய்த சமையலை
நீங்களும் தான் ருசியுங்களேன். அஸ்ஸாம் டாலும் சென்னை
ரஸமும் பொதுவான கறிகளும்கலந்து ருசியுங்களேன்.
ஒரு டால். பயத்தம்பருப்பும், மசூர் டாலும் கலந்து வேகவைத்து
பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,
தக்காளியை நன்றாக வதக்கிச் சேர்த்து உப்பு, மஞ்சளுடன்
சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்தது.
மஸாலா போடலை. துளி சீரகப்பொடி போட்டது.
உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி 1ஸ்பூன்
எண்ணெயுடன் 5 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்து எடுத்து
வாணலியில் எண்ணெயில் கடுகைத் தாளித்து, உப்பு,காரம்
மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கியது.
அடுத்து நிறைய தக்காளியை மைக்ரோவேவில் வேகவைத்து
எடுத்து துளி புளி சேர்த்து கறைத்து சாறு எடுத்து, ரஸப்பொடி,உப்பு,
பூண்டு விழுதுடன் நிதான தீயில் நன்றாகக் கொதித்துக்
குறைந்தவுடன், துவரம்பருப்பு வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி
ஒது கொதி வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு, பெருங்காயம்
பொரித்துக் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கியது.
கமகம ரஸம்.
வீட்டில் தோய்த்த புளிப்பில்லாத தயிர்.
கொஞ்சம் ஊறுகாய்.
வதக்கிய வெண்டைக்காய் கறி.
நடுவில் குட்டி காப்ஸிகம் பஜ்ஜி அதுவும் சுடச்சுட
பாக்கலாமா, கேட்கலாமா, ருசிக்கலாமா
பஜ்ஜியைச் செய்யலாம்.
வேண்டிய அளவு–
-கடலைமாவு,துளி அரிசி மாவு
ருசிக்கு வேண்டிய உப்பு,மிளகாய்ப்பொடி
துளி ஸோடா உப்பு
துளி பெருங்காயப்பொடி
கொத்தமல்லி இலை கொஞ்சம்
கேப்ஸிகம் வேண்டியஅளவு.
செய்முறை
மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முழுதாகவும் போடலாம்.
உப்பு, ஸோடா, பெருங்காயம், மிளகாய்ப்பொடி யாவற்றையும்
மாவுடன் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவு பதத்தில்
நன்றாகக் கறைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லியையும்
சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கி வைத்திருப்பதை
மாவில் அமிழும்படி தோய்த்து பஜ்ஜிகளாகப் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டாமல் சட்டுவத்தால் பிரித்து விட்டு,
சிவந்து வரும்போது திருப்பிவிட்டு மறுபுறமும் சிவந்ததும்
எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்தெடுத்து உபயோகப் படுத்தவும்.
எண்ணெய் திட்டமான சூட்டில் இருக்கவும்.
புகையும்படி அதிக சூடு வேண்டாம்.
என்ன சமையல் என்கிற தலைப்பு. சமையல் சொல்லிவிட்டேன்.
குக்கரில் சாதம் ரெடி. அப்பளாமும் பொரித்தாகிறது.
எல்லாரும் வந்து சாப்பிடலாம்.
மேஜையிலும் வைத்தாகிவிட்டது.
Entry filed under: என்ன சமையல், Uncategorized.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 10:38 பிப இல் ஜூன் 1, 2012
“சமையல் சொல்லிவிட்டேன்.குக்கரில் சாதம் ரெடி. அப்பளாமும் பொரித்தாகிறது.எல்லாரும் வந்து சாப்பிடலாம்.மேஜையிலும் வைத்தாகிவிட்டது”_மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரம்தான்.அதனாலென்ன பரவாயில்லை,வெயிட் பன்னுங்க அம்மா.வந்துட்டே இருக்கோம்.
மிளகாய் பஜ்ஜி லாலிபாப் மாதிரி குட்டிகுட்டியா அழகா இருக்கு.இந்த மிளகாய் சில சமயங்களில் கிடைக்கும். காரமில்லையென்றால் வாங்கி செய்யலாம். இவ்வளவையும் அழகாக,சுவையாக செய்த பிரதீஷா யார் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாமே.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 9:51 முப இல் ஜூன் 2, 2012
பிரதீஷா என் மூன்றாவது மறுமகள்அவளின் லின்க்கும் தருகிறேன்
http://sattriyadance.com/
3.
chollukireen | 10:44 முப இல் ஜூன் 2, 2012
வந்துண்டே இருக்கிங்கோ இல்லையா? வாங்கவாங்கோ. ரொம்பவே மகிழ்ச்சியாயிருக்கு. என் மருமகளின் லின்கையே கேட்டு போட்டிருக்கேன்.
நாங்கள் இந்த மருமகள், மகன் குடும்பத்தினருடன்தான்
இங்கு இருக்கிறோம். ஜெனிவா ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்ற அளவில் இருக்கிறது.
இந்த மிளகாய் காரமில்லை. அருமையான பதிலுக்கு
என்ன கொடுக்கலாம். அன்பைத்தவிர அன்புடன்
4.
Mahi | 4:15 முப இல் ஜூன் 2, 2012
ஆஹா..அருமையான விருந்து! மிளகா பஜ்ஜி, குட்டிகுட்டியா அழகா இருக்கும்மா! 🙂
உருளை-காலிஃப்ளவர் வதக்கல் என்று போட்டோவில் இருக்குது..எதுன்னாலும் சரி, எனக்கு பிடித்த காய்கள்தான் ரெண்டுமே! 😉
தால்-ரசம்-வெண்டைக்காய்- உருளை-பஜ்ஜி…எல்லா ஐட்டமும் சூப்பர்! இப்ப எனக்கு டின்னர் டைம்..ஒரு புடி புடிக்கப்போறேன்! 😛
வழக்கமாக எழுதும் குறிப்புகளின் நடுவே இப்படி ஒரு வித்யாசமான போஸ்டைக் கண்டால் உற்சாகமாக இருக்குமா! 😀
பிரதீஷாவுக்கு பாராட்டுக்கள், அதை விட அழகாய் இங்கே பதிந்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்! 🙂
5.
chollukireen | 10:08 முப இல் ஜூன் 2, 2012
http://sattriyadance.com/
மஹி உன்னுடைய கமென்ட்டிற்கு மிகவும் நன்றி.
என்னுடைய அஸ்ஸாம் மருமகள்தான் பிரதீஷா. அவளைப் பற்றியும் தெறிந்து கொள்வதற்காக லிங்க் எழுதியிருக்கிறேன்.
எவ்வளவோ நினைவுகள் மனதில் உலாவருகிறது.
எழுத்துருவம் கொடுப்பதில்லை.சமையலை விட்டு விட்டு வேறு விதமான நினைவுகளைக் கூட பகிர்ந்து
கொள்ளலாம். கொஞ்சம் மாறணும். பார்க்கலாம்.
நல்ல விரிவான அபிப்ராயங்களுக்கு மிகவும்
அன்புடன்
6.
chollukireen | 10:32 முப இல் ஜூன் 2, 2012
நான் படத்தில் பேர்போட தெறிஞ்சிண்டேன். அதான் காலிப்ளவரும் கூட எழுதிட்டேன் போல. கத்துக்குட்டி.
இப்போ புரிஞ்சுதா. மொத்தத்தில் துளித் துளியாகக்
கத்துக் கொள்கிறேன். அன்புடன்
7. மிளகாய் பஜ்ஜி « Chitrasundar's Blog | 11:05 பிப இல் ஜூலை 13, 2012
[…] வேண்டுமென ஆசை.ஆசையைத் தூண்டியது இந்தப்பதிவுதான்.சம்மர் வரட்டும் […]
8.
chollukireen | 11:48 முப இல் ஜூலை 14, 2012
ஆசை தீர அழகழகாய், விதத்திற்கொன்றாய் பஜ்ஜிகளைப் போட்டு பதிவிற்கு ஞாபகப் படுத்திவிட்டாய். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டதில் வயிறு நிறைந்து விட்டது.
எல்லாமே நன்றாக இருக்கு. ஆசையும் நிறைவேறி விட்டதல்லவா?
9.
chollukireen | 11:25 முப இல் மே 23, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு. பதிவுகள் ஒரேமாதிரி படிக்க அலுத்து விடும் என்று சற்று வித்தியாஸமாக எழுதினேன். மருமகள் செய்முறையும் இதில். பூண்டா என்றெல்லாம் நினைக்காதீர்கள். அவரவர்கள் விருப்பம். ரஸிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பார்க்கலாம். அன்புடன்.
10.
Geetha Sambasivam | 11:29 முப இல் மே 23, 2022
சமையல் அபாரம் அம்மா. ஆனால் குடமிளகாய் பஜ்ஜி இது உறைக்குமோனு சந்தேகம். எல்லாம் நன்றாகவே இருந்திருக்கும்.
11.
chollukireen | 11:32 முப இல் மே 23, 2022
அடாடா நீங்களா? ரைட் பிறந்தநாள் சாப்பாட்டுடன் இதையும் பார்த்ததற்கு. காரமெல்லாம் இல்லை.நன்றி அன்புடன்.
12.
chollukireen | 11:22 முப இல் மே 24, 2022
இந்தமாதிரி மிளகாய் காரமில்லை.உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
13.
நெல்லைத்தமிழன் | 1:42 பிப இல் மே 23, 2022
பஜ்ஜியே பார்க்க நன்றாக இருக்கிறது. இருக்கும் குளிரில் மோர் சாதத்துடன் சூப்பராக இருக்கும். பூண்டு சேர்த்த ரசமும் நன்று
14.
chollukireen | 11:18 முப இல் மே 24, 2022
இதெல்லாம் ஒரு இடுகையா என்று நினைத்து விடப் போகிரார்களோ என்று நினைத்தேன். மிக்க நன்றி. அன்புடன்