மேங்கோலஸி
ஜூன் 5, 2012 at 12:29 பிப 4 பின்னூட்டங்கள்
சொல்லப்போனால் மாம்பழமோர்தான். அழகாகச்
செய்து கொடுத்தால் வெய்யிலுக்கு மாம்பழச்சுவை
-யுடன் ஜில் என்று குடிப்பதற்கு இதமாக இருக்கிறது.
அதுவும் நல்ல இன மாம்பழம் சேர்த்துச் செய்தால்
சொல்லவே வேண்டாம். அவ்வளவு நன்ராக இருக்கு.
பார்ப்போமா?
வேண்டியவைகள்
நல்ல மாம்பழம்—-ஒன்று
புளிப்பில்லாத மோர்—அரை டம்ளர்
காலாநமக்கென்று சொல்லப்படும் உப்பு—அரைடீஸ்பூன்
வேண்டிய அளவு—ஐஸ் தண்ணீர்
செய்முறை
மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டங்களாகச் செய்து
கொள்ளவும்.
மாம்பழத் துண்டுகளை மிக்ஸியிலிட்டு கூழாக மசித்துக்
கொள்ளவும்.
மோரையும், காலா நமக்கையும் சேர்த்து மிக்ஸியைச் சற்று
ஓடவிட்டு எடுத்து ஐஸ்த்தண்ணீரைச் சேர்த்து கண்ணாடித்
தம்ளர்களில் விட்டுப் பருக வேண்டியதுதான்.
புளிப்புப் பழமாக இருந்தால் சர்க்கரையைச் சேர்த்து
மோருடன் நீர்க்கச் செய்து அருந்தலாம்.
மாம்பழ சீஸன். நான் செய்ததைச் சொன்னேன்.
உங்கள் விருப்பம்போல சுவையில் மாறுதல்களுடனும்
செய்யலாம். பிடித்ததா. இல்லையா?
பார்க்கலாம்.
Entry filed under: ஜூஸ் வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 6:05 பிப இல் ஜூன் 5, 2012
எளிதான,இனிப்பான குறிப்பு.இதுவரை செய்ததில்லை மாம்பழத்துடன் மோர் சேர்த்து. நல்லாருக்கு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 9:29 முப இல் ஜூன் 6, 2012
ஜெனிவா மருமகள் பாலைச் சேர்த்துச் செய்வாள். எனக்கு மோர் சேர்த்துச் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று.
மாம்பழச் சூட்டையும் தணித்துவிடும் இந்த மோர். அன்புடன்
3.
Mahi | 9:25 பிப இல் ஜூன் 5, 2012
I made this lassi during the last summer. This year we finished the fruits as such! 😉 delicious drink! 😛
4.
chollukireen | 9:33 முப இல் ஜூன் 6, 2012
கரெக்டாகச் சொன்னாய். ரொம்ப பேருக்கு தெறிந்த ஒன்றுதானிது. ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. சூடாகாது.ருசியாகவும் இருக்கு இல்லையா? அன்புடன்