ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும். 1

நவம்பர் 24, 2012 at 7:06 முப 27 பின்னூட்டங்கள்

சுண்டல் வினியோகம்,   ஸ்வீட் வினியோகம், ஏழைகளுக்கு புடவை

வேஷ்டிவினியோகம், தற்காலத்தில் ஸ்கூல் பசங்களுக்கு இலவச

லேப்டாப் வினியோகம்,  எலக்க்ஷன் காலத்தில் என்னென்னவோ

பலவித   எலெக்டிரிக் ஸாமான்கள் இலவசம்   இதெல்லாம்தான்

எல்லோருக்கும் தெரியும்.

எங்களின் காட்மாண்டு வாஸத்தின் போது வித்தியாஸமான ஸாளக்ராம

வினியோகம்  செய்யும்படி   ஒரு நேரம் அமைந்தது.

ராயல்ஃப்ளைட்டின்   சேவையா,   எங்கள் வீட்டுக்காரரின் சேவையா?

எதிர் பாராத விதமான  காலகட்டம்.   எதுவும் நடந்திருக்கலாம்.

இப்பவும் யாராவது கேட்டால்   முடிந்தபோது   வாங்கிக் கொடுக்க

முயற்சிக்கிறோம்.   என் வீட்டுக்காரரின்  அனுபவம்தானிது.

முதலில் ராயல்ஃப்ளைட்.

என்னுடைய பிள்ளைகள்    ஆகாயத்தில்  ஃப்ளைட் சப்தம் கேட்டவுடனே

அப்பா -ப்ளைட்,    ஆவ்ரோ,   டகோடா,  ஹெலிகாப்டர், பெல் என  பார்க்காமலே

அதன் பெயரை நான் ஃபஸ்ட், நீ ஃபஸ்ட்  என  போட்டி போட்டுக்கொண்டு

சொல்வார்கள்.    அப்பா  வேலை செய்யும்   ப்ளேன்   அவர்களுடயதாக எண்ணம்.

ராயல்ப்ளைட்டுடா  அப்பாது இல்லை.   என்ன சொன்னாலும் அவர்களுக்கு

அப்பா ப்ளேன்தான்.

ராஜ குடும்பத்திற்கான   ப்ளேன்கள்,  டகோடD.C   3இ ல் ஆரம்பமாகிஆவ்ரோ,

ட்வின் ஆட்டர்,ட்வின் பைனர்,ஹெலிகாப்டர்கள் எல்யூட், பெல்,பூமா,  என

வந்து கொண்டிருந்தது. வருடங்கள் ஸரியாக ஞாபகமில்லை. 1970   என்ற வருஷத்தின் பின்னாக இருக்கலாம்.

அப்பொழுதெல்லாம்   முக்தி நாத்திற்குப் போக  ப்ரைவேட்  ஏர்லைன்ஸ் வசதி

எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்.

ராஜ குடும்பத்தினர்  ஸவாரி,   அதுதான்   பிரயாணம் செய்யும் போது,எங்கு

போகவேண்டுமானாலும்  விமானம்,   உள்ளே அலங்கரிக்கப்பட்டு விசேஷ

வசதிகளுடன்  மாறுதலாகிவிடும்.

ஸவாரி இல்லாத நாட்களில்,     கார்கோவாக  மாற்றி விடுவார்கள்.

முக்கியமான  ஸாமான்கள் கொண்டுவர, எடுத்துப்போக  என கமர்ஷியலாக

மாறிவிடும்.  மெயின்டனன்ஸுக்கு பணம்  வேண்டுமல்லவா?

இந்தியாவிற்கு வரபோக    R.N.A.C   என்ற   பொது ஜனவிமான ஸேவை ஒன்றும்இருந்தது.

ராயல் ஃப்ளைட்டை  அரச குடும்பத்து உறவினரும், தேர்ந்த  பைலட்டுமான

ஒருவர்  நிர்வகித்து வந்தார்.  நிர்வாகம் தெறிந்தவர். அரசகுமாரர்

சற்று  குனிந்து ஏறும்படி   பிளேனின்  நுழைவாயில் இருக்கிரதென்று

மற்று வேறு  ப்ளேன் வாங்கியது நிர்வாகம்.  அரசர் தலை வணங்கக்

கூடாது என்பது அந்நாளைய   சித்தாந்தம்.

அந்த காலத்தில் ஏர்கிராஃப்ட்   இன்ஜின்    சேஞ்ஜ்   செய்வதென்றால் மும்பை

கொல்க்கத்தாவின் பாரக்பூர்,   பெங்களூர் என  ப்ளேனைக் கொண்டுவந்து,

இன்ஜின்மாற்றி   ஒவரால்  செய்து கொண்டு  நேபால்  செல்வார்கள்.

அப்படி பாரக்பூரில் சேஞ்ஜ் செய்ய வந்த போதுதான் அவர்கள் ஏர்கிராப்டில்

துடிப்பாக          வேலை செய்த  இரண்டு பேர்களை   வா என்று கூப்பிட்டு

வேலை கொடுத்து  படிப்படியாக   வசதிகளை அதிகரிக்கிறோம் என்று

சொல்லிச்  ச்்்்்்்்்்்்்்்சொல்லி  காட்மாண்டுவாஸ கஷ்ட வாஸமாக

கடவுளை  நம்பும்  வாஸமாக    அமைத்துத் தந்தது    தனிக் கதை.

ராயல்       ஃப்ளைட்டின்  ஹெலிகாப்டர்    ஒன்று   அதி  முக்கியமான    ஸாமான்களை

ஏற்றிக்   கொண்டு        ஜும்ஸும்   போகவேண்டி  இருந்தது.

பல செங்குத்தான  மலை முகட்டுக்களிடையே    ஜூம்ஸும்  அமைந்துள்ளது.

சிறிய ரக   விமானங்கள்தான்   இறங்க முடியும்.  காற்றும் அதிகம் என்று

சொல்வார்கள். தேர்ந்த  பைலட்டுகளே  போக அஞ்சுமிடமாக இருந்தது

அக்காலத்தில்.

துரதிருஷ்டவசமாக   போன  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டது.

இவரின்  முக்கியாக  வேண்டப் பட்டவர்களை  திரும்பப் பார்க்க முடியவில்லை.

அடுத்தபடியாக   விபத்திற்காளான    ப்ளேனின்    இன்ஜின்முதலானவைகளைக்

கொண்டுவர  சில வாரம் கழித்து  ட்வின் ஹாட்டர்  என்ற   சிறியவகை

ப்ளேன் ஜும்ஸும் சென்றது.   உடன் சென்ற   குழுவினரை இறக்கிவிட்டு

விபத்திற்குள்ளான   ப்ளேனின்  பாகங்களை  எவ் வெப்படி  வைத்து எடுத்துப்

போகலாம்   என்ற   பரிசோதனை செய்து கொண்டிருந்தது.

ராயல்ஃப்ளைட் கதையா?

அப்படியே  கதையாகவே நினைத்துப் படியுங்கள்.

அடுத்து திரும்ப வருகிறேன்.

Entry filed under: சில நினைவுகள்.

நேபாலின் பாய் டீக்கா ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.2

27 பின்னூட்டங்கள் Add your own

  • 1. venkat's avatar venkat  |  9:18 முப இல் நவம்பர் 24, 2012

    அட தொடராக வரப்போகிறதா… காத்திருக்கிறேன்.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  5:47 முப இல் நவம்பர் 27, 2012

      சிறிது நீண்டு விட்டதால் பிறித்துப் போடுகிறேன். அவ்வளவுதான். உங்கள் வருகைக்கு மிகவும் ஸந்தோஷம்

      மறுமொழி
  • 3. angelin's avatar angelin  |  9:43 முப இல் நவம்பர் 24, 2012

    சிறு வயதில் நானும்தான் அப்பா வேலை செய்யும் ஹாஸ்பிட்டல் முழுதும் அப்பாவுக்கே சொந்தமென நினைத்திருந்தேன் ..
    அந்த பிராயம் அப்படி எல்லா குழந்தைகளுக்கும் அந்த எண்ணம் இருந்திருக்கும் .
    ..ராஜ குடும்பத்தினர் தலை வணங்காமல் வசதியாக விமான சேவை !!!!

    நினைவுகள் பயணம் அழகா செல்கிறது ….தொடருங்கள் பயணிக்கிறோம் நாங்களும்

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  5:55 முப இல் நவம்பர் 27, 2012

      வாம்மா வா. வாஸ்தவம்தான். சொந்தங்கள் என்று நினைத்த தெல்லாம் நமதில்லை என்று காலக்கிரமத்தில் அவரவர்களாகவே உணரும் பருவம்
      வந்துவிட்ட பின்னும் இப்போதும் எவ்வளவு ஏர்கிராப்ட் நமதே என்று நினைத்தோம் என்று அறியாமையை எண்ணிச் சிறிக்கிறார்கள்!!!!!!!!!!!!!
      ‘டிக்கட் இல்லாத பயணம். எல்லாரும் வாருங்கள்.
      அன்புடன்.

      மறுமொழி
  • 5. ranjani135's avatar ranjani135  |  9:44 முப இல் நவம்பர் 24, 2012

    உங்கள் தொடரின் ஆரம்பமே அலாதியாக இருக்கிறது. ஒரு கதைக்கு கதைக் களம் முக்கியம். இந்த தொடரின் களம் இதுவரை கேள்வி படாதது.

    அசத்தலான தொடரைப் படிக்க உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்.

    வரும் வருடம் முக்திநாத் போக இருப்பதால் தொடர் எனக்கு மிக மிக சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது!

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  6:03 முப இல் நவம்பர் 27, 2012

      இப்பொழுதெல்லாம் முக்தி நாத் போக நல்ல வசதிகளெல்லாம் கிடைக்கிறதாம். இந்த விஷயம்
      நடந்த காலம் வசதிகளெல்லாம் ஏற்படாத நேரம்.
      எனக்கு நல்ல ஊக்கம் அளிக்கும் விதமாக உன்
      பின்னூட்டமுள்ளது. பெறிய தொடர் எதுவுமில்லை.

      மீதியைப் படித்துவிட்டு என்ன சொல்கிறாய்,என பார்க்க வேண்டும். அன்புடன்

      மறுமொழி
  • 7. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  10:02 முப இல் நவம்பர் 24, 2012

    நல்ல சுவாரஸ்யமான அனுபவங்களை தங்கள் மூலம் கேட்பது சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள் மாமி.

    தொடர்ந்து எழுதுங்கோ.

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  6:09 முப இல் நவம்பர் 27, 2012

      ஆமாம். நடந்த கதையல்லவா? நீண்ட பதிவாக வேண்டாம் என்று, நீங்கள் சொன்ன முறையில் பகிர்ந்த பதிவாக ஒரு சின்ன முயற்சி தானாகவே
      அமைத்து விட்டது. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி
      அன்புடன்

      மறுமொழி
  • 9. adhiVenkat's avatar adhiVenkat  |  2:36 பிப இல் நவம்பர் 24, 2012

    சுவாரஸ்யமான அனுபவங்கள். தொடருங்கள்.

    மறுமொழி
    • 10. chollukireen's avatar chollukireen  |  6:10 முப இல் நவம்பர் 27, 2012

      ரஸிக்கும்படியாக இருக்கா?கேட்க ஸந்தோஷமாக இருக்கு. அன்புடன்

      மறுமொழி
  • 11. Mahi's avatar Mahi  |  3:42 பிப இல் நவம்பர் 24, 2012

    Interesting post..waiting for the next part!

    மறுமொழி
    • 12. chollukireen's avatar chollukireen  |  6:12 முப இல் நவம்பர் 27, 2012

      மஹி ஸந்தோஷமான பின்னூட்டம் உன்னுடையது.
      அடுத்ததும் தொடர்கிறது. அன்புடன்

      மறுமொழி
  • 13. இளமதி's avatar இளமதி  |  5:35 பிப இல் நவம்பர் 24, 2012

    அம்மா! மிக மிக ரசித்து அதிலேயே ஊறி அமோகமாக எழுதறீங்க.
    வாசிக்கும்போது நாமும் அந்த உணர்வில் ஒன்றி அதை அனுபவத்தில் காண்பதுபோல இருக்கிறது.
    அருமை. காத்திருப்பு தொடர்கிறது……

    (அஞ்சுவுக்கும் நன்றி!….)

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  6:16 முப இல் நவம்பர் 27, 2012

      இளமதி நீ சொன்னது ஸரி. ஊறிப் போனதை சுமாராக வெளிக் கொணற முயற்சிக்கிறேன்.. ஸரியான கருத்து. கருத்துக்கு மிகவும் நன்றி பெண்ணே!!!!!!!!!!!!அன்புடன்

      மறுமொழி
  • 15. rajalakshmiparamasivam's avatar rajalakshmiparamasivam  |  10:47 முப இல் நவம்பர் 25, 2012

    சுவாரஸ்யமாக இருக்கிறது.படிக்க ஆர்வமாக உள்ளது.
    தொடருங்கள்.
    ராஜி

    மறுமொழி
    • 16. chollukireen's avatar chollukireen  |  6:18 முப இல் நவம்பர் 27, 2012

      உங்கள் வரவிற்கு நன்றிகள். அடிக்கடி வாருங்கள்.ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 17. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்'s avatar ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்  |  3:13 பிப இல் நவம்பர் 25, 2012

    வணக்கம்
    அம்மா

    நல்ல படைப்பு ஆங்காங்கே கேள்விக்கனையை தொடுத்து எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா, தொடருங்கள் நான் தொடருகிறேன் நல்லசுவாரஸ்யமாக உள்ளது,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி
    • 18. chollukireen's avatar chollukireen  |  6:27 முப இல் நவம்பர் 27, 2012

      ஆசிகள் ரூபன். வாழ்த்துக்களுக்கு நன்றி. மனதில் திட்டமிட்டு எழுதவில்லை. என்ன தோன்றுகிறதோ
      அதை பதிவு செய்கிறேன். பெறிய தொடர் எதுவுமில்லை. பிறித்துப் போட தெறிகிறதா? பார்க்கணும்.. ஸந்தோஷ அன்புடன்

      மறுமொழி
  • 19. chitrasundar5's avatar chitrasundar5  |  9:58 பிப இல் நவம்பர் 25, 2012

    காமாட்சிமா,

    வித்தியாசமான கதை(உண்மை சம்பவம்),வித்தியாசமான நடையுடன்,விறுவிறுப்பா இருக்கு.அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 20. chollukireen's avatar chollukireen  |  6:30 முப இல் நவம்பர் 27, 2012

      பதிவு இன்று போஸ்ட் செய்கிறேன். பாரு. எப்படி இருக்கென்று எழுது. ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி பெண்ணே!!!!!!!!!!!!! அன்புடன்

      மறுமொழி
  • 21. SIVA - BARKAVI's avatar sivaparkavi  |  11:41 முப இல் நவம்பர் 26, 2012

    nice…

    sivaparkavi

    மறுமொழி
    • 22. chollukireen's avatar chollukireen  |  6:31 முப இல் நவம்பர் 27, 2012

      மகிழ்ச்சியம்மா. அன்புடன்

      மறுமொழி
  • 23. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  1:54 முப இல் மே 4, 2014

    வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 24. chollukireen's avatar chollukireen  |  9:22 முப இல் மே 4, 2014

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 25. Rajarajeswari jaghamani's avatar Rajarajeswari jaghamani  |  2:06 முப இல் மே 4, 2014

    முக்திநாத அனுபவங்கள் சுவாரஸ்யம் ..
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    மறுமொழி
    • 26. chollukireen's avatar chollukireen  |  9:24 முப இல் மே 4, 2014

      மிக்க ஸந்தோஷமம்மா. மனதில் பதிந்துவிட்ட ஸம்பவங்கள். உங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 27. chollukireen's avatar chollukireen  |  12:44 பிப இல் ஜனவரி 17, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    என்னுடைய கணவரின் நினைவாக இதை மீள் பதிவு செய்திருக்கிறேன். கணினி புதியது வாங்கிய பிறகே இதைச் செய்திருக்கிறேன். மிகவும் பின்னோக்கிய வருடங்களின் நினைவுப் பதிவு இது. வசதிகள் குறைந்த காலமது. என் வாசகர்கள் திரும்பப் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.எல்லோருக்கும் என் அன்பு. அன்புடன்

    மறுமொழி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நவம்பர் 2012
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,017 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • பிரபுவின்'s avatar
  • tamilelavarasi's avatar
  • chitrasundar5's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Vijethkannan's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.