லெஸொதோ LESOTHOஅனுபவமும்,தென் ஆப்ரிகாவும். 1

பிப்ரவரி 11, 2014 at 10:23 முப 22 பின்னூட்டங்கள்

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பார்வை

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பார்வை

இது ஒரு பார்வை  மலைகளி்ன் வடிவம்.

இது ஒரு பார்வை மலைகளி்ன் வடிவம்.

ஜோஹான்ஸ் பர்க்,மண்டேலா உருவச் சிலையுடன்

ஜோஹான்ஸ் பர்க்,மண்டேலா உருவச் சிலையுடன்

ஐந்தாறு வருஷங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் உள்ள

லொஸேத்தோ என்ற தேசத்திற்குப் போயிருந்தோம்.

அது ஒரு கிங்டம்.   வரண்டபூமி.  தலைநகர் மஸேரு. அந்த தேசத்தில்

விசேஷம் என்ன வென்றால் எய்ட்ஸ் பேஷன்டுகள் அதிகம்.

மிகவும் வரண்ட பூமி. மலைப் பகுதிகளே அதிகம்.

மலையும் கற்குவியல்களாக இருக்குமே தவிர பசுமையாக இராது.

பல அறியவகை வண்ண, வண்ணக் கற்கள்  கனிஜங்களாக இருக்கும் போல

உள்ளது.

ஜோஹான்ஸ்பர்க்போய், அங்கிருந்து    சிறிய விமானத்தில் மஸேரு

,செல்ல வேண்டும்.

அதிகம்  வசதிகளில்லாத ஏர்போர்ட் காண்மாண்டுவை, ஞாபகப் படுத்தியது.

இப்போதைய காட்மாண்டுவைச் சொல்லவில்லை.

விமானத்திலிருந்து  ஸாமான்கள் இறக்கி, ஆட்கள் தூக்கி வந்து ஹாலில்

வைப்பார்கள்.   கஸ்டம்ஸ் கெடுபிடி இருக்கும்.

பெயரளவிற்கு ஏதோ கூலி ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம் ஸாமான்கள்

வெளிக் கொணரவேண்டும்.

ஆனால்  காட்மாண்டுவில்  டகோடா ஸர்வீஸ்     இருந்தது. பிறகு ஆவ்ரோவும்

வந்தது.

மஸேரு போன விமானம் மிகக் குட்டியானது. பதினாறு இருக்கைகளே.

பதினைந்து கிலோ ஸாமான்களே உடன் எடுத்துப் போக முடியும்.

அதனாலே  துணி மணிகள்கூட  மிக்கக்  குறைந்த அளவிலே எடுத்துப்  போனோம்.

உள் நாட்டில்அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை.

இளைய தலைமுறையினர்   வேலைதேடி வெளிநாட்டிற்குப் போய்

விடுகிரார்கள்

அவர்கள் பணம் கொண்டு வருகிரார்களோ இல்லையோ, எய்ட்ஸைக்

கொண்டுவருகிரார்கள். மனைவிகளுக்குக் கொடுக்கிரார்கள்.

குழந்தைகளும் அதனுடனேயே  பிறக்கிரார்கள். ஆக எய்ட்ஸ் நோய் தலை

விரித்தாடும்தேசமாக இருந்தது.

கைத்தொழிலும்அ திகம் கிடையாது.

என்னுடைய பிள்ளை இந்த வியாதியை கண்ட்ரோலுக்குக் கொண்டுவரும்

,அத்தேசத்தின் தலைமைபதவியில் அவ்விடம்   யூ என்    எய்ட்ஸ்  நிறுவனத்தால்

நியமிக்கப் பட்டிருந்தார்.

எதற்கு இதை எழுதினென்றால்   இப்படியும் பல தேசங்கள் இருக்கிறது.

அங்கு அவர் போனபோது   சமைக்கத் தெரியாது. ஸ்கைப் மூலமே

வெண்ணெய் காய்ச்சுவது     முதல் பாடமெடுத்தோம்.

எல்லாம் கற்றுக்கொண்டு அவரும் பிறறைச் சாப்பிடக் கூப்பிட்டு

விருந்து கொடுக்கும் அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.

உதவிக்கு ஒரு பெண்மணி உண்டு. அவரை மே என்றுதான்

கூப்பிடவேண்டும்.

வாசலில் ஸெக்யூரிடிக்கு ஆட்கள் உண்டு. அவர்களை

தாதே என்று கூப்பிட வேண்டும்.

எல்லாம் இங்லீஷ் தெரிந்து பேசுபவர்கள்.  மரியாதையும் உண்டு.

ஸுய கௌரவமும் உண்டு.

வேலைக்காரர்கள் என்று குற்றம் குறை சொல்ல முடியாது.

அப்படி நாங்கள்  டிஸம்பர் லீவிற்கு அங்குச் சென்றபோது, வாராவாரம்

விருந்துதான் தான் அவ்விடம்.

நாங்கள் குறைந்த அவகாசத்திற்காக அங்கு போயிருந்ததால் இருந்த நாட்கள்வரை

நாங்கள் அங்குள்ளவர்களுக்கு விருந்துகொடுப்பதும், அவர்கள் எங்களுக்குக் கொடுப்பதுமாக

இருந்தவரை இப்படியே காலம் ஓடியது.

ஒரு 10 குடும்பத்தினர்   இம்மாதிரி வெவ்வேறு வேலைகள் நிமித்தம் வந்தவர்கள்

வாராவாரம் ஒவ்வொரு வீட்டில் எல்லோரும் கூடி பொழுதைக் கழிப்பது  வழக்கம்.

வேறு எந்த விதமான பொழுது போக்குகளோ,.  கேளிக்கைஸ்தலங்களோ கிடையாது.

ஆக அவர்களே வாராவாரம் ஒவ்வொருவர் வீட்டில் ஸந்தித்து, ஏதாவது

தங்களுக்குள்ளே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டு, பேசிமகிழ்ந்து,உண்டு களித்து

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கொண்டாட்டம் ஒரு இல்லம்

கொண்டாட்டம் ஒரு இல்லம்

விருந்தினர்கள்

விருந்தினர்கள்

விருந்தினர்கள் நம்வீடு

விருந்தினர்கள் நம்வீடு

நாங்கள் அதாவது என் மகன்

தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் ,இங்கு இட்லி,தோசை,வடை

உப்புமா என்பதெல்லாம் எங்களின் ப்ரதான ஐட்டமாக இருந்தது.

அது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதை

செய்யச் சொல்லியே விருந்தினர்கள் ருசித்தனர்.

என் மகனுக்கு யூஎன் நிருவனத்தில் ஸாமான்கள் கொண்டுபோக

. ஷிப்மென்ட் வசதி இருந்ததால் கிரைண்டர்,மிக்ஸி,வேண்டிய ஸாமான்கள்

என  ஒரு அழகிய குடும்பஸாமான்கள் எல்லாம் எடுத்துப் போக முடிந்தது.

அதெல்லாம் டில்லியிலிருந்து வாங்கி மஸேரு வந்து சேர்ந்தது.

அதனால்தான் இவைகளை நினைத்துப் பார்க்க முடிந்தது.

தவிர மருமகள் வேலையிலிருந்ததால் ஜினிவா குடும்பமும் நடந்து கொண்டு

இருந்தது.தற்செயலாக அவ்விடத்திய படங்களை பார்க்க நேர்ந்தபோது

எல்லோருடைய ஞாபகமும் வந்தது.

வேர்ல்ட் ஃபுட் ப்ரோக்ராம்,  யுநிஸெஃப்,   யுஎன்டிபி ,   ஜெர்மன் டெவலப்மென்ட் ஏஜன்ஸி,

மினிஸ்ட்ரி ஆஃப் எஜுகேஷன்,

லொஸேத்தோ ஆர்மிக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்காக,    இண்டியன் ஆர்மியின்

பிரிகேடியர் யாதவ் அவர்களுடன், 12 குடும்பத்தினர்,தமிழர்களும் உண்டு,

பெயர்போன பாகிஸ்தானி ஸர்ஜன்  அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்,

அவர்களது குடும்பம், 40 வருஷங்களாக அவ்விடம் பிஸினஸ் செய்து வரும்

பகாயா குடும்பத்தினர் என ஞாபகம் உள்ளவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதிலும் ஸ்ரீலங்காத் தமிழர் குடும்பம் மிகவும் அன்போடு, பழகியது.

சற்று வயதான பெண்மணி. அவர் உத்தியோகம் செய்யவில்லை.

பேரன் பேத்தி எடுத்தவர். வெகு வருஷங்களாக வெளியிலேயே இருப்பவர்.

அயல்நாட்டு மருமகள்,மருமகன் உண்டு. குடும்ப விஷயங்கள் பூராவும்

சொல்லி, எல்லா விஷயங்களையும்,பகிர்ந்து கொள்ள அவருக்கு நான்

உற்ற ஒரு மனுஷியாக இருந்தேன்.

ஸ்ரீதனமெல்லாம் அப்படியே விட்டு வந்து விட்டோம் என்று அவர் சொல்லும்போது

நமக்கும் கண்கள் பனிக்கச் செய்யும்.

பாஷைகள் எப்படி நெருங்கி உறவாடியது. இப்போது நினைத்தாலும் மனது

அந்த நினைவுகளை அசை போட வைக்கிறது.

நேபாலி,இந்தியர், வடதென் மாநிலத்தவர் என்று ஒரு குட்டி உலகமாகத் தோன்றியது

எனக்கு.

பாஷைகள்,தேசம் எல்லாம் மிஞ்சிய ஒரு நட்புக் கூட்டமாகத் தோன்றியதெனக்கு.

நேபாலிக் குடும்பம்,  அவர்களது குடும்பமாகவே பாவித்தது.

ஆந்திரக் குடும்பம்,   அவர்களுடயதாகவே எங்களை மதித்தது.

வட இந்தியக் குடும்பங்கள்,   சம்பந்தி எனக் கொண்டாடியது.

தமிழ்க் குடும்பங்கள் ஸந்திக்க நேர்ந்தபோது   என்னை அவர்களின்

அருகிலுள்ள ஊரின்  பிறந்தவள் என பெரியம்மா முறை கொண்டாடியது.

புது வருஷப்பிறப்பை   பிரிகேடியர் வீட்டில் கொண்டாடியபோது அவர்கள்

செய்து வந்த பண்டங்கள், அவ்வளவு சிறப்பாகச் செய்து வந்தர்கள்.

ஈரானியக் குடும்பம், என எல்லோர் வீட்டிற்கும் போய்வந்தோம்.

இளமைகளுக்கு எல்லோரும் முக்கியத்துவம் அளிக்கும் போது

வயதான எங்களுக்கும் அவ்விடம் நல்ல வரவேற்பிருந்ததை மறக்க

முடியாது.

ஜோஹான்ஸ்பர்க்  ஒரு நேபாலிக் குடும்பத்துடன் போய் அவ்விடமிருந்து

பல இடங்களுக்குப் போய் வந்ததை மறக்க முடியாது.

ஆப்ரிக்கா கனிஜங்களின் ஆபரண அங்காடி ஜோஹான்ஸ்பர்க்

ஆப்ரிக்கா கனிஜங்களின் ஆபரண அங்காடி
ஜோஹான்ஸ்பர்க்

ப்ளாக் எல்லாம் எழுத ஆரம்பிக்காத காலமது.

எவ்வளவு இடங்களை வர்ணித்திருக்கலாம். காலம் தாழ்ந்த

கனவு இது. குறிப்புகளும் ஏதும் வைக்கவில்லை.

இருப்பினும்    படங்கள் குறிப்புகளுக்குப் பதிலாக உள்ளது.

அப்படிச் சென்ற சில இடங்களின் படங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசையே

தவிர பயணக் கட்டுரை இல்லை இது.

மேலும்RUST FONTEIN DAM  மற்றும் கோல்டன்கேட் ஹைலேட்ஸ், நேஷனல்பார்க்

ஸௌத் ஆப்ரிகா முதலான இடங்களுக்குச் சென்ற போது எடுத்த சில

படங்களுடன்  அடுத்து உங்களிடம் பெருமை பேச வருகிறேன்.

கட்டாயம் பாருங்கள்.   வருகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.

Entry filed under: சில நினைவுகள்.

க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி. அன்னையர் தினம்—-13

22 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வை. கோபாலகிருஷ்ணன்'s avatar வை. கோபாலகிருஷ்ணன்  |  10:29 முப இல் பிப்ரவரி 11, 2014

    காட்டியுள்ள படங்களும் தங்களின் வர்ணனைகளும் அருமை. பாராட்டுக்கள். நமஸ்காரங்களுடன் கோபு.

    மறுமொழி
  • 2. chollukireen's avatar chollukireen  |  10:38 முப இல் பிப்ரவரி 11, 2014

    பரவாயில்லையா? சில தினங்களில் அடுத்ததை எழுதி முடிக்கிறேன். உங்கள் பின்னூட்டம் என்ற டானிக் கிடைத்தாகி விட்டது. அது போதும். நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 3. Dindigul Dhanabalan (DD)'s avatar Dindigul Dhanabalan (DD)  |  11:16 முப இல் பிப்ரவரி 11, 2014

    படங்கள் அருமை… எப்படி எல்லாம் தேசங்கள் இருக்கின்றன… சமையல் செய்வதற்குள் என்னென்ன சிரமங்கள்…

    மேலும் பலவற்றை அறிந்து கொள்ள தொடர்கிறேன் அம்மா…

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  5:30 முப இல் பிப்ரவரி 15, 2014

      மிக்க ஸந்தோஷம்..அதிக நாட்கள் லெஸொதோவில் தங்காவிட்டாலும், பிள்ளை அங்கிருந்தபடியால் எல்லோருடனும் நட்பு நீடித்தது.
      ஸொந்த ஊரில் கடைத்தெருவு தாண்டி எதுவும் பார்த்ததில்லை.

      பூகோளம் தெரியும். நாடுகளும் பார்ப்போம் என்று நினைத்தது கூட இல்லை.
      வீட்டில் அதிகம் மனிதர்கள் இருந்து விட்டால் எல்லோருக்குமே சமையல் கற்க சான்ஸ் கிடைக்காது.
      அதுவும் கற்க ஸ்கைப்பில், தென் ஆப்பிரிக்கா தேவையாக இருந்தது என் மகனுக்கு.
      வெளிநாட்டுப் படிப்பு மிக்க நன்றி தனபாலன். அன்புடன்

      மறுமொழி
  • 5. Vengata Narayan's avatar Vengata Narayan  |  1:59 பிப இல் பிப்ரவரி 11, 2014

    இந்திய ஒற்றுமையை வெளி நாட்டில்தான் பார்க்க முடிகிறது

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  5:33 முப இல் பிப்ரவரி 15, 2014

      வருகைக்கு நன்றி. வெளிநாட்டில் நிஜமாகவே ஒற்றுமைதான். வெளிநாடும் ஒரு வேடந்தாங்கல்தான்.
      அன்புடன்

      மறுமொழி
  • 7. ranjani135's avatar ranjani135  |  4:20 பிப இல் பிப்ரவரி 11, 2014

    அதிகம் நினைவில்லை என்று சொல்லி, இத்தனை எழுதியிருக்கிறீர்களே! என்ன ஒரு அழகிய மலரும் நினைவு. மீதி நினைவிருப்பதையும் எழுதுங்கள். படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கை வரலாறு ஆரம்பியுங்கள். உங்களிடம் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  5:43 முப இல் பிப்ரவரி 15, 2014

      ரஞ்ஜனி நீ சொன்ன இதையே என் பிள்ளையும் சொன்னான். நீ படிப்பாய். இவர்களுக்கு தமிழ் வராது.
      மலரும் நினைவுகள்தான்.
      உன்போன்றவர்களின் கமென்டுகள் ஊக்க மருந்தாக இருக்கிறது.
      மனதில் தோன்றுமளவிற்கு தட்டச்சு செய்ய முடிவதில்லை. வயது கூடிக்கொண்டே போகிறது என்பதை நினைவூட்டுகிறது. என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா? எழுதினால்ப் போகிறது.
      அன்பும்,ஆதரவுமான பதிலுக்கு மிகவும் நன்றி.அன்புடன்

      மறுமொழி
  • 9. mahalakshmivijayan's avatar mahalakshmivijayan  |  4:23 முப இல் பிப்ரவரி 12, 2014

    படிக்க படிக்க சுவரசியமாக இருந்தது அம்மா! எவ்வளவு அனுபவங்கள் எவ்வளவு மனிதர்களை சந்தித்து இருப்பீர்கள்! தொடர்ந்து படிக்க வருகிறோம் அம்மா 🙂

    மறுமொழி
    • 10. chollukireen's avatar chollukireen  |  5:47 முப இல் பிப்ரவரி 15, 2014

      ஆமாம் அம்மா. நம்தேசத்து மனிதர்களை பிற தேசத்தில் ஸந்திக்கும் போது, மதிப்பும் மிகவும் உயர்ந்து விடுகிறது. கரன்ஸியும் அப்படித்தானே!
      உன் கருத்துக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 11. Jayanthi's avatar Jayanthi  |  5:24 முப இல் பிப்ரவரி 12, 2014

    Mami, idhai padithadhum ‘Vasudeiva Kutumbakam’ enbadhu dhan gnyabakam varugiradhu. Ungalukku adhai experience seiyum vaippu kidaithirukkiradhu.

    மறுமொழி
    • 12. chollukireen's avatar chollukireen  |  5:56 முப இல் பிப்ரவரி 15, 2014

      வஸுதேவ குடும்பகம் ஸரியான உதாரணம். ஆமாம் கிடைத்த வாய்ப்புதான் இது. நன்றாகச் சொன்னாய்.
      மிக்க நன்றியம்மா. அடிக்கடி உன் கமென்டை எதிர் பார்க்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 13. Radha rani's avatar Radha rani  |  9:57 பிப இல் பிப்ரவரி 12, 2014

    ஆப்பிரிக்க பயண அனுபவங்களும் , நினைவுகளும் படித்தேன் அம்மா.. அழகான அன்பான பகிர்வு. படத்துல மண்டேலா உருவ சிலை உயிரோட்டத்துடன் நிஜம் போலவே உள்ளது .

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  5:51 முப இல் பிப்ரவரி 15, 2014

      அதனால்தான் மண்டேலாவின் உருவச்சிலை என்று எழுதினேன். தத்ரூபம் என்பார்களே. அதுதான் இது.
      உன் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.
      அன்புடன்

      மறுமொழி
  • 15. chitrasundar's avatar chitrasundar  |  11:43 பிப இல் பிப்ரவரி 12, 2014

    “உள் நாட்டில்அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை”_________ அவங்க நாட்டு உரிமையை அனுபவிக்க அவங்களுக்கு உரிமையில்லைபோல் தெரிகிறது. கல்வியறிவு கிடைத்தால் எல்லாம் சரியாகும். யார் கொடுப்பது ?

    பதிவின்மூலம் பல விஷயங்கள் தெரிய வந்தது. வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டால் மொழி நாடு கடந்து எல்லோரும் உறவினர்களாகி விடுகிறார்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் அம்மா, படங்களைப் பார்க்கபார்க்க தன்னாலேயே நினைவுகள் வந்துடும் பாருங்க. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 16. chollukireen's avatar chollukireen  |  6:04 முப இல் பிப்ரவரி 15, 2014

    உள் நாட்டில் வேலைக்கு ,வேலையே இல்லை. உரிமைக்கு வேலை வேண்டாமா? எந்த வாய்ப்பிற்கும்
    தொழிற்கூடங்கள் கிடையாது.
    ஏழ்மை. படிக்க வசதி கொடுத்தாலும், பயன் படுத்துவதில்லை. கூலி வேலைகள் தேடி வெளிதேசங்களுக்குப் போவதிலேயே குறி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    உன் பாசமிக்க,பரிவான பதிலுக்கு என்னதைச் சொல்ல.
    அன்புடன் என்ற வார்த்தைதான். அன்புடன்

    மறுமொழி
  • 17. adhi venkat's avatar adhi venkat  |  8:47 முப இல் பிப்ரவரி 17, 2014

    அருமையான மலரும் நினைவுகள். தொடர்கிறேன்.

    மறுமொழி
  • 18. chollukireen's avatar chollukireen  |  6:14 முப இல் பிப்ரவரி 19, 2014

    ரஸித்தாயா!!!!!!!!!! நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 19. gardenerat60's avatar gardenerat60  |  12:32 பிப இல் மார்ச் 2, 2014

    சுவாரசியமாக இருக்கிறது அம்மா!. உங்கள் மனமும் எவ்வளவு விசாலம்!. இன்னும் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

    மறுமொழி
  • 20. chollukireen's avatar chollukireen  |  6:51 முப இல் மார்ச் 3, 2014

    நீயும் வந்து பாராட்டியது மிக்க மிக்க மகிழ்ச்சி. ஸந்தோஷத்தை ெப்படிச் சொல்கிறது. அன்புடன்

    மறுமொழி
  • 21. Shankar's avatar Shankar  |  5:09 பிப இல் ஏப்ரல் 13, 2014

    நானும் என் மனைவியும் சமையல் குறிப்பு தேட , உங்கள் ப்ளாக் வந்து சேர்ந்தது. என்னமாக எழுதியிருக்கிறீர்கள் அம்மா… பாஷை வித்தியாசம் என்ற ஒன்றே தெரியவில்லை வெளிநாட்டில். இன்னும் உங்கள் ப்ளாக்கில் நிறைய படிக்கவேண்டியுள்ளது. நன்றி. ஷங்கர் & உமா.

    மறுமொழி
    • 22. chollukireen's avatar chollukireen  |  4:33 முப இல் ஏப்ரல் 14, 2014

      தமிழ்ப் புத்தாண்டும் அதுவுமாக உங்கள் வரவு நல்வரவாகுக. அடிக்கடி வந்து பின்னூட்டத்தின் மூலம் பேசிக் கொள்ளலாமே.
      முடிந்தபோது படித்து பின்னூட்டமுமிட்டால்,இன்னும் அனேகம்பேர் பயனடைவார்கள். மிக்க ஸந்தோஷம் உங்கள் பின்னூட்டம். வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி

mahalakshmivijayan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பிப்ரவரி 2014
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,389 hits

காப்பகம்

பிரிவுகள்

  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.