அன்னையர் தினம்—-13
பிப்ரவரி 15, 2014 at 5:25 பிப 20 பின்னூட்டங்கள்
பணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்
அம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.
அதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்
கொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை
குடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்
வயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து
விடும்.
சந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக
சில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.
அம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.
ஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.
உனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.
போதாதா வார்த்தைகள்.
இதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.
வேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.
எனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.
கோபவார்த்தைகள். தாம்,தூம்
என்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி
இதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா
உன்னைச் சொல்ல முடியும்?
எல்லாம் தெரிந்த நீயே
ஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.
எவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது
அத்தை.
ஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி
எடுக்காதே. நான் பாத்துக்கறேன்.
ஓ!!!!!!!!!
இதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை
அப்படியே உணர்த்தி எழுத ஒரு பெண்.
ஏம்மா எனக்கு கலியாணமே வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூட
சொல்லாத என் அக்காவைப், பார்த்து வேண்டாம் கலியாணம்னு
சொல்லு,இப்படியா என்றேன்.
நான் அதை வேறு சொல்லிவிட்டு இன்னும் ப்ராப்ளம் வேண்டுமா?
எது நடக்கிறதோ நடக்கட்டும். நீதான் இருக்கியே எல்லாத்துக்கும்
ஸரிதப்பு சொல்லிண்டு, அது போரும் என்றாளே பார்க்க வேண்டும்.
அப்போ எனக்குப் பெரிய ஸ்தானம்தான். மனதில் நினைத்துக் கொண்டு
இப்ப என்ன செய்யணும் சொல்லு அம்மா.
பெங்களூர் மாப்பிள்ளை, அவர் அண்ணாவிற்குக் கடிதம் போட்டு முன்னாடியே
வரச்சொல்லணும்.
புருஷாளா இருந்து அவர்களை,அதாவது புதுசம்மந்திகளுடன் பேசிப் பழகி
உபசாரம் செய்ய, கவனிக்க அவா பாத்துப்பா.
தேரழுந்தூர் பெரிப்பா,அதான் அப்பாவின் இரண்டாவது மனைவி வகை
ஷட்டகர் ,அவருக்குக் கடிதம் போட்டு நான் சொன்னேன் என்று சொல்லு.
அப்பாவை அவர்தான் கவனிக்கணும். ஸரியா வரும். எப்படி எழுதுவையோ
தெரியாது.
இல்லை ஒருதரம் அவரை இங்கே வந்துட்டுப் போகச்சொல்
அம்மா செய்திக்குறிப்புக்கள் கொடுத்து விட்டாள்.
நான் எழுதறேன், எப்போ உனக்குப் படித்துக் காட்டறது.
ராமாயணம் பாராயணம் பண்ரச்சே டைமும் ஸரி பண்ணிண்டாச்சு.
திருட்டுக்காரியமில்லை. அவர் சுபாவம் அப்படி என்று சொல்லியே
பழக்கம்.
நல்லது நடக்க வேண்டும். முழு முனைப்புடன் அம்மாவிற்காக நான்
எழுதுகிறேன் என்று, கதைகள் சொல்ல கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போட்டுக்
கொண்டேன் போல இப்போது தோன்றுகிறது.
இப்போ என்ன சொல்ல முடியும். வீட்டு விவகாரம்,சுபாவம் அவருடயது
என்ற சொல்லுடனேயே வாழப் பழகிவிட்ட அம்மா இப்படிதான் நினைக்கத்
தோன்றியது.
நம்மால் முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டும்.
லேண்ட் லாக் கண்ட்ரி என்று நேபாலைச் சொல்லுவார்கள். அது போல
ஊரின் முக்கால் வாசிப்பேருடைய நிலங்கள் ஊரின் மிராசுதாரரைச் சேர்ந்த
நிலங்களுக்கு மத்தியில்தான் அகப்பட்டுக்கொண்டு முழித்தது.
விற்பதானால் அவரகள் கொடுப்பதைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அங்கும்போய், அப்பா ஒரு நல்ல விலையாகப் போட்டுக்கொடுஎன்றுஅம்மா
சொல்லவிசாரப்படாதிங்கோ மாமி. எல்லாருக்கும் கொடுப்பதை விட நன்றாக
அதிகம்
போட்டேகொடுப்பதாகச் சொன்னார்கள்.
ஒரு நல்ல நாள் பார்த்து எதிராத்து ராமநாத மாமாவுடன் போய்க் க்ரய பத்திரம்
ரிஜிஸ்டர் செய்து வந்தாகி பணம் ரெடி.போதும்,போதாது அது வேறு விஷயம்.
மெடராஸ் போறவா பாத்து பணம் பிள்ளையாத்துக்குக்
கொடுத்தனுப்பியாகி விட்டது.
ஏழெட்டு நாளில் தேரழுந்தூர் பெரிப்பா ஏதோ வைதீக காரியமாக
திருவண்ணாமலைவந்தேன்.
உங்களுடன் இரண்டு நாள் இருக்கலாமென்று வந்தேன். அப்பாவுக்குப் பிடித்த
காவேரிப்பாய்ச்சலில் விளைந்த நெல்லில் வீட்டிலிடித்த அவல் மூட்டையும்,
வைதீகத்தில் வந்த பத்தாரு வேஷ்டி இரண்டுமாக வந்து சேர்ந்தார்.
அவர்தான் அப்பாவிற்கு குரு அம்மா பின்னாடி எப்போதாவது சொல்லுவாள்.
அப்பாவின் மெத்தட்லே, குற்றப் பத்திரிக்கை,நான் எதுவும் செய்ய மாட்டேன்
இத்யாதி,இத்யாதி,பெரியப்பாவிடம் இன்னும் ஆக்ரோஷமாகவே.
நான் வரேன். உங்களுடனே இருக்கேன்.
குழந்தைகளுக்கு காலா காலத்தில் எல்லாம் செய்ய வேண்டாமா?
பெரிய குழந்தைக்கு செய்தமாதிரி நான் வரேன்.
ஈசுவர ஸங்கல்பம். எல்லாம் ஸரியா அமையும், இப்படி,அப்படி வார்த்தைகள்
அம்மா வின் பேச்சு நடையில் ஒரு வேப்பிலை மரம் இலைகள் அவருக்குச்
சிலவாகி இருக்கும். பெரியப்பா எதுவும் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரம்
முன்னாலே நான் வந்து விடுகிறேன். ஒரு வாரம் இருந்து விட்டுக்
கிளம்பிப் போனார்.
வளவனூர்க் கலியாணங்களில் நான்கு மைல் துலைவிலுள்ள சிறுவந்தாட்டுப்
பட்டுப் புடவைதான் மணப்பெண்ணிற்கு வாங்குவது வழக்கம்.
பெயர் வாய்ந்த பட்டு நெசவாளர்கள், ராமச்சந்திர செட்டியார் ஒன்பது கெஜம்
பட்டுப் புடவை கொண்டு கொடுத்து விட்டார். என்ன விலை?
வெறும் நூற்று ஐம்பதுதான் விலை. கெட்டிக்கரை புட விட்டது.
நல்ல நாள் பார்த்து அரிசி,பயறு உடைத்து, காரியங்கள் ஜரூர்.
அப்பளாம் வடாம் இட்டாகி விட்டது.
நல்ல முகூர்த்த நாளில் திருமஙகலியம் செய்யக் கொடுத்து வாங்கியாகி
விட்டது.
பாத்திரமெல்லாம் எடுத்துக், கடைசல் கொடுத்தாகி விட்டது. இல்லாததற்கு
பழைய பாத்திரங்களைப் போட்டு,புதியது வந்து சேர்ந்தது.
பெரியமாப்பிள்ளையாத்தில் அவர்களாகவே குசலம் விசாரித்து
விஷயங்களை அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டு தாங்கள்
வந்திருந்து எல்லாம் செய்வதாக அம்மாவிற்கும் ஒரு கடிதம் எழுதிவிட்டார்கள்.
நான், நீ, என்று செய்வதற்கு எல்லோரும்,ரெடி.
காண்ட்ராக்டர் எல்லாம் கிடையாதே!
எல்லாமே ரெடி.
கார்த்தாலே சம்பந்தி விடியற்காலம் நாலரை மணி ரயிலில் வருகிறார்கள்.
அம்மாவும் ஸ்டேஷனுக்குப் போகிராள். எல்லோருடனும்.
அப்பா வயதானவர், அதனால் வ ரவில்லை.
காலையில் பஞ்சாயதன பூஜை செய்யாமல், எங்கும் போகமாட்டார்.
பெரியப்பா காரணங்கள் சொல்லி நிதானமாக எட்டு மணிக்குமேல், அங்கு
அழைத்துப்போய், இவரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அம்மா,திக்கு,திக்குதான் மனநிலை.
அம்மாதான் நிச்சயம் செய்தாள்,அப்படி இப்படி யாரும்,எவரும் வார்த்தைகள்
புகழ்ச்சி பேசாதபடி முன்னாடியே அவஸரநிலைப் பிரகடனம்.
ஸந்திப்புக்குப் பிரகு, மாப்பிள்ளையுடனும், ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்
பொதுவான பேச்சுகள் இப்படி சற்றுச் ஸகஜ ஸம்பாஷணைகள்.
பெரிப்பா ஒவ்வொருமுறை ஓதியிட்டுக் கொடுக்கும்போதும், அவர் பெரியவராக
வாங்கிக் கொடுத்து விடுவார். கதர் பேச்சு வரக்கூடாதே.
அப்பா,முட்டாளில்லை. அந்த நாளைய வீம்பு. பாசமுள்ள மனிதர். காலத்திற்கேற்ப
மாராத மனிதர்.
கல்யாணமே,வைபோகமே. கௌரி கல்யாணம்,வைபோகமே. எல்லோர் தயவிலும்
கல்யாணம் நன்றாக நடந்தது.
மறுநாள் கட்டுச்சாத கூடையும் வைத்தாகி விட்டது.
பெண்ணை அனுப்பி விட்டுக் கதறுகிரார் மனிதர். காலம் அப்படிப்பட்டது.
கலியாணத்திற்கு வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.
சாப்பாடெல்லாம்,நன்றாக இருந்தது என்று நீங்கள் சொல்லக் கேட்க மிக்க
ஸந்தோஷம், திரும்பவும் தொடருவேன். ஆசீர் வாதங்களுக்கு மிக்க நன்றி.
பார்க்கலாம்.
Entry filed under: அன்னையர் தினம்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 5:43 பிப இல் பிப்ரவரி 15, 2014
அந்தக்காலத்தில் கல்யாணம் ஒன்று நடக்கணும்னா எவ்ளோ சிரமங்கள். இருந்தாலும் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியா இருப்பா. மனித நேயம் உண்டு. நல்லபடியாகக் கல்யாணம் நடந்தது கேட்க சந்தோஷமாக உள்ளது.
2.
chollukireen | 1:13 பிப இல் பிப்ரவரி 18, 2014
உடனே ஸந்தோஷம் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.. நான்தான் பதிலெழுதத் தாமதம்.. இதுவும் மனித நேயக் கல்யாணம்தான். அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 3:17 முப இல் பிப்ரவரி 16, 2014
அனைவரும் அவரவர் வேலையை பொறுப்பாக முடித்து, அனைத்தும் சுபம்… வாழ்த்துக்கள் அம்மா…
4.
chollukireen | 1:16 பிப இல் பிப்ரவரி 18, 2014
வாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷம். இப்போதுதான் நடந்தது போன்ற ஒரு எண்ணம். அன்புடன்
5.
ranjani135 | 10:10 முப இல் பிப்ரவரி 16, 2014
எந்தக் காலத்திலேயும் பெண்கள் தான் அச்சாணியாக நின்று வீட்டில் நடக்கும் மங்கள காரியங்களை நிறைவேற்றி வைக்கிறார்கள். உங்கள் அம்மாவை மனக்கண்ணில் கொண்டு வர முடிகிறது. நீங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தது சிறப்பானது.
உங்களது அனுபவம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.
பாராட்டுக்கள்!
6.
chollukireen | 1:21 பிப இல் பிப்ரவரி 18, 2014
என் அனுபவம், ஸரியாகச் சொன்னீர்கள். மிகைப்படுத்தாத உண்மை இது. இந்த மாதிரி தொந்திரவு இல்லாது போனாலும்,பார்த்துப்,பார்த்துச் செய்ய பெண்கள் எப்போதும்,இப்போதும் கைதேர்ந்தவர்கள் தான். பொருப்பிற்காகப் பிறந்தவர்கள் பெண்கள். பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியானது. அன்புடன்
7.
chitrasundar | 6:35 பிப இல் பிப்ரவரி 16, 2014
உங்க அம்மாவின் மனதைரியம் உங்க மனதில் பதிந்ததை எங்கள் மனதிலும் பதிய வச்சிட்டீங்க, அம்மாவின் செயல்கள் வியப்படைய வைக்கிறது. அக்காவின் திருமணம் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சிம்மா. அதன் பிறகான விஷயங்கள், சமர்த்துப் பாப்பாவான உங்களின் திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆவல் அம்மா.
பதிவிலுள்ள ‘கதர் பேச்சு’தான் புரியலம்மா. அதை மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்கோ. பழைய திருமண ஏற்பாடுகள் எல்லாம் படிக்க சுவாரஸியமாக உள்ளன. அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 1:42 பிப இல் பிப்ரவரி 18, 2014
நல்ல காங்கிரஸ்காரர்கள் கதர் கட்டுவார்கள்.உண்மையாக இருப்பார்கள். கதர்கட்டிக்கொண்டு, காந்தீயத்துக்கு நேர்மாறாக இருப்பவர்களும் எக்காலத்திலும் உண்டல்லவா?
அப்படி ஒரு நிகழ்வுகளினால் கதர் வேஷ்டியே அவருக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றாகப் போய்விட்டது.
கையினால் நூல் நூற்று அதைக்கொண்டு வேஷ்டி
வாங்குவது. அதுதான் கதர்.
ஸுதேசி ஸாமான்.
மாப்பிள்ளைக்கு ஓதிக்கொடுக்க மாட்டேன் என்று சொன்னால்,கலியாணம் நடக்குமா?
அந்த நாளைய பிடிவாதம். எப்படி ஸமாளித்தது என்பதைக் கோடி காட்டியுள்ளேன். அவ்வளவுதான்.
இன்னும் ஸரியாகக் குறிப்பிட்டிருக்கலாம். நன்றி சித்ரா.
அன்புடன்
9.
adhi venkat | 8:05 முப இல் பிப்ரவரி 17, 2014
கல்யாணம் என்றால் சும்மாவா! அம்மாவின் தைரியம்!! கல்யாணம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.. தொடர்கிறேன்.
10.
chollukireen | 1:59 பிப இல் பிப்ரவரி 18, 2014
நீங்களெல்லாம் வருவதில்தான் என் முயற்சியே அடங்கியிருக்கிறது. மகிழ்ச்சியம்மா. அன்புடன்
11.
திண்டுக்கல் தனபாலன் | 5:28 முப இல் மார்ச் 2, 2014
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
12.
chollukireen | 11:08 முப இல் ஏப்ரல் 12, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
கோபக்காரமனிதரை எப்படி எல்லாம் ஸமாளிக்க வேண்டியிருந்தது? இது ஒருமாதிரி ஸமாளிப்பு. பதிவு 13 ஆனாலும் பாருங்கள், இன்னும் வருமே. அன்புடன்
13.
ஸ்ரீராம் | 2:31 பிப இல் ஏப்ரல் 12, 2021
இதில் எல்லாம் கூட பிரச்னை வருமா? அதுவும் இந்த அளவு… எப்படியோ.. சமாளித்தாகி விட்டது!
14.
chollukireen | 10:58 முப இல் ஏப்ரல் 13, 2021
வந்ததெல்லாம் இப்படிதான். ஆண் ஆதிக்கம் என்று இப்போது சொல்லிவிடுவார்கள். அப்போது அந்த பெயர் இல்லை.கோபக்காரர் என்ற முத்திரை மாத்திரம்தான். இப்டியெல்லாம்கூடத்தான். அன்புடன்
15.
Geetha Sambasivam | 1:02 முப இல் ஏப்ரல் 13, 2021
இந்தக் கதர் தான் என்ன பாடு படுத்தி விட்டது. திறமையாக உங்கள் அம்மா சமாளித்தார்கள் எனில் நீங்களும் அதற்குத் துணையாக ஆதரவாக நின்றிருக்கிறீர்கள். அருமையான விவரணை. ஒரு வழியாக நல்லபடிக் கல்யாணம் முடிந்ததே! அதைச் சொல்லணும்.
16.
chollukireen | 11:04 முப இல் ஏப்ரல் 13, 2021
எவ்வளவு வீட்டிலே கோபதாபங்கள்? பணிந்து போவதும்,உபாயம் தேடுவதாகவுமே போய்விட்டது. கதர் பிரச்னை ஆகாமல் இருந்தயிடம் தெரியாமல் மௌனம் சாதித்துவிட்டது. அன்புடன்
17.
Geetha Sambasivam | 1:05 முப இல் ஏப்ரல் 13, 2021
இந்தக் கதர் அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எங்கள் காலங்களிலும் வாழ்க்கையில் இடம் பெற்றிருந்தது. நான் ஆரம்பத்தில் கட்டிக்கொண்ட பாவாடைகள் அனைத்தும் கதர்த்துணி தான். பட்டுக் கூட அஹிம்சாப்பட்டு என்னும் கதர்ப்பட்டுத் தான் வாங்குவார்கள். அம்மா தினம் தினம் ஓய்வு நேரங்களில் கைராட்டை சுற்றி நூல் நூற்றுச் சிட்டங்கள் போட்டுக் கதர்க்கடையில் கொண்டு கொடுத்து வேண்டிய துணிகளை வாங்கி வருவார்கள். அறுபதுகளில் இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சிப் பிரச்னைகளில் அப்பாக் கைராட்டையை விற்றார். அன்னிக்கு அம்மா அழுத அழுகை! இப்போவும் நினைவில் இருக்கு!
18.
chollukireen | 11:18 முப இல் ஏப்ரல் 13, 2021
பேஸிக் எஜு கேஷன் என்று டீச்சர்ஸ் ட்ரெயினிங்கில் கூட இவ்வளவு என்று கணக்குசெய்து பருத்தியில் பட்டை பிரித்து தக்ளியில் நூல் நூற்று சிட்டம் போட்டுக் கொடுக்க வேண்டும். எவ்வளவோ மாறுதல்கள்.காங்கிரஸ்காரன் என்றால் கதர் கட்ட வேண்டும். உண்மை பேசவேண்டும், இன்னும் எவ்வளவோ?கதர் ஜிப்பா போட்டால் காங்கிரஸ்காரன். மஞ்சள் பெட்டி என்றால் காங்கிரஸ் சின்னம். உங்கள் அனுபவமும் மறக்க முடியாதவை. அன்புடன்
19.
Revathi Narasimhan | 1:50 முப இல் ஏப்ரல் 13, 2021
இதைப் போல எழுத்து நடையில் ,சம்பவத்தைப் படிப்பதில்
மனம் மிக நிறைகிறது காமாட்சிமா.
எத்தனை சாமர்த்தியமாக அம்மா சமாளித்திருக்கிறார்.
நீங்கள் கூட இருந்தது மிக மிகத் தைரியமாக இருந்திருக்க
வேண்டும்.
நடுவில் உச்சுக் கொட்ட எப்பொழுதும் மனிதர்கள்
உண்டு…
விரும்பித்தான் சொல்வார்களோ.
வாயில் வார்த்தைகள் தான் அந்த மாதிரி வருமோ தெரியவில்லை.
எல்லாவற்றையும் மீறித் திருமணம் நடந்ததைதான் சொல்ல வேண்டும்.
மிக மிக உணர்ச்சி பூர்வமாக படிக்க முடிந்தது.
மிக மிக நன்றி மா.
20.
chollukireen | 11:23 முப இல் ஏப்ரல் 13, 2021
நிறைய ஸம்பவங்கள் இருந்ததாலேதான் எழுத மனம் வந்தது. பிறர் கஷ்டம் தெரியாமல் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று தெரியாமல் பேசிவிடுவது சிலரின் ஸுபாவம்.உணர்ச்சி பூர்வமாகப் படித்ததற்கு மிகவும் நன்றி அன்புடன்